» »இந்தியாவிலேயே புகழ்பெற்ற சிறைச்சாலைகள் எங்கெங்கே இருக்குன்னு தெரியுமா?

இந்தியாவிலேயே புகழ்பெற்ற சிறைச்சாலைகள் எங்கெங்கே இருக்குன்னு தெரியுமா?

Posted By: Udhaya

சொத்துகுவிப்பு வழக்கில் தீர்ப்பு வந்ததும் உடனடியாக சரணடைய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, தனது உடல் நிலையை காரணம் காட்டி 4 வார காலம் அவகாசம் கேட்டார் சசிகலா.

ஆனால் சரணடைவதற்காகவென்று அவருக்கு கால அவகாசம் தர முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறிவிட்ட நிலையில், சசிகலா போயஸ் இல்லத்திலிருந்து பெங்களூர் நீதிமன்றம் நோக்கி காரில் புறப்பட்டார்.

கூடுதல் நகர உரிமையியல் அமர்வு முன்னிலையில் நீதிமன்றத்தில் ஆஜரானதும், அவர்கள் மூவரும் தெற்கு பெங்களூரிலுள்ள (ஒசூர் ரோடு அருகே) பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்படுவர். இங்குதான் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா தீர்ப்புக்கு பிறகு 21 நாட்கள் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் அடைக்கப்பட்டிருந்தனர்.

சரி.. இப்படி குற்ற வழக்குகளில் கைது செய்யப்படும் நபர்களின் தண்டனைகாலங்களை கழிப்பதற்காக அவர்களை அடைக்கும் சிறைச் சாலைகள் இந்தியாவில் பல உள்ளன. அவற்றுள் டாப் 5 பெரிய சிறைகள் பற்றி நாம் இப்போது காணலாம்.

திகார்

திகார்

நாட்டின் தலைநகரான டெல்லியில் அமைந்துள்ள மத்திய சிறைச்சாலை திகார் சிறை அல்லது திகார் ஆஸ்ரமம் என்று அழைக்கப்படுகிறது.

இது ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய சிறைச்சாலையாகும்.

PC: Kalki

இரட்டை சிறைச்சாலை

இரட்டை சிறைச்சாலை

திகார் சிறையுடன் இணைந்தே இருக்கும் இந்த சிறைச்சாலை மாவட்ட நீதிமன்ற சிறையாகும்.

திகார் சிறை 1957ம் ஆண்டிலிருந்து இயங்கி வருகிறது. இதில் 5200 கைதிகள் வரை அடைத்துவைக்க முடியும்.

சிறப்பம்சம்

சிறப்பம்சம்

சிறை என்பது கைதிகளுக்கு தண்டனை கொடுக்கும் இடம் என்றில்லாமல், அவர்களை நல்வழிப்படுத்தும் இடமாக இருக்கவேண்டும்.

அந்த வகையில் மியூசிக் தெரபி அளிக்கப்படும் ஒரு சிறையாக திகார் சிறை அமைந்துள்ளது. இங்கு கைதிகளால் இயக்கப்படும் பண்பலை வானொலி நிலையமும் உள்ளது.

யெர்வாடா மத்திய சிறைச்சாலை

யெர்வாடா மத்திய சிறைச்சாலை

 • மகாராஷ்டிர மாநிலத்தில் அமைந்துள்ளது
 • மிகவும் கட்டுப்பாடான பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த சிறை இதுவாகும்.

PC: Sweet madhura

அளவு

அளவு

 • தென் ஆசியாவின் மிகப் பெரிய சிறைகளுள் இதுவும் ஒன்றாகும். 512 ஏக்கர் அளவில் பரந்து விரிந்துள்ளது.


 • 3600 கைதிகளை ஒரே நேரத்தில் சிறை தன்வசம் வைத்துக்கொள்ளும் வசதி அமைக்கப்பட்டிருக்கிறது.

 • புனேயில், யெர்வாடா திறந்தவெளி சிறைச்சாலையும், அதற்கருகிலேயே மத்திய சிறைச்சாலையும் அமைந்துள்ளது.

சிறப்பம்சம்

சிறப்பம்சம்


 • இந்திய சுதந்திரத்திற்காக போராடியவர்கள் பலர் இங்கு சிறைபட்டிருந்தனர். காந்தி உட்பட பலர் 1930 முதல் 1940 வரை இங்குதான் அடைக்கப்பட்டிருந்தனர்.

PC: Mubarakansari

புழல் மத்திய சிறைச்சாலை

புழல் மத்திய சிறைச்சாலை

 • சென்னைக்கு மிக அருகில் திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது இந்த சிறை.
 • இது 2006 ஆம் ஆண்டிலிருந்து புழக்கத்தில் உள்ளது.

PC: பரிமதி

கொள்ளளவு

கொள்ளளவு

 • புழல் சிறையானது 3000 பேரை அடைத்துவைக்கும் அளவுக்கு கொள்ளளவு கொண்டது.
 • 212 ஏக்கருக்கு பரந்து விரிந்துள்ளது இந்த புழல் சிறைச்சாலை.
சிறப்பம்சம்

சிறப்பம்சம்

 • 3 கட்டடங்கள் கொண்ட இது, ரிமாண்ட் கைதிகளுக்காக ஒன்றும், குற்றவாளிகளுக்காக மற்றொன்றும் என பிரிக்கப்பட்டுள்ளது.
 • மகளிர் கைதிகளுக்காக சிறப்பு சிறையொன்றும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ராஜமுந்த்ரி மத்திய சிறைச்சாலை

ராஜமுந்த்ரி மத்திய சிறைச்சாலை

 • ஆந்திர மாநிலம் ராஜமுந்த்ரியில் அமைந்துள்ளது இந்த சிறைச்சாலை.
 • 1602ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கோட்டை டச்சுக்காரர்களுக்கு சொந்தமானது.
 • பின்னர் வந்த ஆங்கிலேயர்கள், 1864 முதல் சிறைச்சாலையாக பயன்படுத்திவந்தனர்.
ராஜமுந்த்ரி மத்திய சிறை

ராஜமுந்த்ரி மத்திய சிறை

 • சுதந்திரத்திற்காக போராடியவர்களை அடைத்துவைக்க இந்த சிறை அதிகளவில் பயன்படுத்தப்பட்டது.
 • 1870ம் ஆம் ஆண்டுமுதல் இது மத்திய சிறைச்சாலையாக மாற்றப்பட்டது.
 • இந்த சிறை 196 ஏக்கர் நிலங்களை கொண்டுள்ளது. அதில் 37 ஏக்கரில் கட்டடங்களும், மீதி இடங்கள் காலியாகவும் உள்ளது.
நைனி சிறைச்சாலை, அலகாபாத்

நைனி சிறைச்சாலை, அலகாபாத்

 • அலகாபாத் நகருக்கு அருகே நைனி என்ற இடத்தில் அமைந்துள்ளது இந்த சிறை.
 • ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட இந்த சிறைச்சாலை மிகவும் பாதுகாப்பான சிறைச்சாலையாக கருதப்படுகிறது.
 • 3000 கைதிகளை அடைத்துவைக்கும் அளவுக்குத் தன்மை கொண்டது இந்த சிறைச்சாலை.