» »அரபிக் கடலருகே அழகு மிகுந்த 10 சுற்றுலாத் தலங்கள்...

அரபிக் கடலருகே அழகு மிகுந்த 10 சுற்றுலாத் தலங்கள்...

Written By: Sabarish

இந்தியாவில் தென்னிந்திய மாநிலமான கேரளத்தில் இருந்து மேற்கு தொடர்ச்சி மலையைப் போலவே பல சுற்றுலாத் தலங்கள் மும்பை வரை நீண்டுள்ளது. கடற்கரை ஓரம் பறந்துவிரிந்து கிடக்கும் இந்த சுற்றுலாத் தலங்களுக்கு வாழ்வில் ஒரு முறையாவது சென்று வர வேண்டும், அத்தகைய சிறப்புகளை எல்லாம் இத்தலங்கள் கொண்டுள்ளன. சரி, கேரள மாநிலத்தில் இருந்து மகாராஸ்டிராவில் உள்ள மும்பை வரை ஒரு முறையாவது காணவேண்டிய 10 சுற்றுலாத் தலங்கள் என்னவெல்லாம் என பார்க்கலாம் வாங்க...

காப்பாடு பீச்

காப்பாடு பீச்


கோழிக்கோடு நகரத்திலிருந்து 18 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள காப்பாடு கடற்கரைதான் 1498-ஆம் ஆண்டில் வாஸ்கோடகாமா முதன் முதலாக இந்தியாவில் கால் பதித்த இடம். வாஸ்கோடகாமா இந்தக் கடற்கரையில் கால் வைத்ததன் நினைவுச் சின்னம் ஒன்றும் இங்கு காணப்படுகிறது. அதில் கப்பக்கடவு எனும் இந்த தலத்தில் வாஸ்கோட காமா 1498-ஆம் ஆண்டு வந்திறங்கினார் எனும் வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

Dijaraj Nair

மங்களூர்

மங்களூர்

கர்நாடகத்தின் நுழைவாயில் என்று அழைக்கப்படும் எழில் வாய்ந்த மங்களூர் நகரமானது கரு நீலத்தில் காட்சியளிக்கும் அரபிக்கடலுக்கும், உயர்ந்து ஓங்கி நிற்கும் மேற்குத்தொடர்ச்சி மலைத் தொடருக்கும் இடையே அமைந்திருக்கிறது.

Nithin Bolar k

மால்பே பீச்

மால்பே பீச்


உடுப்பியிலிருந்து 6 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள மால்பே கடற்கரை ஒரு மீன்பிடி துறைமுகமாகவும் விளங்குகிறது. இந்தக் கடற்கரையிலிருந்து பார்த்தால் மால்பே கப்பல் கட்டும் தளமும் காட்சிக்கு தெரிகின்றது. இந்த கடற்கரைப் பகுதியில் படகுச்சவாரி, தூண்டில் மீன் பிடித்தல், அலைச்சறுக்கு விளையாட்டு, போன்ற பல வகையான பொழுதுபோக்கு அம்சங்கள் சுற்றுலாப் பயணிகளுக்காக காத்திருக்கின்றன.

Neinsun

மரவந்தே

மரவந்தே


மரவந்தே நகரம் தனது வலது புறத்தில் அரபிக்கடலையும், இடது புறத்தில் சௌபர்ணிகா நதியையும் கொண்டு, அதன் நடுவே ஒரு சொர்க்க பூமியாகவே காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. மரவந்தே கடற்கரை மனிதனின் கால்தடம் படாமல் பல மைல்கல் பரந்து விரிந்து கிடக்கும் வெள்ளை மணற்பரப்பின் புனிதத் தன்மையை குறிக்கும் விதமாக கன்னிக் கடற்கரை என்று அழைக்கப்படுகிறது.

Ashwin Kumar

கோகர்ணா

கோகர்ணா


கர்நாடக மாநிலத்தின் உத்தரகன்னட மாவட்டத்தில் அமைந்திருக்கும் கோகர்ணா நகரம் ஒரு முக்கிய ஆன்மீக யாத்ரீக ஸ்தலமாகவும், இங்குள்ள அழகிய கடற்கரைகளுக்காக ஒரு உல்லாச சுற்றுலா மையமாகவும் பிரசித்தி பெற்றுள்ளது.

Happyshopper

பெல்காம்

பெல்காம்


பெங்களூருவுக்கு அடுத்து கர்நாடக மாநிலத்தின் 2-வது தலைநகரமாக பெல்காம் மாநகரம் அறியப்படுகிறது. கோகாக் அருவி, கமல் பசாதி ஜைன கோவில், ஹலசி என்ற 1000-ஆம் ஆண்டு கோவில், தூத்சாகர் அருவி ஆகியவை பெல்காமின் முக்கிய சுற்றுலாத் தலங்களாக விளங்கி வருகின்றன.

Sharat Chandra

வெங்குர்லா

வெங்குர்லா


மகாராஷ்டிர மாநிலத்தின் சிந்துதுர்க் மாவட்டத்தில் அமைந்துள்ள வெங்குர்லா நகரம், ஒருபக்கம் முந்திரி, மாம்பழம், தென்னை, பெர்ரி மரங்களை கொண்ட காடுகள் மற்றும் மலைகளாலும், மறுபக்கம் அரபிக்கடலாலும் சூழப்பட்டு அழகுடன் காட்சியளிக்கிறது.

Nilesh2 str

கோலாப்பூர்

கோலாப்பூர்

கோலாப்பூர் நகரத்தை மஹாராஷ்டிரா மாநிலத்தின் ஆன்மீக அடையாளச் சின்னம் என்றே சொல்லலாம். புராதனமான பழம்பெருமை வாய்ந்த ஆலயங்கள், அமைதி தவழும் பூங்காங்கள், வரலாற்றுப் பின்னணியை உடைய கோட்டைகள் மற்றும் அரண்மனைகள் என்று பல அம்சங்களை தன்னுள் கொண்டிருக்கும் இந்த வளம் நிறைந்த நகரம் இந்தியாவின் தேசிய பெருமைகளுள் ஒன்று.

Shakher59

ரத்னகிரி

ரத்னகிரி


மஹாராஷ்டிரா மாநிலத்தின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள இந்த ரத்னகிரி நகரம், அரபிக்கடலோரம் அமைந்துள்ள மற்றுமொரு சிறிய அழகிய துறைமுக நகரமாகும்.

Axis of eran

மஹாபலேஷ்வர்

மஹாபலேஷ்வர்


மஹாராஷ்டிரா மாநிலத்தின் சதாரா மாவட்டத்தில் அமைந்திருக்கும் மஹாபலேஷ்வர் ஒரு பிரபலமான மலை வாசஸ்தலமாகும். ரம்மியமான மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரில் அமைந்துள்ள இந்தப் பகுதி உலகில் என்றென்றும் பசுமையாக காணப்படும் இடங்களில் ஒன்று.

Sagar chauhan bk

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்