» »தென்னிந்தியாவின் ஒரே தங்ககோவிலில் என்ன நடக்கிறது தெரியுமா?

தென்னிந்தியாவின் ஒரே தங்ககோவிலில் என்ன நடக்கிறது தெரியுமா?

Posted By: Udhaya

மக்களை ஆன்மீகத்துக்குள் புகுத்துவதும், அவர்களை அதுதொடர்பான கேள்விகளை கேட்கச் செய்து சிந்திக்க செய்வதும் அவ்வளவு எளிது இல்லை.

இதுவே அந்த கோயில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்தால் அனைவரும் அங்கு செல்ல ஆசைப்படுவார்கள். அவர்களின் பார்வை அந்த கோயிலின்மீது படும். இதன்மூலம் அவர்களுக்கு ஆன்மீக அறிவை ஊட்டலாம் என்ற நோக்கத்துடன் கட்டபட்டதுதான் இந்த பொற்கோயில்.

பொற்கோயில் என்றவுடன் அமிர்தசரஸ்தான் நினைவுக்கு வருகிறதா. இது தமிழகத்தில் உள்ள பொற்கோயில். என்ன தமிழகத்தில் பொற்கோயிலா முழுமையாக படியுங்கள்

கண்ணைக் கவரும் வண்ணத்தில் மின்னொளியில் கோயிலை வீடியோவில் காண இறுதிவரை படியுங்கள்!

மூலவர்

இந்த கோயிலின் மூலவராக லட்சுமி நாராயணி உள்ளார். இந்த கோயில் கிட்டத்தட்ட 500 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டதாக தெரிகிறது.

தல சிறப்பு

தல சிறப்பு

தென்னிந்தியாவின் ஒரே கோல்டன்டெம்பிள் அதாவது தங்ககோயில் இதுதான். இங்கு மூலவர் லட்சுமிநாராயணி சுயம்பாக தோன்றியுள்ளார்.

அமைப்பு

அமைப்பு


இந்த கோயிலுக்குள் நுழைந்தவுடன் ஒரு மண்டபம் மற்றும் அதன் வழியில் அமைக்கப்பட்டுள்ள நீரூற்று அமைப்பு கண்கவர்கிறது.

ஸ்ரீசக்கரம்

ஸ்ரீசக்கரம்


100 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள லட்சுமி நாராயணி கோயில் ஸ்ரீசக்கரம் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இதை கோயிலின் மேலிருந்து பார்க்கும்போது அழகாக காட்சியளிக்கிறது.

ஐம்பொன்னால் ஆன விளக்கு

ஐம்பொன்னால் ஆன விளக்கு

அம்மன் சிலைக்கு எதிரே 27 அடியில் 10 அடுக்கு கொண்ட விளக்கு உள்ளது. இதில் ஆயிரம் திரிகள் போட்டு விளக்கேற்றுகிறார்கள்.

பசுமை

பசுமை

கோயிலைச் சுற்றிலும் பச்சை வண்ண போர்வை விரிக்கப்பட்டுள்ளதைப் போல புல்வெளிகளும், அதன் நடுவே துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி, மாரியம்மன் சிலைகளும் உள்ளன.

16ம் பெற்று பெருவாழ்வு வாழ

16ம் பெற்று பெருவாழ்வு வாழ

மகாமண்டபத்தில் நின்று அம்மனை தரிசித்தால் 16 வகையான செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழலாம் என்கின்றனர்.

தமிழகத்தில் பொற்கோயில்கள்

தமிழகத்தில் பொற்கோயில்கள்

சிதம்பரம் நடராசர் சன்னதி மேற்கூரை மட்டும் தங்கத்தால் வேயப்பட்டது. மதுரை மீனாட்சியம்மன் கோயில், பழநி முருகன் கோயில், புதுச்சேரி மணக்குளவிநாயகர், திருப்பதி ஆகிய கோயில்களில் விமானங்கள் மட்டும் தங்கத்தால் அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வளவு கிலோ! எத்தனை கோடி?

இவ்வளவு கிலோ! எத்தனை கோடி?

இந்த கோயில் 1500 கிலோ தங்கத்தால், 350 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ளது. அம்மாடியோவ் என்கிறீர்களா?

எப்படி செல்லலாம்?

வேலூரிலிருந்து தெற்கு திசையில் ஓசூர் அணைக்கட்டு செல்லும் வழியில் 5 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த கோயில்.

Read more about: travel, temple