Search
  • Follow NativePlanet
Share
» »'அறம்' மதிவதனி ஊர்ல அப்படி என்ன சிறப்பு தெரியுமா?

'அறம்' மதிவதனி ஊர்ல அப்படி என்ன சிறப்பு தெரியுமா?

திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் சுற்றுலா அம்சங்கள் குறித்த ஒரு பார்வை

திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது காட்டூர் எனும் கிராமம். அறம் படத்தில் காட்டப்பட்டுள்ள அதே கிராமம்தான். இந்த கிராமம் சென்னைக்கு அருகில் இருந்தாலும் பெரும்பானோர்க்கு தெரிந்திருக்கவாய்ப்பில்லை. இப்போது பலரும் இந்த கிராமத்தைப் பற்றி தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டுகின்றனர். சரி இந்த கிராமத்தைச் சுற்றியுள்ள சுற்றுலாத்தளங்களைப் பற்றியும், பொழுதுபோக்கு அம்சங்களை குறித்தும் இந்த பதிவில் காண்போம் வாருங்கள்.

திருத்தணி முருகன் கோயில்

திருத்தணி முருகன் கோயில்

தமிழ் கடவுளான முருக பெருமானின் அறுபடை வீடுகளில் திருத்தணியும் ஒன்று. இந்துக் கடவுளான முருகன் வாசம் செய்யும் இந்த திருத்தணி தமிழ்நாட்டில் உள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. திருத்தணியின் மிக முக்கிய அம்சம் என்னவென்றால் இங்கு அமைந்திருக்கும் திரு சுப்பிரமணியசுவாமி ஆலயம் ஆகும். இந்த ஆலயத்திற்கு ஆண்டு முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள். மேலும் சுற்றலா வருவோருக்கு விருந்தாக இங்கு பாயும் நந்தி ஆறும் இருக்கிறது.

திருவள்ளூரிலிருந்து 39கிமீ தொலைவில் அமைந்துள்ளது திருத்தணி. இங்கிருந்து நடந்துசெல்லும் தொலைவில் திருத்தணி முருகன்கோயில் உள்ளது. திருவள்ளூர், சென்னை , காஞ்சிபுரம் உட்பட தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

Official Site

பழவேற்காடு கோட்டை

பழவேற்காடு கோட்டை

பழவேற்காடு கோட்டை, டச்சுக் குடியசின் காலனிக்காக இந்தியாவில் கட்டப்பட்ட முதல் கோட்டையாகும். இதுவே டச்சு சோழமண்டலத்தின் தலைமையகமாகவும் இருந்தது. இது டச்சு கிழக்கிந்திய கம்பெனியால் கி.பி. 1613 ஆண்டில் கட்டப்பட்டு, 1616 இல் உள்ளூர் அரசு மையமானது. இதற்கு அவர்கள் ஜெல்டிரியா கோட்டை என பெயர் வைத்தனர். ஜெல்டிரியா என்பது நெதர்லாந்தில் உள்ள ஒரு மாகாணத்தின் பெயர் என்பது குறிப்பிடதக்கது.

இந்தக் கோட்டை பழவேற்காடு ஏரிக் கரையில் கட்டப்பட்டுள்ளது

McKay Savage

 வீரராகவபெருமாள் கோயில்

வீரராகவபெருமாள் கோயில்


108 திவ்ய தேசங்களுள் ஒன்றான இந்த பெருமாள் கோயில் திருவள்ளூரில் அமைந்துள்ளது. இவ்வளூர் என்று அழைக்கப்படும் இந்த இடம் புண்ணியஸ்தலமாக கருதப்படுகிறது.

Ssriram mt

புலிகேட் ஏரி

புலிகேட் ஏரி

இந்தியாவின் இரண்டாவது பெரிய உப்பு நீர் ஏரி. இது சென்னையில் இருந்து 60 கி.மீ தொலைவில் தமிழக ஆந்திரப்பிரதேச மாநில எல்லையில் அமைந்திருக்கிறது. வடக்கே ஸ்வரணமுகி ஆறும் வட மேற்கே காலாங்கி ஆறும் தெற்கே ஆரணி ஆறும் கூடுதலாக இன்னும் சில ஓடைகளும் இந்த ஏரியினை உருவாக்குகின்றன. ஆற்று நீருக்கும் கடலுக்கும் இடைப்பட்ட பகுதியாக இந்த ஏரி விளங்குகிறது.

McKay Savage

 புலிகேட் பறவைகள் சரணாலயம்

புலிகேட் பறவைகள் சரணாலயம்

பழவேற்காடு ஏரி பறவைகள் காப்பகம் ஏரியினைச் சார்ந்த பறவைகளுக்கான ஆதரவு பணிகளைப் பார்த்து வருகிறது. வங்காள விரிகுடாவில் இருந்து இந்த ஏரியினை ஸ்ரீஹரிக்கோட்டா தீவு பிரிக்கிறது. இந்தத் தீவில் சதீஷ் தவான் விண்வெளி மையம் அமைந்திருக்கிறது. ஏரியின் தெற்கே பழவேற்காடு மீனவ கிராமம் அமைந்திருக்கிறது.

McKay Savage

வேதாரண்யேஸ்வரர் கோயில்

வேதாரண்யேஸ்வரர் கோயில்

தமிழகத்தின் பழமையான மற்றும் சிவபெருமாளுக்கு சிறப்பான கோயில்களுள் ஒன்றாகும். சென்னையிலிருந்து ஆந்திரா செல்லும் ரயில்களில் அல்லது பேருந்துகளில் இங்கு செல்லலாம்.

சிவபெருமானின் ரத்ன சபை என்று அழைக்கப்படும் இந்த இடம், காரைக்கால் அம்மையார் அதிகம் வந்து சென்ற இடமாக கருதப்படுகிறது.

பா.ஜம்புலிங்கம்

டச்சுக்காரர்கள் நினைவிடம்

டச்சுக்காரர்கள் நினைவிடம்


1616 முதல் 1690 மற்றும் 1782 முதல் 1825 வரை இந்த பகுதிகளை டச்சுக்காரர்கள் ஆட்சி செய்துவந்தனர். அதிலும் புலிகேட் இவர்களின் தலைநகரமாக இருந்தது. அவர்களின் முன்னோர்கள் இறப்பின்பொழுது இங்கு கல்லறைகள் எழுப்பப்பட்டது.அது சுற்றுலாத் தளமாக இருக்கிறது.

Destination8infinity

மாசில்லாமணீஸ்வரர் கோயில்

மாசில்லாமணீஸ்வரர் கோயில்

திருமுல்லைவாயிலில் அமைந்துள்ள இந்த கோயில் சிவபெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும். சென்னையிலிருந்து திருமுல்லை வாயிலுக்கு ரயிலில் சென்று, அங்கிருந்து தானி(ஆட்டோ) மூலம் கோயிலை அடையலாம்.தைக் கிருத்திகை நாள்களில் சிறப்பு பூசைகள் நடைபெறும்.

Ssriram mt

டச்சு ஆலயம்

டச்சு ஆலயம்

மகிமை மிகுந்த மாதா கோயில் என்று அழைக்கப்படும் இந்த கோயில் டச்சுக்காரர்கள் வழிபட்ட கோயிலாக கருதப்படுகிறது.

இங்குள்ள மாதா சிலை, சாந்தோமிலுள்ள சிலையைக் காட்டிலும் பழமையானதாகும்.

இந்த கோயில் உருவான கதை அப்படியே இந்துகோயில் உருவான கதையைப்போலவே கூறப்படுகிறது.

wikipedia

 சென்னை

சென்னை

திருவள்ளூருக்கு மிக அருகிலேயே தமிழகத்தின் தலைநகரான சென்னை அமைந்துள்ளது. சென்னையைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள இதை சொடுக்கவும்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X