» »காரைக்காலில் நீங்கள் கட்டாயம் காணவேண்டிய இடங்கள்

காரைக்காலில் நீங்கள் கட்டாயம் காணவேண்டிய இடங்கள்

Written By:

பழமையான கோவில் நகரமான காரைக்காலில், உள்ள புகழ் பெற்ற சனீஸ்வரன் கோவில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் புனிதப் பயணிகளின் விருப்பமான சுற்றுலாத்தலாமாக உள்ளது. இதன் மணல் நிரம்பிய கடற்கரை, பிரெஞ்சு கலாச்சாரத்தின் வளமான பாரம்பரிய முத்திரை, அழகிய கோவில்கள் மற்றும் துறைமுகங்கள் ஆகியவை சுற்றுலாப் பயணிகளை காரைக்காலை நோக்கி சுண்டியிழுக்கும் அம்சங்களாகும். மத்திய அரசின் நேரடி ஆட்சிப் பகுதியான பாண்டிச்சேரியின் ஒரு பகுதியாக, சோழமண்டல கடற்கரையில் வங்காள விரிகுடாவின் மடியில் தவழும் முக்கியமான துறைமுக நகரம் காரைக்கால் நகரமாகும். இந்த துறைமுக நகரம் தலைநகரம் பாண்டிச்சேரியிலிருந்து 132 கிமீ தொலைவிலும், சென்னைக்கு தெற்காக 300 கிமீ தொலைவிலும் மற்றும் திருச்சியிலிருந்து 150 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.

 கீழ காசக்குடி

கீழ காசக்குடி


கீழ காசக்குடி காரைக்காலில் இருந்து 4 கிமீ தொலைவில் உள்ள இடமாகும். காரைக்கால் மாவட்டத்தின் வட பகுதியில் இருக்கும் இந்த இடம் அதன் வரலாற்று சின்னங்களுக்காக மிகவும் அறியப்படுகிறது. 1879-ஆம் ஆண்டு எம்.ஜே.டெலாஃபான் என்பவர் இந்த கிராமத்தில் தான் புகழ் பெற்ற செப்புத்தகடுகளை கண்டறிந்தார். இந்த கிராமத்தின் மையத்தில் உள்ள இரண்டாம் நந்திவர்மன் சின்னம், இங்கு பல்லவர்கள் வளமுற செய்த ஆட்சி முறையின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை இன்னமும் தாங்கி நின்று கொண்டிருக்கிறது. இங்கிருக்கும் பழமையான சிவன் கோவில் மற்றுமொரு முக்கியமான சுற்றுலா, புனித தலமாகும். வரலாறு மற்றும் கலாச்சாரத்தை தெளிவாக அறிய முற்படும் ஒவ்வொருவரும் கண்டிப்பாக வந்து செல்ல வேண்டிய இடமாக கீழ காசக்குடி இருக்கிறது.

Prabhu namgyel

 புத்தகுடி

புத்தகுடி

காரைக்கால் நகரத்திலிருந்து 7 கிமீ தொலைவில் புத்தகுடி உள்ளது. இந்த கிராமத்தின் பெயர், கலாச்சாரம் மற்றும் கட்டிடக்கலை ஆகியவை புத்த மதத்தின் தாக்கத்தை தெரிவிப்பதாக உள்ளன. வெகு காலத்திற்கு முன்னர் கிரானைட் கற்களால் இங்கு எழுப்பப்பட்ட புத்தரின் சிலைக்காக இந்த கிராமம் மிகவும் புகழ் பெற்றிருக்கிறது. இந்த கிராமத்திறகு வருபவர்கள் அருகிலிருக்கும் கிராமங்களான புத்தமங்கலம் மற்றும் அகரபுத்தகுடி ஆகிய கிராமங்களுக்கும் சென்று வரலாம்.

VasuVR

 பொன்பெட்டி

பொன்பெட்டி

‘பொன்பட்ரி' என்ற சொல்லில் இருந்து வந்துள்ள பொன்பெட்டி எனற பெயருக்கு பொன்பட்ரிகாவலன் புத்தமித்திரனின் வீடு என்று அர்த்தமாகும். வீரசோழியம் என்ற நூலை எழுதியவரான பொன்பட்ரிகாவலன் புத்தமித்திரன் என்பவர் இந்த ஊரைச் சேர்ந்தவர் என்று நம்பப்படுகிறது. இவருடைய பெயரிலிருந்து இவர் புத்தரைப் பின்பற்றியவர் என்றும் அறிய முடிகிறது. இந்த கிராமத்தில் காணப்படும் கட்டிடக்கலையும் புத்த மதத்தின் தாக்கத்தை தெளிவாக காட்டுகின்றது. இங்கு புத்த விஹாரின் வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ள சிவன் கோவில் தான் முக்கியமான பார்வையிடமாகும்.

Koshyk

கைலாசநாதர் கோவில்

கைலாசநாதர் கோவில்

காரைக்காலில் உள்ள பழமையான கோவில்களில் ஒன்றான ஸ்ரீ கைலாசநாதர் கோவில், 2000 ஆண்டுகளுக்கு முன்னரே கட்டப்பட்டு, எட்டாவது நூற்றாண்டில் பல்லவர்களால் மறுசீரமைப்பு செய்யப்பட்ட இடமாகும். புகழ் பெற்ற காரைக்கால் அம்மையார் கோவிலுக்கு எதிரிலேயே இந்த கோவில் அமைந்துள்ளது. பிரெஞ்சு அரசின் ஆட்சிக் காலத்திலும் இந்த கோவில் மீண்டும் கட்டப்பட்டு புணரமைக்கப்பட்டது. கைலாசநாதர் கடவுள் மற்றும் சௌந்தராம்பாள் அம்மை ஆகியோருக்காக இந்த கோவில் எழுப்பப்பட்டுள்ளது. இந்த கோவிலின் முக்கியமான கவர்ச்சி அம்சமாக இதன் நான்கு பெரிய கதவுகளைச் சொல்லலாம். இந்த கோவிலின் நுழைவாயிலில், மேற்கு திசையைப் பார்த்தபடி சுப்ரமணிய கடவுள் வைக்கப்பட்டிருக்கிறார்.

Jonas Buchholz

காரைக்கால் அம்மையார் கோவில்

காரைக்கால் அம்மையார் கோவில்

புகழ் பெற்ற பக்தி இயக்க பெண் துறவியான காரைக்கால் அம்மையாரை வழிபடுவதற்கான இடமாகவே காரைக்கால் அம்மையார் கோவில் உள்ளது. 63 நாயன்மார்களில் ஒரேயொரு பெண்பால் மனிதர் இவர் மட்டுமே. இந்த சிறிய, அழகிய கோவிலை 1929-ஆம் ஆண்டு கட்டியவர் மலையபெருமாள் பிள்ளை என்பவராவார். இந்த கோவிலில் மிகப்பெரிய பெண் கடவுளாக இருக்கும், புனிதவதியார் என்ற பெண் கடவுளின் சிலையும் உள்ளது. அபூர்வமான சக்திகளை வேண்டி இந்த பெண் கடவுளை உள்ளூர்வாசிகள் துதித்திருப்பார்கள். புராணக்கதைகளில், தன் கணவர் தன்னை மறுதலித்துவிட்டு விலகிப்போய் வேறு ஒரு பெண்ணை மணந்து கொண்டபோது, இவர் சிபெருமானை நோக்கி தவமிருந்து, அவரிடம் தன்னை ஒரு பேயுருவில் மாற்றிவிடுமாறு கேட்டுக்கொண்டதாக சொல்லப்பட்டுள்ளது. அதன் பின்னர் இவர் ஆலங்காடு வனப்பகுதிகளில் வசித்து வந்தார். அவருடைய பக்தியைக் கண்டு மெச்சிய சிவபெருமான் அவருக்கு அம்மையார் என்ற பெயரிட்டு, தான் புரியும் தாண்டவ நடனத்திற்கு பாடல் பாடும் பெருமையை அளித்தார். ஒவ்வொரு ஆண்டும், தமிழ் மாதமான ஆனி மாதத்தின் பௌர்ணமி தினத்தில், அதாவது ஜுன்-ஜுலை மாதங்களில் காரைக்கால் அம்மையார் கோவிலில் 'மாங்கனி' திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் அம்மையாரின் அருளைப் பெறுவதற்காக மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்திடும்.
.

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்