» »இந்தியாவிலிருக்கும் மர்மம் நிறைந்த சுற்றுலாத்தலங்கள்

இந்தியாவிலிருக்கும் மர்மம் நிறைந்த சுற்றுலாத்தலங்கள்

Written By: Naveen

உலகில் தொடர்ச்சியாக உயிர்ப்பில் இருக்கும் பழமையான நாகரீகத்தை உடைய இந்திய நாட்டில் நிலவும் பல நம்பிக்கைகளின் வேர்கள் எங்கிருந்து துவங்கியது என்பதை கண்டறியவே முடியாது. அதுபோலவே இந்தியாவில் இருக்கும் சில இடங்களின் தன்மையும் யாருக்குமே புலப்படாத மர்மமாக இருந்துவருகிறது. அப்படி இந்தியாவில் இருக்கும் சில மர்மம் நிறைந்த சுற்றுலாத்தலங்கள் பற்றி தெரிந்துகொள்ளலாம். 

கிருஷ்ணின் வெண்ணை உருண்டை:

கிருஷ்ணின் வெண்ணை உருண்டை:

மகாபலிபுரத்தில் உள்ள பஞ்சரத கோயில் வளாகத்தில் இருக்கிறது கிருஷ்ணின் வெண்ணை உருண்டை என்றழைக்கப்படும் மிகப்பெரிய பாறை. கிட்டத்தட்ட 250டன் எடை இருக்கலாம் என்று சொல்லப்படும் இந்த பாறை எப்போது வேண்டுமானலும் உருண்டு விழலாம் என்ற நிலையில் இருப்பதை பார்க்கவே பயமாக இருக்கும். எனினும் ஆயிரம் வருடங்களுக்கு மேலாக இதே இடத்தில் இப்பாறை சாய்வான இடத்தில் எப்படி நிலைகொண்டு நிற்கிறது என்பது இன்னும் விளங்காத புதிராகும்.


Leon Yaakov

ஏழுமலையான் மர்மங்கள்

ஏழுமலையான் மர்மங்கள்

ஏழுமலையானின் வியப்பூட்டும் மர்மங்கள் குறித்து தெரியுமா?(விடியோ)

கர்ணி மாதா கோயில்(எலி கோயில்):

கர்ணி மாதா கோயில்(எலி கோயில்):

ராஜஸ்தான் மாநிலத்தில் பிகநேர் நகரில் இருந்து 30கி.மீ தொலைவில் தேஷ்நோக் என்ற ஊரில் இருக்கும் கர்ணி மாதா கோயில் மிகவும் விசித்திரமான ஹிந்து கோயில்களில் ஒன்றாகும். இங்கே எலிகள் புனிதமானதாக கருதி வழிபடப்படுகின்றன. கர்ணி மாதாவே எலிகளின் ரூபத்தில் இருப்பதாக நம்பப்படுகிறது. எலிகள் குடிக்கும் பாலே இங்குவரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதனை குடித்தால் யாருக்கும் எவ்வித பிரச்சனையும் ஏற்படுவதில்லை என்பதே வியப்புக்குரிய விஷயமாகும்.


amanderson2

போகர் மாயமாக போன இடம்

போகர் மாயமாக போன இடம்

நவபாசன சிலை செய்தபின் போகருக்கு என்ன ஆச்சி தெரியுமா?

காந்த மலை:

காந்த மலை:

Toprohan

பெட்ரோலுக்காக மட்டும் மாதம் சில ஆயிரங்களாவது செலவாகும் சூழலில் நாம் இயக்காமலேயே தானாகவே வண்டி நகர்ந்தால் எப்படி இருக்கும்?. இந்தியாவில் காஷ்மீர் மாவட்டத்தில் லடாக் மாவட்டத்தில் உள்ள லெஹ் என்ற இடத்தில் இருக்கும் ஒரு மலையின் குறிப்பிட்ட சில தூரத்திற்கு நாம் இயக்காமலேயே வாகனங்கள் தானாகவே சாலையில் முன்னேறுகின்றன. இந்த பகுதி 'Magnetic Hill' என அழைக்கப்படுகிறது.

திருப்பதியில் இருப்பது உண்மையில் யார் தெரியுமா?

திருப்பதியில் இருப்பது உண்மையில் யார் தெரியுமா?

திருப்பதியில் இருப்பது உண்மையில் யார் முருகரா? வெங்கடஸ்வரரா?

லோனார் ஏரி:

லோனார் ஏரி:

Amitabhkhare

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அதிவேகமாக விண்கல் ஒன்று விழுந்ததினால் ஏற்பட்ட மிகப்பெரிய பள்ளத்தில் உருவானது தான் லோனார் ஏரியாகும். இது மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ளது. இங்கே விசித்திரம் என்னவென்றால் இந்த ஏரியில் ஒரு பக்கம் துவர்ப்பு சுவையுடைய உப்பு நீரும், மற்றொரு பக்கத்தில் நன்னீரும் இருக்கிறது. இவை ஒன்றோடு ஒன்று கலப்பதில்லை. உலகத்தில் விண்கல் மோதலினால் உருவான ஒரே ஏரியாக இந்த லோனார் ஏரி மட்டுமே இருக்கிறது.

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்