Search
  • Follow NativePlanet
Share
» »குழப்பங்களில் தவிக்கும் உங்களை ஆசுவாசப்படுத்த இந்த இடங்களுக்குச் சென்று யோகா பயிற்சி செய்யுங்கள்!

குழப்பங்களில் தவிக்கும் உங்களை ஆசுவாசப்படுத்த இந்த இடங்களுக்குச் சென்று யோகா பயிற்சி செய்யுங்கள்!

வாழ்வில் எல்லோருமே மிகவும் மகிழ்ச்சியாக இருப்பது இல்லை! எந்த நிலையில் ஒரு மனிதன் இருந்தாலும் அவனது சுற்றுப்புறத்திற்கு ஏற்றவாறு அவன் தனி மனித பிரச்சினைகளை ஒவ்வொரு நாளும் எதிர்த்து சவாலிட்டு கொண்டு தான் இருக்கிறான். எத்தகைய குழப்பமாக இருந்தாலும், யோகா செய்வதோ அல்லது தியானம் செய்வதோ மனதை ஒருநிலைப்படுத்தி குழப்பத்தில் இருந்து மீண்டு வருவதற்கு உதவியாக இருப்பதாக அதில் ஈடுபடுபவர்களும், ஞானிகளும், யோகிகளும் கூறுகின்றனர்.

நமது மனது சாந்தி அடைந்து மகிழ்ச்சியாக இருப்பதற்கு ஒரு வழி கிடைக்கிறது என்றால் அதை ஏன் நாம் முயற்சி செய்யக்கூடாது? நல்லது தானே! இந்தியாவில் யோகா செய்வதற்கும் தியானம் செய்வதற்கும் ஏகப்பட்ட இடங்கள் உள்ளன! நீங்களும் இங்கு சென்று வாருங்கள்! ஒரு திருப்பம் வரும்!

ரிஷிகேஷ்

ரிஷிகேஷ்

நீங்கள் யோகா பிரியராக இருந்தால் உலகின் யோகா தலைநகரம் என்று பிரபலமாக அறியப்படும் ரிஷிகேஷைத் தான் நீங்கள் முதலில் பார்வையிட வேண்டும். வட மாநிலமான உத்தரகாண்டில் அமைந்துள்ள இந்த நகரம் இமயமலையின் அடிவாரத்தில் ஏராளமான இயற்கை அழகுடன் நம்மை வரவேற்கிறது. யோகா மற்றும் தியானத்தின் மூலம் உங்கள் ஆன்மீகப் பக்கத்தை இணைக்க விரும்பினால், இந்த இடம் உங்களுக்கு ஒரு சரியான சாய்ஸ் ஆக இருக்கும்.

ரிஷிகேஷ் வழியாக பாயும் கங்கை நதி ஓரத்தில், இயற்கை எழில் கொஞ்சும் அமைதியான சூழலில் நீங்கள் யோகா பயிற்சியை மேற்கொள்ளலாம். பரமார்த் நிகேதன், ஓம்காரானந்த கங்கா சதன், சிவானந்தா ஆசிரமம், சாதனா மந்திர், யோகா நிகேதன், ஆனந்த் பிரகாஷ் ஆசிரமம் மற்றும் அபூர்வ யோகா அகாடமி கியவை இங்குள்ள பிரபலமான யோகா மையங்களாகும்.

கோகர்ணா

கோகர்ணா

உத்தர கன்னடத்தின் மேற்குக் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள கோகர்ணா ஒரு ஆன்மீக கோயில் நகரமாகும். பல அழகிய கடற்கரைகளைக் கொண்டுள்ள கோகர்ணாவில் பல அற்புதமான யோகா பள்ளிகள், தியான மையங்கள், ஆசிரமங்கள் மற்றும் ஓய்வு விடுதிகள் உள்ளன.

ரெட் எர்த் கோகர்ணா, டிப்பி கார்டன் யோகா ரிட்ரீட், நமஸ்தே யோகா ஃபார்ம், திகம்பரா, ஷாந்தி யோகா ஸ்கூல் ஆகியவை இங்குள்ள பிரபலமான யோகா சென்டர்கள் ஆகும்.

ஆரோவில்

ஆரோவில்

புதுச்சேரிக்கு மிக அருகில், தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த அழகான ஆரோவில் அதன் அமைதிக்காகவும் அழகுக்காகவும் மிகவும் பிரபலமானது எனலாம். இந்த இடம் மரியாதைக்குரிய மாத்ரிமந்திர் அல்லது தெய்வீக அன்னையின் கோவிலுக்காக அறியப்படுகிறது. நீங்கள் ஆன்மீகத்தை தேடுபவராக இருந்தால், ஸ்ரீ அரவிந்தோ மற்றும் தி மதர் மிர்ரா அல்ஃபாஸா ஆகியோரால் உருவாக்கப்பட்ட ஒருங்கிணைந்த யோகா பயிற்சியில் ஈடுபடலாம்.

சான்சிய யோகா, ஸ்ரீ மா ஸ்கூல் ஆஃப் டிரான்ஸ்ஃபார்மேஷனல் யோகா, வெரிட், அரா விழிப்புணர்வு ஆராய்ச்சி மையம், சீதா கலாச்சார மையம் ஆகியவை இங்குள்ள சிறந்த யோகா மையங்களாகும்.

வயநாடு

வயநாடு

வயநாடு தென்னிந்தியாவில் அதிகம் பார்வையிடப்படும் மலைவாசஸ்தலங்களில் ஒன்றாகும். வளமான வரலாறும் பாரம்பரியமும் இயற்கை அழகும் நிறைந்த வயநாடு மலையோரம் அமர்ந்து யோகா செய்வது உங்கள் மனதிற்கும் உயிருக்கும் புத்துணர்ச்சி அளிக்கும்.

பூர்நையோ ஆரோக்கிய நிகேதன், ஆயூர் ஜோதி யோகா ஸ்டுடியோ, நிர்வாணா யோகா சாலை, மை லைஃப் யோகா ஆகியவை இங்குள்ள சிறந்த யோகா மையங்களாகும்.

கோவா

கோவா

கோவா அதன் அழகான கடற்கரைகளுக்கும், சுவையான உணவுகளுக்கும், முடிவில்லா ஷாப்பிங்கிற்கு மட்டுமே பிரபலம் என்று நீங்கள் நினைத்தால் தவறு. நமது மனதையும் உடலையும் ஆசவாசப்படுத்தும் யோகா மற்றும் ஆயுர்வேத பயிற்சிகள் கோவாவில் மிகவும் பிரபலம்.

ஆஷியானா, லோட்டஸ் நேட்சர் கேர், பர்பிள் வேலி யோகா ரிட்ரீட், யோகா மேஜிக் ஈகோ ரிட்ரீட், பேம்பு யோகா ரிட்ரீட், லிட்டில் கோவ் யோகா ரிட்ரீட் ஆகியவை இங்குள்ள பிரபலமான யோகா மையங்களாகும்.

மைசூர்

மைசூர்

நவீன யோகாவின் பிறப்பிடமாக அறியப்படும் மைசூர் ஒவ்வொரு யோகா ஆர்வலரும் கட்டாயம் பார்க்க வேண்டிய இடத்தில் ஒன்றாகும். அஸ்தங்கா யோகாவின் பிறப்பிடமாக கருதப்படும் மைசூர், உலகம் முழுவதும் உள்ள அஸ்தங்கா பயிற்சியாளர்களை ஈர்க்கிறது.

மைசூர் ஹத யோகா கேந்திரா, அஷ்டாங்க சாதனா யோக சாலா, யோகதந்திர அனுஷ்டானம், இந்தியா யோகா, சரத் யோகா மையம், மைசூர் மண்டல யோகசாலை, சைதன்ய யோகா கேந்திரா, சமயக் யோகா மைசூர் ஆகியவை இங்குள்ள புகழ்பெற்ற யோகா மையங்களாகும். இங்கு நீங்கள் யோகா சூத்திரங்கள் மற்றும் முதுகு வளைத்தல், ஷட்க்ரியா, ஹதா மற்றும் பிராணயாமா ஆகியவற்றைக் கற்றுக்கொள்ளலாம்.

தர்மஷாலா

தர்மஷாலா

ஹிமாச்சலப் பிரதேசத்தின் காங்க்ரா பள்ளத்தாக்கில் அமைந்துள்ள இந்த அழகிய மலைவாசஸ்தலமான தர்மஷாலா யோகா பிரியர்களிடையே மிகவும் பிரபலமான இடமாகும். புனித தலாய் லாமா உட்பட பல புத்த துறவிகள் வசிக்கும் இந்த இடம் ஒரு தனித்துவமான ஆன்மீக அதிர்வைக் கொண்டுள்ளது.

இங்குள்ள யோகா மற்றும் தியான மையங்களில் சிறிது நேரம் தங்குவது கூட உங்கள் வாழ்க்கையை மாற்றும். ஹிமாலயன் ஐயங்கார் யோகா மையம், சிவ தர்ஷன் யோகா பள்ளி, அபினம் யோகா, ஸ்ரீ ஹரி யோகா, சர்வகுண யோகா, ராஜ் யோகா பள்ளி மற்றும் சித்தி யோகா ஆகியவை இங்குள்ள பிரபலமான யோகா மையங்களாகும்.

டெல்லி

டெல்லி

எப்பொழுதும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கின்ற தலைநகரில் அமைதியாக யோகா செய்ய இடம் இருக்குமா என்று யோசிக்கிறீர்களா? யோகா பிரியர்கள் அனைவருக்கும், டெல்லி சில அற்புதமான யோகா மற்றும் தியான ஆசிரமங்கள் மற்றும் மையங்களைக் கொண்டுள்ளது.

ஐயங்கார் யோகா மையம் யோகாக்ஷேமா, மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனம், வாழும் கலை யோகா மற்றும் தியான மையம், பிக்ரம் யோகா ஸ்டுடியோ, சிவானந்தா யோகா வேதாந்த மையம் ஆகியவை டெல்லியில் உள்ள சிறந்த யோகா மையங்களாகும்.

More News

    Read more about: yoga destinations
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+