Search
  • Follow NativePlanet
Share
» »கேரளாவின் சிறந்த ஐந்து அழகிய கடற்கரைகள்

கேரளாவின் சிறந்த ஐந்து அழகிய கடற்கரைகள்

கேரளா, கடவுளின் சொந்த நாடு என அழைக்கப்படும் அழகிய மாநிலம். எங்கெங்கு காணினும் நிறைந்திருக்கும் தென்னை மரங்களும், பசுமை போர்த்திய புல்வெளிகளும், நிறைந்தோடும் ஆறுகளும் நமக்குள் அற்புதமான ஒரு உணர்வை, வர்ணிப்பை கடந்த மகிழ்ச்சியை உருவாக்கும். இவைகள் தவிர கேரளாவில் இருக்கும் கடற்க்கரைகளும் பேரழகு பூண்டவை. அரேபியக்கடலை ரசித்தபடி கேரளக்க் கடற்க்கரைகளில் உலாவருவது மனதுக்கு மகிழ்வையும், நிறைவையும் தரும். நண்பர்களுடன் வந்து கொண்டாடி கூத்தடிக்கவும் இவை ஏற்றவையே. வாருங்கள் கடவுள் தேசத்தின் சிறந்த ஐந்து கடற்க்கரைகளை பற்றி தெரிந்து கொள்வோம்.

ஹோட்டல் புக்கிங்கில் 50% வரை தள்ளுபடி பெற இங்கே கிளிக்குங்கள்

கோவளம் கடற்க்கரை:

Photo: leendeleo

17 கி.மீ நீளம் கொண்ட கோவளம் கடற்கரையில் மூன்று பீச்சுகள் அடுத்தடுத்து அமைந்திருக்கின்றன. லைட் ஹவுஸ் பீச், ஹவாஹ் பீச் மற்றும் சமுத்ரா பீச் ஆகியவை சேர்ந்த தொகுப்பே கோவளம் கடற்க்கரை என்று அழைக்கப்படுகிறது. லைட் ஹவுஸ் பீச் தான் சுற்றுலாப்பயணிகள் அதிகம் விரும்பும் பீச்சாக உள்ளது. இரவு நேரங்களில் இங்கிருக்கும் கலங்கரை விளக்கின் வெளிச்சத்தில் கடற்கரையை ரசிப்பது அத்தனை அற்புதமான அனுபவமாக அமையும்.

Photo: Katrin Lorenzen

ஹவாஹ் பீச்சில் ஒரு காலத்தில் வெளிநாட்டு பெண்கள் மேலாடையின்றி சூரியக்குளியல் போட்டிருக்கின்றனர். அனால் தற்போது அவை தடை செய்யப்பட்டு விட்டது. மீனவ குடிகளால் சமுத்ரா பீச் எப்போதும் பரபரப்புடன் காணப்படுகிறது. மீன் வணிகம் இங்கு அதிகம் நடை பெறுவதால் சுற்றுலாப்பயணிகள் இங்கு அதிகம் வருவதில்லை. சூரியன் மறையும் வேளைகளில் இங்கு வானில் நடக்கும் வர்ணஜாலங்களை உங்கள் குவியத்தில் சிறைபிடித்திட மறக்காதீர்கள். கேரளா தலைநகர் திருவனந்த புறத்தில் இருந்து 17 கி.மீ தொலைவில் இவை அமைந்திருக்கின்றன.

வர்கலா பீச்:

Photo: Simon

கேரளாவின் மிக அழகிய கடற்க்கரையான இந்த வர்கலா பீச்சின் சிறப்பு என்னவென்றால் இங்கு அரேபியக்கடல் மற்றும் இந்தியப்பெருங்கடல் ஆகிய இரண்டின் கரைகளும் இங்கே ஒரே இடத்தில் அமைந்திருக்கின்றன. மேலும் ஒரு கேரளாவில் மலைக்குன்றை ஒட்டி அமைந்திருக்கும் ஒரே கடற்கரையும் இதுதான். நீச்சலடிக்க மற்றும் சூரியக்குளியல் போட தகுந்த இடமாக இந்தக்கடற்க்கரை உள்ளது. இங்கு நடக்கும் சூரிய அஸ்தமனத்தின் கண் கொள்ளாக்காட்சியை காண ஏராளமான சுட்ட்ருலாப்பயனிகள் வருகின்றனர். இந்தக்கடற்க்கரை பாபநாசம் பீச் என்ற பெயரிலும் விளிக்கப்படுகிறது.

பெக்கல் பீச்:

Photo:

மணிரத்தினம் இயக்கத்தில் உருவான 'ரோஜா' படத்தில் வரும் 'உயிரே, உயிரே' என்ற அற்புதமான பாடல் படம்பிடிக்கப்பட்ட இடம் தான் இந்த பெக்கல். இங்கு கடற்கரையும் அதனை ஒட்டியே கேரளாவில் இருக்கும் சிறந்த புராதன கோட்டை என்று சொல்லப்படும் பெக்கல் கோட்டையும் அமைந்திருக்கிறது. இந்தக்கடற்க்கரையில் நீச்சலடிக்க ஏற்ற ஆழத்தில் கடல் இருப்பதால் நிறைய சுற்றுலாப்பயணிகள் வருகின்றனர். கேரளா சுற்றுலாதுறையால் நன்கு பராமரிக்கப்படுவதால் இது மிக சுத்தமாகவும் உள்ளது. அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் இங்கு நல்ல தட்பவெட்பம் இருப்பதால் இங்கு வர ஏற்ற காலம் அது. கசர்கொட் ரயில் நிலையத்தில் இருந்து 18 கி.மீ தொலைவில் இக்கடற்கரை அமைந்திருக்கிறது.

கோழிக்கோடு பீச்:

'Classic Beauty' என்ற சொல் எதற்கு பொருந்துமோ தெரியாது ஆனால் கோழிக்கோடு கடற்கரைக்கு நன்றாக பொருந்தும். வாஸ்கோட காமா வந்திறங்கிய சிறப்பு வாய்ந்த இந்தக்கடற்க்கரை இன்றும் அதன் பழமை அகலாத அழகை, மயக்கும் வசீகரிப்பை கொண்டு சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கிறது. இந்த கடற்கரையில் நூற்றாண்டு பழமை வாய்ந்த இரண்டு 'Piers' எனப்படும் கடல் நடைபாதைகள் உள்ளன. இவற்றின் மூலம் அரேபியக்கடலின் மேல் சற்று தூரம் வரை நடந்து சென்று வரலாம். மேலும் இங்கு ஒரு படகு இல்லமும், நீர்வாழ் காட்சி சாலையும் (aquarium) மற்றும் சிங்கப்பூங்காவும் உள்ளது. குழந்தைகளுடன் செல்ல நல்ல இடமாக இந்த பூங்கா விளங்குகிறது.

மராரி பீச்:

கேரள மாநிலம் ஆலப்புழாவில் மராரிக்குளம் கிராமத்தை ஒட்டி அமைந்திருக்கிறது இந்த மராரி கடற்க்கரை. தனிமையை விரும்புகிறவர்களும், தேனிலவு செல்லவேண்டும் என நினைப்பவர்களுக்கும் ஏற்ற இடம் இந்த மராரி பீச். இந்த கடற்கரையை ஒட்டி நிறைய தனியார் தாங்கும் விடுதிகளும், அற்புதமாக பராமரிக்கப்படும் தனியார் கடற்க்கரைகளும் உள்ளன. அருமையான சூரிய அஸ்தமனத்தை ரசித்தபடி உங்கள் அன்பானவருடன் காதல் கொண்டு இதழ்பருக அற்புதமான இடம் இந்த மராரி பீச் ஆகும். கடற்கரையில் ஓய்வெடுக்க உலகின் சிறந்த ஐந்து கடற்க்கரைகளில் ஒன்றாக இதனை நேஷனல் ஜியோகிராபிக் சேனல் தேர்வு செய்துள்ளது. இங்கிருந்து ஐந்து கி.மீ தூரத்தில் NH 47 தேசிய நெடுஞ்சாலை அமைந்திருக்கிறது.

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+