Search
  • Follow NativePlanet
Share
» »கொலைகாரன் பேட்டை - மயிலாப்பூர் அருகே இப்படி ஒரு இடம் இருக்கு தெரியுமா?

கொலைகாரன் பேட்டை - மயிலாப்பூர் அருகே இப்படி ஒரு இடம் இருக்கு தெரியுமா?

இந்த பதிவில் ராயப்பேட்டை அருகிலுள்ள கொலைகாரன் பேட்டை பற்றி பார்க்கவிருக்கிறோம் வாருங்கள். கொலைகாரன் பேட்டை. கேட்கும்போதே ஒருவித பயம் தொற்றிக்கொள்கிறது அல்லவா. கொலை என்றாலே நம் கண்களுக்குள் ஆயிரம் காட்சிகள் ஓடி ரத்தம் சதை என தணிக்கை செய்யப்படும் அளவுக்கு கண்களைக் கட்டிக்கொள்ளும். தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கொலை, கொள்ளை, குற்றம், அசுத்தம், அழுக்கு, கறுப்பு என்று கூறினாலே வட சென்னையை நோக்கி கை நீட்டுபவர்கள் நம்மில் பாதிக்கு மேல் இருப்பார்கள். ஆனால், சென்னையின் சுத்தமாக, அமைதியாக, அடையாளங்களில் ஒன்றாக திகழும் மயிலாப்பூர் அருகே இப்படி ஒரு கொலைகாரன் பேட்டை இருப்பது உங்களுக்கு தெரியுமா?

எங்கே உள்ளது

எங்கே உள்ளது

கொலைகாரன் பேட்டை சென்னையின் மையத்தில் அமைந்துள்ள ராயப்பேட்டைக்கு அருகில் அமைந்திருக்கும் ஒரு பகுதி ஆகும். இது சிறிய பகுதி என்றாலும் இதன் பெயரால் பிரபலமாகிவிட்டது. அப்படி என்னதான் இங்கு நடக்கிறது தெரியுமா?

எப்படி செல்வது?

எப்படி செல்வது?

மயிலாப்பூரிலிருந்து ஸ்டெல்லாமேரிஸ் கல்லூரி, செம்மொழி பூங்கா, சாலிகிராமம், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம் என பல பகுதிகளிலிருந்து அருகாமையில் அமைந்துள்ளது இந்த இடம். இங்கிருந்து வெகு எளிதாக நாம் கொலைகாரன் பேட்டையை அடையலாம்.

தெரிந்துகொள்ளுங்கள்

தெரிந்துகொள்ளுங்கள்


கொலைகாரன் பேட்டை குறித்து அறிந்துகொள்வதற்கு முன், இது அமைந்துள்ள இடம் அப்படி ஒரு அமைவிடம். ராயப்பேட்டையைச் சுற்றி பல கேளிக்கை பொழுது போக்கு இடங்கள் இருக்கின்றன. அவற்றையும் தெரிந்துகொள்ளவேண்டும்.

எல்லோ பேஜஸ் ஹப், அருங்காட்சியகம், ஸ்டெல்லா மேரிஸ் கல்லூர், செம்மொழி பூஹ்க. சவேரா உணவகம், ஐநாக்ஸ் திரையரங்கம், பிரிட்டிஸ்கவுன்சில், அமீர் மஹால், இஷ்ட லிங்கேஸ்வரர், சிவசுப்பிரமணிய கோவில் என நிறைய இடங்கள் இங்கு காணப்படுகின்றன.

கொலைகாரன் பேட்டைக்குள் போகலாம்

கொலைகாரன் பேட்டைக்குள் போகலாம்

கௌடியா மடச்சாலையிலிருந்து பிரிந்து செல்லும் இந்த பகுதிக்கு இரண்டு தெருக்கள் இருக்கின்றன. மொத்தம் 500க்கும் அதிகமான வீடுகளும் உள்ளன. கொலைகாரன் பேட்டை எனும் பெயருக்காகவே இங்கே இருப்பவர்களை பார்த்து சிலர் பயப்படுகிறார்கள். ஆனால்... உண்மை தலைகீழானது...

கொலை அல்ல கலை

கொலை அல்ல கலை

நீங்கள் இதுவரை கொலைகாரன் பேட்டையில் கொலைகாரர்கள் நிறைய பேர் இருப்பார்கள் அதனால்தான் கொலைகாரன் பேட்டை என்று பெயர் வைத்துள்ளனர் என நினைத்திருந்தால், சுட்டி டிவியை ஆப் செய்து விட்டு இந்த தகவலை நன்கு தெளிவாக படியுங்கள்.

 பெயர்க்காரணம்

பெயர்க்காரணம்


இந்த பகுதிக்கு கொலைகாரன் பேட்டை என்று ஏன் பெயர் வந்தது என்று தெரியவில்லை. ஆனால் நீங்கள் நினைத்ததைப் போல கொலைக் காரர்கள் என எந்த வரலாறும் இங்கு காணப்படவில்லை. இங்குள்ள யாவரும் அன்றாடம் தொழில் செய்து பிழைக்கும் மக்கள் மேலும் நடுத்தர வர்க்கத்து குடும்பத்தினர் ஆவர். சரி அப்போ ஏன் கொலைகாரன் பேட்டை என்று பெயர் வந்தது.

 கோல்காரன் பேட்டை

கோல்காரன் பேட்டை

இது மக்கள் கூறும் கருத்து மட்டுமே. இதற்கான சான்றுகளும் பெரிய அளவில் எதும் கிடைக்கவில்லை. அந்த காலத்தில் இந்த பகுதியில் கோலாட்டம், சிலம்பம் என நிறைய கலைகள் கற்றுத் தரப்பட்டனவாம். அதனால் இந்த பூமிக்கு கோல்காரன் பேட்டை என்ற பெயர் இருந்ததாக கருதப்படுகிறது. பின்னாளில் மருவி கோல்காரன்பேட்டை கொலைகாரன்பேட்டையாக மாறி இருக்கும் என்று கருதப்படுகிறது.

கொல்லைக்காரன் பேட்டை, கோலக்காரன் பேட்டை

கொல்லைக்காரன் பேட்டை, கோலக்காரன் பேட்டை

இந்த இடத்தில் அதிகம் வீடுகள் கொல்லைப் புறம் வைத்து கட்டப்பட்டதாகவும், இங்கு கோல மாவு விற்கப்பட்டதாகவும் இதனால் கோலக்காரன் மற்றும் கொல்லைக் காரன் பேட்டை எனவும் அழைக்கப்பட்டு வந்தது,. பின்னாளில் கொலைகாரன் பேட்டையாக உருவெடுத்தது என்றும் சிலர் கூறுகின்றனர்.

கொல்லர் பேட்டை

கொல்லர் பேட்டை

இங்கு நகை, இரும்பு உள்ளிட்ட உலோகம் செய்பவர்கள் பலர் இருந்தனர் எனவும், அவர்களின் சார்பாக கொல்லர்பேட்டை என இருந்தது பின் கொலைகாரன்பேட்டையாக மாறியதாக சொல்பவர்களும் இருக்கிறார்கள்.

சிற்பிகள் அடங்கிய பகுதி

சிற்பிகள் அடங்கிய பகுதி

இங்கு கல் உடைப்பவர்கள், கல் செதுக்குபவர்கள், சிற்பிகள் இருந்ததாகவும் அவர்கள் நினைவில் கல்லுக்காரன்பேட்டை என இருந்ததாகவும் கூறப்படுகிறது.

All photos Taken From
PC: Wiki

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X