Search
  • Follow NativePlanet
Share
» »மிதுன ராசிக்காரர்களே இந்த கோவிலுக்கு மட்டும் போங்க! இருமடங்கு செல்வம் உங்களுக்கு தான்!

மிதுன ராசிக்காரர்களே இந்த கோவிலுக்கு மட்டும் போங்க! இருமடங்கு செல்வம் உங்களுக்கு தான்!

ஒவ்வொரு ராசிக்கும் என தனிச் சிறப்புமிக்க திருத்தலங்கள் உள்ளன. இதில், மிதுன ராசிக்காரர்கள் இந்த கோவிலுக்கு உடனே சென்று வழிபட்டு வந்தால் இந்த வருடத்திலேயே இருமடங்கு செல்வத்தை அள்ளிச் செல்லலாம்.

இந்த உலகில் பிறக்கும் அனைவருக்கும் அவரவர்களுக்கு என ஒரு நட்சத்திரம் அமைந்துள்ளது. மொத்தம் உள்ள 27 நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் அவர்களுக்குடைய நட்சத்திரங்களுக்கு உரிய கோவிலில் சென்று வழிபடுவது மிகுந்த பலன்களைத் தரும். விரும்பமானக் கடவுளை வழிபடுவதைக் காட்டிலும், ராசி நட்சத்திரத்திற்குரிய திருத்தலங்களுக்குச் சென்று வழிபடுவது என்பது மேலும் பலன்களை வாரிவழிங்கும். மனிதனின் கணிப்புகள் நம்பகத்தன்மை அற்றவைதான். சில விஷயங்கள் நிறைவேறும், சிலவை எதிர்பார்ப்புகளாகவே முடிந்துவிடும். ஆனால், கிரகங்கள், ராசிகள், நட்சத்திரங்களின் அமைவுகளை அடிப்படையாகக் கொண்டு கணிக்கும் எவையும் வீனாவதில்லை என நாம் கேள்விப்பட்டிருப்போம். அவ்வாறாக, ஒவ்வொரு ராசிக்கும், நட்சத்திரத்திற்கும் என தனிச் சிறப்புமிக்க திருத்தலத்திற்கு சென்று வழிவட்டால் வேண்டியவை யாவும் நிறைவேறும் என்பது கூற்று. இதில், மிதுன ராசிக்காரர்களே இந்த கோவிலுக்கு மட்டும் உடனே சென்று வழிபட்டு வாருங்கள். இந்த வருடத்தில் இருமடங்கு செல்வத்தை அள்ளிச் செல்லலாம்.

எங்கே செல்வது ?

எங்கே செல்வது ?


மிதுன ராசிக்காரர்கள் தற்போது வழிபட வேண்டியக் களவுளாக இருப்பவர் விஷ்ணுவின் அவதாரமான பெருமாள். அதிலும் குறிப்பாக, சென்னையில் அமைந்துள்ள நன்மங்கலம் நீலவண்ணப் பெருமாள், கோயம்பேடு வைகுண்டவாசர், மயிலாப்பூர் மாதவப் பெருமாள், கடலூர் வரதராஜப் பெருமாள், மாங்காடு வைகுண்டவாசர், கோவை ராமர் கோவில் உள்ளிட்ட தலங்களுக்குச் சென்று வழிபட்டுவர செல்வச் செழிப்புடன் உச்சத்தை அடையலாம்.

Ssriram mt

நீலவண்ணப் பெருமாள் திருக்கோவில், நன்மங்கலம்

நீலவண்ணப் பெருமாள் திருக்கோவில், நன்மங்கலம்


சென்னையில் நன்மங்கலம் பகுதியில் அமைந்துள்ள நீலவண்ணப் பெருமாள் கோவிலுக்க மிதுன ராசியுடையயோர் சென்று வேண்டிவர தோஷங்களும், எதிரிகளின் பார்வைகளும நீங்கி உடல் ஆரோக்கியம், தொழிலில் முன்னேற்றம் அடையலாம். அதுமட்டுமின்றி குடும்பத்தில் நிலவிவந்த கருத்துவேறுபாடுகள் விலகி அனைவரிடத்திலும் சகஜமான வாழ்க்கை உண்டாகும். இத்திருத்தலத்தில் லட்சுமி ஹயக்ரீவர், நரசிம்மர், சுதர்சனர் அருள்பாலிக்கினறனர். காஞ்சிபுரத்தில் காமாட்சியம்மன் கோவிலுக்கு அருகே பச்சைவண்ணர் கோவில் அமைந்திருப்பதைப் போலவே நன்மங்கலத்தில் காமாட்சியம்மையார் கோவில் அருகில் நீலவண்ணப் பெருமாள் திருத்தலம் அமைந்துள்ளது.

Ssriram mt

எப்போது, எப்படிச் செல்வது ?

எப்போது, எப்படிச் செல்வது ?


சென்னையில் இருந்து சுமார் 27 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது நீலவண்ணப் பெருமாள் திருக்கோவில். நுங்கம்பாக்கம், அடையார், துரைப்பாக்கம் வழியாக நன்மங்கலத்தை அடையலாம். சேலையூர், தாம்பரம், வண்டலூர் செல்லும் பேருந்துகள் மூலம் இதனை அடையலாம். நீலவண்ணப் பெருமாள் கோவில் நடை காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறக்கப்பட்டிருக்கும். அதற்கு ஏற்றார்போல் திட்டமிட்டு வந்தால் தீபாராதணை உள்ளிட்ட அபிஷேக பூஜைகளை கண்டு தரிசிக்கலாம்.

வைகுண்டவாசப் பெருமாள் திருக்கோவில், கோயம்பேடு

வைகுண்டவாசப் பெருமாள் திருக்கோவில், கோயம்பேடு


சென்னை, கோயம்பேட்டில் அமைந்துள்ள வைகுண்டவாசப் பெருமாள் திருக்கோவிலில் செய்த தவறை உணர்ந்து வழிபட்டால் பிராயச்சித்தம் உண்டாகும் என்பது நம்பிக்கை. அதுமட்டுமின்றி தோஷங்கள், திருமணத் தடை, ஜைவர்யம் பெருக இங்குள்ள விருட்சத்தில் தாலி கட்டி வேண்டிக்கொள்கின்றனர். மிதுன ராக்காரர்கள் மூலவர் மற்றும் சன்னதியில் உள்ள நீதைக்கு புது ஆடைகள் வழங்கி, சிறப்பு அழங்காரம் செய்து வேண்டிக்கொண்டால் இந்த வருடமே வேண்டியவை எல்லாம் அருளும் பாக்கியம் கிடைக்கும். நீண்ட நாட்களாக நின்றுபோய் இருந்த காரியங்கள் யாவும் நிறைவேறும்.

Ssriram mt
எப்போது, எப்படிச் செல்வது ?

எப்போது, எப்படிச் செல்வது ?


சென்னை மத்தியில் இருந்து சுமார் 9.5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோயம்பேட்டில் அமைந்துள்ளது அருள்மிகு வைகுண்டவாசப் பெருமாள் ஆலயம். மாநகரத்தின் பிற பகுதிகளில் இருந்தும், மற்ற மாவட்டங்களில் இருந்தும் கோயம்பேட்டிற்கு செல்ல பேருந்துவசதிகள் அதிகளவில் உள்ளன. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து தனியார் வாகனம், ஆட்டோக்கல் மூலம் இக்கோவிலை எளிதில் அடையலாம். காலை 5.30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் இக்கோவில் நடை திறக்கப்பட்டிருக்கும்.

மாதவப்பெருமாள், மயிலாப்பூர்

மாதவப்பெருமாள், மயிலாப்பூர்


மயிலாப்பூரில் அமைந்துள்ள மாதவப் பெருமாள் திருமணக் கோலத்தில் அருள்பாலிக்கிறார். இதனால் கல்யாண மாதவன் என்றும் பக்தர்களால் அழைக்கப்படுகிறார். உத்திரட்டாதி நட்சத்திரம் கொண்ட முன ராசியுடையோர் இத்தளத்தில் உள்ள குளத்தில் நீராடி மாதவப்பெருமாளுக்கும், அமிர்தவல்லிக்கும் திருக்கல்யாணம் செய்துவைத்தால் இல்லரத்தில் விரைவில் சுப நிகழ்ச்சிகள் அரங்கேறும். சித்திரைத் திருவிழா, நவராத்திரி, மாசிமாதம் நடைபெறும் தெப்பத்திருவிழா, பங்குனி உத்திர திருக்கல்யாணம் உள்ளிட்டவை இத்திருத்தலத்தில் வெகுவிமர்சையாகக் கொண்டாடப்படும் விழாவாகும்.

Rasnaboy

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?


மைலாப்பூருக்கு அருகிலேயே மாதவபுரம் என்னும் பகுதியில் இக்கோவில் அமைந்துள்ளது. பட்டிணப்பாக்கத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரம் பயணித்தாலும், திருவள்ளிக்கேணியில் இருந்து 4 கிலோ மீட்டர் பயணித்தாலும் இத்தலத்தை அடையலாம். சென்னையின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் மயிலாப்பூருக்கு பேருந்துவசதிகள் உள்ளன. காலை 6.30 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் இக்கோவிலின் நடை திறக்கப்பட்டிருப்பதால் அதற்கு ஏற்றவாறு திட்டமிட்டு செல்ல வேண்டும்.

பிரசன்ன வேங்கட நரசிம்ம பெருமாள் கோவில், சைதாப்பேட்டை

பிரசன்ன வேங்கட நரசிம்ம பெருமாள் கோவில், சைதாப்பேட்டை


சைதாப்பேட்டையில் அமைந்துள்ள அருள்மிகு பிரசன்ன வேங்கட நரசிம்ம பெருமாள் கோவிலில் ஆண்டாள், கோதண்டராமர், அனுமன், நம்மாழ்வார் என ஒவ்வொருவருக்கும் தனிச் சன்னதிகள் காணப்படுகின்றன. மிதன ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம் கொண்டோர் இங்குள்ள பெருமாளுக்கும், அலர்மேல்மங்கை அம்மையாருக்கும் புது பட்டாடை சாற்றி, வாரந்தோறும் செவ்வாயன்று சென்று வரிபட்டு வர எதிரிகளின் பார்வையில் இருந்து விலகி, தொழில் முன்னேற்றம் காண்பீர்கள். மேலும், பொருட்செல்வம், அருட்செல்வம் உள்ளிட்டவை தேடிவரும்.

Redtigerxyz

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?


மேற்கு சைதாப் பேட்டையில் இருந்து கிண்டி சாலை வழியாக சுமார் 7.5 கிலோ மீட்டர் தொலைவிலும், அண்ணா சாலை வழியாக 5.7 கிலோ மீட்டர் தொலைவிலும் இக்கோவில் அமைந்துள்ளது. காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பிரசன்ன வேங்கட நரசிம்ம பெருமாள் கோவில் நடை திறந்திருக்கும்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X