Search
  • Follow NativePlanet
Share
» »பிரியங்கா சோப்ராவின் ஊருக்கு ஒரு சுற்றுலா போலாமா?

பிரியங்கா சோப்ராவின் ஊருக்கு ஒரு சுற்றுலா போலாமா?

By Udhaya

நடிகை பிரியங்கா சோப்ராவின் நிச்சயதார்த்த பார்ட்டி இன்று நடைபெறுகிறது. இதற்காக தனது குடும்பத்துடன் நேற்றிரவு மும்பை வந்த மாப்பிள்ளை மற்றும் அவரது குடும்பத்தினரை பிரியங்கா சோப்ரா தனது குடும்பத்துடன் சென்று வரவேற்றார். இவரது வீடு இருக்கும் இடம் ஜூஹூ ஆகும். இங்குள்ள சுற்றுலாத் தளங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

 ஜூஹூ பீச்

ஜூஹூ பீச்

கடற்கரையை நேசிக்கும் ஒவ்வொருவரும் சென்று பார்க்க வேண்டிய இடம் மும்பையின் ஜூஹு பீச்சாகும். இந்தக் கடற்கரை பாந்த்ராவிலிருந்து 30 நிமிட பயண தூரத்தில் உள்ளது. இங்கு கிடைக்கும் பேல் பூரி, பானி பூரி, சாண்ட்விச் போன்ற அனைத்து கடற்கரை உணவுகளையும் நீங்கள் போதும் போதும் என்ற அளவுக்கு சுவைத்து மகிழலாம்.

அதோடு ஐஸ் பாப்ஸிகல்ஸ் அல்லது கோலாஸ் எனும் உணவு வகை பயணிகளிடையே வெகு பிரபலம். மேலும், இந்தக் கடற்கரையின் சூரிய அஸ்த்தமனக் காட்சியைக் காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் வந்து செல்கின்றனர்.

philosopher

 ஹாஜி அலி மசூதி

ஹாஜி அலி மசூதி

மும்பையின் புகழ்பெற்ற வோர்லி பகுதியில் கடலை பார்த்துக் கொண்டு எழில் உருவமாய் நின்று கொண்டிருக்கிறது ஹாஜி அலி மசூதி. இந்த மசூதி செயற்கை தோணித் துறை ஒன்றின் மூலம் கடற்கரையோடு இணைந்துள்ளது.

இங்கு சாதி மத வேறுபாடின்றி அனைத்துத் தரப்பு மக்களும் கூட்டமாக கூட்டமாக வந்து செல்கின்றனர். இது போன்ற உன்னதமான ஒரு அனுபவம் அவர்களுக்கு வாழ்க்கையில் எப்போதாவதுதான் கிடைக்கும்.

Humayunn Peerzaada

 கொலாபா காஸ்வே

கொலாபா காஸ்வே

இந்தியாவில் ஃபேஷன் தொடங்கிய இடம் மும்பை என்றால், மும்பையில் ஸ்ட்ரீட் ஷாப்பிங் முறை அறிமுகமானது கொலாபா காஸ்வேயில் தான். இங்கு தெருவோரக் கடைகள் மட்டுமல்ல, பிரபல பிராண்டுகளின் ஷோ ரூம்களும் இருக்கின்றன. இந்தப் பகுதி கேட்வே ஆஃப் இந்தியா, விக்டோரியா டெர்மினஸ், ரீகல் சினிமா மற்றும் லியோபோல்ட் கஃபே போன்ற மும்பையின் முக்கிய அடையாளங்களுக்கு வெகு அருகாமையில் அமைந்திருக்கிறது.கொலாபா காஸ்வே வரும் பயணிகள் கால் நடையாக ஷாப்பிங் செல்வதே சிறந்தது. குறிப்பாக பெண்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் இங்கு பல வகைகளில் கிடைக்கும். மேலும், மும்பையின் பெரிய பெரிய கடைகளில் விற்கப்படும் பொருட்களெல்லாம் கொலாபா காஸ்வயிலிருந்தே மொத்தக் கொள்முதலில் வாங்கப்படுவதாக சொல்லபடுகிறது. எனவே எதற்காக அதிக விலைக்கு பொருட்களை வாங்க வேண்டும்?!

ghoseb

மவுண்ட் மேரி தேவாலயம்

மவுண்ட் மேரி தேவாலயம்

மவுண்ட் மேரி தேவாலயம் என்று பிரபலமாக அறியப்படும் 'பெஸிலிக்கா ஆஃப் அவர் லேடி ஆஃப் தி மவுண்ட்' கடல் மட்டத்திலிருந்து 80 மீட்டர் உயரத்தில், அரபிக் கடலின் அற்புதத் தோற்றத்தை நமக்களித்துக் கொண்டு நிற்கிறது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம், மேரி மாதா திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த தேவாலயம் மும்பையின் நவநாகரிக இடங்களுக்கு மத்தியில் அமைந்திருப்பதோடு, பேண்ட்ஸ்டாண்ட் மற்றும் கார்டர் ரோடு போன்ற சுற்றுலாத் தலங்களுக்கும் அருகாமையில் உள்ளது. இதன் தனிச் சிறப்பு வாய்ந்த கட்டிடக் கலைக்கு எந்த களங்கமும் வராமல் சீரிய முறையில் இது பாதுகாக்கப்பட்டும், நிர்வகிக்கப்பட்டும் வருகிறது.

Rahul meg

பேண்ட்ஸ்டாண்ட்

பேண்ட்ஸ்டாண்ட்

மும்பையின் மற்றுமொரு புகழ்பெற்ற இடம் பேண்ட்ஸ்டாண்ட். இந்தப் பகுதியில் உள்ள கடைகளில் நீங்கள் பருகும் காப்பியும், தேநீரும் என்றென்றைக்கும் உங்கள் அடி நாக்கில் தித்தித்துக் கொண்டே இருக்கும். இங்கிருந்து நடந்து செல்லும் தூரத்தில்தான் ஷாருக் கானின் 'மன்னத்' இல்லமும், சல்மான் கான் வசித்து வரும் கேலக்ஸி டவர் அடுக்குமாடி குடியிருப்பும் இருக்கிறது. மேலும், பேண்ட்ஸ்டாண்ட் பகுதி காதலர்களின் மையமாகவும் அறியப்படுகிறது. எனவே இந்த இடத்துக்கு நீங்கள் வரும் சமயம் எண்ணற்ற காதலர்களை காணமுடியும்.

Zia Gheewalla

Read more about: travel mumbai
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more