» »ஜல்லிக்கட்டு நடக்கும் ஊர்களைப் பற்றி தெரியுமா?

ஜல்லிக்கட்டு நடக்கும் ஊர்களைப் பற்றி தெரியுமா?

Posted By: Udhaya

ஏறு என்றால் அது காளை மாட்டையும், தழுவுதல் என்றால் மாட்டை ஓடவிட்டு அதை மனிதர்கள் அடக்குவது, அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவதான விளையாட்டு.

தமிழர்களின் வீர விளையாட்டான இது, பெரும்பாலான இடங்களில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையின்போது விளையாடப்படுகிறது. சில இடங்களில் வேறு தினங்களில் கூட நடத்தப்படுகிறது.

ஏறுதழுவுதலின் வகைகள்

வேலி சல்லிக்கட்டு

வாடிவாசல் சல்லிக்கட்டு

வடம் சல்லிக்கட்டு

இனி அவை விளையாடப்படும் இடங்களுக்கு ஒரு சின்ன போட்டோ டிரிப் போய்ட்டு வரலாம் வாங்க....

அலங்காநல்லூர்

அலங்காநல்லூர்

பழந்தமிழ் இலக்கியங்களிலும் சிந்துவெளி நாகரித்திலும் ஏறுதழுவல் நிகழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன. ஏறு தழுவுதல் (மஞ்சு விரட்டுதல்) என்ற சொல் பழந்தமிழ் இலக்கியங்களில் காளையை அடக்கும் வீர விளையாட்டின் பெயராகப் பயின்று வருகிறது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை காண உலகெங்கிலுமிருந்தும் ரசிகர்கள் வருகின்றனர்.

PC: Iamkarna

அவனியாபுரம்

அவனியாபுரம்


மதுரைக்குத் தெற்கே, மதுரை விமான நிலையத்திற்குச் செல்லும் வழியில் 4 கி.மீ தூரத்தில் அவனியாபுரம் அமைந்துள்ளது அவனியாபுரம். இதன் பழமையான பெயர் அவனிபசேகரமங்கலம் என்றும் பிள்ளையார்பாளையம் எனவும் அழைக்கபட்டுள்ளது. நாளடைவில் இதன் பெயர் மருகி அவனியாபுரம் என தற்போது அழைக்கபடுகிறது.

PC: Manu Manohar

திருவாபூர் புதுக்கோட்டை

திருவாபூர் புதுக்கோட்டை

கொல்லக்கூடிய காளையைத் தழுவிப் போரிட்டு அடக்குவதால் ‘கொல்லேறு தழுவுதல்' என்றும் சிறப்பித்துக் கூறப்படுகிறது. புது தில்லி தேசியக் கண்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகின்ற சிந்துவெளி நாகரிகம் சார்ந்த முத்திரை ஒன்றில் ஒரு காளை உருவமும் அதை அடக்க முயலும் வீரரை அக்காளை தூக்கி எறிவதும் உயிரோட்டமான விதத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது.

சல்லிக்கட்டை நடத்தும் மற்றொரு ஊர் திருவாபூர். இது புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ளது.

PC: vinoth chandar

தம்மம்பட்டி சேலம்

தம்மம்பட்டி சேலம்

சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள தம்மம்பட்டியில் வருடாவருடம் இந்த சல்லிக்கட்டு திருவிழா நடைபெறும். சல்லிக்கட்டு நடைபெறும் தினத்தன்று ஊரே விழாக்கோலும் பூண்டு மகிழ்ச்சியில் ஆழ்த்தும். PC: vinoth chandar

பாலமேடு மதுரை

பாலமேடு மதுரை


மதுரை மாவட்டத்தில் சல்லிக்கட்டு நடைபெறும் இடங்களில் பாலமேடு தனிச்சிறப்பு வாய்ந்தது. வெளிநாடுகளிலிருந்து பதிவாக எல்லா ஆண்டும் ரசிகர்கள் வருகை தருகின்றனர். இவர்களுக்கென வசதிகளையும் மேற்கொள்கின்றனர் ஊர் மக்கள்.

PC: vinoth chandar

சிராவயல் சிவகங்கை

சிராவயல் சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிராவயல் பகுதியிலும் சல்லிக்கட்டு நடைபெறுகிறது. மதுரையிலிருந்து கொஞ்ச தூரத்தில் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டத்திலும் சல்லிக்கட்டு மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.

PC: Thaya nanth

கண்டுப்பட்டி சிவகங்கை

கண்டுப்பட்டி சிவகங்கை


சிவகங்கை மாவட்டத்தின் கண்டுப்பட்டி கிராமத்திலும் சல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. காளைகளை அடக்கவரும் ஆண் காளைகள் ஊரில் பெரும் மரியாதையுடன் நடத்தப்படுகின்றனர்.PC: Vinoth chandar

வேந்தான்பட்டி புதுக்கோட்டை

வேந்தான்பட்டி புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் வேந்தான் பட்டி என்னும் கிராமத்திலும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் காலம்காலமாக நடத்தப்பட்டு வருகின்றன. பொங்கல் பண்டிகையின் போது, விழாக்கோலம் கொண்டு ஊரே ஜல்லிக்கட்டுப் போட்டியில் ஈடுபடுகின்றன.PC: Thaya nanth

பல்லவராயன்பட்டி கம்பம்

பல்லவராயன்பட்டி கம்பம்


தேனி மாவட்டம் கம்பம் அருகிலுள்ள பல்லவராயன்பட்டி என்னும் ஊரிலும் ஜல்லிக்கட்டு திருவிழா நடத்தப்படுகிறது.

PC: Jayanth M

சிங்கம்புணரி

சிங்கம்புணரி

சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள சிங்கம்புணரி ஒரு பேரூராட்சியாகும். இதன் ஊராட்சி ஒன்றியத்தில் 30 பேரூராட்சிகள் உள்ளன.

இங்கு பொங்கல் பண்டிகையின் போது நடைபெறும் ஜல்லிக்கட்டில் அக்கம்பக்கத்து மாவட்டத்தினர் மட்டுமின்றி தமிழகத்தில் பெரும்பாலானோர் கலந்து கொள்வது வழக்கம்.

PC: Maveeran Somasundaram

Read more about: பயணம், travel