Search
  • Follow NativePlanet
Share
» »உத்வாடா எனப்படும் கடலோர நகரம்

உத்வாடா எனப்படும் கடலோர நகரம்

By Udhaya

உத்வாடா எனப்படும் கடலோர நகரம், வல்சாத் மாநகராட்சியில் உள்ளது. இது பாரசீகர்கள் அல்லது இந்திய சோரோஸ்ட்ரியன்கள் என்று அழைக்கப்படுபவர்கள் வாழும் மையப் பகுதியாகும். இந்த இடத்தில் மக்கள் குடியேறுவதற்கு முன் ஒட்டகம் மேய்க்கப்பட்டதால் உத்வாடா என்ற பெயரை இந்த இடம் பெற்றது. இந்த இடத்துக்கு பயணம் செய்து அங்கு வாழும் மக்களின் கலாச்சாரம் பற்றியும், அங்குள்ள சுற்றுலாத் தளங்கள் பற்றியும் காண்போம்.

உத்வாடா

உத்வாடா

பெர்சியாவில் வாழ்ந்த மக்கள், இஸ்லாமியர்களின் தாக்குதலினால் இந்தியவிற்கு 10-ஆம் நூற்றாண்டில் தஞ்சம் புகுந்தனர். அவர்கள் இந்தியாவிற்குள் வல்சாத் வழியாக வந்து பின்னர் சஞ்சன் என்ற துறைமுகத்தை உருவாக்கினார்கள். ஈரானிலிருந்து அடஷ் பெஹ்ரம் எனப்படும் புனித ஜோதியை அவர்கள் தங்களுடன் எடுத்து வந்தார்கள். இது உத்வாடாவில் முக்கிய ஈர்ப்பாக இன்றும் விளங்குகிறது.

Rajendra B. Aklekar

படை எடுப்பு

படை எடுப்பு


துறைமுகம் கண்டுபிடித்த பின்னர் இதனை சஞ்சன் வழியாக அவர்கள் எடுத்துக் கொண்டு வந்தனர். பின்னர் முகமது பின் துக்ளக் சஞ்சன் மீது படை எடுத்ததால், அங்கிருந்து தப்பி உத்வாடாவில் உள்ள அடஷ் பெஹ்ரம்மில் புனித சின்னமாக வைக்கப்பட்டது. உலகில் உள்ள ஒன்பது அடஷ் பெஹ்ரம்மில் ஒன்றாக விளங்குகிறது உத்வாடா அடஷ் பெஹ்ரம். இந்த கட்டடம் பல முறை புதுபிக்கப்பட்டுள்ளது.

Zoroastrian fire temple

பழமையான கோவில் ஜோதி

பழமையான கோவில் ஜோதி

இங்குள்ள அடஷ் பெஹ்ரம் உலகிலேயே பழமையான கோவில் ஜோதியை கொண்டது. இது தொடர்ந்து எரிந்து கொண்டே தான் இருக்கும். இந்த அடஷ் பெஹ்ரத்தை ஈரான்ஷா என்றும் அழைக்கின்றனர். இது உருவான தினத்தை ஒவ்வொரு வருடமும் ஷாஹென்ஷாஹி அல்லது இம்பீரியல் சோரோஸ்ட்ரியன் நாட்குறிப்பில் உள்ள ஒன்பதாவது மாதம் ஒன்பதாவது நாள் பெரிதும் உற்சாகத்துடன் கொண்டாடி வருகிறார்கள்.

சடங்குகள்

சடங்குகள்


ஒவ்வொரு வருடம் 20-ஆம் நாள் பல சடங்குகளும் நடைபெறும். இது வெரெத்ரக்னா எனப்படும் வெற்றியின் மேலாதிக்கத்துக்கு சமர்ப்பணம் செய்யும் விதமாக கொண்டாடப்படுகிறது. உத்வாடா கடற்கரை மற்றும் பாராசீகரின் உணவு வகைகளும் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு கூடுதல் ஈர்ப்பாக விளங்குகிறது.

அடஷ் பெஹ்ரம்மால்

அடஷ் பெஹ்ரம்மால்

உத்வாடா நகரம் சோரோஸ்ட்ரியன் அடஷ் பெஹ்ரம்மால் புகழ் பெற்று விளங்குகிறது. பெஹ்ரம் எனப்படுவது சோரோஸ்ட்ரியன்கள் வழிப்படும் இடமாக விளங்குவதால் உலகப் புகழ் அடைந்துள்ளது.

நாட்டிலுள்ள புனிதமான சோரோஸ்ட்ரியன் ஜோதி கோவில்களில் இதுவும் ஒன்று. மேலும் அணையாமல் எரியும் ஜோதியை கொண்டுள்ள கோவில்களில் பழமையான கோவில் இது. உத்வாடாவில் உள்ள பெஹ்ரம் உலகில் உள்ள ஒன்பது அடஷ் பெஹ்ரம்மில் ஒன்றாகும்.

Warrior4321

உத்வாடா கடற்கரை

உத்வாடா கடற்கரை

உத்வாடா என்ற சிறிய நகரத்தில் உள்ள இந்த அழகிய கடற்கரைகளை இன்னும் பல பேர் பார்த்திருக்க கூட மாட்டார்கள். செந்நிற மண்ணுடன் முரடான பாறைகளை கொண்ட இந்த அழகிய கடற்கரை மீனவர்களுக்கு வாழ்வாதாரமாக விளங்குகிறது. இதனை மீன்பிடி கிராமம் என்றும் அழைக்கின்றனர்.

சோரோஸ்ட்ரியன் பாரம்பரிய அருங்காட்சியம்

சோரோஸ்ட்ரியன் பாரம்பரிய அருங்காட்சியம்


உத்வாடாவில் உள்ள இந்த அருங்காட்சியத்தில் தலைசிறந்த படைப்புகள் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. இது குஜராத் அரசாங்கம் அளிக்கும் நிதி உதவியால் நடப்படுகிறது.

Read more about: travel
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X