Search
  • Follow NativePlanet
Share
» »தமிழகத்தில் எந்தெந்த இடங்களில் வியூபாய்ண்ட்ஸ் இருக்கு தெரியுமா?

தமிழகத்தில் எந்தெந்த இடங்களில் வியூபாய்ண்ட்ஸ் இருக்கு தெரியுமா?

முதுமலை வியூ பாயின்ட் , கோடநாடு வியூ பாயின்ட், காவலூர் வியூ பாயின்ட்,லேம்ப் பாறை, வால்பாறை காட்சிப்புள்ளிகள், கோக்கர்ஸ்வாக், கரடியூர் வியூ பாயின்ட், சீக்குப்பாறை, சேலூர் நாடு, ஏற்காடு வியூ பாயின்ட்

By Udhaya

தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தளங்களில் இருக்கும் சில இடங்களில் இருந்து பார்வையிடும் போது அந்த அளவுக்கு அழகியல்கள் வேறு எங்கும் கிடைக்காத அளவு இருக்கும். இயற்கையின் ஒட்டுமொத்த அழகையும், சிறப்பாக காட்சியளிக்கும் ஒரு குறிப்பிட்ட வியூ பாயின்ட் தான் காட்சிகோணம் என்றழைக்கப்படுகிறது. தமிழகத்தில் பல இடங்களில் இதுபோன்ற பகுதிகள் இருந்தாலும், இந்த பத்து இடங்களுக்கு சென்று பாருங்கள் அதன் அழகே தனிதான்.

முதுமலை வியூ பாயின்ட் , கோடநாடு வியூ பாயின்ட், காவலூர் வியூ பாயின்ட்,
லேம்ப் பாறை, வால்பாறை காட்சிப்புள்ளிகள், கோக்கர்ஸ்வாக், கரடியூர் வியூ பாயின்ட், சீக்குப்பாறை, சேலூர் நாடு, ஏற்காடு வியூ பாயின்ட், தளி ஆகிய இடங்களைப் பற்றி இந்த பதிவில் காணப்போகிறோம்.

முதுமலை வியூ பாயின்ட்

முதுமலை வியூ பாயின்ட்

முதுமலையிலும் அதை சுற்றுலும் பார்க்க வேண்டிய நல்ல இடங்கள் பல இருக்கின்றன. பைக்காரா ஏரியின் அருகே இருக்கும் பிரதான சாலையில் இருக்கும் பாலம் பல்வேறு வகையான பறவைகளையும், விலங்குகளையும் பார்க்க சிறந்த இடம் ஆகும்.

சாகச அனுபவங்கள்

காலாட்டி நை மற்றும் மொய்யாறு நதியில் தங்கள் தாகத்தை தீர்த்துக்கொள்ள வரும் பல விலங்குகளை காணலாம். தமிழ்நாடு சுற்றுலாதுறை & வளர்ச்சி வாரியம் மற்றும் வனத்துறை ஆகியவை அளிக்கும் படகு சவாரி மற்றும் காட்டு சவாரிகள் வெளிநாட்டு தாவரங்களையும், விலங்குகளையும் பார்வையிட வாய்ப்பு அளிக்கின்றன.

எப்படி செல்லலாம்?

ஊட்டியில் இருந்து முதுமலை சரணாலயத்திற்கு காடுகள் நிறைந்த மலைகள் மற்றும் அருவிகள் ஊடாக செல்லும் போது முப்பத்து ஆறு கொண்டை ஊசி வளைவுகள் இருக்கின்றன. விலங்குகளையும் பறவைகளையும் அவற்றின் இயற்கை வசிப்பிடத்தில் காண்பதற்கு ஏற்ற இடங்களாக இவை அமைந்துள்ளன.

Marcus334

 கோடநாடு வியூ பாயின்ட்

கோடநாடு வியூ பாயின்ட்

கோத்தகிரி மழைப் பிரதேசத்தின் பல இடங்களுக்கு நாம் செல்வதற்கு பல காரணங்கள் இருக்கலாம். மலைகளின் அமைதியை ரசிப்பதாகவோ, இங்குள்ள அரிய வகை மிருகங்களை அருகில் சென்று காண்பதாகவோ, இங்குள்ள மலர்களின் நறுமணத்தை நுகர்ந்து மன அமைதி பெறுவதாகவோ இருக்கலாம்.

ஆனால் கொடநாடு வியூ பாயிண்டிற்கு வருவதற்கு ஒரே காரணம் அங்கு காணக் கிடைக்கும் கோத்தகிரியின் முழுமையான காட்சியமைப்பேயாகும். இங்கிருந்து கோத்தகிரி மலைப்பிரதேசத்தில் நம்மால் காண முடியாத இடங்கள் மிகச் சிலவே உள்ளன.

கொடநாட்டின் காட்சிகள் :

ரங்கசாமி சிகரம், தமிழ்நாடு - கர்நாடாக எல்லையின் சில பகுதிகள், மோயார் ஆறு , பவானிசாகர் அணை இவை எல்லாவற்றுக்கும் மேலாக பசுமை நிறைந்த தேயிலைத் தோட்டங்கள் ஆகியன.

எப்படி செல்லலாம்?

கோத்தகிரியில் இருந்து பதினெட்டு கி.மீ. தொலைவில் உள்ள கொடநாடு வியூ பாயின்ட் , அதன் அமைவிடத்தின் காரணத்தால் டெர்மினஸ் நகரம் என்று அழைக்கப்படுகிறது.

Hari Prasad Sridhar

காவலூர் வானோக்கு மையம்

காவலூர் வானோக்கு மையம்

காவலூர் வானோக்கு மையமானது ஜவ்வாது மலையில் ஆலங்காயம் எனும் இடத்தில் உள்ளது. இது ஆசியாவிலேயே மிகப்பெரிய வானோக்கியை கொண்டுள்ளது. இது வைனு பாப்பு அப்சர்வேட்டரி என்று அழைக்கப்படுகிறது. இந்த டாக்டர் வைனு பாப்பு எனும் புகழ்பெற்ற இந்திய வான் இயற்பியலாளரை கௌரவிக்கும் விதமாக இந்த மையத்திற்கு அவரது பெயர் இடப்பட்டிருக்கிறது.

கடல் மட்டத்திலிருந்து 725 மீட்டர் உயரத்தில் இந்த வானோக்கு மையம் அமைந்திருக்கிறது. காவலூர் வானோக்கு மையத்தில் 1 மீ கார்ல் ஜெய்ஸ் ஆடியும் 2.3 மீ ஆடியைக்கொண்ட வைனு பாப்பு எனும் மற்றொரு வானோக்கியும் இந்த மையத்தில் அமைக்கப்பட்டிருக்கின்றன.

எப்போது செல்லலாம்?

சனிக்கிழமைகளில் மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே இந்த மையத்தில் பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறப்புகள்

பல நவீன உபகரணங்களின் உதவியுடன் இந்த ஆய்வு மையத்தில் பல ஆராய்ச்சிகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. நட்சத்திரக்குடும்பங்கள், சூரிய வெடிப்புகள், சூரியக்குடும்பம் தொடர்பான பல ஆய்வுத்திட்டங்கள் இங்கு செயல்பாட்டில் உள்ளன.

Prateek Karandikar

 லேம்ப் பாறை

லேம்ப் பாறை

லேம்ப் பாறை குன்னூரில் உள்ள இன்னொரு சுற்றுலாத் தலம். இங்கு இதற்கு முன் மலை உச்சிக்கு சென்று அங்கிருந்து சமவெளிகளைக் கண்டு ரசித்திருக்கிறீர்களா? பசுமையான புல்வெளிகள், நீண்டு விரிந்திருக்கும் செவ்வானம் ஆகியவற்றைக் கண்டு, கடவுள் போல உணர்ந்திருக்கிறீர்களா?

இல்லையெனில் இந்த இடம் உங்களுக்கு அந்த உணர்வைக் கொடுக்கும் குன்னூரில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ள இங்கு கோயம்புத்தூரின் அழகிய காட்சிகளைக் காண முடியும்.

குடும்பத்துடன் பிக்னிக் செல்ல ஏற்ற இடம். இங்கு வருவதற்கு பாதை அமைக்கும் முயற்சிகளை மேற்கொண்ட கேப்டன் லேம்ப் அவர்களின் பெயரால் இந்த இடம் அழைக்கப் படுகிறது. டால்பின் மூக்கு சிகரத்திற்கு செல்லும் வழியில் இந்தப் பாறை அமைந்துள்ளது.

வால்ப்பாறை

பல்வேறு காட்சி புள்ளிகளை உடைய இடம் என்று வால்ப்பாறை பெருமிதம் கொள்கின்றது. வால்ப்பாறை வழியாகச் செல்லும் போது, தவற விடக்கூடாத ஒரு முக்கியமான காட்சிப் புள்ளி லோம்ஸ் காட்சிப் புள்ளி.

கோபுரம் போன்ற மலைத்தொடர்கள், பனி மற்றும் ஆழியார் நீர் மின் செயற்திட்டத்தின் மெதுவான இடிமுழக்கம் ஆகியவற்றின் முன்பாக நீங்கள் சிறுமை அடைந்ததாக உணர்வீர்கள். வால்ப்பாறையில் இருக்கும் சங்கிலி சாலையை நெருங்கி இருக்கும் நல்லமுடி பூஞ்சோலை, கடம்பாறை அணை, நம்பர் பாறை ஆகியவை வால்ப்பாறையிலும் அதை சுற்றிலும் இருக்கும் மற்ற காட்சிப் புள்ளிகள் ஆகும். இந்த இடங்கள் அனைத்துமே மலைகள், பள்ளத்தாக்குகள், சில சமயங்களில் சமவெளிகள் ஆகியவற்றை காண சிறந்த காட்சி அமைப்பை கொடுக்கின்றன.

எப்படி செல்லலாம்?

பொள்ளாச்சியில் இருந்து வால்ப்பாறைக்கு செல்லும் மலைப்பாதையில் 9வது கொண்டை ஊசி வளைவில் இது அமைந்து இருக்கிறது. பொள்ளாச்சி பட்டணம் வரை இருக்கும் சமவெளிகளை காண்பதற்கு இது ஒரு அனுகூலமான இடம்.

Thangaraj Kumaravel

கோக்கர்ஸ் வாக்

கோக்கர்ஸ் வாக்

1872-ஆம் ஆண்டு இந்த இடத்தை கண்டுப்பிடித்த லெப்டினென்டு கோக்கரின் பெயராலேயே இவ்விடம் அழைக்கப்படுகிறது. கொடைக்கானல் ஏரியிலிருந்து சுமார் 1 கி.மீ. தூரம் தொலைவில் கொடைக்கானலின் தெற்குச் சரிவில் அமைந்துள்ளது.

இயற்கை விரும்பிகள் கண்டிப்பாக காண வேண்டிய இடம் இது. இந்த இடம் மிக நீளமான வளைந்த பாதைகளோடு ஆங்காங்கே அழகிய மரங்கள் மற்றும் பூக்களுடன் காட்சி அளிக்கும். இங்கே உள்ள ஒரு தொலைநோக்கியின் மூலம் பள்ளத்தாக்கின் அழகையும் மலைக்கு இறக்கத்தில் அமைந்துள்ள நகரங்களையும் கண்டு களிக்கலாம்.

எப்போது எப்படி?

கோக்கர்ஸ் வாக் நுழைய நுழைவுச் சீட்டு பெற வேண்டும். இங்கே நடை கொள்ள மதியம் 2.30 மணிக்குள் செல்ல வேண்டும். இல்லையென்றால் பனி கீழே இறங்க ஆரம்பித்து விடும். இயற்கையை ரசித்து கொண்டே நடைக்கொள்ள இது மிகவும் ரம்மியமான இடம்.

கரடியூர் வியூ பாயிண்ட்

ஈரோடு நகராட்சியிலிருந்து 83கிமீ வட கிழக்காக அமைந்துள்ள் இடம் கரடியூர் வியூ பாயிண்ட் ஆகும். இயற்கையழகை காண உதவும் இந்த இடத்தில் நிற்கும் சுற்றுலாப் பயணிகள் சொர்க்கத்திலுள்ள காட்சிகளை காண்பது போன்ற உணர்வைப் பெறுவார்கள். சோகமாக இருப்பவர்களுக்கும், இதயத்தில் வலியை கொண்டவர்களுக்கும் இவ்விடம் முழுமையான அமைதியைத் தரவல்லது. இந்த மாநிலத்திலேயே சிறந்த அழகிய இடமாக கருதப்படும் கரடியூர் வியூ பாயிண்ட்டிற்கு, விடுமுறையில் வரும் எந்தவொரு பயணியும் கண்டிப்பாக பார்வையிட்டு மகிழ்ச்சியடைவது விரும்பத்தக்கதாகும்.

எப்படி செல்வது?

இந்த இடத்திற்கு சென்று வருபவர்களுக்கு நிச்சயமாக மகிழ்ச்சி மட்டுமே பலனான கிடைக்கும். ஈரோட்டிலிருந்து பேருந்து அல்லது கார்களில் ஒன்று முதல் இரண்டு மணி நேரத்திற்குள் இந்த இடத்தை எளிதில் அடையலாம்.

Jai Kumara Yesappa

ஏற்காடு காட்சி முனை

ஏற்காடு காட்சி முனை

ஏற்காடு திப்பரேரி காட்சி முனை ஏற்காட்டின் தென்பகுதி காட்சி முழுவதையும் ஒரே கோணத்தில் பார்க்கும் வாய்ப்பை அளிக்கிறது. மேலும் இப்பகுதியின் பேரழகை சுற்றுலா பயணிகள் கண்டு களிப்பதற்கும் யானைப்பல் மலை உள்ளிட்ட அழகிய இடங்களை பார்பதற்கும் ஏற்றதாக இருப்பதால் இந்த இடம் மிகவும் பிரபலமான ஒன்று.

இங்கு உள்ள தூய வெண்மை நிற பாறைகள் ஒரு விண்கல் பகுதி இங்கு விழுந்து பின்னர் உருவானதாக நம்பப்படுகிறது. திப்பேரேரி சாலை வழியாக இந்த காட்சி முனையை அடையலாம். கண்களை கவரும் இந்த சூழல் வழியாக பயணம் சென்று வருவது நினைவின் பொக்கிஷமாக இருக்கும்.

லிட்டில் இங்கிலாந்து

அமைதியான, அழகிய சோலையைப் போன்ற தளி கிராமம் 'லிட்டில் இங்கிலாந்து' என்ற பெயரைப் பெருமையுடன் பெற்றிருக்கும் சுற்றுலாத் தலமாகும். எண்ணற்ற ஏரிகள், சிறு மலைக்குன்றுகள் மற்றும் மகிழ்ச்சியை உறுதியளிக்கும் பள்ளத்தாக்குகள் ஆகியவற்றையுடைய தளி ஒவ்வொருவருக்கும் ஒருவித உணர்வைத் தரும் சுற்றுலாத்தலமாகும்.

தளியின் ஆண்டு முழுவதுமே குளுமையாக இருக்கும் பகுதியாக இருப்பதால் இயற்கையாகவே கடுமையான வெப்பத்தை எதிர் கொள்ளும் தமிழ் நாட்டிலும், உள்ளூர்வாசிகளுக்கும் மிகவும விரும்பத்தக்க சுற்றுலாத் தலாமாக இருக்கிறது.

எப்போது எப்படி ?

எந்தவொரு சீசனிலும் சுற்றுலாப் பயணிகளின் பட்டியலில் ஒரு நிரந்தர இடத்தைப் பெற்றுள்ள இடமாக விளங்குகிறது தளி கிராமம்.

ஒசூரில் இருந்து 25 கிமீ தொலைவில் உள்ள தளி கிராமத்திற்கு தமிழ் நாட்டின் இதர பகுதிகளிலிருந்தும், கேரளாவிலிருந்தும் சென்று வர முடியும்.

சாகச பயணங்கள்

மலையேற்றம் மற்றும் மலை ஏறுதல் ஆகியவற்றிற்கு ஏற்ற நிலப்பகுதிகளை கொண்டுள்ள இடமாக தளி புகழ் பெற்றிருக்கிறது. தளி பள்ளத்தாக்கின் செங்குத்தான ஒற்றையடிப்பாதைகளில் ஹைக்கிங் செல்லும் போது கிடைக்கும் காட்சிகள் வேறெங்கும் கிடைப்பதில்லை.

Skumer

Read more about: travel forest
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X