Search
  • Follow NativePlanet
Share
» »உங்கள புடிச்ச ஏழரைச் சனியை ஓடஓட துரத்த உடனே இந்த கோவிலுக்கு போங்க...

உங்கள புடிச்ச ஏழரைச் சனியை ஓடஓட துரத்த உடனே இந்த கோவிலுக்கு போங்க...

யாருக்கும் எந்த கெடுதலும் நினைக்காம என்னதான் நாம நம்ம வேலைய மட்டும் பார்த்துட்டு இருந்தாலும் ஒருசில தோசங்களும், சாபங்களும் ஒட்டுமொத்த வாழ்நாளையே முடக்கிப் போடுற அளவுக்கு இடையூறுகளையெல்லாம் ஏற்படுத்திவ

கைநிறைய காசும், தங்கக் கட்டிகளையும் வச்சுட்டு இங்க சுத்துர அளவுக்கு நாம பெரிய செல்வந்தர்கள் இல்லை. ஏதோ, வாழ்வைச் சமாளிக்கத் தேவையான காசு, சின்னதா கடனுல ஒரு வீடு, ஒரு நல்ல வேலை. இப்படித்தான் நாம் அனைவருமே அன்றாட வாழ்வை நகர்த்திக்கொண்டு இருக்கிறோம். இப்படி, யாருக்கும் எந்த கெடுதலும் நினைக்காம என்னதான் நாம நம்ம வேலைய மட்டும் பார்த்துட்டு இருந்தாலும் ஒருசில தோசங்களும், சாபங்களும் ஒட்டுமொத்த வாழ்நாளையே முடக்கிப் போடுற அளவுக்கு இடையூறுகளையெல்லாம் ஏற்படுத்திவிடும்.

தோசங்கள்

தோசங்கள்

E. A. Rodrigues

சம்பாதிக்குற காசு எங்க போகுதுன்னே தெரியாது, தீராத நோய், கடன் மேல கடன்... என்னங்க, இந்தமாதிரியான சிக்கல்லதான் நீங்க சிக்கித் தவிச்சுட்டு இருக்கீங்களா ?. எத்தனையோ கோவில், வழிபாடு, நோய்க்கு மருத்துவர்ன்னு எதுக்குமே பயனில்லையா. கவலைய விடுங்க பாஸ். நாகபூமியில, நவநாயகர்கள் படை சூழ கம்பீரமாக வீற்றிருக்கும் சூரியனாரை குடும்பத்தினருடன் வழிபட்டுட்டு வாங்க. பிடிச்ச தோசம் விலகி ஓடுரது ஒருசில நாட்களிலேயே உணருவீங்க.

எங்க இருக்கு ?

எங்க இருக்கு ?

PJeganathan

சூரியனார் கோவில் இந்தியாவிலேயே இரண்டு இடத்தில் மட்டும்தான் உள்ளது. வடக்கே ஒடிசா மாநிலத்தில் அமைந்துள்ள கோனார்க் மற்றும் தெற்கே தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள கோவில். இதில், தமிழகத்தில் உள்ள சூரியனார் கோவிலில் மட்டும் தான் உருவ வழிபாடு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தல அமைப்பு

தல அமைப்பு

wikipedia

கும்பகோணம் அருகில் உள்ள திருமங்கலக்குடியில் அமைந்துள்ள இந்த சூரியனார் கோவில், நவகிரக தலங்களில் முதல் தலமாக விளங்குகிறது. இத்தலத்தில் சூரியனார் தனது இரு மனைவிகளுடன் காட்சியளிக்கிறார். நான்கு பிரகாரங்களுடன் கூடிய சுற்று சுவர்களுக்கு நடுவே ராஜகோபுரத்துடன் கோவில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

வரலாறு

வரலாறு

Uday Parmar

கும்பகோணத்தில் உள்ள இந்த சூரியனார் கோவிலில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டிலிருந்து இது குலோத்துங்கச் சோழரின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது என தெரிய வருகிறது. சங்க காலத்தில் பூம்புகாரில் இருந்த உச்சிக்கிழவன் கோட்டம் என்ற சூரியக் கோவில் கடல்கோளால் அழிந்துவிட்டபோதிலும் இந்தக் கோவில் இன்றும் தன் பொலிவை இழக்கமால் உள்ளது.

சிறப்பு

சிறப்பு

JJ Harrison

பொதுவாகவே சூரியன் என்றால் உக்கிரம் நிறைந்த கடவுள் என்றே அறியப்படுகிறது. ஆனால், திருமங்கலக்குடி சூரியனாரோ தனது சாந்தமான பார்வைகொண்டு பக்தர்களுக்கு தோஷங்களை நீக்கி சுகமான வாழ்வினை வழங்கி வருகிறார். சனி, கேது, சூரியன், வியாழன் போன்ற கிரகங்கள் ஊழ்வினையால் தீய பலனை அனுபவித்து வருகிறீர்கள் என்றால் ,வரை வழிபட்டுவது மிகவும் சிறந்தது.

ஏழரைச் சனி விட்டு விலக

ஏழரைச் சனி விட்டு விலக

Arunankapilan

காசி விஸ்வநாதரையும், விசாலாட்சி அம்மனையும் வழிபட்டு, கோவில் பிரகாரத்தில் உள்ள நீரில் மூழ்கி எழுந்து பின் சூரிய காயத்ரி மந்திரத்தை நூற்றி எட்டு முறை உச்சரித்தப்படி தாமரை மலர்களை சூரியனாருக்கு சமர்ப்பித்தால் அஷ்டம் சனி, ஏழரைச் சனி, கண்டகச் சனி உள்ளிட்ட 12 விதமான சனி தோசங்கள் விட்டு விலகிச் செல்லும் என்பது தொன்நம்பிக்கை.

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?

Superfast1111

சென்னையில் இருந்து சுமார் 300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது திருமங்கலக்குடி சூரியனார் கோவில். சென்னை எக்மோரில் இருந்து திருச்சி எக்ஸ்பிரஸ், சோழன் எக்ஸ்பிரஸ், புவனேஸ்வர்- ராமேஷ்வரம் எக்ஸ்பிரஸ், திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ், எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில் சேவைகள் தினமும் இயக்கப்படுகின்றது. கும்பகோணத்தில் இருந்து மாநகர பேருந்து வசதிகளும், தனியார் கார் டாக்சி சேவைகளும் திருமங்கலக்குடி சூரியனார் கோவில் செல்ல உள்ளன.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X