Search
  • Follow NativePlanet
Share
» »துவாரகாவில் நாம் கட்டாயம் காண வேண்டிய பதினொறு இடங்கள் !!

துவாரகாவில் நாம் கட்டாயம் காண வேண்டிய பதினொறு இடங்கள் !!

துவாரகாவில் நாம் கட்டாயம் காண வேண்டிய பதினொறு இடங்கள் !!

By Balakarthik Balasubramanian

குஜராத்தில் அமைந்திருக்கும் இந்த துவாரகா, சார் தாம்களுள் ஒன்றாக விளங்குவதோடு இந்துக்களின் யாத்ரீக முக்கிய இடமாகவும் காணப்படுகிறது. துவாரகாவை சுற்றி பல அழகிய ஆலயங்கள் அமைந்திருக்க, இந்த இடமோ அரபிக் கடலின் ஓரத்தில் காணப்படுகிறது. அதனால், இந்த இடம் கம்பீரமான காட்சியை கண்களுக்கு தந்து நானே ராஜா என்பது போல் பெருமையுடன் நின்று நம்மை காண வரவேற்கிறது.

இந்து விழாக்களான...ஜனமஸ்தமி (கிருஷ்ண பிரபுவின் பிறந்த நாள்) அன்று ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கூடுவதோடு கூட்டு பிரார்த்தனையும் செய்து விழாவை சிறப்பித்து மனமகிழ்கின்றனர்.

பெய்ட்டிற்கு அப்பால்...ருக்மணி ஆலயமும், துவார்கதிஷ் ஆலயமும், சூடாமா பாலமும் என காணப்பட...அத்துடன் பிரசித்திபெற்ற யாத்ரீக தளமான நாகேஷ்வர ஆலயமும், இந்துக்களுக்கு முக்கிய வழிபாட்டு தளங்களாக அமைந்து இருக்க...அதோடு இணைந்தவாறு 12 ஜோதிலிங்க சிவன் ஆலயங்களுள் ஒன்றாகவும் இது காணப்படுகிறது.

துவாரகாவுக்கு நாம் செல்ல திட்டமிடுவோமெனில், சில ஈர்க்க கூடிய இடங்களுக்கு நாம் செல்லாமல் ஒருபோதும் திரும்பிவிட கூடாது என்பதை மனதில் கொள்ள வேண்டும். இருப்பினும், இந்த துவாரகா மிகப்பெரிய இடமாக ஒன்றும் தென்படுவதில்லை. அதனால், இரண்டு அல்லது மூன்று நாட்கள் நாம் இங்கே தங்கி அனைத்து இடங்களையும் பார்த்து செல்வது சிறந்ததாக அமைகிறது.

துவாரகாவில் விடுமுறையின்போது நாம் இருக்க, இங்கே நாம் காணும் காட்சிகளும், நம் நாட்டின் பழமை நாகரிகமும் நம்மை வசீகரித்து மனதினை வருடுகிறது. சவுராஷ்டிரா தீபகற்பத்தின் மேற்கு பகுதியில் பார்ப்பதற்கு அழகிய இடங்கள் பல இருக்க, அது உங்கள் மனதை அமைதிகொள்ள செய்வதோடு... இந்தியாவின் கடந்த கால வரலாற்றையும் நம் கண் முன்னே சமர்ப்பிக்கிறது.

 துவாரகாவை நாம் அடைவது எப்படி:

துவாரகாவை நாம் அடைவது எப்படி:

ஆகாய மார்க்கமாக அடைவது எப்படி:

அருகில் இருக்கும் ஒரு விமான நிலையமாக 145 கிலோமீட்டர் (தோராயமாக) தொலைவில் காணப்படும் ஜாம் நகரிலுள்ள விமான நிலையம் தென்படுகிறது. இங்கே நாம் வர, இங்கிருந்து வாடகை கார் அல்லது பேருந்தின் உதவியுடன் நாம் துவாரகாவை அடையலாம். இந்திய விமானப்படைக்கு சொந்தமான இந்த இடத்தில் அமைந்திருக்கும்., ஜாம் நகர் விமான நிலையம் ஒரு நாளைக்கு 800 பயணிகளை உள்ளடக்கிகொள்ள, ஓர் அல்லது இரண்டு விமானங்களை இங்கே நிறுத்த கூடிய வசதி இருக்கிறது.

இந்த விமான நிலையம், மும்பை விமான நிலையம் மற்றும் அங்குள்ள விமானங்களுடன் இணைக்கப்பட்டிருக்க...நாம் ஏர் இந்தியா விமானத்தை மட்டும் தான் இங்கே செல்ல தேர்ந்தெடுக்க முடியும். மற்றுமோர் வழியான விமான பயணம் மூலமாகவும் நம்மால் இந்த இடத்தை அடைய முடிகிறது.

நாம் அஹமதாபாத்திற்கு விமானம் மூலம் செல்வதும் சிறந்த போக்குவரத்தாக அமைய, அங்கிருந்து நாடு முழுவதிற்கும் விமான சேவைகள் தங்கு தடையின்றி இயக்கப்படுகிறது. அஹமதாபாத்தை அடையும் நாம், அங்கிருந்து தோராயமாக 463 கிலோமீட்டர்கள், பேருந்து அல்லது காரின் மூலம் முன்னோக்கி செல்ல வேண்டும்.

தண்டவாள மார்க்கமாக செல்வது எப்படி:

மேற்கு ரயில்வே நெட்வொர்க்கில் அமைந்திருக்க, 132 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் ஜாம் நகர் இரயில் நிலையத்துடனும், அத்துடன் தோராயமாக 207 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ராஜ்கோட்டுடன் இந்த துவாரகா இணைந்திருக்கிறது.

மீட்டர் கேஜ் பாதையில் இரயில்கள் தொடர்ந்து இயக்கப்பட...விரம்கம்மிலிருந்து ஓகாவரைக்கும் துவாரகாவை கடந்து செல்கிறது. அதுமட்டுமல்லாமல், நாம் ப்ராட் கேஜ் இரயில் மூலமாகவும் அஹமதாபாத்திலிருந்து துவாரகாவுக்கு செல்லலாம்.

சாலை மார்க்கமாக செல்வது எப்படி:

மாநில போக்குவரத்தின் சேவைப்படி சிறந்த பேருந்துகள்...குஜராத்திலிருந்து பல முக்கிய நகரங்களுக்கு துவாரகா வரை இயக்கப்படுகிறது. நாம்...சூரத், ராஜ்கோட் அல்லது அஹமதாபாத்திலிருந்து பேருந்தின் வாயிலாக செல்லலாம். அல்லது நீங்கள் சொகுசு பேருந்துகளான ஏசி வைத்த தனியார் பேருந்தையோ...அல்லது ஸ்லீப்பர் பேருந்துகள், இரட்டை அடுக்கு பேருந்துகளை கூட நம் பயணத்திற்கு தேர்வு செய்து கொள்ளலாம்.

குஜராத் சாலைகள் அழகாக காணப்பட, சாலை பயணத்துக்கு ஏற்றவாறு வசதியாகவும் இருக்கிறது. அதனால் நீங்கள், பேருந்தை உங்கள் பயணத்துக்கு முன்பதிவு செய்வது நல்லது (அல்லது) நீங்கள் கார் வாடகைக்கு எடுத்துகொண்டும் செல்லலாம். உங்கள் சொந்த காரில் இனிமையான பயணத்தை தொடர வேண்டுமென்றாலும் தாராளமாக செல்வதன் மூலம் துவாரகாவை அடையலாம்.

கீழே தொடர்ந்து படிப்பதன் மூலம் துவாரகாவில் நாம் பார்க்க வேண்டிய முக்கியமான பதினொன்று இடங்கள் எவை என்பதை தெரிந்துகொள்ளலாம்.

Asdelhi95

நாகேஷ்வர ஜோதிலிங்க சிவனாலயம்:

நாகேஷ்வர ஜோதிலிங்க சிவனாலயம்:

இதனை ‘நாகனாத் ஆலயம்' என்றும் அழைப்பர். சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த புகழ்பெற்ற புனித யாத்திரை தளம், சிவபுராணத்தில் குறிப்பிடும் 12 ஜோதி லிங்கங்களுள் ஒன்றாக பெருமையுடன் விளங்குகிறது. மத முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆலயத்திற்கு, வருடம் 1000 யாத்ரீகர்கள் வந்து தங்கள் கடவுள் பக்தியை வெளிப்படுத்தி வணங்கி செல்கின்றனர்.

இங்கே ஆலயத்தில் காணப்படும் மாபெரும் சிவலிங்க சிலையானது...எதிர்வினைகள் மற்றும் விசயங்களிடமிருந்து நம்மை காப்பாற்றுவதாகவும் நம்பப்படுகிறது. இந்த ஆலயம், துவாரகாவின் சுற்றளவில் அமைந்திருக்க, சிவராத்திரியின் போது, ஆயிரக்கணக்கான யாத்ரீகர்கள் இங்கே வந்து கோலாகலமாக கொண்டாடி செல்கின்றனர் என்பதும் நமக்கு தெரிய வருகிறது.

TeshTesh

பெய்ட் துவாரகா தீவு:

பெய்ட் துவாரகா தீவு:


தீவானது சிறிதாக இருப்பினும் அழகிய காட்சிகளை கண்களுக்கு தரவல்லதாக அமைந்திருக்கிறது. நகரத்திலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் இது அமைந்திருக்க, ஓக்லாவுக்கு முன்னதாக நிறையபேர் வந்து செல்லும் முக்கிய மத மையமாகவும் இது இருக்கிறது.

இந்த தீவை சுற்றி சிறிய கோவில்கள் தென்பட, அழகிய காட்சிகளால் தன் கண்களை குளிர்விக்க துடிக்கும் இயற்கை ஆர்வலர்களுக்கு ஏற்ற வகையில் இங்கே காணும் வெண் நிற மணல் கடற்கரையிலும் பவள பாறைகளின் இடுக்கிலும் நம் மனம் சென்று ஒளிந்துகொண்டு வரவும் மறுக்கிறது.

Bhargavinf

துவார்கதீஷ் ஆலயம்:

துவார்கதீஷ் ஆலயம்:

ஜகத் ஆலயம் என பெருமையுடன் அழைக்கப்படும் இந்த ஆலயம் மிகவும் பழமை வாய்ந்த ஒன்றாகும். வரலாற்றின் பக்கங்கள் வாயிலாக நமக்கு தெரிய வருவது என்னவென்றால்...பதினாறாம் நூற்றாண்டில் இது கட்டப்பட, இதனை கட்டியது கிருஷ்ண பெருமானின் பேரனான வஜ்ரனபா அரசன் என்றும்...அவர் சுண்ணாம்பு மற்றும் மணலை கொண்டு கட்டியதாகவும் நமக்கு தெரிய வருகிறது.

இந்த அழகிய ஐந்தடுக்கு ஆலயம் நகரத்தின் நடுவில் கம்பீரமாக உயர்ந்து நிற்க, இந்த ஆலயத்தில் காணப்படும் 56 படிகளை ஏறுவதற்கு சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர். ‘மோக்ஷ த்வார்' என்றழைக்கப்படும் முக்கிய நுழைவாயில் வழியாக பண்டைய காலத்தின் சுவடுகளை நம்மால் திரும்பி பார்க்க முடிகிறது.

Scalebelow

ருக்மணி ஆலயம்:

ருக்மணி ஆலயம்:


கிருஷ்ண பெருமான் வாழ்க்கையை வர்ணிக்கும் அழகிய அர்ப்பணிப்பு இடம் தான் இந்த ருக்மணி ஆலயமாகும். இது அழகாகவும், கலை நயத்துடனும் காணப்பட., நீங்கள் ஒரு கலை ஆர்வலராக இருப்பின்...இங்கே காணும் பழைய காதல் ஓவியங்களையும், கிருஷ்ண பெருமான், ருக்மணியுடன் கொண்ட காதல் காட்சிகளையும் கண்டு கட்டாயம் மெய் மறந்து நிற்பீர்கள்.

ஆலய சுவற்றின் மூலம் பன்னிரெண்டாம் நூற்றாண்டில் எழுப்ப பட்டதாக தெரியவர, முக்கிய நகரத்திலிருந்து 1.5 கிலோமீட்டர் தூரத்தில் பகிரதி ஆற்றங்கரையில் இந்த ஆலயம் அமைந்து நம்மை காட்சிகளால் அமைதியடைய செய்கிறது.

சுவாமி நாராயணன் ஆலயம்:

சுவாமி நாராயணன் ஆலயம்:

துவார்கதீஷ் ஆலயத்திற்கு அருகில் இந்த ஆலயம் அமைந்திருக்க, இந்த ஆலயத்தின் கட்டிடக்கலைகள் புதுமையானதாகவும், அழகாகவும், தியானம் செய்யதோர் சிறந்த இடமாகவும் வரும் பக்தர்களுக்கு அமைந்து மனதை அமைதிப்படுத்துகிறது.

மேலும், அழகான சிற்பங்கள்...ஆலயத்தின் சுவற்றில் காணப்பட, அவை நம் மனதை மயக்கி அழகினால் கண்களை கவர்கிறது. அத்துடன், இந்து கடவுளுக்கான சிலைகளும், தேவிக்கான சிலைகளும் ஆலயத்தில் காணப்பட, அமைதியை நாடும் நண்பர்களுக்கு இந்த இடம் சிறந்ததோர் இடமாக அமைகிறது.

கீதா மந்திர்:

கீதா மந்திர்:

வெள்ளை பளிங்கு கற்களால் கட்டப்பட்ட அழகிய கோவில் இது. இந்த ஆலயத்தின் அமைப்பானது அழகாக காணப்பட, சுத்திகரிக்கப்பட்டதாகவும் விளங்குகிறது. பகவத் கீதை மற்றும் அதன் உபதேசங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த ஆலயத்தின் சுவற்றில்...பகவத் கீதையின் கருத்துக்களும் காணப்பட, யாத்ரீகர்கள் தங்குவதற்கு சிறந்த இடமாகவும் இது அமைகிறது. இந்தியாவின் பிரசித்திபெற்ற தொழிலதிபரான டைகூன் பிர்லா குடும்பத்தால் 1970ஆம் ஆண்டு இந்த ஆலயம் கட்டப்பட்டதாகும்.

கோபி தலவ்:

கோபி தலவ்:


பழைய நாட்டுபுற நளினத்தை தாங்கிகொண்டிருக்கும் இந்த இடம், பழங்காலத்தில் கிருஷ்ண பெருமானால் பமசுரா என்னும் அரக்கன் கொல்லப்பட்டதாகவும், அதனால் 16,000 இளவரசிகள் விடுதலை அடைந்ததாகவும் வரலாறு கூறுகிறது.

முக்கிய நகரத்திலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் இந்த இடம் காணப்பட, இங்குள்ள அழகிய குட்டையில் சந்தன தன்மை கொண்ட மணல்கள் தென்படுவதாகவும், அதனை யாத்ரீகர்கள் எடுத்து தங்கள் தலையில் திலகம் செய்துகொள்வதாகவும் சொல்லப்படுகிறது.

கோமதி தொடர்ச்சி:

கோமதி தொடர்ச்சி:


பழங்காலத்து நம்பிக்கையின்படி...கோமதி நதியை, இந்தியாவின் கங்கை நதிக்கு நிகராக புனித நதி என அழைத்தனர். இந்த இடத்தில், நதிகளானது கடலை சந்திக்கிறது. அதனால், இங்கே தெய்வ பக்தியுடன் யாத்ரீகர் தங்களுடைய தலையை முக்கி எழுந்து செல்ல, ஒவ்வொரு வருடமும் நாடு முழுவதும் சுற்றுலா பயணிகள் பலரும் வந்து இந்த கோமதி தொடர்ச்சியில் புனித நீராடி செல்வதாக நாம் அறிகிறோம்.

துவாரகா கடற்கரை:

துவாரகா கடற்கரை:

கடற்கரையின் இயற்கை அழகால் மனம் வருட, அதனை எண்ணி பேரின்பம் கொள்ள நினைக்கும் ஒருவரா நீங்கள்? அப்படி என்றால், இந்த துவாரகா கடற்கரையை காண ஒருபோதும் தயங்காதீர்கள். இது அரபிக்கடலை நோக்கி பரந்துவிரிந்து காணப்பட, சூரிய அஸ்தமனத்தின் போது மனம் மகிழ நீங்கள் ஆசைகொண்டால், கண்டிப்பாக இங்கே வந்து அமர்ந்து நேரத்தை செலவிடுங்கள். இந்த இடமானது சுற்றுலா பயணிகளுக்கும், உள்ளூர் வாசிகளுக்கும் ஏற்றதோர் இடமாக அமைய, மாலை பொழுதில்., ஆலயத்தின் முக்கிய ஸ்தலத்தின் ஆரத்தியின்போது இங்கே நிறைய பேர் கூடுகின்றனர்.

Prabhuti Sorathiya

கலங்கரை விளக்கம்:

கலங்கரை விளக்கம்:


ரூபன் கிரீக்கில் 1866 ஆம் ஆண்டு இது அமைக்கப்பட்டது. இந்த அழகிய கண் கவரும் இடத்தை துவாரகாவில் நாம் காண வேண்டியதை நினைவில் கொள்ள வேண்டியது அவசியமாகும். இந்த 43 மீட்டர் உயரமுள்ள கலங்கரை விளக்கமானது, ஒரு வித அழகிய ஈர்ப்பை தர...சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இங்கே வந்து ரசித்து செல்கின்றனர்.

முக்கிய நகரத்திலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் இந்த இடம் காணப்பட, பெரும்பாலும்...சுற்றுலா பயணிகள், மாலை நேரத்தில் இங்கே வந்து வெளிச்சத்தை கண்டு மனதை அமைதிப்படுத்தி செல்கின்றனர். ஆம், நீங்கள் அமைதி மற்றும் அழகிய தருணத்தை விரும்பும் ஒருவராயின், உங்கள் மனதை இந்த கலங்கரை விளக்கம் கட்டி இழுக்கும் என்பதில் மாற்றுக்கருத்து ஏதுமில்லை.

Saawariyasairam

சூடாமா சேடு:

சூடாமா சேடு:


மகாபாரதத்தின்படி, சூடாமா என்பவர் கிருஷ்ண பெருமானின் சிறந்த தோழனாவார். அதனால்தான் இந்த பாலத்திற்கு இப்படி ஓர் பெயர். துவாரகேஷ் ஆலயத்திற்கு அருகாமையில் இந்த பாலம் அமைந்திருக்க, இடைநீக்கப்பட்ட இந்த பாலத்திலிருந்து நம்மால் கோமதி தொடர்ச்சியின் அழகினை ரசிக்க முடிகிறது. சூரிய அஸ்தமனத்தை நாம் ரசிக்க சிறந்த இடமாக இது அமைய, சூடாமா சேடுவை நாம் பார்க்க வேண்டிய இடப்பட்டியலில் ஒன்றாக சேர்க்கவேண்டியது முக்கியமாகும்.

Read more about: travel beach
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X