Search
  • Follow NativePlanet
Share
» »உங்கள புடிச்ச ஏழரைச் சனியை ஓடஓட துரத்த உடனே இந்த கோவிலுக்கு போங்க!

உங்கள புடிச்ச ஏழரைச் சனியை ஓடஓட துரத்த உடனே இந்த கோவிலுக்கு போங்க!

கைநிறைய காசும், தங்கக் கட்டிகளையும் வச்சுட்டு இங்க சுத்துர அளவுக்கு நாம பெரிய செல்வந்தர்கள் இல்லை. ஏதோ, வாழ்வைச் சமாளிக்கத் தேவையான காசு, சின்னதா கடனுல ஒரு வீடு, ஒரு நல்ல வேலை. இப்படித்தான் நாம் அனைவருமே அன்றாட வாழ்வை நகர்த்திக்கொண்டு இருக்கிறோம். இப்படி, யாருக்கும் எந்த கெடுதலும் நினைக்காம என்னதான் நாம நம்ம வேலைய மட்டும் பார்த்துட்டு இருந்தாலும் ஒருசில தோசங்களும், சாபங்களும் ஒட்டுமொத்த வாழ்நாளையே முடக்கிப் போடுற அளவுக்கு இடையூறுகளையெல்லாம் ஏற்படுத்திவிடும். இதில் தெரிந்த எதிரிகளைக்காட்டிலும், தெரியாத எதிரிகளின் பார்வை, அதாவது நம் உடனேயே இருக்கும் ஒரு சில தீய எண்ணம்கொண்ட சக்திகள் தொழில் வளர்ச்சி, உடல் ஆரோக்கியம், குடும்ப நிம்மதி என ஒட்டுமொத்தமுமாக அழித்துவிடும்.

தோசங்கள்

தோசங்கள்

சம்பாதிக்குற காசு எங்க போகுதுன்னே தெரியாது, தீராத நோய், கடன் மேல கடன்... இதுபோன்ற ஏதேனும் அறிகுறிகளுடன் என்ன செய்வதென்றே அறியாமல் உள்ளீர்களா ? எத்தனையோ கோவில், வழிபாடு, நோய்க்கு மருத்துவர்ன்னு எதுக்குமே பயனில்லையா. கவலைய விடுங்க... விழுப்புரம் அருகே இருக்குற கல்பட்டுல்ல உள்ள இந்தக் கோவிலுக்கு மட்டும் குடும்பத்துடன் ஒருமுறை சென்று வழிபட்டு வாருங்கள். அதன் பிறகு தடைபட்டு இருந்த உங்களது வளர்ச்சியையும், ஆரோக்கியமும் பிடிச்ச தோசங்களும் விலகி ஓடுரது ஒருசில நாட்களிலேயே உணருவீங்க.

Yogesa

எங்கே உள்ளது ?

எங்கே உள்ளது ?

விழுப்புரம் பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சி ட்ரங் சாலையில் பயணித்து விழுப்புரம் - மாம்பழப்பட்டு- திருக்கோவிலூர் சாலையில் இடதுபுறம் திரும்பி மாநில நெடுஞ்சாலை எண் 7யில் பயணித்து கல்பட்டுவில் அமைந்துள்ளது அருள்மிகு சனீஸ்வரர் கோவிலை அடையலாம். இந்த இடைப்பட்ட சுமார் 17 கிலோ மீட்டர் தூரத்தில் விழுப்புரம் பேருந்து நிலைய சாலையில் இருந்து கல்பட்டிற்கு செல்லும் வழியிலேயே நாதர் கோவில், ஸ்ரீ வேங்கட வரதராஜ பெருமாள் கோவில், ஈஷ்வரன் கோவில், ஸ்ரீனிவாசப் பெருமாள் கோவில், அழகம்மன் கோவில், ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் என பல திருத்தலங்கள் அமைந்துள்ளன.

Suraj Belbase

தல அமைப்பு

தல அமைப்பு

பிரும்மானந்த சுவாமியால் கட்டப்பட்ட இந்தக் கோவில் பிரார்த்தனை தலமாக உள்ளது. சனீஸ்வரன் சன்னதி முன்பு தியான நிலையில் அமர்ந்து தியாணம் செய்து வர வேண்டிவை கிடைக்கும என்பது தொன்நம்பிக்கை. நுழைவிடத்தில் காணப்படும் கணபதி திருவுருவம் இங்குள்ள குளத்தில் கண்டெடுக்கப்பட்டதாகும். முன்னொரு காலத்தில் இப்பகுதியை ஆட்சிசெய்து வந்த தேசிங்குராஜா வழிபட்ட கணபதியாக இச்சிலை கருதப்படுகிறது. வலம்புரி விநாயகரும் இத்திருத்தலத்தில் காணப்படுகிறார்.

Rsmn

வரலாறு

வரலாறு

இத்திருத்தலத்தில் உள்ள சனிபகவானின் உருவச்சிலையை வைத்தே கோவிலின் வரலாறு அறியப்படுகிறது. சனீஸ்வரருக்கு ஒரு காலில் குறியுள்ளது நாம் அறிந்ததே. இதற்குக் காரணம், ராவணன் சாகா வரம் வேண்டி பிறந்த குழந்தையை சனிபகவான் பார்த்து விடுகிறார். இதனால் கோபமடைந்த ராவணன் சனியின் சாலை உடைத்துவிட்டார். அதன்படி, சனீஸ்வரரின் ஒரு கால் அவரது வாகனமன காகத்தில் இருப்பது போல இத்தரலத்தில் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

E. A. Rodrigues

சிறப்பு

சிறப்பு

சனீஸ்வரர் என்பவர் தீயசகுனமிக்க கடவுள் என பெரும்பாலும் கருதப்படுகிறது. ஆனால், சனீஸ்வரர் என்பவர் தவறு செய்பவர்களை மட்டுமே தண்டிக்கும குணம் கொண்டவர். இவரை வேண்டி அபிஷேக பூஜையோ, புது ஆடைகளோ வழங்க வேண்டிய அவசியம் இல்லை. குறையை கூறினாலே அதனை தீர்த்து வைப்பவர் சனீஸ்வரர். கல்பட்டு சனீஸ்வரர் கோவிலில் வெறும் சனீஸ்வரர் மட்டுமின்றி உச்சிஸ்ட கணபதி, 11 அடி உயர பஞ்சமுக ஈஸ்வரர், பஞ்சமுக ஆஞ்சநேயர், தண்டாயுதபாணி, 18 அடி உயரம் கொண்ட அஷ்டாதசபூஜ துர்க்கை அம்மையார் ஆகியோரும் தனித்தனி சன்னதியில் காட்சியளிக்கின்றனர். சனி, கேது, சூரியன், வியாழன் போன்ற கிரகங்கள் ஊழ்வினையால் தீய பலனை அனுபவித்து வருகிறீர்கள் என்றால் இவர்கள் அனைவரையும் வழிபட்டுவது மிகவும் சிறந்தது.

Vaikoovery

ஏழரைச் சனி விட்டு விலக

ஏழரைச் சனி விட்டு விலக

இத்தலத்தில் உள்ள சனீஸ்வரரையும், துர்க்கை அம்மனையும் வழிபட்டு, கோவில் பிரகாரத்தை சுற்றி வந்து சூரிய காயத்ரி மந்திரத்தை நூற்றி எட்டு முறை உச்சரித்தப்படி தாமரை மலர்களை சனிபகவானுக்கு சமர்ப்பித்தால் அஷ்டம் சனி, ஏழரைச் சனி, கண்டகச் சனி உள்ளிட்ட 12 விதமான சனி தோசங்கள் விட்டு விலகிச் செல்லும் என்பது தொன்நம்பிக்கை.

Arunankapilan

எப்போது செல்ல வேண்டும் ?

எப்போது செல்ல வேண்டும் ?

அருள்மிகு சனீஸ்வரர் திருக்கோவில் நடை காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதுல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும். மேலும், வாரந்தோறும் சனிக்கிழமையன்று சனீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெறும். அன்றைய தினம் எள் விளக்கு ஏற்றி பிரார்த்தனை செய்து வழிபட்டால் அனுகூலம் கூடும்.

த*உழவன்

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?

சென்னையில் இருந்து சுமார் 167 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது விழுப்புரம். குருவாயூர் எக்ஸ்பிரஸ், தூத்துக்குடி எக்ஸ்பிரஸ், சோழன் எக்ஸ்பிரஸ், புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ், திருப்பதி எக்ஸ்பிரஸ் என ஏராளமான ரயில் சேவைகள் சென்னையில் இருத்து விழுப்புரத்திற்கு உள்ளது. மேலும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இம்மாவட்டம் நல்ல முறையில் இணைக்கப்பட்டுள்ளது. விழுப்புர ரயில் நிலையத்தில் இருந்து பேருந்து அல்லது தனியார் வாடகைக் கார்கள் மூலம் கோவிலை அடையலாம்.

திண்டிவனம் - கல்பட்டு

திண்டிவனம் - கல்பட்டு

திண்டிவணத்தில் இருந்தும், திருவண்ணாமலையில் இருந்தும் கல்பட்டை அடைய சுமார் ஒரு மணி நேரம் பயணித்தால் போதும். தேசிய நெடுஞ்சாலை மூலம் எளிதில் கல்பட்டு சனீஸ்வரர் கோவிலை அடைந்துவிடலாம்.

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more