Search
  • Follow NativePlanet
Share
» »ரயில் டிக்கெட் கன்பார்ம் ஆகவில்லையா? அதற்கு பதிலாக இந்த ஆப் மூலம் இலவசமாக விமானத்தில் பயணித்திடுங்கள்!

ரயில் டிக்கெட் கன்பார்ம் ஆகவில்லையா? அதற்கு பதிலாக இந்த ஆப் மூலம் இலவசமாக விமானத்தில் பயணித்திடுங்கள்!

உங்களது ரயில் டிக்கெட் கன்பார்ம் ஆகவில்லையா? கவலையே வேண்டாம். அதற்கு பதிலாக IRCTC உங்களுக்கு இலவசமாக விமான டிக்கெட்டை வழங்குகிறது. என்ன அதிசயமாக இருக்கிறதா? ஆனால் உண்மை தான்! பயணத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் Trainman செயலி புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. காத்திருப்பு பட்டியலில் இருந்து டிக்கெட் உறுதி செய்யப்படாவிட்டால், அந்த ஆப் இலவச விமான டிக்கெட்டுகளை உங்களுக்கு வழங்குமாம்! எப்படி அந்த செயலியை உபயோகப்படுத்துவது? எப்படி இலவச விமான டிக்கெட் பெறுவது குறித்து இங்கே பார்ப்போம்!

ரயில் முன்பதிவில் உள்ள சிக்கல்கள்

ரயில் முன்பதிவில் உள்ள சிக்கல்கள்

ரயிலில் பயணிப்பவர்களுக்கு தான் தெரியும் இந்த கஷ்டம் என்னவென்று. காத்திருப்பு பட்டியலில் உங்களது பெயர் இருக்கும் போது உங்களுக்கு சற்று கலக்கமும் குழப்பமும் இருப்பது மிகவும் இயற்கை தானே? பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஒரு சிறிய காத்திருப்பு ரயில் டிக்கெட் உறுதி செய்யப்பட்டாலும், வார இறுதி நாட்களிலோ அல்லது பரபரப்பான பயணத் தேதிகளிலோ, பயணிகளுக்கு இருக்கைகள் கிடைக்காமல், கடைசி நிமிடத்தில் திட்டங்களை மாற்றிக் கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விடுகின்றனர். இந்த நிச்சயமற்ற நிலையில் பயணிகளுக்கு உதவ, டிக்கெட் முன்பதிவு செயலியான "ட்ரெயின்மேன் " ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

ட்ரெயின்மேன் செயலியின் துல்லியமான கணிப்பு

ட்ரெயின்மேன் செயலியின் துல்லியமான கணிப்பு

ரயில் முன்பதிவுகளில் உறுதியான முடிவை எடுப்பதில், Trainman செயலி உங்களுக்கு உதவி செய்கிறது. இந்த பயன்பாட்டில் பல்வேறு ரயில்களின் டிக்கெட் கட்டணங்கள் மற்றும் கட்டண கால்குலேட்டர் போன்ற அம்சங்கள் உள்ளன. ஆனால் சுவாரஸ்யமான அம்சம் அவர்களின் காத்திருப்பு பட்டியல் கணிப்புகள் தான். நீங்கள் ஏற்கனவே செய்த ரயில் டிக்கெட் முன்பதிவுகளின் வரலாறு, பயன்பாடு மற்றும் ரயில் உறுதிப்படுத்தல் செயல்முறையைப் பயன்படுத்துகிறது. இடங்கள் உறுதி செய்யப்படுமா இல்லையா என்பதை தீர்மானிக்க இது சரியாக உதவுகிறது. இதன் மூலம் மன அழுத்தமில்லாத முன்பதிவுக்கு இது உத்தரவாதம் அளிக்கிறது.

IRCTC யால் அங்கீரிக்கப்பட்ட செயலி

IRCTC யால் அங்கீரிக்கப்பட்ட செயலி

Trainman ஆப் புதிய மெஷின் டெக்னாலஜிகளைப் பயன்படுத்தும் IRCTC யின் ஒரு அங்கீகரிக்கப்பட்ட செயலி ஆகும். காத்திருப்புப் பட்டியலில் உள்ள பயணிகள், ட்ரெயின்மேன் செயலியில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது கொடுக்கப்பட்ட கணிப்பு மீட்டரில் குறிப்பிடப்பட்டுள்ள சதவீதத்தை சரிபார்த்து தனது பயணத்தை மேற்கொள்ள தனிமைப்படுத்தப்பட்ட வழியைப் பெறுவதை உறுதி செய்கிறது. ரயில் முன்கணிப்பு 94 சதவீத துல்லியத்துடன் செயல்படுகிறது என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.

இலவச விமான டிக்கெட்டைப் பெறுவது எப்படி?

இலவச விமான டிக்கெட்டைப் பெறுவது எப்படி?

ட்ரெயின்மேன் செயலியானது 'டிரிப் அஷ்யூரன்ஸ்' என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பயணிகளுக்கு தொந்தரவு இல்லாத பயண அனுபவத்தை வழங்குவதற்காக ட்ரிப் அஷ்யூரன்ஸ் சேவை உருவாக்கப்பட்டுள்ளது. பயணிகளின் டிக்கெட் கணிப்பு மீட்டர் 90 சதவீதம் அல்லது அதற்கு மேல் இருந்தால், ஆப்ஸ் பயண உத்தரவாதக் கட்டணமாக ரூ. 1 வசூலிக்கும். 90 சதவீதத்துக்கும் குறைவாக இருந்தால், டிக்கெட்டின் வகுப்பைப் பொறுத்து நிறுவனம் பெயரளவு கட்டணத்தை வசூலிக்கும். மேலும் சார்ட் ப்ரிப்பேரஷன் தயாரிக்கும் போது ரயில் டிக்கெட் உறுதி செய்யப்பட்டால், பயண உத்தரவாதக் கட்டணம் மீண்டும் உங்களது கணக்கில் திருப்பித் தரப்படும். ஆனால் அது உறுதிப்படுத்தப்படவில்லை என்றால், கூடுதல் கட்டணமின்றி பயணிகளுக்கு ட்ரெயின்மேன் விமான டிக்கெட்டை வழங்குகிறது. இதன் பொருள் என்னவென்றால் நீங்கள் இலவசமாக விமான டிக்கெட்டை பெறலாம் என்பதே.

உங்கள் விடுமுறையைத் திட்டமிடும்போது, தொந்தரவு இல்லாத பயணம் செய்வதே உங்களுடைய முதல் குறிக்கோளாக இருக்கும். அதை அடைய ட்ரெயின்மேன் ஆப் உங்களுக்கு உதவும். உங்களின் அடுத்த ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய இந்தப் பயன்பாட்டை முயற்சித்து பாருங்கள் பயணிகளே!

More News

    Read more about: irctc train booking train travel
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+