» »இந்த சுரங்கப்பாதைகள்லாம் ஒரு சாகச பைக் ரைடு சவால் போலாமா?

இந்த சுரங்கப்பாதைகள்லாம் ஒரு சாகச பைக் ரைடு சவால் போலாமா?

Posted By: Udhaya

சவால் பண்ற அளவுக்கு அப்படி என்ன இருக்கிறது இந்த சுரங்கப்பாதைகளில் என்று நீங்கள் கேட்கவரும் கேள்விகள் புரிகின்றன.

நீங்கள் வேகமாக ஒரு சாலைப் பயணத்தில் இருக்கிறீர்கள். ஒரு சுரங்கப்பாதையை இப்போது கடக்கவேண்டும் என்றால் உங்களின் மனநிலை எப்படி இருக்கும்...

இந்த சுரங்கப்பாதைகள்லாம் ஒரு சாகச பைக் ரைடு சவால் போலாமா?

சுரங்கப்பாதை வழியாக பயணம் செய்யும்போது மனதில் எதிர்பாராத ஒரு உணர்வு வித்தியாசமாக அமையும். அந்த அனுபவத்தில் ஒரு சாகச நிகழ்வையும் சேர்த்தால்,....

கற்பனை செய்து பாருங்கள் இந்த சுரங்கங்களில் நீங்கள் பயணம் செய்தால் எப்படி இருக்கும்?

பட்னிடாப் சுரங்கப்பாதை

பட்னிடாப் சுரங்கப்பாதை

9.2 கிமீ நீளமான இந்த சுரங்கப்பாதை ஜம்மு மாநிலத்தில் அமைந்துள்ளது.

ஆசியாவின்மிக நீளமான சுரங்கங்களில் ஒன்று. பனிக்காலத்தில் அதிக பனிப்பொழிவு இருக்கும். நீங்கள் உங்கள் துணையுடன் ஒரு லாங்க் பைக் ரைடு... சும்மா ஜமாய்க்கலாம்ல....

ரோஹ்டங் சுரங்கப்பாதை

ரோஹ்டங் சுரங்கப்பாதை

உலகின் மிகப்பெரிய சுரங்கங்களில் இதுவும் ஒன்றாகும். ரோஹ்டங் கிழக்கு பிர் பஞ்சால் பகுதியில் அமைந்துள்ளது. 8.8 கிமீ நீளமுள்ள இது இந்தியாவின் இரண்டாவது மிக நீளமான சுரங்கம்.

ஜவஹர் சுரங்கப்பாதை

ஜவஹர் சுரங்கப்பாதை


பனிகல் சுரங்கம் என்றும் அழைக்கப்படும் இது ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ளது. 2.5 கிமீ நீளம் கொண்டது இந்த சுரங்கப்பாதை.

ஜம்மு ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த சுரங்கம் ஒரு சாகச பயணம் மேற்கொள்ள சிறந்த இடமாகும்.

கம்ஷெட் மேற்கு சுரங்கப்பாதை

கம்ஷெட் மேற்கு சுரங்கப்பாதை

மகராஷ்டிர மாநிலத்தின் மிக நீளமான சுரங்கப் பாதை புனே அருகில் அமைந்துள்ள கம்ஷெட்.

93 கிமீ தொலைவுக்கு நீளும் இந்தியாவின் முதல் ஆறு வழிச்சாலையான மும்பை புனே சாலையில் அமைந்துள்ளது இந்த சுரங்கப்பாதை

காட் கி குனி சுரங்கப்பாதை

காட் கி குனி சுரங்கப்பாதை

ஜெய்ப்பூர், ராஜஸ்தான் செல்ல 2.8 கிமீ நீளத்துக்கு உருவாக்கப்பட்டுள்ள இந்த சுரங்கப்பாதை ஜலானா மலையை குடைந்து உருவாக்கப்பட்டுள்ளது.

Pc: Mayank Bhagya

பட்டான் சுரங்கப்பாதை

பட்டான் சுரங்கப்பாதை

கிட்டத்தட்ட 1 கிமீ தொலைவு கொண்ட பட்டான் சுரங்கம் இந்தியாவின் அதிமேம்பட்ட சுரங்கப்பாதையாக உள்ளது.

பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்துள்ளதாக உள்ளது பட்டான் சுரங்கப்பாதை.

ஆட் சுரங்கப்பாதை

ஆட் சுரங்கப்பாதை

இருள் நிறைந்த பாதையில் 15 நிமிடங்கள் வரை பயணம் செய்யும் சுரங்கப்பாதை ஆட் சுரங்கமாகும். இது சண்டிகரிலிருந்து மனாலி செல்லும் வழியில் அமைந்துள்ளது.

குள்ளு மனாலியின் கேட் வேயாக இருக்கும் இந்த சுரங்கம் சுமார் 3 கிமீ தொலைவு கொண்டது ஆகும்.

Read more about: travel