Search
  • Follow NativePlanet
Share
» »சிவராத்திரியன்று மட்டும் நிறம் மாறும் சொர்ணலிங்கம்..! மதிப்பு மட்டும் எவ்வளவு தெரியுமா ?

சிவராத்திரியன்று மட்டும் நிறம் மாறும் சொர்ணலிங்கம்..! மதிப்பு மட்டும் எவ்வளவு தெரியுமா ?

நாட்டில் பரவலாக லிங்க வழிபாடு உள்ள நிலையில் தென் தமிழகத்தின் ஒருபகுதியில் மட்டும் சிவராத்திரி அன்று லிங்கம், நிறம் மாறும் அதிசய நிகழ்வு அரங்கேறுகிறது.

உலகின் முதல் கடவுள் சிவன். சிவபெருமானே எல்லாவற்றுக்கும் மூலம் என நம் முன்னோர் தொட்டு கேள்விப்பட்டுக் கொண்டு இருக்கிறோம். உருவமில்லா உருவமாகச் சிவ லிங்கம் வணங்கப்படுகிறது. உருவ வழிபாடு லிங்கத்தில் இருந்தே தொடங்கியிருக்க வேண்டும் என்பது சில ஆய்வுகளின் மூலம் அறியப்படுகிறது. லிங்கம் ஒரு வகையில் உருவமுடையது. மறுவகையில் உருவமில்லாதது. ஆலயங்களில் சிவன் என்ற பெயரில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தப்படுகிறது. இவ்வாறு நம் நாட்டில் பரவலாக சிவலிங்க வழிபாடு நடைபெற்று வரும் நிலையில் நம் தென் தமிழகத்தின் ஒரு தலத்தில் சிவனுக்குரிய விரத நாளான சிவராத்திரி அன்று மட்டும் லிங்கம், நிறம் மாறும் அதிசய நிகழ்வு அரங்கேறுகிறது. இதனை வழிபடுவதன் மூலம் நம் உடலுக்கும், ஆத்மாவிற்கும் ஏற்படும் பலன்கள் கோடான கோடியாகும். வாருங்கள், இத்தலம் எங்கே உள்ளது ? நிறம் மாறும் சொர்ண லிங்கத்தை வழிபடுவதால் என்னவெல்லாம் பயன் என பார்க்கலாம்.

சொர்ணகடேஸ்வரர் கோவில்

சொர்ணகடேஸ்வரர் கோவில்


சொர்ணகடேஸ்வரர் கோவிலில் மூலவராக சொர்ணகடேஸ்வரர் அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் நீலமலர்க்கண்ணி என்றும் பிரஹன்நாயகி அம்மையாருக்கு என தனிச் சன்னதி உள்ளது. இறைவன் பொற்குடம் கொடுத்த நாயனார் என்று குறிப்பிடப்படுகிறார்.

wikipedia

கோவில் அமைப்பு

கோவில் அமைப்பு


கோவில் வளாகத்தின் முன்பாக பலி பீடமும், நந்தி மண்டபமும் அமைக்கப்பட்டுள்ளன. முன் மண்டபத்தில் சந்திரன், சூரியன், நவக்கிரகம், பைரவர், நந்தி, பலி பீடம் காணப்படுகின்றன. வளாகத்தின் திருச்சுற்றில் ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் சன்னதி, வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன் சன்னதி, லட்சுமி நாராயணருக்கு என தனியே ஒரு சன்னதி, காசி விசுவநாதர் விசாலாட்சி சன்னதி, படிகலிங்க சன்னதி ஆகியவை தனித் தனியாக அமைக்கப்பட்டுள்ளது. மூலவர் சன்னதிக்கு இடப்புறம் இறைவி சன்னதியும், கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கா, பிரம்மாவும் காட்சியளிக்கின்றனர்.

பா.ஜம்புலிங்கம்

தல சிறப்பு

தல சிறப்பு


தேவாரப் பாடல் பெற்ற சிவாலயங்களில் இத்தலம் 221-வது சிவ தலமாகும். கருவறையில் சிவ பெருமான் ஆயிரக் கணக்கான ருத்திராட்ச பந்தலின் கீழ் சுயம்பு லிங்கமாக வீற்றுள்ளார். மாசி மாதத்தில் மகாசிவராத்திரி அன்று மட்டும் அதிகாலையில் சூரியனின் ஒளிக் கதிர்கள் லிங்கத்தின் மீது படர்கிறது. அச்சமயம், லிங்கம், பச்சை, நீலம், சிவப்பு, வெள்ளை என நிறங்கள் மாறி சிவன் தரிசனம் தருகிறார்.

Kasiarunachalam

7500 ருத்திராட்ச மணிகள்

7500 ருத்திராட்ச மணிகள்


இத்தலத்தில் 7500 ருத்திராட்ச மணிகள் கொண்ட பந்தலின் கீழே சுயம்பு லிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. சூலத்தின் மத்தியில் சிவபெருமான் நின்ற கோலத்தில் உற்சவராக உள்ளார். இதன் வடிவமானது சிவமும், சக்தியும் இணைந்த அர்த்தநாரீஸ்வரர் வடிவத்தை உணர்த்துகிறது.

Satyanatha

சம்பந்தருக்கு வழிகாட்டிய சிவன்

சம்பந்தருக்கு வழிகாட்டிய சிவன்


திருஞானசம்பந்தர் யாத்திரையில் ஈடுபட்டிருந்த போது இத்தலம் வந்தடையும் முன் சூரியன் மறைந்துள்ளது. இதனால் வழி தெரியாது நின்றிருந்த சம்பந்தருக்கு உதவச் சிவ பெருமான் அம்பாளிடம் சம்பந்தரை அழைத்துவரக் கூறியுள்ளார். அம்பாளும் சம்பந்தரை இத்தலத்திற்கு அழைத்து வந்தார். திக்குதெரியாது நின்ற அடியனுக்குச் சிவனே வழிகாட்டிய மகிழ்ச்சியில் சம்பந்தர் நடனமாடிய படியே நன்றியைத் தெரிவித்தார். இதனை பிரதிபளிக்கும வகையில் இத்தலத்தில் திருஞானசம்பந்தர் திருவுருவம் நடனமாடிய கோலத்தில் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Ssriram mt

தல வரலாறு

தல வரலாறு


ஒரு காலத்தில் இத்தலம் அமைந்துள்ள பெரிய ஏரி ஒன்று உடைந்து வெள்ளநீர் ஊருக்குள் புகுந்தது. இதனால் உயிர்பயத்தில் அஞ்சிய மக்கள் தங்களைக் காத்துக் கொள்ள இத்தலத்திற்குள் சென்று வழிபாட்டில் ஈடுபட்டனர். அப்போது, இளைஞர் ரூபத்தில் தோன்றிய இறைவன் ஒவ்வொருவரின் வீட்டில் இருந்த நெல் மூட்டைகளைக் கொண்டு உடைந்த ஏரிக்கரையினை அடைத்தார். ஆனால், இந்த வெள்ளத்தால் பொருள், உடைமைகளை இழந்த மக்கள் அந்த வாலிபரிடம் உயிர் காத்த நீயே எங்கள் இறைவன் என வணங்கினர். இதனால் மனம் உருகிய சிவபெருமான் அனைவருக்கும் சொர்ணங்களை வழங்கி செல்வம் மிக்கவர்களாக மாற்றினார். இதனாலேயே இத்தல இறைவன் சொர்ணகடேஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.

Akshatha Inamdar

திருவிழா

திருவிழா

சிவனுக்கு உகந்த மற்றும் உரிய நாட்களான சிவராத்திரி அன்று ஊர் பொதுமக்கள் திரண்டு இத்தலத்தில் விழா எழுப்பி கொண்டாடுகின்றனர். மேலும், திருக்கார்த்திகை, ஆருத்ரா தரிசனம் உள்ளிட்ட சிறப்பு வழிபாடும் இங்கு பிரசிதிபெற்றதாகும்.

Randhirreddy

வழிபாடு

வழிபாடு

முற்கால பாவங்களால் துன்பங்களை அனுபவித்து வருவோர், குடும்பத்தில் மகிழ்ச்சியின்றியும், போதிய வரவு இன்றியும் இருப்போர், தொழிலில் தொடர் நஷ்டத்தை அனுபவித்து வருவோர் இத்தலத்தில் உள்ள சொர்ணகடேஸ்வரரிடம் வேண்டிக் கொண்டால் அனைத்து தோஷங்களும் நீங்கி செல்வச் செழிப்பு மிகும் என்பது நம்பிக்கை.

Ssriram mt

நேர்த்திக்கடன்

நேர்த்திக்கடன்


இக்கோவிலில் வேண்டிய காரியம் நிறைவேறியதும் பக்தர்கள் சொர்ணகடேஸ்வரருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் புது ஆடைகளும், திருப் பணிக்கு பொருளுடதி, நிதிவுதவி வழங்கியும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். திருநீர், சந்தனம், இளநீர், பால் கொண்டு அபிஷேகம் செய்தும் பக்தர்கள் வழிபடுகின்றனர்.

Ramireddy.y

நடை திறப்பு

நடை திறப்பு


அருள்மிகு சொர்ணகடேஸ்வரர் திருக்கோவில் நடை காலை 6 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் என ஒரு நாளைக்கு இரு வேலைகள் திறக்கப்பட்டு தீபாராதனையுடன் பூஜைகள் செய்யப்படுகிறது.

Sa.balamurugan

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?


சிவனே வந்து நெல்லைக் கொண்டு உடைந்த ஏரிக் கரையின் அணையை அடைத்து மக்கள் உயிர் காத்ததால் இக்கோவில் அமைந்துள்ள ஊர் நெல்அணை என அழைக்கப்பட்டு தற்போது நெய்வணை என பெயர்பெற்றுள்ளது. விழுப்புரம் மாவட்டம், புதிய பேருந்து நிலையத்தில் இருந்து அரசூர், திருனவலூர், செங்குறிச்சி, உளுந்தூர்பேட்டை வழியாக சுமார் 53 கிலோ மீட்டர் பயணித்தால் ரிஷிவந்தியம் சாலையில் நெய்வணையில் அமைந்துள்ள இத்தலத்தை அடைந்து விடலாம். பண்ருட்டியில் இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவிலும், திருக்கோவிலூரில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ள இந்த சொர்ணகடேஸ்வரர் கோவிலை அடைய மாநகரத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து பேருந்து வசதிகள் இணைக்கப்பட்டுள்ளது.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X