» »சென்னையிலிருந்து வெறும் 5000 செலவுல எங்கெல்லாம் டூர் போகலாம் தெரியுமா?

சென்னையிலிருந்து வெறும் 5000 செலவுல எங்கெல்லாம் டூர் போகலாம் தெரியுமா?

Posted By: Udhaya

வாரவிடுமுறை ஆனாலே எங்கயாச்சும் டூர் போகணும்னு தோணும். ஆனா அலுவலக வேலைகள் முடிச்சு இரண்டு நாள் தான் விடுமுறை. அதில் ஓய்வு எடுக்கலாம் என்று இருந்துவிட்டீர்களானால், நீங்கள் இந்த இயற்கையை உதாசீண படுத்துகிறீர்கள் என்று பொருள். உண்மைதானே

திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வாவின் மர்ம கதை தெரியுமா?

இயற்கை நமக்கு வழங்கியுள்ள கொடையை நாம் சுற்றி பார்த்து ரசிக்கவேண்டாமா

ஓய்வெடுப்பதால் உடல் சோர்வு மட்டும்தானே குறைகிறது. மனச்சோர்வு?

உங்கள் பிள்ளைகளுக்கு பள்ளி, கல்லூரிகளில் தரும் அழுத்தத்தை எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா அவர்களிடம் கேளுங்கள் அலுவலகத்தில் நீங்கள் அனுபவிக்கும் அதே அழுத்தம்தான். வீட்டில் இருக்கும் உங்கள் மனைவி அன்றாட வேலைகளையும் செய்து, அலுவலகமும் சென்றால் அவர்களுக்கும் மனச்சோர்வை போக்க ஒரு சுற்றுலா அவசியம்தானே..

சரி. சுற்றுலா செல்ல தயார் தான். ஆனால் பட்ஜெட் அதிகமானால் என்ன செய்வது. அதுதானே உங்கள் சந்தேகம்.

ஒன்இந்தியா வழங்குகிறது உங்கள் பயணத்துக்கான வழிகாட்டி கட்டுரை. இதை படித்து தெரிந்துகொள்ளுங்கள்.. உங்கள் குடும்பத்துக்கு ஏற்ப பட்ஜெட் போட்டுக்கொள்ளுங்கள்..

விபூதி பிரசாதமாக தரும் மசூதிகோயில் தீரா நோய் தீர்க்கும் விநோதம் எங்கே தெரியுமா?

அப்றம் என்ன டூர் போலாம்தானே

சென்னை - பெங்களூரு - மைசூரு

சென்னை - பெங்களூரு - மைசூரு

குடும்பத்துடன் பிக்னிக் செல்ல இந்த டிரிப் நன்றாக இருக்கும். குழந்தைகளுக்கு தேவையான குதூகலமும், பெரியவர்களுக்குத் தேவையான ஆன்மீகமும் மற்றும் புதிய தம்பதிகள் அனுபவிக்க ஏற்ற பல சிறப்பம்சங்கள் இந்த டிரிப்பில் இருக்கிறது. வாங்க போலாமா?

போகும் வழியில்

போகும் வழியில்

சென்னையிலிருந்து பெங்களூரு 349 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. செல்லும் வாகனத்தைப் பொறுத்து 5 முதல் ஆறரை மணி நேரம் ஆகின்றது. இந்த பயணத்தின் வழியில் நாம் காஞ்சிபுரம், வேலூர், வாணியம்பாடி, கிருஷ்ணகிரி மற்றும் ஒசூர் வழியாக இறுதியில் பெங்களூரை அடைவோம்.

எடுத்துச் செல்லவேண்டியவை

எடுத்துச் செல்லவேண்டியவை

பயணத்துக்கு அத்தியாவசியமான பொருள்கள் அனைத்தையும் கட்டிக்கொள்ளவும். முக்கியமாக வீட்டில் பெரியவர்களுக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள், குழந்தைகளுக்கு தேவையான பொருள்கள், கொறிக்க சில திண்பண்டங்கள் போன்றவற்றை மறக்காமல் வாங்கிக்கொள்ளுங்கள்.

செல்லும்வழியிலும் கொறிப்பதற்கென பண்டங்கள் கிடைக்கும். அதை சிலர் வாங்குவதில்லை. உங்கள் வசதிக்கேற்ப திட்டமிட்டுக்கொள்ளுங்கள்.

பெங்களூரு நாள்கள்

பெங்களூரு நாள்கள்

இந்த பயணம் இரண்டு நாள் வாரவிடுமுறைப் பயணம் என்பதால் முடிந்தவரை துல்லியமாக திட்டமிட்டுக்கொள்ளுங்கள். அல்லது எங்கள் அறிவுரைப் படி செல்வதென்றால், இதை படித்து தேவையான வசதிகளை ஏற்பாடு செய்துகொள்ளுங்கள்.

Bikashrd

புறப்படும் நேரம்

புறப்படும் நேரம்

காலை 5 மணிக்கெல்லாம் தயாராகி விடுங்கள். நாம் காலை 11 மணிக்கெல்லாம் சென்றுவிடலாம். இந்த கட்டுரை சொந்த வாகனத்தில் பயணிப்பவர்கள் மற்றும் அரசு பொதுப்போக்குவரத்தில் பயணிப்பவர்கள் என இருவருக்கும் ஏற்றவாரு அளிக்கப்பட்டுள்ளது.

சொந்த வாகனத்தில் சென்றால், 5 மணி நேரத்துக்கும் சிறிது அதிகமான நேரத்தில் சென்றுவிடலாம். அதே நேரம் பொதுப்போக்குவரத்து சற்று அதிக நேரம் பிடிக்க வாய்ப்புள்ளது.

பெங்களூருவில் சுற்றிப்பார்க்கவேண்டிய இடங்கள்

பெங்களூருவில் சுற்றிப்பார்க்கவேண்டிய இடங்கள்

லால்பாக் பூங்கா, கப்பன் பூங்கா, பன்னார்கட்டா தேசிய உயிரியல் பூங்கா, இஸ்கான் கோயில், விதான சவுதா, உல்சூர் ஏரி, வொண்டர்லா, நந்தி கோயில் முதலிய இன்னும் பல இடங்களுக்கு செல்லலாம்.

சொந்த வாகனத்தில் வருபவர்கள் நாள் முழுவதும் இருந்தால் இந்த இடங்கள் அனைத்துக்கும் சென்று வரலாம். ஆனால் பொதுப்போக்குவரத்தில் பயணிப்பவர்கள் முக்கிய இடங்களை மட்டுமே பார்க்கமுடியும். அப்படி உங்கள் வசதிக்கேற்ப தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

சொந்த வாகனம்

சொந்த வாகனம்

பெங்களூரு டிராபிக் உலக புகழ் பெற்றது. அதனால் உங்கள் சுற்றுலா பாதிக்கப்படாமல் இருக்க இந்த வழிமுறையை பின்பற்றுங்கள்.

முதலில் மடிவாலாவிலிருந்து 20 நிமிட தொலைவில் உள்ள லால் பாக் தாவரவியல் பூங்காவுக்கு செல்வோம்.

அடிக்கும் வெயிலுக்கு தகுந்த இடம். உங்கள் குடும்பத்துடன் இளைப்பாற அருமையான இடம்.

Muhammad Mahdi Karim

பொது போக்குவரத்து

பொது போக்குவரத்து


குறைந்த நேரமே இருந்தாலும், முற்றிலும் அனுபவிக்க ஏற்ற இடங்களுக்கு நேட்டிவ் பிளானட் உங்களை வழிநடத்துகிறது. பயனுறுங்கள்.

மடிவாலாவிலிருந்து சிறிது தூரத்தில் மசூதி பேருந்து நிறுத்தம் ஒன்று உள்ளது. அங்கு 343k என்ற பேருந்தில் ஏறி 15 நிமிட தூரத்தில் இருக்கும் லால்பாக் முதன்மை வாயிலை அடையலாம்.

anusha

நுழைவுக் கட்டணம்

நுழைவுக் கட்டணம்

சீசனுக்கு தகுந்தார்போல நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தகுந்த கட்டணத்தை செலுத்திவிட்டு உள்ளே சென்று அனுபவியுங்கள்.

பின் அங்கிருந்து ஷாப்பிங் செய்ய சிறந்த இடமான கேஆர்மார்க்கெட், வரலாற்று பகுதிகளான திப்பு சுல்தான் கோடை மாளிகை, பெங்களூரு கோட்டை முதலியவற்றை எளிமையாக அடையலாம்.

brunda nagaraj

குழந்தைகள் மகிழ

குழந்தைகள் மகிழ

பள்ளி விடுமுறையை கொண்டாடும் வகையில் குழந்தைகள் குதூகலிக்க ஏற்ற வொண்டர்லா, பெங்களூரு மாளிகை, கருடா மால், உல்சூர் ஏரி போன்ற இடங்களுக்கு அழைத்துச் செல்லலாம்.

லால்பாக் தாவரவியல் பூங்காவிலிருந்து 343F பேருந்தை பிடித்து அருகிலுள்ள என்ஆர் பேருந்து நிறுத்தத்துக்கு செல்லுங்கள். அங்கிருந்து K 4 , 226N முதலிய பேருந்துகளில் வொண்டர்லாவை அடையலாம்.

சொந்த வாகனத்தில் சென்றால் தேநெசா 275 ல் செல்லும்போது 1 மணிநேரத்தில் வொண்டர்லாவை அடையலாம்.

NativePlanetIN

லால் பாக்கிலிருந்து அருகிலுள்ள இடங்களும் செல்லும் வழிகளும்

லால் பாக்கிலிருந்து அருகிலுள்ள இடங்களும் செல்லும் வழிகளும்

பெங்களூரு கோட்டை 343, 344 A, C, D, E, 345 உள்ளிட்ட பல பேருந்துகள் உள்ளன. 9 நிமிடத்தில் கோட்டையை அடையலாம்

உல்சூர் ஏரி 34c 34S 37 37A,D உள்ளிட்ட பல பேருந்துகள் 30 நிமிடத்தில் உல்சூர் ஏரிக்கு உங்களை அழைத்துச் செல்லும்.

Indrajit Roy

பெரியவர்களுக்கு கோயில்கள்

பெரியவர்களுக்கு கோயில்கள்

லால் பாக் தாவரவியல் பூங்கா அருகிலேயே அமைந்துள்ள ஸ்ரீ காவி கங்காதரேஸ்வரர் கோயில், இஸ்கான் கோயில், பிக் புல் கோயில் போன்றவை பெரியவர்களின் விருப்பமான இடமாக அமையும்.

தங்கும் வசதிகள்

தங்கும் வசதிகள்


பெங்களூருவில் தங்கும் வசதிகள் நிறையவே உள்ளன. நடுத்தர வர்க்கத்தினருக்கு ஏற்ற ஹோட்டல்களும் சரி, நல்ல அலங்காரமான ஹோட்டல்களும் சரி அவரவர் பட்ஜெட்களுக்கு ஏற்றவாறு தாராளமாக கிடைக்கின்றன.

குறைந்த பட்சம் 800 ரூபாயிலிருந்து ஹோட்டல்கள் கிடைக்கின்றன.

சலுகை விலையில் ஹோட்டல் புக் செய்ய

விமான பயணம்

விமான பயணம்

ஒருவேளை நீங்கள் பட்ஜெட் குறித்து கவலைப் படாது, இருந்தால், விமானத்தில் பயணியுங்கள்.

குறைந்த விலை பயணத்துக்கு

மைசூரு பயணம்

மைசூரு பயணம்

இந்த பயணம் இப்போதே முடியவில்லை. இதைத்தொடர்ந்து மைசூருக்கு பயணிக்கலாம். தொடர்ந்து இணைந்திருங்கள் நேட்டிவ் பிளானட் தமிழ்.

மைசூருக்கு செல்லும் வழிகாட்டி

 போடு தகிட தகிட... மலை போல் குவிஞ்சிருக்கும் புதையல்கள் இது இந்தியாவுல தானுங்கோ!

போடு தகிட தகிட... மலை போல் குவிஞ்சிருக்கும் புதையல்கள் இது இந்தியாவுல தானுங்கோ!


போடு தகிட தகிட... மலை போல் குவிஞ்சிருக்கும் புதையல்கள் இது இந்தியாவுல தானுங்கோ!

உலகம் அழியும் நாள்: பத்மநாபசுவாமி கோயிலின் கடைசி அறையில் புதைந்துள்ள மர்மங்கள்

உலகம் அழியும் நாள்: பத்மநாபசுவாமி கோயிலின் கடைசி அறையில் புதைந்துள்ள மர்மங்கள்


உலகம் அழியும் நாள்: பத்மநாபசுவாமி கோயிலின் கடைசி அறையில் புதைந்துள்ள மர்மங்கள்

கடலடியில் புதையுண்டு கிடக்கும் 70 ஆயிரம் கோட்டைகள் தமிழனின் பெருமைகள் அழிக்கப்படுகிறதா

கடலடியில் புதையுண்டு கிடக்கும் 70 ஆயிரம் கோட்டைகள் தமிழனின் பெருமைகள் அழிக்கப்படுகிறதா

கடலடியில் புதையுண்டு கிடக்கும் 70 ஆயிரம் கோட்டைகள் தமிழனின் பெருமைகள் அழிக்கப்படுகிறதா?

Read more about: travel bangalore chennai

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்