» »மரண பயம் நீக்கும் சிவன் கோவில்..! #Travel2Temple 6

மரண பயம் நீக்கும் சிவன் கோவில்..! #Travel2Temple 6

Written By: Sabarish

மனிதர்களாக பிறந்த நாம் பல வகைகளில் பயம் கொள்வது உண்டு. சாலையில் பயணிக்கையில், உடலில் ஏற்படும் நோய், வயது முதிர்வு, சில சமயங்களில் நெருப்பு, இருட்டு, அமானுசியம், எதிரிகள் என பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம். இவற்றில் இருந்து ஒரு சில மனமாறுபாடுதல்கள், உலவியல் ரீதியாக வெளியேறிவிடாம். ஆனால் நமக்கு ஏற்படும் மரண பயத்தை எளிதில் போக்க முடியாது. இது பலசமயங்களில் நம் ஆழ்மனதில் தேங்கி அவ்வப்போது நம்மை வேதனையடையச் செய்யும். அவ்வாறான மரண பயத்தில் இருந்து விலக வேண்டுமா உடனே இந்த சிவன் கோவிலுக்கு செல்லுங்கள்.

எங்கே உள்ளது ?

எங்கே உள்ளது ?


விருதுநகரில் இருந்து 46 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ளது சிவனணைந்த போற்றி திருக்கோவில். மதுரையில் இருந்து 80 கிலோ மீட்டர் பயணித்தாலும், சிவகாசியில் இருந்து 21 கிலோ மீட்டர் பயணித்தாலும் இக்கோவிலை அடையலாம்.

Harizen20

சிறப்பு

சிறப்பு


சிவனணைந்த போற்றி கோவிலில் சிவன் சன்னதியும், விஷ்ணு சன்னதியும் அமைந்துள்ளது. மேலும், ஆதிநாராயனணுக்கு எதிரே எமதர்மர் எழுந்தருளியுள்ளது இத்தலத்தின் கூடுதலான சிறப்பம்சமாக உள்ளது.

Nsmohan

திருவிழா

திருவிழா


சிவனுக்கு உகந்த நாட்களான மகா சிவராத்திரி, தை, அமாவாசை, ஆடி மாதங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. மாத கடைசி வெள்ளிக்கிழமையன்றும் சிறப்பு ஆராதனைகள் நடைபெறுகிறது.

Steve Evans

நடைதிறப்பு

நடைதிறப்பு

மற்ற கோவில்களைப் போலவே காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை நடை திறக்கப்படுகிறது. பின், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை நடை திறக்கப்படுகிறது.

PJeganathan

வழிபாடு

வழிபாடு

இத்திருத்தலத்தில் உள்ள சிவனையும், ஆதிநாராயணனையும் வழிபட்டால் திருமணத் தடைகள் நீங்கும் என்பது தொன் நம்பிக்கை. மேலும், காவல் தெய்வமான சங்கிலி வீரப்ப சாமி, பொன் மாடன், ஊன முத்து ஆகியோரை வழிபட்டால் தொழில் பிரச்சனைகள் நீங்கி இலாபம் பெருகும். பில்லி, சூனியம், கண் திருஷ்டி உள்ளிட்ட பிரச்சனைகளுக்கும் இங்கே வழிபாடு நடத்தப்படுகிறது.

Ilya Mauter

மரண பயம் நீக்கும் எமன்

மரண பயம் நீக்கும் எமன்


இத்திருத்தலத்திலேயே எமனுக்கான சன்னதியும் உள்ளது. எம தர்மனுக்கு புதன் கிழமைகள் தோறும் விளக்கேற்றி வழிபட்டால் மரண பயம் நீங்கும் என்பதால் ஏராளமான பக்தர்கள் புதன் கிழமையன்று வருவர்.

Redtigerxyz

நேர்த்திக்கடன்

நேர்த்திக்கடன்


வேண்டிய காரியம் நிறைவேறியதும் மூலவருக்கு சிறப்பு அழங்கார பூஜைகள் செய்யப்படுகிறது. குறிப்பாக, ஆபிசேக அழங்காரம் செய்து அன்னதானம் செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றப்படுகிறது.

Raji.srinivas

புராணக் கதை

புராணக் கதை


மதுரை, ராஜபாளையம் பகுதி விஸ்வகர்ம வம்சாவழியினரால் இக்கோவில் நிறுவப்பட்டுள்ளது. எமதர்மன் தனது பணிகளில் அலட்சியமாக இருந்தால் அவரது தற்தையான சூரியனின் சாபம் பெற்று பூலோகம் வந்து ஆதிநாராயணனையும், சிவனையும் வழிபட்டு விமோட்சனம் பெற்றார். அதன் அடிப்படையிலேயே சூரிய ஆதிநாராயணனான சூரிய நாராயணனுக்கு எதிரே இத்திருத்தலத்தில் எமதர்மன் காட்சியளிக்கிறார்.

Xplorenisar

தலசிறப்புகள்

தலசிறப்புகள்

விநாயகர், முருகன், மீனாட்சி, சிவனணைந்த போற்றி, ஆதிநாராயணன், சங்கிலி வீரப்பசாமி, எமதர் ராஜா உள்ளிட்ட தெய்வங்கள் ஒரே தலத்தில் காட்சியளிப்பது காணக்கிடைக்காத அம்சமாகும்.

Booradleyp1

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?


சென்னையில் இருந்து விருதுநகர் செல்ல திருநெல்வேலி எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், நெல்லை எக்ஸ்பிரஸ், செங்கோட்டை எக்ஸ்பிரஸ், நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், பொதிகை எக்ஸ்பிரஸ் என ஏராளமான ரயில் சேவைகள் உள்ளன. மதுரை விமான நிலையம் விருதுநகரின் அருகில் உள்ள விமான நிலையமாகும். விருதுநகரில் இருந்து பேருந்து அல்லது தனியார் வாகனம் மூலம் மம்சாபுரத்தில் உள்ள சிவனணைந்த போற்றி கோவிலை அடையலாம்.

SarThePhotographer

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்