» »டிரெக்கிங் போறவங்க இதெல்லாம் செஞ்சிருந்தா எந்த பிரச்னயும் வந்துருக்காது #TheniForestFire

டிரெக்கிங் போறவங்க இதெல்லாம் செஞ்சிருந்தா எந்த பிரச்னயும் வந்துருக்காது #TheniForestFire

Written By: Udhaya

தேனி மாவட்டம் குரங்கணி காட்டுப்பகுதியில் தீ பற்றி எரிந்து அதில் பலர் உயிரிழந்திருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவர்கள் அனைவரும் பாதுகாப்பற்ற முறையில் டிரெக்கிங் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. இதுபோன்ற பாதுகாப்பற்ற முறையில், முறையான அனுமதி பெறாமல் மலையேறுவது சட்டப்படி குற்றம் என்பதுடன், உங்கள் உயிருக்கும் ஆபத்தானது. மலையேற்றப் பயணம் செய்வதற்கென்று பல வழிமுறைகள் உள்ளன. அது தெரிந்துகொண்டு பயணித்தால் இதுபோன்று அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தவிர்க்கலாம்.

வானிலையைத் தெரிந்துகொள்ளவேண்டும்

வானிலையைத் தெரிந்துகொள்ளவேண்டும்

நீங்கள் மலையேற்றம் செய்யவிருக்கும் பகுதியின் வானிலைப் பற்றி முன்கூட்டியே தெரிந்திருக்கவேண்டும். அடுத்த 48 மணி நேரத்துக்கு என்னென்ன ஆகலாம் என்பது பற்றிய தெளிவு இருக்கவேண்டும். அதுகுறித்து முறையான தகவல்களைப் பெறாமல் நீங்கள் மலையேற்றம் செய்தால், இயற்கை உங்களின் மேல் கருணை காட்டாது. மேலும் நீங்கள் குளிர்காலத்தில் பயணிக்கப் போகிறீர்கள் என்றால், அதிகபட்ச குளிர் அவ்விடத்தில் எவ்வளவு இருக்கும். அதை நம்மால் தாங்கமுடியுமா என்பதை தெரிந்துகொண்டு தயார் படுத்திக்கொள்ளவேண்டும். பனிப்பொழிவு, புயல், சூறாவளி போன்ற நாட்களில் நிச்சயம் பயணிக்கக்கூடாது.

தீப்பிடிக்கும் பொருள்களை தவிர்க்க

தீப்பிடிக்கும் பொருள்களை தவிர்க்க

காட்டுத்தீ போன்றவை ஏற்பட நீங்கள் உபயோகிக்கும் பொருள்களே காரணமாகும். எனவே எளிதில் தீப்பிடிக்க காரணமான பொருள்களை பயன்படுத்துவதையும், அதை அங்கேயே குப்பைப்போல போடும் பழக்கத்தையும் கைவிடவேண்டும். ஒருவேளை உங்களை அறியாமலேயே நீங்கள் பயன்படுத்தும் பொருள்கள் காட்டுத்தீக்கு காரணமாக அமைந்துவிடும்.

தனியாக செல்லக்கூடாது

தனியாக செல்லக்கூடாது


டிரெக்கிங்க்னாலே எல்லாரும் சேர்ந்து போகக்கூடியதுதானே. இதுகூடவா சொல்லித் தெரியணும்னு கேக்கலாம். அட அது இல்லிங்க.. சிலபேரு டிரெக்கிங் போகும்போது முந்திரிக்கொட்ட மாதிரி எல்லாம் தெரியும் எல்லாம் தெரியும்னு வேகமா போயி வழி தெரியாம மாட்டிப்பாங்க. நம்மள்ல பலர் அப்படித்தான் இருக்காங்க.

இன்னும் சிலர், நடக்கமுடியாம நடந்து, ரொம்ப பின்னாடி வருவாங்க. அதுனாலயும் தொலஞ்சு போக சான்ஸ் இருக்கு. சில சண்ட கோழிங்களும் முட்டிட்டு மோதிட்டு தனியா போவாங்க. இப்படிலாம் தனியா போக ஆரம்பிச்சா டிரெக்கிங்க் பயணம் டிராப் ஆகும்... இல்லைனா டிராஜெடியாகி தவிக்க நேரிடும்.

அத்தியாவசியப் பொருள்களை அருகே வைத்திருங்கள்

அத்தியாவசியப் பொருள்களை அருகே வைத்திருங்கள்

இதுதான் மிகமிக முக்கியமான விதி. அத்தியாவசிப்பொருள்களான ஷூ, கைப்பை, அவசரகால உதவிப்பை, சாப்பிடக்கூடிய பொருள்கள் என மிக அத்தியாவசிய பொருள்களை கையில் வைத்திருங்கள். முக்கியமாக தண்ணீர்.

நீங்கள் செல்லும் இடம் மழைப்பகுதியாக அல்லது அந்த காலம் மழைக்காலம் என்றால் நிச்சயம் மழைக்குடை, மழைஉடை என முக்கியமானவற்றை எடுத்துச் செல்லுங்கள்.

விளக்குகள்

விளக்குகள்


இருளான மலைப்பகுதிகளில் டிரெக்கிங்க் செல்பவர்களுக்கு கட்டாயம் கைக்கு அடக்கமான டார்ச் லைட் அல்லது ஹெட் லைட் ஆகியன முக்கிய தேவை. மேலும் வரைபடங்களையும் வைத்திருப்பது நல்லது. தற்போது ஸ்மார்ட் போன்கள் அதிகம் உபயோகிக்கப்படுகிறது என்பதால் அந்த நினைவில் வரைபடத்தை மறக்காதீர்கள். முக்கியமான நேரத்தில் சிக்னல் கட் ஆய்டிச்சினா அப்றம் என்ன நடக்கும்னு நான் சொல்லி தெரியவேண்டியது இல்ல.

முதலுதவிப் பெட்டி

முதலுதவிப் பெட்டி

அடி பட்டால் மருந்து போடத்தேவையான முதலுதவிப்பொருள்கள் அடங்கிய பெட்டியை உடன் எடுத்துச் செல்வது நல்லது. வலிநிவாரணி களிம்புகள், ஸ்ப்ரேக்கள், பூச்சிக்கடி மருந்துகள் போன்றவற்றை கட்டாயம் எடுத்துச் செல்லுங்கள்

முக்கியமாக தீப்பெட்டி எடுத்துச்செல்லுங்கள். அது நனையாமல் இருக்குமாறு பத்திரப்படுத்துங்கள். கண்டிப்பாக தேவைப்படும்.

ஒருவேளைத் தொலைந்து விட்டால்

ஒருவேளைத் தொலைந்து விட்டால்

உங்கள் நட்பு வட்டாரத்திலிருந்து ஒருவேளைத் தொலைந்துவிட்டீர்கள் என்றால், நீங்கள் செல்லும் இடங்களில் அடையாளம் இட்டுச்செல்லுங்கள். கையில் விசில் எடுத்துச் செல்லுவது நல்லது. பெண்கள் முக்கியமாக பெப்பர் ஸ்ப்ரே, கைக்கு அடக்கமான கத்திகள் போன்ற பாதுகாப்பு அம்சங்களை வைத்திருப்பர். அதில் பயிற்சியும் பெற்றிருப்பது அவசியமானது. உதவி தேவைப்படும்போது விசில் அடித்தால், யாரிடமாவது இருந்து நிச்சயமாக உதவி கிடைக்கும்.

அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தவிர்க்கவும், உங்கள் ஆற்றல் வீணாகாமல் இருக்கவும் குறிப்பிட்ட இடைவெளியில் சாப்பிடவேண்டும். தொலைந்துவிட்டால் நீர் மற்றும் உணவுதான் உங்களுக்கு பெரும் பிரச்னையாக இருக்கும்.

pandeeswaran

நீங்கள் செய்யவேண்டியது

நீங்கள் செய்யவேண்டியது


உங்களைச் சுற்றி பாதுகாப்பு அரண் ஒன்றை அமைத்துக்கொள்ளுங்கள். விலங்குகளிடம் இருந்து நீங்கள் பாதுகாத்துக்கொள்வதற்கு அது உதவிகரமாக இருக்கும்.

உங்களை உலர்வாக வைத்துக்கொள்ளுங்கள்

விசில் ஊதுங்கள். இதனால் அருகிலுள்ளவர்கள் உங்களை அணுக வாய்ப்பாக அமையும்.

திறந்த வெளியில் நில்லுங்கள். ஒருவேளை உங்களைத் தேடுபவர்கள் உயரத்திலிருந்து காண ஏதுவாக அமையும்.

முன்கூட்டியே அறிவித்துவிட்டு செல்லுங்கள்

முன்கூட்டியே அறிவித்துவிட்டு செல்லுங்கள்

உங்களுடன் டிரெக்கிங் வராத உங்கள் மனதுக்கு நெருக்கமானவர்களிடம் உங்கள் டிரெக்கிங் திட்டத்தை சொல்லிவையுங்கள். ஆபத்து காலத்தில் அவர்கள் மூலம் உதவி கிடைக்கும்.

உள்ளூர் மக்களின் நட்பைப் பெறுவதும் சிறந்ததாகும். அவர்கள் மூலம் நிறைய விசயங்கள் கற்றுக்கொள்ளமுடியும். முடிந்தால் அவர்களை உடன் அழைத்துச் செல்லுங்கள். உங்கள் டிரெக்கிங் பயணம் இன்னும் சுவாரசியமாக அமையும்.

PC: Thangaraj Kumaravel

வழிமாறிவிடாதீர்கள்

வழிமாறிவிடாதீர்கள்


முன்கூட்டியே சொன்னமாதிரி, அதிமேதாவித் தனமாக யோசித்து ஷார்ட் ரூட் என்று கூறிக்கொண்டு வழிமாறி சென்றுவிடாதீர்கள். உங்களைக் கண்டுபிடிக்க உங்கள் நட்புக்களும், அவர்களைக் கண்டுபிடிக்க நீங்களும் அலைந்து திரியவேண்டிவரும்.

PC:Sayanti Sikder

இதையெல்லாம்விட ஒன்று கட்டாயம்

இதையெல்லாம்விட ஒன்று கட்டாயம்

இந்தியாவைப் பொறுத்தவரையில் நீங்கள் எங்கு டிரெக்கிங் செய்தாலும் அது காட்டுப்பாதையாக இருந்தால் அரசிடம் அனுமதிப் பெறவேண்டியது அவசியமாகிறது. அரசு அனுமதியின்றி மலையேறுவது குற்றம்.

உங்களை அழைத்துச் செல்லும் டிரெக்கிங் நிறுவனம் அனுமதி பெற்றுள்ளதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். அரசு அனுமதித்த வழியைத் தவிர வேறு வழியில் பயணிப்பது உங்களுக்குத்தான் ஆபத்து.

உள்ளூர் மக்களின் உதவியுடன் செல்வது சிறப்பு. அவர்களால் விலங்குகளிடமிருந்தும், இது போன்ற அபாயங்களிலிருந்தும் எளிதில் உங்களைக் காப்பாற்ற முடியும்.

Read more about: travel, forest