» »நம்பூதிரி பகீர்: ஜெ. வீட்டில் அப்படி என்ன இருக்கிறது?

நம்பூதிரி பகீர்: ஜெ. வீட்டில் அப்படி என்ன இருக்கிறது?

Written By: Udhaya

கோடநாடு பகுதியில் வாழும் மக்களில் சிலர் ஜெயலலிதா இங்கு வரும்பொழுதெல்லாம் பார்ப்பவர்கள். அவர் இங்கு இனி வரவே மாட்டார் என்பது பெரும் துக்கமாக உள்ளது என்கின்றனர்.

அவர் பெரியதாக இப்பகுதிகளுக்கு எதும் செய்ததில்லை. ஆனால் அவர் அவ்வப்போது வந்து போவது மனதிற்கு தெம்பாக இருந்தது. அவர் உடல்நிலை சரியில்லாதபோது இங்கு கொண்டுவந்திருந்தால் பிழைத்திருப்பார் என்கின்றனர்.

ஜெயலலிதாவும் கோடநாடும் தெரிந்ததும் தெரியாததும்

 அஇஅதிமுகவின் பொதுச்செயலாளராக ஆனதிலிருந்து கட்சி, ஆட்சி என்று எல்லாவற்றிலும் தன்னையே முன்னிறுத்தி கோலோச்சிய ஜெயலலிதா இந்தியாவின் இரும்பு பெண்மணிகளுள் ஒருவர் என்றால் மிகையாகாது.

இப்படி கட்டுக்கோப்பாக கிட்டத்தட்ட (1989 - 2016) 17 வருடங்கள் நடத்தி வந்த அஇஅதிமுக அதிகார சண்டையில் இன்று இந்தியாவே பேசும் அளவுக்கு ஆகியுள்ளது.

இவற்றிற்கு காரணம் ஜெயலலிதாவின் மரணம். அடிக்கடி உடல்நலக்குறைவினால் பாதிக்கப்படும் ஜெயலலிதா ஓய்வெடுப்பதற்காக நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் பெரிய பங்களா ஒன்றை கொண்டிருந்தார். சென்னை போயஸ்கார்டன் தவிர மற்ற நேரங்களில் கோடநாட்டில் இருப்பதுதான் வழக்கம்.

இந்த பதிவில் கோடநாடு பற்றியும், ஜெயலலிதா, கோடநாடு மர்மங்கள் பற்றியும் காண்போம்

கோடநாடு

கோடநாடு

சுற்றுலா செல்வதற்கு ஏற்ற அத்தனை அம்சங்களும் கொண்ட பகுதி கோடநாடு. நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த கோடநாட்டில்தான் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தனது பங்களாவில் ஓய்வெடுப்பார்.

Pc: Hari Prasad Sridhar

சுற்றுலா

சுற்றுலா

கோடநாடு என்பது ஊட்டி அருகிலுள்ள முற்றிலும் பசுமையான, பல்வேறு தேயிலைத் தோட்டங்கள் உள்ளடக்கிய பகுதியாகும்.

புத்துணர்ச்சி தரும் காற்று, பனிச்சூழல் மாறாத மேகங்கள், குளிர்ச்சி, கண்ணுக்கெட்டிய தூரமெல்லாம் பச்சை பசேலென்று காட்சிகள் என சுற்றுலாப் பிரியர்களுக்கு ஏற்ற இடமாகும்.

PC:Prof. Mohamed Shareef

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

கோடநாட்டிலிருந்து கிட்டத்தட்ட 20 கிமீ தொலைவில்தான் கோத்தகிரி உள்ளது. மிகவும் பழமையான இந்த மலைப்பிரதேசம் இன்று வரை தன்னை தகவமைத்துக்கொண்டு இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை குதூகலிக்கச் செய்கிறது.

எவ்வளவு பெரிய பங்களா?

எவ்வளவு பெரிய பங்களா?

ஜெயலலிதாவின் கோடநாடு பங்களா எவ்வளவு பெரியது தெரியுமா? 1600 ஏக்கர்கள் அளவுக்கு பரந்து விரிந்த அந்த எஸ்டேட்ல இருக்குற பங்களாவுல ஜெயா மட்டும்தான் தங்கினார். உடன் அவரது பணியாளர்களும், அலுவலர்களும், பாதுகாப்பாளர்களும் இருந்தனர்.

எஸ்ட்டேட் ல வேற என்ன இருக்கு?

எஸ்ட்டேட் ல வேற என்ன இருக்கு?

கோடநாடு எஸ்டேட்னு அழைக்கப்படுற அந்த இடங்கள்ல முக்காவாசி பகுதி ஜெயாவிற்கு சொந்தமானது.

தேயிலைத் தோட்டங்களும், காடுகளும் அவருக்கு சொந்தமாக உள்ளது. அதன் ஒரு மூலையில் தான் கோடைக் காலங்களில் ஜெயா தங்கும் மாளிகை ஒன்று இருந்தது.

எத்தனை நுழைவு வாயில்கள் தெரியுமா?

எத்தனை நுழைவு வாயில்கள் தெரியுமா?


உள்ளூர் மக்களின் கருத்துக்களின்படி, அவரது கோடநாடு எஸ்ட்டேட் பங்களா பகுதி மிகப்பெரியது. அதற்கு செல்வதற்கு 9 வெவ்வேறு நுழைவு வாயில்கள் இருக்கின்றன.

மிக மிக முக்கியமான நபர்களைத் தவிர , அதுவும் பல்வேறு கட்ட சோதனைகளுக்கப்பிறகு தான் உள்ளே விடுவார்கள். மற்றவர்கள் யாரும் உள்ளே செல்வதை கனவில் கூட நினைக்கமுடியாது என்கின்றனர் உள்ளூர் வாசிகள்.

ஏன் இவ்வளவு கட்டுப்பாடு?

ஏன் இவ்வளவு கட்டுப்பாடு?

இவ்வளவு கட்டுப்பாடுகள் விதிப்பது ஏன் என்ற வினாவிற்கு பெரியதாக விடை கிடைக்கவில்லை. அதே நேரத்தில் உள்ளூர் வாசிகள் சொல்வது என்னவென்றால், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இங்கு சிகிச்சை எடுத்து வந்ததாகவும், அதனாலேயே இங்கு பிறருக்கு அனுமதி இல்லை என்றும் சொல்கின்றனர்.

ஜெயலலிதாவின் இறப்புக்கு உடல்நலக்குறைவுதான் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

தேயிலைகள்

தேயிலைகள்

இங்குள்ள தேயிலைத் தோட்டங்களில் விலையும் தேயிலைகள் வெளிநாடுகளில் நல்ல பெயரைப் பெற்றுள்ளன. இவை இந்தியாவின் அந்நியச் செலாவணியை அதிகப்படுத்துவதாகவும், லாபம் ஈட்டித்தருவதாகவும் உள்ளது.

ரங்கசாமி பீக்

ரங்கசாமி பீக்

PC: Ramana

மோயார் ஆறு

மோயார் ஆறு

மோயாறு நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகி பவானி ஆற்றுடன் இணையும் ஒரு கிளை ஆறாகும்.

PC: D momaya

எப்படி செல்லலாம்

எப்படி செல்லலாம்

கோடநாடு செல்லும் வழிகள்

நன்றி

நன்றி

மேலும் இதுபோன்ற பயணக் கட்டுரைகளுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள்.. நேட்டிவ் பிளாணட் தமிழ்... நன்றி

Read more about: jayalalitha, travel