» »எல்லாமே இருந்தும் இது மட்டும் இல்லையா..? அப்ப உங்களுக்கான இடம் இதுதான்..!!

எல்லாமே இருந்தும் இது மட்டும் இல்லையா..? அப்ப உங்களுக்கான இடம் இதுதான்..!!

Written By: Sabarish

கை நிறைய சம்பாத்தியம், சொந்த வீடு, அழகிய குடும்பம் என எல்லாமே இருந்தும், குறிப்பிட்ட அந்த ஒன்னு இல்லைன்னா இந்த வாழ்க்கையே வேஸ்ட்டா போயிடுங்க. அப்படி என்ன அதுன்னு கேக்குறிங்களா..? அதுதாங்க ஆரோக்கியம். என்னதான் இருந்தாலும் அதை அனுபவிக்க உடல் ஆரோக்கியம் முக்கியம் அல்லவா ? அந்த உடல் ஆரோக்கியம் என்பது உணவு, மருத்துவம் உள்ளிட்டவற்றால் மட்டும் கிடைக்காது. மன நிம்மதி, மேன்மையான சிந்தனை, நல்ல வழிபாடு உள்ளிட்டவற்றால் மட்டுமே கிடைக்கும்.

என்ன செய்யலாம் ?

என்ன செய்யலாம் ?


தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையேயான போரில் வலிமை இழந்தவர்களுக்கு தேகமூட்ட படைக்கும் கடவுள் பிரம்மாவிடமும், தேவர்கள் தலைவரான இந்திரனிடமும் முறையிடப்பட்டது. தேவர்களுக்கு வாழ்வளிப்பதற்காகப் பாற்கடல் கடையப்பட்டது. அப்போது கடலிலிருந்து தேகம்காக்கும் கடவுள் அவதாரம் எடுத்தார் என்று புராணங்கள் கூறுகின்றன. அவரை வழிபடுவதன் மூலமே உடல் ஆரோக்கியம் பெருகும் என்பது தொன்நம்பிக்கை.

Balasaheb Pandit Pant Pratinidhi

யார் அந்த மருத்துவர்

யார் அந்த மருத்துவர்


சூரியக் கடவுளிடம் இருந்து ஆயுர்வேதத்தைக் கற்றுத் தேர்ந்த 16 சீடர்களில் மிகவும் முக்கியமானவர், வானத்தில் வசித்து வருபவர், வைத்தியத்தின் அரசன், சிறந்த மருத்துவர் என பல்வேறு சிறப்புகளைப் பெற்றவரே தன்வந்திரி. சூரியனே தன்வந்திரி என்றும் புராணங்களில் ஒரு குறிப்பும் உள்ளது. பத்ம புராணம். வாயு புராணம், விஷ்ணு புராணம் போன்றவற்றிலும் தன்வந்திரியின் அவதாரம் குறித்து கூறப்பட்டுள்ளது.

LRBurdak

எங்கே உள்ளார் ?

எங்கே உள்ளார் ?


சென்னையில் இருந்து சுமார் 110 கிலோ மீட்டர் தொலைவில் வேலூர் மாவட்டத்தில் பாலாற்றுக்கு அருகே உள்ளது தன்வந்திரி பீடம். சென்னை- ஸ்ரீபெரும்புதூர்? காஞ்சிபுரம் வழியாகவும், அக்கோவிலை அடையலாம்.

உலகிற்கே ஒரு கோவில் தான்

உலகிற்கே ஒரு கோவில் தான்


இந்தியாவில் மட்டும் இல்லை, உலகிற்கே என்றுகூடச் சொல்லலாம், தன்வந்திரி இறைவனுக்கு என தனிக் கோவில் என்றால், அது தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டத்தில் வாலாஜாபேட்டை அருகே கீழ்ப்புதுப்பேட்டையில் மட்டுமே அமைந்துள்ளது என்பது மேலும் சிறப்பு. இந்த பீடத்தில், சிறப்பு ஹோமங்கள் செய்து தங்கள் வாழ்வை வளம் பெருக்குவதற்காக தினமும் நூற்றுக்கணக்கானோர் வருகின்றனர்.

danvantri temple

தடைகள் நீக்கும் தன்வந்திரி

தடைகள் நீக்கும் தன்வந்திரி


திருமணத் தடை, கல்வியில் கவனக்குறைவு, ஞாபக மறதி, குடும்ப கருத்து வேறுபாடு, வேலையின்மை, குழந்தைப் பேறு, என இவை அனைத்துக்கும் ஒரு நல்ல நிரந்தரமான தீர்வு வேண்டுவோர் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் நடைபெறும் ஹோமத்தில் பங்கேற்பதன் மூலம் தடைகள் அணைத்தும நீங்கி வேண்டியது கிடைக்கும் என்பது தொன்நம்பிக்கை. அதுமட்டுமின்றி நோய் நொடி இற்றி வாழவும், தீராத வியாதிகளைத் தீர்க்கவும் வேண்டி தன்வந்திரியை தேடி பக்தர்கள் அலைமோதி வருவர்.

ஹீப்ரூ

எப்போது சென்றால் சிறப்பு ?

எப்போது சென்றால் சிறப்பு ?


கடந்த 13 ஆண்டுகளாக தினசரி தன்வந்திரி ஹோமம், சுதர்சன் ஹோமம், லக்ஷ்மி ஹோமம் நடைபெற்று வருகின்ற தன்வந்திரி பீடத்தில் சிறப்பு ஹோமங்களாக 1000 சண்டி யாகம், 365 நாள் 365 யாகம், 55 நாட்கள் 135 யாகங்கள், என வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நடைபெற்று உள்ளது. அதன்படி, வரும் மாசி மகம் பௌர்ணமிக்கு தன்வந்திரி பீடத்தில் யாகத் திருவிழா நடைபெறவுள்ளது.

மாசி மக சிறப்பு யாகம்

மாசி மக சிறப்பு யாகம்


மாசி மகத்தை முன்னிட்டு வரும் பிப்ரவரி 26 ம் தேதி முதல் மார்ச் 1ம் தேதி வரை வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் யாகத்திருவிழா நடைபெற உள்ளது. சொந்த வீடு, கை நிறைய சம்பளம், ஜாலியான வாழ்க்கை இருந்தும் இவற்றை விட மிகவும் முக்கியமான ஆரோக்கியமின்றி தவிப்பவர்கள் இந்த யாகத்தில் பங்கேற்பதன் மூலம் இனிவரும் காலத்தை மகிழ்ச்சியாக அனுபவிக்க முடியும்.

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?


சென்னையில் இருந்து வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்திற்கு செல்ல திட்டமிட்டீர்கள் என்றால் தேசிய நெடுஞ்சாலை 48-யை தேர்வு செய்வது சிறந்தது. இந்தச் சாலை உங்களது பயண தூரத்தையும், நேரத்தையும் குறைக்கும். அல்லது செங்கல்பட்டு- காஞ்சிபுரம் வழியாக 140 கிலோ மீட்டர் பயணித்தும், திருவாரூர்- ஸ்ரீபெரும்புதூர் வழியாக சுமார் 141 கிலோ மீட்டர் பயணித்தும் வாலாஜாபேட்டையை அடையலாம்.

சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்கள்

சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்கள்


வாலாஜாபேட்டை அமைந்துள்ள வேலூரைச் சுற்றிலும் வேலூர்க் கோட்டை, ஜலகண்டேஸ்வரர் ஆலயம், அருங்காட்சியகம், ரத்தினகிரி முருகன் கோவில், பொற்கோயில், அமிர்தி உயிரியல் பூங்கா, வேலூர் புகழ் டெல்லி கேட் உள்ளிட்ட ஏராளமான சுற்றுலாத் தலங்கள் அமைந்துள்ளன. இவை அனைத்தும் உங்களது பயணத்தை ஆன்மீகப் பயணமாக மட்டுமின்றி சிறந்த சுற்றுலாப் பயணமாகவும் மாற்றும்.

Sayowais

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்