Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவிலேயே அதிக தேனிக்கள் உருவாகும் இடம் தெரியுமா?

இந்தியாவிலேயே அதிக தேனிக்கள் உருவாகும் இடம் தெரியுமா?

இன்றைய காலக்கட்டத்தில் சுற்றுச் சூழல் சுற்றுலா மிகவும் பிரபலமாகி இருக்கிறது. இவ்வாறு ஒரு விழிப்புணர்வுட சுற்றுச்சூழல் சுற்றுலா செல்வதை கடமையாகவும், நினைக்க நினைக்க இனிமையும் கிடைக்கும்

By Super Admin

கேரளத்தை "தெய்வத்தின் சொந்த நாடு" என்று அழைத்தல் சரியே. கேரள மாநிலத்தில் பசுமை படர்ந்து கண்களுக்குக் குளுமை அளிக்கிறது. இந்தப் பசுமையையும் இதனைச் சார்ந்த வனவிலங்குகளையும் பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும் உணர்ந்து ஒரு தனித்துவம் மிக்க முயற்சியாக, தென்மலை ஒரு சுற்றுச்சூழல் சுற்றுலாத் தலமாக உருவாக்கப்பட்டுள்ளது.

தென்மலை கொல்லம் மாவட்டத்தில் உள்ள மலைவாசஸ்தலம். புனலூர் நகரத்திலிருந்து 22 கிமீ தொலைவில் உள்ளது. இப்போதுவரை தென்மலை கேரளத்தில் அதிகம் அறியப்படாத, ஆனால் கண்டவர் மனங்கவர் சுற்றுலாத் தலமாகவே உள்ளது. கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்திலிருந்து 70 கிமீ தொலைவில் உள்ளதான தென்மலை அந்நகரிலிருந்து வார இறுதி விடுமுறையில் சென்றுவரக் கூடிய சுற்றுலாத் தலமாக இருக்கிறது.

என்ன, தென்மலையைக் காணும் ஆவல் மேலிடுகிறதா? இதோ உங்களை தென்மலையைச் சுற்றிலும் ஒரு நிழற்படச் சுற்றுலா அழைத்துச் செல்கிறோம்.

பெயர்க்காரணம்

பெயர்க்காரணம்

இவ்விடத்தின் உண்மையான பெயர் "தேன்மலை" என்பதாகும். இங்குள்ள சுற்றுச்சூழல் காரணமாக இங்கு தேனீக்களால் சேகரிக்கப்படும் மலைத்தேன் மிகவும் தனித்துவமான, இனிமையான சுவையுடையதாக விளங்குவதாலேயே இப்பெயர் பெற்றது.

PC: Akhilan

தனித்துவம்

தனித்துவம்

தென்மலை இந்தியாவின் முதல் திட்டமிடப்பட்ட சுற்றுச்சூழல் சுற்றுலாத் தலமாகும். இது "தென்மலை சுற்றுச்சூழல் வளர்ச்சிக் கழகம்" எனும் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுகிறது. இது ஒரு கேரள அரசு நிறுவனமாகும்.

PC: Mohan K

சுற்றுலாவிற்குரிய இடங்கள்

சுற்றுலாவிற்குரிய இடங்கள்

தென்மலைச் சுற்றுலாத் துறை கலாச்சார மண்டலம், பொழுதுபோக்கு மண்டலம், சாகஸ மண்டலம் எனும் மூன்று மண்டலங்களாக வகுக்கப்பட்டுள்ளது. இவை தவிர, தென்மலை அணைக்கட்டு, பாலருவி, செந்துருணி வனவிலங்குகள் சரணாலயம் மற்றும் தென்மலைப் பாலம் ஆகியன இன்பச் சுற்றுலாவிற்கு மிகவும் உகந்த இடங்கள்.

PC: Junaidpv

தென்மலை அணைக்கட்டு

தென்மலை அணைக்கட்டு

இது கல்லடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாசனத்திற்கான அணையாகும். இது மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலம்.


PC: Kerala tourism

பாலருவி

பாலருவி


கேரளத்தின் மிக அழகான அருவிகளில் ஒன்று. தென்மலையிலிருந்து 14கிமீ தொலைவில் உள்ளது.


PC: Kannanashanmugam

தென்மலை புகைவண்டிப் பாலம்

தென்மலை புகைவண்டிப் பாலம்

ஆங்கிலேயர் காலத்தில், 1904ல், கட்டப்பட்டது. இன்று இந்தப் பாலம் கொல்லத்தையும் புனலூரையும் இணைக்கிறது. அழகிய வளைவுகளுடன் கூடிய இந்தப் பாலம் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கிறது.

PC: Jayeshj

சுற்றுலா மண்டலங்கள்

சுற்றுலா மண்டலங்கள்

சாகஸ மண்டலத்தில் மலையேறுதல், மலையில் மிதிவண்டி ஓட்டுதல் போன்ற செயல்பாடுகள் அளிக்கப்படுகின்றன. கலாச்சார மண்டலத்தில் கேரளக் கலாச்சாரத்தைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும் பொழுதுபோக்கு மண்டலம் உள்ளது. பிரபலமான தொங்குபாலம் இருப்பது இந்த மண்டலத்தில் தான்.


PC: Lalsinbox

தென்மலை

தென்மலை

தென்மலையில் ஒரு குளுகுளு பயணம்

PC: Sailesh

தென்மலை

தென்மலை

அழகிய ரயில் பாலம்

PC: Rakesh

தென்மலை

தென்மலை

PC: Akhilan

தென்மலைக்குச் செல்லும் வழி

தென்மலைக்குச் செல்லும் வழி

பேருந்து

திருவனந்தபுரத்திலிருந்தும் கொல்லத்திலிருந்தும் அரசு பஸ்கள் செல்கின்றன.

புகைவண்டி

தென்மலையிலேயே புகைவண்டி நிலையம் உள்ளது.

விமானம்

அருகாமையிலுள்ள விமான நிலையம் திருவனந்தபுரம்.

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

அருகிலுள்ள சுற்றுலாத்தளங்களைப் பற்றி அறிய கிளிக் செய்யுங்கள்

தொடர்ந்து இணைந்திருங்கள்..நன்றி!

ஆத்தாடி... எத்தன பாம்பு... இது என்ன ராஜநாகங்களின் தலை நகரமா?ஆத்தாடி... எத்தன பாம்பு... இது என்ன ராஜநாகங்களின் தலை நகரமா?

பிரிட்டிஷ் பொறியாளரையே குழப்பி விரட்டிய அந்த தொங்கும் தூண் எங்க இருக்கு தெரியுமா?பிரிட்டிஷ் பொறியாளரையே குழப்பி விரட்டிய அந்த தொங்கும் தூண் எங்க இருக்கு தெரியுமா?

விலங்குகளாக உருமாறும் அதிசய மரம் .... எங்கே இருக்கிறது தெரியுமா?

3ம் உலகப்போரால் பூமி அழியப்போகிறது கணித்துச் சொன்ன சிவன்மலை கோயில்3ம் உலகப்போரால் பூமி அழியப்போகிறது கணித்துச் சொன்ன சிவன்மலை கோயில்

ரஜினிகாந்த் செல்லும் குகையின் இந்த ரகசியம் உங்களுக்கு தெரியுமா?ரஜினிகாந்த் செல்லும் குகையின் இந்த ரகசியம் உங்களுக்கு தெரியுமா?

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X