Search
  • Follow NativePlanet
Share
» »ஊட்டி, கொடைக்கானல் பக்கத்துல உங்களுக்கு இதுவரை தெரியாத இப்படி ஒரு இடம் இருக்கு!

ஊட்டி, கொடைக்கானல் பக்கத்துல உங்களுக்கு இதுவரை தெரியாத இப்படி ஒரு இடம் இருக்கு!

முக்கியமான இடங்களுக்கு போய்ட்டு வர்ற நாம அது பக்கத்துல இருக்குற இடங்கள மறந்துடறோம். அப்படி நாம மறந்த இடங்கள பத்தி அதோட சுற்றுலா அம்சங்கள பத்திதான் இந்த பதிவுல நாம பாக்கபோறோம். வாங்க தமிழகத்தின் மிகச்

By Udhaya

முக்கியமான இடங்களுக்கு போய்ட்டு வர்ற நாம அது பக்கத்துல இருக்குற இடங்கள மறந்துடறோம். அப்படி நாம மறந்த இடங்கள பத்தி அதோட சுற்றுலா அம்சங்கள பத்திதான் இந்த பதிவுல நாம பாக்கபோறோம். வாங்க தமிழகத்தின் மிகச் சிறப்பான வெளியில் தெரியாத சில இடங்களைப் பற்றி பார்க்கலாம்.

குன்னூர்

குன்னூர்


மறைக்கப்பட்ட பள்ளத்தாக்கு பயணப் பிரியர்களின் வரைபடத்திலேயே காணப் படாத ஒரு இடமாகும். இங்கு வர நீங்கள் பசுமையான காடுகளிடையே மலைப்பயணம் செய்ய வேண்டும். இந்தப் பள்ளதாக்குக்கு செல்லும் மலைப்பயணமே சாகசங்கள் நிறைந்ததாக செல்பவர்களை வாய்பிளக்கச் செய்கிறது. குன்னூரின் மலைகளால் சூழப்பட்டிருக்கும் இந்த பள்ளத்தாக்கு ஆண்டு முழுவதும் பயணிகளை ஈர்க்கிறது.

Darshanr1212 -

மறைக்கப்பட்ட பள்ளத்தாக்கு

மறைக்கப்பட்ட பள்ளத்தாக்கு

பிரதான சாலை என்று ஏதும் இல்லாத காரணத்தால் இங்கு வர பயணிகள் மலைப்பாதையில் ட்ரெக்கிங் செய்ய வேண்டியிருக்கிறது. இந்தக் காட்சியைக் காண உயிரையும் கொடுக்கலாம் என்று சொல்ல வைக்கும் வகையில் இந்த மலைகளின் அற்புத காட்சிகளை இங்கிருந்து காணலாம். அழகிய மலைகள், பசுமையான சமவெளிகள் என இந்தக் காட்சிகள் பார்வையாளர்களின் மனதில் இந்த மலைப்பகுதியின் தோற்றத்தைப் பதிவு செய்கின்றன. வெலிங்டன் கோல்ஃப் மைதானத்தை ஒட்டி அமைந்துள்ள இவ்விடம் மலைப்பயண விரும்பிகள், இயற்கை ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் இடம்.

Shijan Kaakkara

 கொடைக்கானல்

கொடைக்கானல்

தூண்பாறை கொடைக்கானல் பேருந்து நிலையத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கொடைக்கானலில் உள்ள புகழ் பெற்ற சுற்றுலாத் தலங்களில் இதுவும் ஒன்று. இங்கே செங்குத்தாக காணப்படும் மூன்று பாறாங்கல்லை வைத்தே இந்த தலம் இப்பெயரைப் பெற்றது. இந்த தூண்கள் 400 மீட்டர் உயரத்தில் உள்ளன. இந்த தூண்களின் உச்சியில் இருந்து பார்த்தால் இயற்கை வனப்புடைய நிலங்களைக் கண்டு மகிழலாம்.

Silvershocky

தூண்பாறை

தூண்பாறை

இந்த தூண்களுக்குள்ள இடுக்குகள் மிகவும் ஆழமானது. எனவே இதுவும் மிக ஆபத்தான இடமாக கருதப்படுகிறது. தூண்பாறை தமிழ்நாடு வன இலாக்கா துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. மேலும் இந்த தூண்பாறையின் சிறப்புக்கு முக்கிய காரணமாக திகழ்வது இங்கேதான் கமல்ஹாசனின் குணா திரைப்படம் படம்பிடிக்கப்பட்டது. இதன் காரணமாக இந்தப் பாறை 'குணா பாறை' என்று பிரபலமாக அறியப்படுகிறது.

Dhanil K -

திப்பரேரி காட்சி முனை

திப்பரேரி காட்சி முனை

திப்பரேரி காட்சி முனை ஏற்காட்டின் தென்பகுதி காட்சி முழுவதையும் ஒரே கோணத்தில் பார்க்கும் வாய்ப்பை அளிக்கிறது. மேலும் இப்பகுதியின் பேரழகை சுற்றுலா பயணிகள் கண்டு களிப்பதற்கும் யானைப்பல் மலை உள்ளிட்ட அழகிய இடங்களை பார்பதற்கும் ஏற்றதாக இருப்பதால் இந்த இடம் மிகவும் பிரபலமான ஒன்று.

Riju K -

 தூய வெண்மை நிற பாறைகள்

தூய வெண்மை நிற பாறைகள்


இங்கு உள்ள தூய வெண்மை நிற பாறைகள் ஒரு விண்கல் பகுதி இங்கு விழுந்து பின்னர் உருவானதாக நம்பப்படுகிறது. திப்பேரேரி சாலை வழியாக இந்த காட்சி முனையை அடையலாம். கண்களை கவரும் இந்த சூழல் வழியாக பயணம் சென்று வருவது நினைவின் பொக்கிஷமாக இருக்கும்.

Mithun Kundu

நீலகிரி

நீலகிரி

முக்கூர்த்தி தேசிய பூங்கா நீலகிரியின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இந்தப் பூங்கா ஊட்டி மலையின் மேற்கில் மேற்கு தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதியாக உள்ளது. இந்த இடத்தில் ஒரு தேசிய பூங்கா அமைக்கப்பட முக்கிய காரணம், நீலகிரியின் தார் வகையைப் பாதுகாக்கவே. இது மேற்கு தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதியாக இருப்பதால், இந்த தேசிய பூங்கா யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய மையமாகத் திகழ்கிறது.

Rajeshdxb

முக்கூர்த்தி தேசிய பூங்கா

முக்கூர்த்தி தேசிய பூங்கா


முக்கூர்த்தி தேசிய பூங்கா சில பகுதிகளில் உயர்த்தப்பட்டுள்ளது, இந்த ஏற்றங்கள் 4.900 அடி முதல் 8.625 அடி வரை வேறுபடுகின்றன. பூங்காவில் உள்ள பிரபலமான சிகரங்கள் - கொல்லரிபெட்டா , முக்கூர்த்தி மற்றும் நீலகிரி சிகரம். இந்த மூன்று சிகரங்களும் பூங்காவில் உயர்ந்துள்ளன. சிகரங்களின் சிறப்பு அவற்றில் உள்ள கிரானைட் பாறைகள். நீங்கள் தேசிய பூங்காவில் காலார நடந்து சென்றால் முக்கூர்த்தி அணையைக் காணலாம் . இந்த அணை க்ளென்மார்கன் என்ற கிராமத்திற்கு அருகே, பைக்கரா மின்சார திட்டத்தின் ஒரு துணை பிரிவு ஆகும்

Shyamal

நீர் வீழ்ச்சி

நீர் வீழ்ச்சி


கேத்தரின் நீர் வீழ்ச்சி கோத்தகிரியில் காப்பி பயிரிடப்படுவது துவங்கக் காரணமாக இருந்த M.D. காக்பர்ன் என்பவரது மனைவியின் நினைவாக பெயரிடப்பட்டுள்ளது. கோத்தகிரியில் முதலில் குடியேறியவர்களில் காக்பர்ன் தம்பதியரும் அடங்குவர். இது 250 அடி உயரத்திலிருந்து இரு நிலைகளாக விழும் நீர் வீழ்ச்சியாகும். மேட்டுப்பாளையத்திலிருந்து கோத்தகிரி செல்லும் வழியில் அரவேணு என்ற இடத்தில உள்ளது. இந்த அருவியின் முழுமையான காட்சியைக்காண டால்பின் மூக்கு வியூ பாயிண்டிற்கு செல்ல வேண்டும்.

Michael varun

கேத்தரின் நீர் வீழ்ச்சி

கேத்தரின் நீர் வீழ்ச்சி

அருவியின் மேற்பகுதிக்கு சாலை வழியாகவும் செல்லலாம். இது நீலகிரி மாவட்டத்திலுள்ள இரண்டாவது உயரமான நீர்வீழ்ச்சியாகும். கேத்தரின் நீர் வீழ்ச்சி கோத்தகிரியில் இருந்து 29 கி.மீ. தொலைவில் உள்ளது. "கேத்தேஹாட ஹள்ளா " என்பது உள்ளூரில் வழங்கும் மொழியில் கேத்தரின் நீர் வீழ்ச்சியின் பெயராகும். இது "பள்ளத்தாக்கின் ஆறு" என்று பொருள் படும்.சாலை வழியாக எளிதில் அடைய முடியும் என்பதால் கோத்தகிரிக்குச் செல்லும் எவரும் தங்கள் சொந்த வாகனத்திலேயே செல்வதற்கு ஏற்ற இடமாக உள்ளது.

Shanmugamp7

More News

    Read more about: travel hills india tamilnadu
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+