
நரசிம்ம அவதாரம் விஷ்ணுவின் நான்காம் அவதாரம் ஆகும். இதில் இவர் சிங்கத்தின் தலையையும் மனித உடலையும் கொண்ட நரசிம்ம அவதாரம் எடுத்தார். நரசிம்மரின் உருவம் சிங்க முகத்துடனும் நகங்களோடும் மனித உடலோடும் சற்று அகோர தோற்றம் கொண்டது. வைஷ்ணவர் பலர் நரசிம்மரை முதன்மைக் கடவுளாக வழிபடுகின்றனர். தனது பக்தர்களைத் தக்கதருணத்தில் வந்து காக்கும் கடவுளாகவும் இவர் கருதப்படுகிறார். இத்தகைய நரசிம்மர் ராமரின் கையிலேயே குடிகொண்டிருக்கும் தலம் எங்கே உள்ளது என தெரியுமா ?. வாருங்கள், அது எங்னே ? என்ன சிறப்பு ? எப்படிச் செல்வது என பார்க்கலாம்.

கோவில் சிறப்பு
நாட்டில் வேறெங்கும் காணக்கிடைக்காத வகையில் ஸ்ரீ ராமரின் இடது கையில் உள்ள வில்லில் நரசிம்மர் அருள்பாலிக்கிறார். ராமரின் அருகிலேயே கருடாழ்வாரும், அனுமனும் காட்சியளிக்கின்றனர்.
Dineshkannambadi

கோவில் வரலாறு
முனிவர் ஒருவரின் தவத்தால் மகிழ்ச்சியடைந்த திருமால் முனிவரின் கண்முன் தோன்றி அருள்பாலித்தார். அப்போது இத்தலத்திலேயே குடிகொண்டு மக்களுக்கு வரமளிக்க வேண்டும் என முனிவர் வேண்டியதை அடுத்து திருமாலும் இங்கேயே ஸ்ரீராமராகவும் காட்சி தந்தார். இதனை அறிந்த பலரும் இத்தலத்திற்கு வந்து திருமாலுக்கு பூஜை செய்யத் துவங்கினர். இதுகுறித்து அறிந்த மன்னரும் அங்கேயே ஆலயம் ஒன்றைக் கண்டி வழிபடத் துவங்கினார். இதுவே இன்று இஞ்சிமேட்டில் மிகப் பெரிய திருமால் தளமாக வீற்றுள்ளது.
KITbot

தல அமைப்பு
வரதராஜப் பெருமாள் திருக்கோவிலில் பெருந்தேவி அம்மையார் வரதராஜ பெருமாளுடன் தனிச் சன்னதியில் அருள்பாலிக்கிறார். மேலும், லட்சுமி நரசிம்மர், அனுமன், லட்சுமணர், சீதா, ஆழ்வார்கள் என ஒவ்வொருவருக்கும் தனித் தனிச் சன்னதிகள் கட்டமைக்கப்பட்டுள்ளன.
Lomita

வழிபாடு
வயது கடந்தும் திருமண பாக்கியம் இன்றி இருப்போர் இங்கு நடைபெறும் திருக் கல்யாண பூஜையில் பங்கேற்று வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது தொன்நம்பிக்கை. குழந்தை பாக்கியம் இன்றி தவிப்போர் பெருந்தேவி அம்மையாருக்கு மஞ்சளில் மாலை அணிவித்து வழிபட வேண்டியவை கிடைக்கும்.
TRYPPN

நேர்த்திக்கடன்
வேண்டியவை நிறைவேறியதும் பெருமாளுக்கும், பெருந்தேவி தயாருக்கும் விரலி மஞ்சளில் அபிஷேகம் செய்யப்படுகிறது. மேலும், பக்தர்கள் புது ஆடைகள், நகைகள், காணிக்கைகள் செலுத்தி தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்.
TRYPPN

நடைதிறப்பு
அருள்மிகு வரதராஜப் பெருமாள் கோவில் நடை காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறக்கப்பட்டிருக்கும். 12 மணியளவில் நடைபெறும் உச்சி பூஜை மிகவும் பிரசிதிபெற்றது. இதனைக் கண்டு தரிசனம் பெறுவதற்காகவே பெண் பக்தர்களின் கூட்டம் சற்று அதிகமாக இருக்கும்.
IM3847

திருவிழா
பெருமாளுக்கு உகந்த விரத நாட்களான வைகுண்ட ஏகாதசியன்று சுற்றுவட்டார ஊர் மக்கள் அதிகளவில் பங்கேற்று மாபெரும் வழிபாட்டில் ஈடுபடுவர். மேலும், இக்கோவில் தலத்திலேயே அனுமனுக்குத் தனி சன்னதி இருப்பதால் அனுமன் ஜெயந்தி அன்றும், ராம நவமி அன்றும் சிறப்பு அலங்காரங்களுடன் பிரார்த்தனை நடைபெறும்.
Amiya418

எப்படிச் செல்வது ?
திருவண்ணாமலையில் இருந்து சுமார் 64 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இஞ்சிமேட்டில் அமைந்துள்ளது இந்த பெருமாள் ஆலயம். திருவண்ணாமலை - காஞ்புரம் தேசிய நெடுஞ்சாலையில் அவலூர்பேட்டை, சேத்துப்பட்டு கடந்தால் இத்தலத்தை அடையலாம். ஆரணியில் இருந்து 27 கிலோ மீட்டர் பயணம் செய்தும் இக்கோவிலை அடையலாம். பேருந்துகளைக் காட்டிலும் தனியார் வாடகைக் கார்கள் மூலம் இங்கு செல்வது நேரத்தைக் குறைக்கும்.