Search
  • Follow NativePlanet
Share
» »பாவங்கள் போக்கும் சித்திரபுத்திரர்... கேது தோஷக்காரர்களுக்கு ?

பாவங்கள் போக்கும் சித்திரபுத்திரர்... கேது தோஷக்காரர்களுக்கு ?

பூலோகத்தில் மனிதர்கள் செய்யும் பாவ, தர்மங்கள் குறித்த முழு விபரங்களையும் பதிவு செய்துவைப்பது சித்திரகுப்தன் என புராணங்கள் வாயிலாகவும், பல திரைப் படங்களிலும் நாம் கண்டிருப்போம். சித்திரகுப்தன் எமதர்ம ராஜனின் கணக்குப்பிள்ளையாவார். இவர் பிரம்மதேவனின் உடலிலிருந்து சித்ரா பவுர்ணமி தினத்தில் தோன்றியதால் இவருக்கு சித்ரகுப்தன் என்று பெயர் ஏற்பட்டது. பிரம்மதேவன் இவருக்கு இப்பணியை வரையறுத்தார். ஜீவனின் மரண காலத்தில் சித்ரகுப்தன் கொடுக்கும் பாவ புண்ணியக் கணக்கின் முடிவை வைத்தே எமதர்மன் ஜீவனுக்கு தண்டனை அளிப்பதும், பிரம்மா அதன் தலையில் எழுதுவதும் அமையும். ஆகவே சித்ரகுப்தரை வேண்டிக்கொள்வது மிகவும் அவசியமாகிறது.

இரண்டே தலங்களில்...

இரண்டே தலங்களில்...

சித்திரபுத்திர நாயனார் நம் கணக்குகளை வைத்திருக்கும் கணக்குப்பிள்ளை என்பதை முன்பே அறிந்தோம். வாழ்நாள் மட்டுமின்றி நம் ஜீவன் முழு மகிழ்ச்சியாக இருக்க இவரை வேண்டிக்கொள்ள வேண்டும். ஆனால், அது அவ்வளவு எளிதல்ல. ஏனெனில் தமிழகத்திலேயே இரண்டே தலங்களில் மட்டும் தான் சித்திரபுத்திர நாயனார் அருள்பாலிக்கிறார். அதில் ஒன்று காஞ்சிபுரத்திலும், மற்றொன்று தேனியும் அமைந்துள்ளது.

Ssriram mt

சித்திரபுத்திரநாயனார், தேனி

சித்திரபுத்திரநாயனார், தேனி

சித்திரபுத்திரநாயனாருக்கான திருக்கோவில் தேனி மாவட்டம், கோடாங்கிபட்டியில் அமைந்துள்ளது காஞ்சிபுரம் சித்திரபுத்திரர் கோவிலைவிட இக்கோவில் பிரசிதிபெற்றிருக்கக் காரணம் இத்தலத்தின் அருகிலேயே ஆறுமுக நயினார் கோவில், கம்பராயப் பெருமாள் காசிவிஷ்வநாதர் ஆலயம், திருமலைராயப் பெருமாள் கோவில், சாமாண்டியம்மன் கோவில் என ஏராளமான மற்றும் ஒன்றுக் கொண்டு தொடர்புடைய திருத்தலங்கள் உள்ளது.

Redtigerxyz

கோவில் வரலாறு

கோவில் வரலாறு

சிவன், ஜீவராசிகள் செய்யும் காரியங்களை கணக்கு எழுதும் பணியாற்றுபவர் சித்திரபுத்திரர் என சாஸ்திரங்கள் வாயிலாக நாம் அறிவோம். அகில உலகிற்கும் மூல காரணமாகிய சிவன் ஏடும், எழுத்தாணியும் கொண்டு தாமே கணக்கு எழுதுவது இல்லை. அதற்காக ஒரு தேவதையை படைக்க எண்ணினார். ஒருமுறை அவர் சக்திதேவியை பார்க்க, பார்வையின் குறிப்பறிந்த அவள் ஒரு சித்திரம் வரைந்தார். அதற்கு இருவரும் உயிரூட்ட அதிலிருந்து தோன்றியவரே சித்திரபுத்திரர் ஆவார்.

anonimus

சித்திரையில் தோன்றிய புத்திரன்

சித்திரையில் தோன்றிய புத்திரன்

சித்திரகுப்தன் மீண்டும் காமதேனுவின் மகனாக சித்திரை மாதத்தில், சித்திரை நட்சத்திரத்தில், பௌர்ணமி தினத்தன்று பிறந்தார். இதனாலும், சக்திதேவி வரைந்த சித்திரத்தில் இருந்து தோன்றியதாலும் சித்திரபுத்திரன் என்று அக்கப்படுகிறார். இருப்பினும், சித்திரகுப்தன் என்ற பெயரே பிரசித்தமாக புகழ்பெற்றுள்ளது.

E. A. Rodrigues

சித்திரகுப்தர் சிறப்புகள்

சித்திரகுப்தர் சிறப்புகள்

சித்திரகுப்தர் பிறந்த நாளான சித்ரா பௌர்ணமியன்று எண்ணெய் தேய்த்து குளித்தால் அவர் நமது பாவங்களை நீக்குவார் என்பது நம்பிக்கை. கோடாங்கிபட்டி சித்திரபுத்திரநாயனார் கோவிலில் இவரது மனைவியான பிரபாவதிக்கு சன்னதி உள்ளது. பசுவின் கர்ப்பத்தில் இருந்து இவர் பிறந்ததால் பசும்பால், பசுந்தயிர், பசுநெய் உள்ளிட்டவற்றை முற்றிலுமாக பயக்படுத்துவதை தவிர்க்க வேண்டும். சித்திராபவுர்ணமியன்று சித்திரகுப்த மந்திரம் சொல்லி வழிபட அவர் நமது இல்லத்தில் குடியேறி செழிப்பான வாழ்க்கை அமைய வழிவகுப்பார் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

Anonymous

வழிபாடுகள்

வழிபாடுகள்

நவகிரகங்களில் கேதுவுக்கு சித்திரகுப்தன்தான் அதிபதியாக உள்ளார். எனவே, கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இவரை வழிபட்டால், தோஷம் நீங்கும். சித்ரா பௌர்ணமி அன்று பெண்கள் விரதமிருந்து, உப்பில்லாத உணவு உண்டு வேண்டிக்கொள்வதால் ஆயுள் நீளும் என்பது நம்பிக்கை. சித்திரகுப்தனிடம் மலையளவு பாவத்தை கடுகளவாகவும், கடுகளவு புண்ணியத்தை மலையளவாகவும் எழுதிக்கொள்ளும்படி பிரார்த்திப்பார்கள்.

E. A. Rodrigues

நேர்த்திக்கடன்

நேர்த்திக்கடன்

வேண்டுதல் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

Kujaal

நடைதிறப்பு

நடைதிறப்பு

அருள்மிகு சித்திரபுத்திர நாயனார் திருக்கோவில் நடை காலை 7 மணி முதல் 12 மணி வரையிரும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும் திறக்கப்பட்டிருக்கும். பௌர்ணமி தினங்களில் இத்தலத்தில் சிறப்பு வழிபாடு நடத்தப்படும். அன்றைய தினம் நடை திறக்கப்படுவதில் மாற்றம் நிகழும்.

TAMIZHU

ஆறுமுக நாயனார் கோயில்

ஆறுமுக நாயனார் கோயில்

சித்திரபுத்திர நாயனார் கோவில் அருகே அமைந்துள்ளது விருப்பாட்சி ஆறுமுக நாயனார் கோவில். இத்தலத்தின் சிறப்பே ஆண்டு முழுவதும் வற்றாமல் அட்சய பாத்திரம் போல் கொட்டிக்கொண்டிருக்கும் அதிசய தீர்த்தமே. இங்கு ஆறுமுக நாயனார், மயில் மேல் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்த இடத்தில் ஆறுமுகனின் அதிசயத்தால் வருடம் முழுவதும் வற்றாத ஊற்று நீர் உள்ளது. சுமார் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு, ஆறுமுக நாயனார் திருவுருவச் சிலையை பிரதிஷ்டை செய்ய அஸ்திவாரம் தோண்டிய போது, கர்ப்ப கிரகத்திலிருந்து தண்ணீர் பொங்கி வழியத் தொடங்கியது. அன்று முதல் இன்று வரை ஒரே சீராக தண்ணீர் பொங்கி வழிந்துகொண்டே இருக்கிறது. இந்த தீர்த்த நீர் எங்கிருந்து வருகிறது, எப்படி என இன்றளவும் கண்டறிய முடியவில்லை.

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?

மதுரையில் இருந்து தேனி 77 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. கொச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி கடந்தால் தேனிடைய அடைந்துவிடலாம். தேனியில் இருந்து போடிநாயக்கனூர் சாலையில் அமைந்துள்ள கோடங்கிப்பட்டியை சுமார் 9 கிலோ பயணித்தாலே அடைந்துவிடலாம். தேனி தமிழகத்தில் சிறந்த சுற்றுலாத் தலங்களில் முக்கியப் பங்கு வகிப்பதாலும், தேனியைக் கடந்தே நாட்டின் பிரசித்தமான மூணாறு சுற்றுலாத் தலம் இருப்பதாலும் மதுரை, திண்டுக்கல், சிவகாசி என மாநிலத்தின் எந்தப் பகுதியில் இருந்தும் தேனியை வந்தடைய பேருந்து வசதிகள் நல்லமுறையில் இணைக்கப்பட்டுள்ளது.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X