» »மகாபாரத போரில் அர்ச்சுனன் எய்த அம்பு விழுந்த இடம் இப்ப எப்படி இருக்கு பாத்திங்களா..!

மகாபாரத போரில் அர்ச்சுனன் எய்த அம்பு விழுந்த இடம் இப்ப எப்படி இருக்கு பாத்திங்களா..!

Written By: Sabarish

மகாபாரதத்தில் இடம் பெறும் முக்கிய கதாப்பாத்திரங்களில் அர்ச்சுனன் அல்லது அர்ஜூனன் மிகவும் குறிப்பிடத்தக்கவர். பஞ்ச பாண்டவர்களில் மூன்றாமவரான இவர், கிருஷ்ணரின் நண்பன். விஷ்ணுவின் வியூக அவதாரத்தின் ஒருவனாகவும் கருதப்படுகிறார். மகா பாரதமே போற்றும் சிறந்த வில் வித்தைக்காரர் என நம் குழந்தைப் பருவம் முதலே அறிந்திருப்போம். அப்படி, மகாபாரதப் போரின் போது அரச்சுனன் எய்த அம்புகளில் ஒன்று விழுந்த இடம் இன்று எங்கே, எப்படி உள்ளது என தெரியுமா ?.

எங்கே உள்ளது ?

எங்கே உள்ளது ?


விருதுநகர் மாவட்டம், குன்னூர் வட்டத்திற்கு உட்பட்டு மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது அருள்மிகு கொழுந்தீஸ்வரர் திருக்கோவில். விருதுநகரில் இருந்து ஆமத்தூர் வழியாக 33.7 கிலோமீட்டர் பயணித்தும் அல்லது எரிச்சநத்தம் வழியாக 40 கிலோ மீட்டர் பயணித்தும் கோவிலை அடையலாம். ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் சாலை மார்க்கமாக சென்றாலும் கொழுந்தீஸ்வர் கோவிலை அடையலாம்.

Ssriram mt

கொழுந்தீஸ்வரர் கோவில்

கொழுந்தீஸ்வரர் கோவில்


மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பாறைக் குன்றுகளைக் குடைந்து கட்டிய குடவறைக் கோவில் கொழுந்தீஸ்வரர் கோவில். இங்கே கருவறையில் லிங்க வடிவில் மூலவர் காட்சியளிக்கிறார். பக்கவாட்டின் வலதுபுறத்தில் நடராஜர், சிவகாமி அம்பாள், இடது புறம் விநாயகர், முருகள் சிலகள் தத்ரூபமான முறையில் பாறையில் செதுக்கப்பட்டுள்ளது. கோவில் தலத்தில் காலபைரவர், நவக்கிரகங்களுக்கு தனித் தனியே சன்னதி உள்ளது.

Purbadri Mukhopadhyay

சிறப்பு

சிறப்பு


மகாபாரதப் போரின் போது அர்ச்சுனன் எய்த அம்புகளில் ஒன்று கோவில் அமைந்துள்ள பாறையில் விழுந்ததாக தொன்நம்பிக்கை நிலவுகிறது. பாய்ந்து வந்த அம்பு குத்திய இடத்தில் வற்றாத சுனை நீரூற்றாக அர்ச்சுனன் சுனைத் தீர்த்தம் உள்ளது. இது மலையின் அடிவாரத்தில் நீரோடையாக இன்றும் ஓடுகிறது. இதனருகேயே திருவோட்டுக்கேணி வற்றாத நீரூற்றும் உள்ளது.

Ilussion

நோய்தீர்க்கும் தீர்த்தம்

நோய்தீர்க்கும் தீர்த்தம்


அரச்சுனன் சுனைத் தீர்த்தமும், திருவோட்டுக்கேணி தீர்த்தமும் எவ்வித நோய்களையும் தீர்க்கும வல்லமை கொண்டதா இவ்வூரில் நம்பிக்கை நிலவுகிறது. குறிப்பாக, நீண்டநாட்களாக குனமடையாத நோயையும் போக்க சன்னதியில் உள்ள மரகதவள்ளி அம்பாள் சமேத மலைக் கொழுந்தீஸ்வரரை வழிபட்டு இந்நீரை அருந்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

Armanaziz

வரலாறு

வரலாறு


கொழுந்தீஸ்வரர் கோவில் சுமார் ஆயிரம் முதல் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. விருதுநகரில் பல சிவன் கோவில்கள் காணப்பட்டாலும் கி.பி.8 ஆம் நூற்றாண்டில் பாறைகளைக் குடைந்து கட்டப்பட்ட இந்த சிவன் கோவில் மிகவும் பிரசிதிபெற்தாக உள்ளது. இதுவே சிவனுக்கு அமைக்கப்பட்ட முதல் குடவறைக் கோவிலாகும். சுற்றுவட்டாரப் பகுதிகளில் பயணிகளால் பெரிதும் விரும்பப்படும் கோவிலாகவும் உள்ளது.

Srithern

திருவிழா

திருவிழா


இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் கடந்த 2018ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆண்டுதோறும், சிவராத்திரி, பவுர்ணமி, பிரதோஷம் உள்ளிட்ட சிறப்பு நாட்களில் மூலவருக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெறுகிறது.

Ssriram mt

நடைதிறப்பு

நடைதிறப்பு


கொழுந்தீஸ்வரர் கோவில் நடை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 6 மணி வரையிலும் திறந்திருக்கும்.

Ssriram mt

நேர்த்திக்கடன்

நேர்த்திக்கடன்

நோய் தீர்த்தல், நீங்கா விணை நீங்குதல், மனச்சங்கடம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு வேண்டி சிவன் கோவிலில் வழிபாடு நடத்தப்படுகிறது. வேண்டிய காரியம் நிறைவேறிய பின் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பட்டு ஆடைகள் உடுத்தி அர்ச்சனை செய்யப்படுகிறது.

Michael Coghlan

அருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள்

அருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள்


கொழுந்தீஸ்வரர் கோவில் அருகே, அதாவது விருதுநகரில் இருந்து சுமார் 65 கிலோ மீட்டர் தொலைவில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் வனவிலங்கு சரணாலயம் மிகவும் பிரசிதிபெற்றதாகும். இதனை அடுத்து அமைந்துள்ள மலைக் கோவில்களும், நீர்விழ்ச்சிகளும் கோடைகால சுற்றுலாவிற்கு ஏற்ற தலம் என்பதால் தவறிவிடாமல் சென்று வாருங்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர் வனவிலங்கு சரணாலயம்

ஸ்ரீவில்லிபுத்தூர் வனவிலங்கு சரணாலயம்


ஸ்ரீவில்லிபுத்தூர் வனவிலங்கு சரணாலயம் நரைத்த அணில் வனவிலங்கு சரணாலயம் என்றும் அழைக்கப்படுகிறது. நரை அண‍ில் எனப்படும் மலை அணில் வகையைப் பாதுகாக்க துவங்கப்பட்ட இங்கு, புலிகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதால் இதனைப் புலிகள் சரணாலயமாக அறிவிக்கவும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது. நரை அணில், யானை, சிறுத்தை, புலி, வரையாடு, கடமான், முள்ளம்பன்றி, நீலகிரி கருமந்தி, சோலைமந்தி உள்ளிட்ட பல வகையான வன விலங்குகளை இங்கே காணலாம்.

Cyrillic

பழைய ராக்காச்சி அம்மன் கோவில்

பழைய ராக்காச்சி அம்மன் கோவில்


சரணாலயத்தில் இருந்து அடர் மலைப் பாதை வழியாக கால்நடையாக சிறிது பயணித்தால் பழைய ராக்காச்சி அம்மன் கோவிலை அடையலாம். பசுமைக் காடுகளின் நடுவே கொட்டும் அருவியில் நீந்தி விளையாட விரும்புவோர் தாராளமாக இங்கே சென்று வாருங்கள்.

நீர்வீழ்ச்சி

நீர்வீழ்ச்சி


ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருந்து சுமார் 11 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது காட்டலகர் கோவில். முழுமையான சாலை வசதிகள் இல்லாமல் போனாலும் காட்டு வழிப்பாதை பயணம், ரம்மியமான பசுமைக் காற்று சோர்வை நீக்கம். இதன் இடைப்பட்ட தூரத்திலேயே திருமலைப் பாறை பேச்சியம்மன் கோவில், குருவங்கோட்டை முனியான்டி கோவில், திருமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோவ்ல என மலையிப் பகுதியில் ஆங்காங்கே கோவில்களையும் காணலாம். இதனை எல்லாம் கடந்து காட்டு வழியில் சென்றால் உயர்ந்த பாறையில் இருந்து கொட்டும் நீர் அரவனைத்து வரவேற்கும்.

Balu

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?


சென்னையில் இருந்து திருநெல்வேலி எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், நெல்லை எக்ஸ்பிரஸ், செங்கோட்டை எக்ஸ்பிரஸ், நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், பொதிகை எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ், மட்கான் எக்ஸ்பிரஸ், தூத்துக்குடி எக்ஸ்பிரஸ், திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் என ஏராளமான ரயில் சேவைகள் விருதுநகருக்கு உள்ளது.

seeveeaar

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்