» »இந்தியாவில் ஜல்லிக்கட்டு தடை ஓகே.. அப்ப இதெல்லாம் எங்கே விளையாடுறாங்க?

இந்தியாவில் ஜல்லிக்கட்டு தடை ஓகே.. அப்ப இதெல்லாம் எங்கே விளையாடுறாங்க?

Posted By: Udhaya

தமிழகத்தில் இப்போதைக்கு கொழுந்து விட்டு எரிகிற பிரச்சனைனா அது ஜல்லிக்கட்டு. தமிழர்களின் பாரம்பரியமான அனைத்தையும் திட்டமிட்டு அழிக்க நினைக்கிறார்கள். காளை மாடுகளை தங்கள் குழந்தைகளைப் போல் வளர்ப்பவர்கள் ஏன் அதை துன்புறுத்தப் போகிறார்கள். ஜல்லிக்கட்டுக்காக வளர்க்கப்படும் மாடுகள், ஜல்லிக்கட்டு போட்டிகளை தடை செய்துவிட்டால் வேறு வழியின்றி கசாப் கடைக்குத்தான் அனுப்பனும். அப்படி அனுப்பிட்டா நாட்டு மாடுகள் அழிஞ்சிரும். நாட்டு மாடு அழிந்தால் கார்ப்பரேட்டுகள் செழித்து வாழலாம் என்று திட்டம்போட்டிருப்பதாக சமூக நல ஆர்வலர்களும், ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மற்ற விளையாட்டுக்களைப் போல ஜல்லிக்கட்டில் மாடுகள் துன்புறுத்தப்படவில்லை. அதற்கென்று பல்வேறு விதிகள் உள்ளன. வால், கொம்பு களை பிடித்தால் அவுட், திமிலை மட்டுமே பிடிக்க வேண்டும், கொடுக்கப்பட்ட உடையை மட்டுமே அணியவேண்டும். பெயர் பதிவிடாதவர்கள் யாரும் களத்தில் இறங்கக்கூடாது என்று பல்வேறு விதிகள் உள்ளன.

ஜல்லிக்கட்டு ஏன் காக்கப்பட வேண்டும் என்பது ஒரு புறமிருக்கட்டும். இந்தியாவில் வேறு விளையாட்டுக்களே இல்லையா. விலங்குகள் வைத்து விளையாடக்கூடாது என்றால் இவற்றிற்கும் தடை விதிக்கவேண்டுமே. ஏன்.. தமிழர்கள் குறிவைக்கப்படுகிறார்கள் என்ற கேள்விகள் மனதிற்குள் எழாமல் இல்லை. சரி,... தற்போது இந்தியாவில் விலங்குகளை வைத்து விளையாடும் மற்ற விளையாட்டுக்கள் பற்றி பார்ப்போம்.

குதிரை பந்தயம்

குதிரை பந்தயம்

குதிரையின் திறனே ஓடுதல் தான். அதை வைத்து பந்தயம் கட்டி சூதாடுகிறார்கள். இது சட்டப்பூர்வமான சூதாட்டம் என்றே பலர் கூறுகின்றனர். சென்னை உட்பட நாட்டின் பல இடங்களில் குதிரைப் பந்தயம் நடைபெறுகிறது.

நீங்கள் குதிரை பந்தயத்தை காண விரும்பினால் சென்னை முதலான இடங்களில் அதற்கான விளையாட்டு அரங்கங்கள் கட்டப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

PC: jarrett Cambell

சேவல்சண்டை

சேவல்சண்டை


தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும், ஆந்திரம், தெலுங்கானா முதலிய மாநிலங்களிலும் சேவல் சண்டை நடைபெறுகிறது.

இதற்கென்று பிரத்யேக பயிற்சியாளர்கள், பயிற்சி யுக்திகள் கொண்டு சிறப்பாக நடத்தப்படும். தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த சேவல் சண்டை நடைபெறுகிறது.

PC: Amshudhagar

கன்னியாகுமரி செல்ல கிளிக் செய்யவும்

எருமை பந்தயம்

எருமை பந்தயம்

கர்நாடக மாநிலம் உடுப்பி அருகே சில கிராமப்புற பகுதிகளில் இந்த எருமை பந்தயம் நடைபெறுகிறது.

இது ஜல்லிக்கட்டை போல கர்நாடகத்தின் பாரம்பரிய விளையாட்டு என்று கூறப்படுகிறது.

PC: wildxplorer

கரடி நடனம்

கரடி நடனம்

பத்து இருபது வருடங்களுக்கு முன்பு, நினைத்து பாருங்கள் ஒரு கரடியை கூட்டி வந்து ஒருவர் வித்தைக்காட்டுவார். இதுவே கரடி நடனம் எனப்படுகிறது.
கரடியின் முடி புனிதமானது. மோதிரம் செய்து போட்டுக்கொண்டால் அதிர்ஷ்டம் என்றெல்லாம் நம்பிக்கை நிலவியது.

 குரங்கு ஆட்டம்

குரங்கு ஆட்டம்


அதே 10 வருடங்களுக்கு முன்பு, குரங்கு வித்தையும் பிரபலமாக இருந்தது. குரங்கை வீட்டில் வளர்க்கக்கூடாது என்றாலும், அதற்கு உடை அணிவித்து ஆடரா ராமா ஆடரா என வித்தை காண்பிப்பர். இதும் ஒரு வகை விளையாட்டாக இருந்தது. அவர்களின் வயிற்றுப் பிழைப்புக்காக இதை செய்து வந்தனர்.

காளைச் சண்டை

காளைச் சண்டை

இந்தியாவின் கோவா மாநிலத்தில் இந்த காளைச் சண்டை நடப்பதாக தகவல் வந்தது. எனினும் அதிகார்வ பூர்வ மாக தெரியவில்லை. ஆந்திர மாநிலத்தின் தெற்கு பகுதிகளில் காளைச் சண்டை பிரபலம்.

PC: Tyler J. Hlavac

ஒட்டகச்சண்டை

ஒட்டகச்சண்டை

ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டவிரோதமாக இந்த மாதிரி ஒட்டகத்தை வைத்து பணம் கட்டி சூதாடுகின்றனர். இதில் பல முக்கிய புள்ளிகளுக்குத் தொடர்பு இருப்பதாகவும், மத்திய மாநில அரசுகளின் கண்களில் மண்ணைத் தூவி சூதாடி வருவதாகவும், தகவல்கள் பரவியுள்ளன.

இது அவர்களின் பாரம்பரிய விளையாட்டு என்றாலும், ஒரு சிலர் தவிர பலருக்கு இதைப் பற்றிய தெளிவு இல்லை எனத் தெரிகிறது.

PC: Yozer1

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு

தமிழகத்தின் பல பகுதிகளில் விளையாடப்பட்டு வந்தாலும், தற்போது மிக முக்கியமாக அலங்காநல்லூர், அவனியாபுரம், திருவபூர், கொண்டாலம்பட்டி, தம்மம்பட்டி, பாலமேடு, சிரவாயல், கண்டுப்பட்டி, வேந்தன்பட்டி, பல்லவராயன்பட்டி முதலிய இடங்களிலே நடைபெறுகிறது.

PC: lamkarana

ஜல்லிக்கட்டு நடைபெறும் மதுரை பகுதிகளுக்கு செல்ல

Read more about: travel பயணம்

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்