Search
  • Follow NativePlanet
Share
» »அடி ஆத்தி! அனிதா ராதாகிருஷ்ணன் சொந்த ஊர்ல இவ்ளோ இருக்கா?

அடி ஆத்தி! அனிதா ராதாகிருஷ்ணன் சொந்த ஊர்ல இவ்ளோ இருக்கா?

அனிதா ராதாகிருஷ்ணன். திமுக அதிமுக என மாறி நின்றாலும், தனது தொகுதியில் மிகுந்த செல்வாக்கு கொண்டவர். அவரது சொந்த ஊர் திருச்செந்தூர் அருகே உள்ள தண்டுப்பத்து. அவருக்கு சொந்த ஊரில் வீடுகளும், சொத்துக்களும் இருப்பதாக அறிய முடிகிறது. தற்போது தூத்துக்குடி மக்களவை தொகுதியில் திமுகவின் கனிமொழி போட்டியிடும் நிலையில் அவருக்கு ஆலோசகராகவும் அனிதா ராதாகிருஷ்ணன் இருக்கிறார். திமுக தலைவர்களுள் ஒருவரான துரைமுருகன் வீட்டில் ரெய்டைத் தொடர்ந்து, தேர்தல் படை அனிதா ராதாகிருஷ்ணன் ஊருக்கு நள்ளிரவில் சென்று சோதனை நடத்தியுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் அனிதா ராதாகிருஷ்ணனைப் பற்றி பேசிக்கொள்கிறார்கள். இணையத்திலும் திருச்செந்தூர், உடன்குடி உள்ளிட்ட பெயர்கள் அதிக அளவில் தேடப்பட்டு வருகின்றது.

எல்லாம் சரி... அனிதா ராதாகிருஷ்ணனுக்கு சொந்த ஊரில் என்னவெல்லாம் இருக்கிறது... மலைக்க வைக்கும் இடங்களும், தகவல்களும் உடன்குடி , திருச்செந்தூரைச் சுற்றி என்னெல்லாம் இருக்கு என்பதை இந்த பதிவில் காணப்போகிறோம்.

தண்டுபத்து

தண்டுபத்து

திருச்செந்தூரிலிருந்து 12 கிமீ தொலைவில் அரை மணி நேரத்தில் செல்லும் வகையில் அமைந்துள்ளது இந்த தண்டுப்பத்து கிராமம்.

அதேநேரம் உடன்குடி பகுதியிலிருந்து வெறும் 5 கிமீ தொலைவில் இந்த கிராமம் உள்ளது.

இந்த பகுதியில் இருக்கும் தூதுவளை அய்யனார் கோவில், உள்ளூர் பகுதி மக்களின் விருப்ப தெய்வமாவார்.

அருகிலுள்ள பகுதிகள்

அருகிலுள்ள பகுதிகள்

திருச்செந்தூரில் முருக பெருமான் கோவில், வள்ளி குகை, தத்தாத்ரேயரின் குகை போன்ற சில அழகிய கோவில்கள் உள்ளன. அவை மட்டுமின்றி, பாஞ்சாலங்குறிச்சி கோட்டை, மேலப்புதுக்குடி, தூத்துகுடியில் உள்ள குதிரைமொழித்தேறி மற்றும் புன்னை நகரில் உள்ள வனத்திருப்பதி போன்ற இடங்களும் கண்டு களிக்கக் கூடியவை.

Sarvagyana guru

திருச்செந்தூர் முருகன் கோவில்

திருச்செந்தூர் முருகன் கோவில்

இந்த நகரத்தில் பிரதானமாக பார்க்க வேண்டியது, இங்குள்ள முருக பெருமான் கோவில். வள்ளி தெய்வானையுடன் முருக பெருமான் வீற்றிருக்கும் இந்தக் கோவில், முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இங்கு சிவ பெருமானுக்கும், விஷ்ணு பெருமானுக்கும் கூட சன்னதிகள் உள்ளன. இந்தக் கோவில், வேத காலத்திலிருந்து உள்ளதாக பழங்காலச் சுவடிகள் கூறுகின்றன. ஒன்பது அடுக்காக அமைந்த கோபுரம், பிரதான வாயிலாக உள்ளது. இங்கு தண்ணீர் ஊற்றை ஒட்டி அமைந்துள்ள நாழிக்கிணறும் உள்ளது. நுழைவாயில் தெற்கை நோக்கி இருந்தாலும், செந்திலாண்டவராக காட்சி அளிக்கும் முருக பெருமான், கிழக்கை நோக்கி அமைந்துள்ளார்.

கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள ஒரே முருகன் கோவில் இதுதான் என்பது இதன் சிறப்பம்சம். மற்றவை அனைத்தும் குன்றின் மீதோ, வனத்திலோ உள்ளன. பிரம்மோத்ஸவம், வசந்தோத்சவம், வைகாசி விசாகம்,கந்த சஷ்டி, ஆவணித் திருவிழா, மாசித் திருவிழா மற்றும் ஊஞ்சல் சேவை ஆகிய பண்டிகைகள் இங்கு வெகு விமரிசையாக கொண்டாடப்படுவதால் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வருகின்றனர்.

vaikundaraja.s

பாஞ்சாலங்குறிச்சி கோட்டை

பாஞ்சாலங்குறிச்சி கோட்டை

சலிக்குளம் என்ற ஊரில் அமைந்துள்ள 'கட்டபொம்மன் நினைவுக் கோட்டை' என்று அழைக்கப்படும் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை ஒரு புகழ் பெற்ற வரலாற்று ஸ்தலமாகும். 18ம் நூற்றாண்டைச் சேர்ந்த , மதுரை நாயக்கர் அரசின் பாலயக்காரராக விளங்கிய, பாஞ்சாலங்குறிச்சி மன்னன் வீர பாண்டிய கட்டபொம்மனால் இக்கோட்டை கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தக் கோட்டைக்கும் சுதந்திரப் போரட்டத்திற்கும் தொடர்பு உள்ளது.

1799ல், மன்னன் வீர பாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்ட போரின் போது, ஆங்கில அரசு இந்தக் கோட்டையை கைப்பற்றியது. பின்னர், அவரது சகோதரர், ஆங்கில அரசிடமிருந்து இந்தக் கோட்டையை மீட்டார். சுதந்திரத்திற்குப் பின், இந்திய தொல்பொருள் ஆய்வகம், இந்தக் கோட்டையை நிர்வகித்து வருகிறது. 1974ல், தமிழக அரசு, பாஞ்சாலங்குறிச்சி கோட்டையின் நினைவாக ஒரு புதிய கோட்டையை கட்டி, அதற்கு 'கட்டபொம்மன் நினைவுக் கோட்டை' எனப் பெயரிட்டது. இங்கு, கட்டபொம்மனின் குலதெய்வமான ஜக்கம்மா தேவிக்கு ஒரு சிறு கோவில் உள்ளது. வரலாற்றில் ஆர்வம் உள்ளவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம் இது.

Manikandan.J -

வள்ளி குகை

வள்ளி குகை

தத்தாத்ரேயரின் குகை என்று அழைக்கப்படும் வள்ளி குகை, திருச்செந்தூர் முருகன் கோவிலின் வடக்குக் கடற்கரையில் அமைந்துள்ளது. இது கடலை நோக்கியபடி, மணப்பாறையின் கீழ் அமைந்துள்ள காண்பதற்கு அழகிய இடம். இங்கு வள்ளி, தத்தாத்ரேயரின் உருவங்கள் வடிக்கப்பட்டுள்ளன. 24 அடி நீளமும், 21.5 அடி அகலமும் கொண்ட 16 தூண்கள் உள்ள கல் மண்டபம் ஒன்று இங்குள்ளது. முருக பெருமான், வள்ளி பற்றிய கதைகளைக் கூறும் ஓவியங்களும் இங்குள்ளன. இந்தக் குகை சமீபத்தில், கருங்கல் தரை பதித்து புதுப்பிக்கப்பட்டுள்ளது.

Kasiarunachalam

 கட்டபொம்மன் நினைவுக் கோட்டை

கட்டபொம்மன் நினைவுக் கோட்டை

சலிக்குளம் என்ற ஊரில் அமைந்துள்ள 'பாஞ்சாலங்குறிச்சி கோட்டை' என்று அழைக்கப்பட்டு வந்த கட்டபொம்மன் நினைவுக் கோட்டை ஒரு புகழ் பெற்ற வரலாற்று ஸ்தலமாகும். 18ம் நூற்றாண்டைச் சேர்ந்த , மதுரை நாயக்கர் அரசின் பாலயக்காரராக விளங்கிய, பாஞ்சாலங்குறிச்சி மன்னன் வீர பாண்டிய கட்டபொம்மனால் இக்கோட்டை கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தக் கோட்டைக்கும் சுதந்திரப் போரட்டத்திற்கும் தொடர்பு உள்ளது.

1799ல், மன்னன் வீர பாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்ட போரின் போது, ஆங்கில அரசு இந்தக் கோட்டையைக் கைப்பற்றியது. பின்னர், அவரது சகோதரர், ஆங்கில அரசிடமிருந்து இந்தக் கோட்டையை மீட்டார். சுதந்திரத்திற்குப் பின், இந்திய தொல்பொருள் ஆய்வகம், இந்தக் கோட்டையை நிர்வகித்து வருகிறது. 1974ல், தமிழக அரசு, பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையின் நினைவாக ஒரு புதிய கோட்டையைக் கட்டி, அதற்குக் 'கட்டபொம்மன் நினைவுக் கோட்டை' எனப் பெயரிட்டது. அதுவே இன்று நிலைத்துள்ளது. இங்கு, கட்டபொம்மனின் குலதெய்வமான ஜக்கம்மா தேவிக்கு ஒரு சிறு கோவில் உள்ளது. வரலாற்றில் ஆர்வம் உள்ளவர்கள் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய இடம் இது.

Kovilpatti1992

குதிரைமொழித்தேறி

குதிரைமொழித்தேறி

இது திருச்செந்தூரில் இருந்து 12கிமீ தொலைவில் உள்ள அழகிய பொழுதுபோக்கு இடமாகும். இயற்கைச் சூழலில் அமைந்துள்ள இவ்விடத்தில் உள்ள குடிநீர் ஊற்று பிரபலம் வாய்ந்தது.

vaikundaraja.s

கொற்கை

கொற்கை

கொற்கை திருச்செந்தூர் மற்றும் தூத்துக்குடி இடையே அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இக்கிராமத்தில் 250 ஏக்கர் பரப்பளவில் கொற்கை குளமானது அமைந்துள்ளது. பாண்டிய பரம்பரையின் ஆட்சியின் போது கொற்கை கிராமமானது மிகவும் பிரபலமான துறைமுகமாக இருந்தது. கொற்கையில் பழங்கால கோயிலான வெற்றிவேளம்மன் கோயிலும் அமைந்துள்ளது. 1838ம் ஆண்டு படையெடுப்பின் போது கி.மு மூன்றாம் நூற்றாண்டு மற்றும் கி.பி இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்த கலை வடிவங்கள் இக்கிராமத்தில் இருந்து கொள்ளை போயின. கொற்கையை பற்றின குறிப்பை பழங்கால மேற்கத்திய மற்றும் சங்க கால நூல்களில் காண முடிகிறது. பிரபல கிரேக்க புவியியல் வல்லுநர் தாலமியால் இந்த இடமானது கோல்கை என்று குறிப்படப்படுகிறது. அதாவது முத்து குளித்தலின் மையமாக கருதப்பட்டது.

வனதிருப்பதி, புன்னை நகர்

வனதிருப்பதி, புன்னை நகர்

வனதிருப்பதி கோவில், சாவனா ஹோட்டல்களின் உரிமைதாரர்களால், அவர்களது சொந்த ஊரான புன்னை நகரில் கட்டப்பட்டுள்ள ஒரு அழகிய கோவில். இது திருச்செந்தூரில் இருந்து 20கிமி தொலைவில், கட்சனவிலை நிலையத்திற்கு அருகில் உள்ளது.

ஹரே தீவு

ஹரே தீவு

ஹரே தீவு தூத்துக்குடி நகரத்தின் பழைய பேருந்து நிறுத்தத்தில் இருந்து 9 கிமீ தொலைவில் இருக்கிறது, அது துறைமுகத்தின் அருகில் அமைந்துள்ளது. இந்த தீவில் இரண்டு கலங்கரை விளக்கமும் கடல் கரையில் கணக்கற்ற கடல் ஓடுகளும் உள்ளன. இந்த தீவில் மயில்களும் காணப்படுகின்றன. உள்ளூர் வாசிகளுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் இந்த தீவு ஒரு பொழுது போக்கு தலமாக விளங்குகிறது. பொங்கல் விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகள் இந்த தீவிற்கு படை எடுக்கின்றனர். இந்த நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக நகரில் இருந்து இந்த தீவிற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன

Read more about: tiruchendur
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more