Search
  • Follow NativePlanet
Share
» »பெண்கள் தனியாக பயணம் செய்ய சில டிப்ஸ்

பெண்கள் தனியாக பயணம் செய்ய சில டிப்ஸ்

By Staff

இன்று பெண்களின் காலடி படாத துறைகளே இல்லை. அதேபோல பெண்களின் காலடி படாத இடங்களே உலகத்தில் இல்லை என்ற நிலையம் வரவேண்டும்.

உலகம் முழுக்க தனியாக பயணம் செய்யும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஆனால் ஆண்களோடு ஒப்பிடுகையில் பெண்கள் குறைந்த அளவிலேயே பயணம் செய்கிறார்கள். இதற்கு சமூகத்தில் பெண்களின் நிலை, அவர்களின் பாதுகாப்பு என்று பல்வேறு காரணங்கள் தடைகளாக உள்ளன.

பெங்களுருவை ஏன் எல்லோருக்கும் ரொம்ப பிடிக்கிறது தெரியுமா ?பெங்களுருவை ஏன் எல்லோருக்கும் ரொம்ப பிடிக்கிறது தெரியுமா ?

எனினும் இதையும் மீறி சில பெண்கள் இடைவிடாது பயணம் செய்து புகைப்படங்கள் எடுத்து தங்களின் பிளாகில் எழுதியும் வருகிறார்கள்.

இதேபோல் நீங்களும் குமரி முதல் காஷ்மீர் வரை இந்தியாவின் எல்லா இடங்களுக்கும் எப்படி தனியாக பயணம் செய்வது என்பதற்கு சில டிப்ஸ்...

காசு..பணம்..துட்டு..மணி மணி!...

முன்பெல்லாம் பயணம் செய்வது காசு செலவு வைக்கும் வேலையாக இருந்தது. ஆனால் இப்போது பயணம் செய்யும் முறை முற்றிலும் வேறு ஒரு கோணத்தில் வந்துவிட்டதால் மிக குறைந்த செலவிலேயே பல ஊர்களை சுற்றிப்பார்க்க முடிகிறது. இதற்கு நீங்கள் எதையும் பிளான் செய்து செய்ய வேண்டும்.

பழனி முருகன் கோயிலை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்பழனி முருகன் கோயிலை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்

அதாவது நீங்கள் போக விரும்பும் இடத்தை எவ்வாறு குறைந்த கட்டணத்தில் அடைய முடியும், தங்கும் வசதி என்று குறைந்த கட்டணத்தில் அனைத்தையும் முடிக்க திட்டமிட வேண்டும்.

ஆனால் பெண்களை பொருத்தவரை குறைந்த விலை ஹோட்டல்கள் என்பதை விட பாதுகாப்பான ஹோட்டலா என்றுதான் முதலில் தெரிந்துகொள்ளவேண்டும்.

பெண்கள் தனியாக பயணம் செய்ய சில டிப்ஸ்

இதை மட்டும் உறுதிபடுத்திக்கொண்டால் மற்ற விஷயங்கள் எல்லாம் ஆண்களை போல பெண்களும் எளிமையான முறையில் கையாள முடியும்.

எனினும் பணத்தின் தேவை இருக்கத்தான் செய்யும். அதற்கு அவர்கள் மற்றவர்களை நம்பி இராமல் தங்கள் தேவைகளுக்கு தாங்களே சம்பாதித்துக்கொள்ளும் நிலையில் இருக்க வேண்டும்.

பயணப்படும் முறை

ஆண்கள் எப்போதும் எவ்வாறு, எப்படி என்று பயணம் பற்றி அதிகம் சிந்திப்பதில்லை. அவர்கள் லாரிகளில் ஏரியோ, லிப்ட் கேட்டோ கூட பயணம் செய்யக்கூடியவர்கள். ஆனால் பெண்கள் இதேபோன்ற ஒரு பயணத்தை மேற்கொள்ள முடியுமென்றாலும் எது பாதுகாப்பான பயணம் என்பதில் கவனம் வேண்டும்.

எனவே பேருந்து, ரயில், விமானம் என்று மக்கள் கூட்டம் உள்ள போக்குவரத்தையே பயன்படுத்துவது நல்லது. உதாரணமாக நீங்கள் பயணம் செய்யும் ரயிலிலோ, பேருந்திலோ உங்களருகில் இருக்கும் பெண்களுடனோ, குடும்பத்துடனோ பேசி நட்பு வைத்துக்கொள்வது ஒரு பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தும்.

துணியும்! மணியும்!

நம்ம ஊருல ஒரு பழக்கம் இருக்கு, அதாவது எங்க போனாலும் அது 10 நாளானாலும், 2 நாளா இருந்தாலும் துணியை மூட்டை கட்டி எடுத்துட்டு போறது.

ஆனா தனியா பயணம் செய்யும்போது டிரஸ் விஷயத்துல ரொம்ப கவனம் தேவை. 2 நாள் பயணம்ன்னா 2 அல்லது 3 செட் டிரஸ் போதும். இல்லேன்னா எல்லா இடத்துக்கும் பையை தூக்கிட்டு போறது கஷ்டமாயிடும். அதனால எதெது தேவையோ அதைமட்டும் சரியா பாத்து விட்டுடாம எடுத்துவச்சுக்கோங்க.

அதேபோல எவ்வளவு நாள் பயணம், அங்க என்னென்ன பாக்கணும், அதுக்கு எவ்ளோ நேரம் ஆகும், எப்போ திரும்பறது அப்படீன்னு ஒன்னுவிடாம பிளான் பண்ணி வச்சுக்கிறது நேரம் வேஸ்ட் ஆகிறத தவிர்க்கும்.

போக்கிரி ஆண்கள் ஜாக்கிரதை!

இன்றைக்கு இருக்கும் நிலையில் காய்கறி வாங்க வெளியே போகும் பெண்களே அதிக கவனத்துடன் இருக்க வேண்டியுள்ளது. அப்படி இருக்கையில் 500, 600 கிலோமீட்டர் பயணம் செய்யும் பெண்கள் சில ஆண்களிடம், புதியவர்களிடமும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது அவசியம்.

பெண்கள் தனியாக பயணம் செய்ய சில டிப்ஸ்

எனவே தேவை இல்லாமால் எந்த புதிய மனிதரிடமும் எதுவும் பேச வேண்டாம். அப்படியே பேச வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டாலும் இடமும், நேரமும் பாதுகாப்பாக இருக்கிறதா என்ற கவனம் தேவை.

அதோடு யாரிடம் எது கேட்பதாக இருந்தாலும் தயக்கமின்றி தைரியமாக கேளுங்கள். யாரும் உங்களை எளிதில் அணுக முடியாதபடி கொஞ்சம் முரட்டுத்தனமாகவே இருங்கள் தப்பில்லை.

பாதுகாப்பு உபகரணங்கள்

நீங்கள் பயணம் செய்யும்போது உங்களின் சகபயணிகளோடு நட்போடு இருப்பதில் தவறில்லை. ஆனால் யாரையும் முழுமையாக நம்பிவிடாமல், எல்லோர் மேலும் எப்போதும் ஒரு கண் இருக்கட்டும்.

அதுமட்டுமல்லாமல் மிளகு தெளிப்பான் (பெப்பர் ஸ்ப்ரே), விசில், பிளாஸ்டிக் கத்தி போன்ற பாதுகாப்பு உபகரணங்களை உடன் எடுத்துச்செல்வது நல்லது.

இவைதவிர எங்கு செல்கிறீர்களோ அந்த இடத்தின் வரைபடத்தை (மேப்) வைத்துக்கொள்வது இடம் தெரியாமல் திண்டாடுவது உள்ளிட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X