Search
  • Follow NativePlanet
Share
» »இந்திய பூர்வ குடிகள் ஆரியர்கள் அல்லர்... வரலாற்றின் முதல் சான்று இது!

இந்திய பூர்வ குடிகள் ஆரியர்கள் அல்லர்... வரலாற்றின் முதல் சான்று இது!

இந்திய பூர்வ குடிகள் ஆரியர்கள் அல்லர்... வரலாற்றின் முதல் சான்று இது!

கச்சாரி இனத்தவர்களால் ஆளப்பட்ட பண்டையகால திமாச பேரரசின் தலைநகராக விளங்கிய திமாபூர் நகரம் மிக நீண்ட வரலாற்றுப் பெருமை உடையது. திமாபூரைச் சுற்றி இன்றளவும் கிடைக்கும் தொல்பொருட்கள் அவ்வூர் கடுமையான காவலுக்கு உட்படுத்தப்பட்டிருந்ததை பறைசாற்றுகிறது. திமாசா அரசு அருகில் இருக்கும் சமவெளிகளை எல்லாம் உள்ளடக்கி இன்றைய அசாமின் மேற்பகுதி வரை நீண்டிருந்தது.

 பழங்காலத்தில் சிறந்து விளங்கிய நகரம் இது

பழங்காலத்தில் சிறந்து விளங்கிய நகரம் இது

பழங்கால நகரம் இருந்ததற்கான ஆதாரங்கள் கோவில்கள் மற்றும் ஆற்றங்கரைகளில் கிடைக்கின்றன. மேலும் திமாசா மக்கள் இந்து மதத்தைத் தழுவி வாழ்ந்ததற்கான ஆதாரங்களும் கிடைக்கின்றன. எனினும் திமாசா மக்கள் இப்பகுதியைச் சேர்ந்த பழங்குடி மக்கள் என்றும் ஆரியர்கள் அல்ல என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

Dhrubazaanphotography

 நவீன வரலாற்று முக்கியத்துவம்

நவீன வரலாற்று முக்கியத்துவம்

நவீன வரலாற்றிலும் திமாபூர் முக்கியப் பங்காற்றியுள்ளது. ஆங்கிலேயர்களுக்கும், காலனிய ஜப்பானிய அரசிற்கும் நடந்த போரில் முக்கியமானதான கோஹிமா போர் திமாபூரின் வழியாக வந்த ஜப்பான் படையினரால் துவக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் திமாபூரை 'சுவர் நகரம்' என்று அழைக்கின்றனர்.

Saurabhsawantphoto

கைவினை கிராமம்

கைவினை கிராமம்

வரலாற்றுப் பாரம்பரியமிக்க வடகிழக்கு நகரமான திமாபூர் ஏராளமான சுற்றுலாத்தளங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது. நகரின் மையப் பகுதியில் இருந்து 13கிமீ தொலைவில் அமைந்துள்ள டியெஜெஃப் கைவினை கிராமம் நாகாலாந்து கைத்தறி மற்றும் கைவினைப்பொருள் வளர்ச்சிக் கழகத்தால் நிர்வகிக்கப்படுகிறது. கலைப்பொருட்கள், கைத்தறி மற்றும் கைவினைப்பொருட்களை ஊக்குவிக்கும் வண்ணம் இக்கிராமம் செயல்படுகிறது.

Nitesh210

ரங்காபஹார் வனப்பகுதி

ரங்காபஹார் வனப்பகுதி

அதுமட்டுமல்லாது அரிதான கைவினைக் கலைகள், மரவேலைப்பாடுகள், மூங்கில் வேலைப்பாடுகள் ஆகியவற்றையும் இங்கு காணலாம். திமாபூரின் முக்கியமான சுற்றுலாத்தளமான பாதுகாக்கப்பட்ட ரங்காபஹார் வனப்பகுதி பல அரிய வகை பறவைகளுக்கும், மிருகங்களுக்கும் சரணாலயமாகத் திகழ்கிறது.

Khamo88

 நிச்சுகார்ட்

நிச்சுகார்ட்


திமாபூரில் இருந்து 15கிமீ தொலைவில் அமைந்துள்ளது நிச்சுகார்ட் கிராமம். இன்று சும்முகெடிமா என்று வழங்கப்படும் இவ்விடம் இங்கு நிலவும் பல்லுயிர் கலாச்சாரத்திற்காக புகழ்பெற்று விளங்கிறது. நாகாலாந்தின் உண்மையான சூழலை அறிய விரும்புவோர் இவ்விடத்திற்கு அவசியம் செல்ல வேண்டும். திபு-குகி மலைகளில் அடிவாரத்தில் இருக்கும்

Akhyay

மெட்ஜிஃபெமா

மெட்ஜிஃபெமா

திமாபூரின் முக்கியமான சுற்றுலாதளமாக அதன் உப பகுதியான மெட்ஜிஃபெமா விளங்குகிறது. 'செடியில் இருந்து வரும் நீர்' என்ற அர்த்தத்தில் கஸ்பாணி என்றழைக்கப்பட்ட இவ்விடம் கடல் மட்டத்தில் இருந்து 360கிமீ உயரத்தில் பள்ளத்தாக்கிலும் அல்லாமல் குன்றிலும் அல்லாமல் நடுவில் அமைந்திருக்கிறது.

திமாப்பூர் உயிரியல் பூங்கா

திமாப்பூர் உயிரியல் பூங்கா

ஒரு இடத்தின் உயிரியல் அம்சங்களைக் காணாவிடில் அப்பயணம் முழுமை பெறாது. வடகிழக்கு மாகாணங்களின் தாவர மற்றும் வனயியல் தொன்மைகளைப் பற்றி மக்களுக்கு எடுத்துரைக்கும் வண்ணம் இப்பூங்கா விளங்குகிறது. இவ்விடம் புத்துணர்ச்சியளிக்கும் பூங்காவாகவும் விளங்குகிறது. நகரத்தில் இருந்து 6கிமீ தொலைவில் உள்ள இப்பூங்கா 176 ஹெக்டேர் அல்லது 434.50 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. மேட்டுப்பகுதியில் அமைந்துள்ள பூங்கா நீர்சார் பறவைகளுக்கு ஏற்றவாறு பள்ளங்களையும் ஆங்காங்கே கொண்டுள்ளது.

குகி டொலோங் கிராமம்,

குகி டொலோங் கிராமம்,

வடகிழக்கு மாகாணங்களின் மிகப்பழமையான குகி பழங்குடி மக்கள் வாழும் இக்கிராமம் மெட்ஜிஃபெமா தாலுகாவில் திமாபூர் மாவட்டத்தில் இருந்து இருந்து 20கிமீ தொலைவில் அமைந்துள்ளது. குகி மக்களின் கலாச்சாரம், உணவுப்பழக்கம் ஆகியவற்றை இங்கு அறிந்துகொள்ளலாம். நாகாலாந்து பழங்குடியினர் என குகி பழங்குடியினரை பல தவறாக எண்ணியிருந்தாலும் குகி பழங்குடியினர் தனித்துவம் வாய்ந்தவர்கள். அவர்களுக்கென தனியான கலாச்சாரமும், பாரம்பரியமும் இருக்கிறது.

Jackpluto

More News

    Read more about: travel india
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+