Search
  • Follow NativePlanet
Share
» »குளுகுளு இடங்களுக்கு ஒரு சூப்பர் சுற்றுலா

குளுகுளு இடங்களுக்கு ஒரு சூப்பர் சுற்றுலா

கோடை காலம் வந்தேவந்துவிட்டது. இப்போதே மதிய நேரங்களில் வெளியே தலைகாட்டமுடியாத அளவுக்கு வெயில் சுட்டெரிக்கிறது. இன்னும் குறைந்தது இரண்டு மாதங்களுக்காவது இதே போல தான் இருக்கபோகிறது என்பதை நினைத்தாலே தலை சுற்றும்.

இந்த வெயிலில் இருந்து தப்பிக்க ஒரு வாரத்திற்காவது நல்ல குளுமையான மலைவாசச்தலங்களுக்கு செல்வது சிறந்த ஒரு வழியாகும். நமக்கு தெரிந்த ஊட்டியும், கொடைக்கானலும் கான்க்ரீட் காடுகளாக மாறி விட்டன. சரி, இதை தவிர வேறு நல்ல இடங்களும் ஏராளமாக இருக்கின்றன. இன்னமும் மனிதனால் அதிகம் மாசுபடாமல் இயற்கை எழில் கொஞ்சும் அந்த இடங்களை பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

யாத்ரா தளத்தில் ஹோட்டல் கட்டணங்களில் 50% + 30% கட்டண தள்ளுபடிக்கான கூப்பனை இங்கே பெற்றிடுங்கள்

 லோனாவலா :

லோனாவலா :

லோனாவலா, மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கும் இயற்கை அழகு நிறைந்த மிக மிக அற்புதமான இடமாகும். மும்பை நகரில் இருந்து 96 கி.மீ தொலைவிலும் புனேவில் இருந்து 60 தொலைவிலும் இந்த இடம் அமைந்திருக்கிறது. மும்பை - புனே ஆகிய இரண்டு நகரங்களையும் இணைக்கும் மும்பை - புனே தேசிய நெடுஞ்சாலையின் வழியில் அமைந்திருப்பதால் இதனை சாலை மார்கமாக அடைவது மிக எளிதாகும்.

Photo:Arjun Singh Kulkarni

 லோனாவலா :

லோனாவலா :

லோஹகட் கோட்டை :

லோஹகட் கோட்டை என்பதன் பொருள் இரும்புக் கோட்டை என்பதாகும். 1050 மீட்டர் உயரத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கோட்டை சத்ரபதி சிவாஜியால் சிறப்பாக பயன்படுத்தப்பட்டும்; விதர்பா, மராத்தா போன்ற பல ராஜவம்சங்களுக்கு அரன்மணையாகவும் திகழ்ந்திருக்கிறது. இந்தக் கோட்டையின் பிரம்மாண்டமான நான்கு வாயிற்கதவுகளும் இன்றும் நல்ல நிலையில் உறுதியாக காட்சியளித்துக் கொண்டிருக்கின்றன.

Photo:vivek Joshi

 லோனாவலா :

லோனாவலா :

புஷி அணை :

லோனாவ்ளாவின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அமைந்திருக்கும் புஷி அணை, பிரசித்தி பெற்ற மழைக் கால சுற்றுலாத் தலமாக திகழ்ந்து வருகிறது. லோனாவ்ளா மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்கள் அனைத்தும் இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்ட பகுதிகள் என்றே சொல்லலாம். அதிலும் புஷி அணையின் பேரழகினை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.

 லோனாவலா :

லோனாவலா :

ராஜ்மச்சி பாயிண்ட் :

இந்த ராஜ்மச்சி பாயிண்ட் லோனாவ்ளாவில் இருக்கின்ற காரணத்தினாலேயே ஏராளமான சுற்றுலாப் பயணிகள் லோனாவ்ளாவைத் தேடி வருகின்றனர்.

Photo:Ravinder Singh Gill

 லோனாவலா :

லோனாவலா :

மலையேற்றம் / டிரெக்கிங் :

உங்களுக்கு டிரெக்கிங் மிகவும் பிடிக்கும் எனில் நீங்கள் நேராக செல்ல வேண்டிய இடம் ராஜ்மச்சி. இது மஹாராஷ்டிர மாநிலத்திலேயே மலையேற்றத்துக்கு புகழ் பெற்ற ஸ்தலமாகும். எனினும் இந்த ராஜ்மச்சி மலையேற்றப்பாதை, கண்டலா மலையேற்றப்பாதை, துங்கர்லி ஏரி போன்றவை புதிதாக டிரெக்கிங் செல்பவர்களுக்கு கடினமானதாக இருக்கும். இவைத் தவிர ராஜ்மச்சியிலிருந்து கொண்டனா குகைகளுக்கு செல்லும் பாதை அல்லது உல்லாஸ் ஆற்றுக்கரைப் பாதை போன்றவற்றையும் பயணிகள் மலையேற்றத்துக்கு தேர்ந்தெடுக்கலாம்.

Photo:ptwo

 லோனாவலா :

லோனாவலா :

லோனவ்லாவை கடந்து செல்லும் மும்பை - புனே தேசிய நெடுஞ்சாலை.

Photo:GeniusDevil

 லோனாவலா :

லோனாவலா :

லோனவலாவை கடந்து செல்லும் மும்பை - புனே தேசிய நெடுஞ்சாலை.

Photo:Nagesh Kamath

 லோனாவலா :

லோனாவலா :

மழைக்கு குடைபிடித்தபடி ஒரு சுற்றுலாப்பயணி.

Photo:solarisgirl

 லோனாவலா :

லோனாவலா :

கோரிகட் லோனாவ்ளாவிலிருந்து 24 கி.மீ தொலைவிலுள்ள கோரிகட் பள்ளத்தாக்கும், அருவியும்.

Photo:Amogh Sarpotdar

 லோனாவலா :

லோனாவலா :

லோனாவ்ளாவிலிருந்து 24 கி.மீ தொலைவிலுள்ள கோரிகட் கோட்டை.

Photo:Amogh Sarpotdar

 லோனாவலா :

லோனாவலா :

லோனவ்ளாவில் இருக்கும் ஹோட்டல் மற்றும் எப்படி அடைவதுபோன்ற விவரங்களை இங்கே அறிந்து கொள்ளுங்கள்.

குல்மார்க் :

குல்மார்க் :

மலர் மைதானம் என்ற பொருளில் 'குல்மார்க்' என்று அழைக்கப்படும் இந்த நகரம் ஆங்கிலேயர்களால் 1927-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதமான காலநிலை, எழில் ததும்பும் நிலக்காட்சிகள், மலர்கள் பூத்துக்குலுங்கும் மலர்த்தோட்டங்கள், அடர்ந்த பைன் மரக்காடுகள், அழகிய ஏரிகள் என அத்தனை வனப்பையும் தன்னகத்தே கொண்டிருக்கும் குல்மார்க், உலகெங்கும் இருந்து சுற்றுலாப்பயணிகளை தன்வசம் சுண்டி இழுத்துக்கொண்டிருக்கிறது.

Photo:Muzaffar Bukhari

கோண்டோலா லிஃப்ட் :

கோண்டோலா லிஃப்ட் :

காஷ்மீர் மாநில அரசாங்கத்தால், பொமகல்ஸ்கை என்னும் பிரெஞ்சு நிறுவனத்தின் உதவியுடன் செயல்படுத்தப்படும் கோண்டோலா லிஃப்ட் எனும் கேபிள் கார் குல்மார்க்கின் முதன்மையான சுற்றுலா அம்சமாகும்.

13500 அடி உயரத்தில் 5 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்யக்கூடிய இரண்டு தடங்களை சுற்றுலாப்பயணிகள் தேர்ந்தெடுக்கலாம். குல்மார்க்கிலிருந்து காங்க்டூர் வரை ஒன்றும் காங்க்டூரிலிருந்து அபர்வத் வரை ஒன்றுமாக இரண்டு தடங்களில் இப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோண்டோலாவிலிருந்து இமயமலைச் சிகரங்களையும், கோண்டோலா கிராமத்தையும் கண்டு ரசிப்பது த்ரில்லான அனுபவமாக இருக்கும்.

Photo:Basharat Alam Shah

நிங்கல் நல்லா :

நிங்கல் நல்லா :

குல்மார்க்கிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது நிங்கல் நல்லா என்னும் அழகிய நீரோடை. அல்பத்தர் ஏரி மற்றும் அபர்வாத் சிகரத்திலிருந்து கோடையில் பனிக்கட்டிகள் உருகி பெருக்கெடுக்கும் பனிநீரால் ஆனது இந்த நீரோடை. புல்வெளிகள் அடர்ந்த இப்பகுதி குழந்தைகளுடன் குதூகலமாக நேரத்தை செலவழிக்க விரும்புபவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும்.

Photo:Basharat Alam Shah

கிலன்மார்க் :

கிலன்மார்க் :

குல்மார்க்கிலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவிலுள்ள கிலன்மார்க் சுற்றுலாத் தலத்துக்கு பயணிகள், பள்ளத்தாக்கில் உள்ள புல்வெளி மைதானங்களின் வழியே காலாற நடந்தே வந்துவிடலாம். இவ்விடத்திலிருந்து நங்கபர்வதத்தின் எழிலையும், இமயமலையின் பிரம்மாண்டமான அழகினையும், இரட்டைச் சிகரங்களான, நுன் மற்றும் குன் ஆகியவற்றின் கவின்மிகு காட்சியையும் கண்டு இன்புறலாம்.

Photo:Basharat Alam Shah

பனிச்சறுக்கு :

பனிச்சறுக்கு :

காஷ்மீர் பகுதிகளிலேயே பனிச்சறுக்கு விளையாட்டு குல்மார்க்கில்தான் மிகவும் பிரபலம். இங்கு 1927-ஆம் ஆண்டிலேயே ஆங்கிலேயர்களால் துவங்கப்பட்ட பனிச்சறுக்கு ரிசார்ட் ஒன்று உள்ளது. இந்த ரிசார்டை அடைய 400 மீட்டர் உயரத்தில் கேபிள் காரில் நீங்கள் பயணம் செய்ய வேண்டும். இப்படியாக ஒரு சிறிய சாகசப் பயணம் உங்களை ரிசார்ட்டின் உச்சிக்கு கொண்டு சேர்த்துவிடும்.

குல்மார்க் :

குல்மார்க் :

குல்மார்க் செல்லும் வழி.

குல்மார்க் :

குல்மார்க் :

குல்மார்க் செல்லும் வழி.

குல்மார்க் :

குல்மார்க் :

குல்மார்கில் இருக்கும் ஹோட்டல்கள் மற்றும் குல்மார்கை எப்படி அடைவது என்பது பற்றிய விவரங்களை இங்கே அறிந்து கொள்ளுங்கள்.

வயநாடு :

வயநாடு :

வயநாட்டின் சுற்றுலாத் தலங்கள் எடக்கல் குகைகள், மீன்முட்டி அருவி, குருவா டிவீப், சூச்சிப்பாறை அருவி, செம்பரா சிகரம் ஆகிய இடங்கள் வயநாட்டின் பிரபலமான சுற்றுலாத் தலங்களாக அறியப்படுகின்றன.

Photo:Srikaanth Sekar

வயநாடு :

வயநாடு :

செம்பரா சிகரம் :

வயநாடு மாவட்டத்திலேயே உயரமான சிகரமாக கருதப்படும் செம்பரா சிகரம் கடல் மட்டத்திலிருந்து 2100 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கிறது. இந்த சிகரம் சாகச பிரியர்களின் விருப்பமான பகுதியாக விளங்குவதால் இதன் உச்சியில் எண்ணற்ற டிரெக்கிங் முகாம்களை நீங்கள் பார்க்கலாம். அதுமட்டுமல்லாமல் மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு கவுன்சிலே பயணிகளுக்கு தேவையான மரக் குடில்கள், காலணிகள், டிரெக்கிங் உபகரணங்கள் போன்றவற்றை வழங்கி வருகிறது. அதோடு அவர்களே சுற்றுலாப் பயணிகளுக்கு பயண வழிகாட்டிகளையும் ஏற்பாடு செய்து கொடுக்கிறார்கள். ஆனால் நீங்கள் செம்பரா சிகரத்தில் டிரெக்கிங் செல்வதற்கு மெப்பாடி வன இலாக்கா அதிகாரியிடம் அனுமதி பெறுவது அவசியம்.

Photo:Chandru

வயநாடு :

வயநாடு :

எடக்கல் குகைகள் :

7000 ஆண்டுகளுக்கு முற்பட்ட குகைகளாக கருதப்படும் எடக்கல் குகைகள் வயநாடு நகரத்திலிருந்து 24 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. எடக்கல் குகைகளில் மொத்தம் மூன்று தொகுதிகளாக குகைகள் அமைந்திருக்கின்றன. இவை ஒவ்வொன்றும் வரலாற்றுக்கு முந்தைய காலங்களில் வாழ்ந்த மனித இருப்பின் சுவடுகளாக அறியப்படுகின்றன. இந்த குகைகளின் சுவர்களில் எண்ணற்ற தொன்மையான கல்வெட்டுகள், பல்வேறு விலங்குகள் மற்றும் மனிதர்களின் உருவங்கள், பழங்கால ஆயுதங்களின் வடிவங்கள், குறியீடுகள் போன்றவை பொறிக்கப்பட்டுள்ளன.

Photo:Satheesan.vn

வயநாடு :

வயநாடு :

மீன்முட்டி அருவி :

300 அடி உயரத்திலிருந்து விழும் மீன்முட்டி அருவி கேரளாவின் 2-வது மிகப்பெரிய அருவியாக அறியப்படுகிறது. இந்த அருவி வயநாடு நகரிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. இந்தப் பகுதியில் காணப்படும் நீரில் இயற்கையாகவே மீன்கள் நீந்த முடியாத ஒரு சூழல் உள்ளது. இதன் காரணமாக 'மீன்களை தடை செய்யும் பகுதி' என்ற அர்த்தத்தில் இந்த அருவி மீன்முட்டி அருவி என்று அழைக்கப்படுகிறது.

வயநாடு :

வயநாடு :

சூச்சிப்பாறை அருவி :

வயநாடு நகரிலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் சூச்சிப்பாறை அருவி அமைந்திருக்கிறது. சூச்சிப்பாறை அருவியை 2 கிலோமீட்டர் நெடுந்தூர நடைபயணம் மூலம் பசுமையான தேயிலை தோட்டங்களையும், காடுகளையும் கடந்து அடையும் அனுபவம் உங்கள் நினைவு இடுக்குகளில் பசுமை மாறாமல் அப்படியே நிலைத்திருக்கும். மேலும் இங்கு பயணிகளுக்காக மரங்களின் உச்சியில் அமைக்கப்பட்டிருக்கும் குடில்களில் இருந்து அருவியின் அழகையும், மேற்கு தொடர்ச்சி மலைகளின் பிரம்மாண்டத்தையும் பரிபூரணமாக கண்டு ரசிக்கலாம்.

வயநாடு :

வயநாடு :

வயநாட்டை பற்றிய மேலதிக விவரங்களை இங்கே அறிந்து கொள்ளுங்கள்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X