» »மிக மிக எளிமையான வழியில் அந்தமான் செல்வது எப்படி தெரியுமா? #season 1

மிக மிக எளிமையான வழியில் அந்தமான் செல்வது எப்படி தெரியுமா? #season 1

Posted By: Udhaya

வங்காள விரிகுடாவில் அமைந்திருக்கும் அந்தமான் தீவுகள் அற்புதங்களை கொண்டிருக்கிறது. இரைச்சலும், நெருக்கடியும் மிக்க நகர வாழ்க்கைக்கு மாற்றாக இயற்கையுடன் பின்னிப்பிணைத்து அமைதியுடன் மகிழ்ச்சியாக சிலநாட்களை கொண்டாட அந்தமான் மிகச்சிறந்த இடம்.

அந்தமான் தீவுக்கூட்டங்களில் மிக முக்கியமான தீவாக புகழ்பெற்றுள்ள இந்த சொர்க்கத்தீவை நாடி ஏராளமான சுற்றுலாப்பயணிகள் உலகில் பல பகுதிகளிலிருந்தும் விஜயம் செய்கின்றனர். இந்த தீவுகளுக்கு எப்படி செல்வது, எப்படி தயாராவது என்பன குறித்து முழு சுற்றுலா வழிகாட்டியாக இந்த கட்டுரையைப் பார்க்கலாம்.

சென்னை மற்றும் விசாகப்பட்டினத்திலிருந்து இந்த தீவுகளுக்கு கப்பலில் செல்லமுடியும். சென்னை எழும்பூரிலிருந்து சென்னைத் துறைமுகம் செல்லும் வழி, விசாகப்பட்டினம் துறைமுகத்துக்கு எப்படி செல்வது, பயணத்தை எப்படி திட்டமிடுவது என்பதையும் காணலாம். அதற்கு முன் தீவின் அழகைப் பற்றி பார்த்துவிட்டு வருவோம் வாருங்கள்.

தேனிலவு விளையாட்டுகள்

தேனிலவு விளையாட்டுகள்

இந்த தீவில் உள்ள ராதா நகர் பீச் தேனிலவு வரும் சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமாகும். வெள்ளை மணல் கடற்கரையில் காதல் துணையுடன் உலா வருவது ஏகாந்தமாக இருக்கும்.

அந்தமான் தீவுகளின் சிறப்பம்சமான ‘ஸ்கூபா டைவிங்' இந்த ஹேவ்லாக் தீவிலும் பிரதான சுற்றுலா அம்சமாக விளங்குகிறது. பொதுவாக, முதல் முறை டைவிங் செய்பவர்கள், கொஞ்சம் அனுபவம் மிக்கவர்கள் மற்றும் நிறைய அனுபவம் உள்ள சாகசவிரும்பிகள் என்று மூன்று தரப்பினருக்கான ‘ஸ்கூபா டைவிங்' கடல் மூழ்கு பயண வசதிகள் இந்த தீவில் வழங்கப்படுகின்றன.

Sankara Subramanian

 பெயர்க்காரணம்

பெயர்க்காரணம்

ஹேவ்லாக் தீவு என்றழைக்கப்படும் இந்த தீவுக்கு காலனிய ஆட்சிக்காலத்தில் ஆங்கிலேய தளபதியாக இருந்த ஹென்றி ஹேவ்லாக் என்பவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது. அந்தமான் தீவுக்கூட்டங்களில் மிக முக்கியமான தீவாக புகழ்பெற்றுள்ள இந்த சொர்க்கத்தீவை நாடி ஏராளமான சுற்றுலாப்பயணிகள் உலகில் பல பகுதிகளிலிருந்தும் விஜயம் செய்கின்றனர்.

Ankur P

 கடற்கரை கிராமங்கள்

கடற்கரை கிராமங்கள்

இந்த தீவில் மொத்தம் ஐந்து அழகிய கடற்கரைப்பகுதிகளை கொண்ட கிராமங்கள் அமைந்துள்ளன. கோவிந்தா நகர், ராதா நகர், பிஜோய் நகர், ஷ்யாம் நகர் மற்றும் கிருஷ்ணா நகர் என்பவையே அவை.

இந்திய நிலப்பகுதியிலிருந்து விலகி பல கிலோ மீட்டர்களுக்கப்பால் உள்ள இந்த சொர்க்க தீவுகளில் இந்தியப்பெயர்களை கேட்கும்போதே வியப்பும் பெருமையும் ஏற்படுவதையும் நம்மால் உணரமுடியும். மேற்சொன்னவற்றில் ராதா நகர் கடற்கரையை ‘ஆசியாவிலேயே மிகச்சிறந்த அழகான கடற்கரை' என்று பிரபலமான ‘டைம்' பத்திரிகை 2004ம் ஆண்டில் பிரகடனப்படுத்தியுள்ளது.

Harvinder Chandigarh

 திட்டமிடுதல் மற்றும் சீசன்கள்

திட்டமிடுதல் மற்றும் சீசன்கள்

எந்தவொரு பயணத்துக்கும் திட்டமிடுதல் மிக அவசியமானது. சுற்றுலா டிரிப் பேக்கேஜ் என்று ஊரில் நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் இருக்கின்றன. ஆனால் அவையனைத்திலும் எது சிறந்தது என்று நீங்கள் உணரவேண்டும். அதுமட்டுமின்றி நீங்களாகவே செல்லவும் முயற்சிக்கவேண்டும்.

முதலில் நீங்கள் செய்யவேண்டியது முன்கூட்டிய திட்டமிடல். அதாவது அந்தமான் போக முடிவு செய்துவிட்டால், இரண்டு மூன்று மாதங்கள் முன்கூட்டியே டிக்கெட் புக் செய்யவேண்டும். விமான பயணச்சீட்டு விலை அப்போது குறைவாகத்தான் இருக்கும்.

இல்லையென்றால், நம்பிக்கையான உள்ளூர் நிறுவனத்திடம் டிக்கெட் புக் செய்வது சிறந்தது. அந்தமான் செல்ல சிறந்த நாட்களாக நவம்பர் முதல் ஏப்ரல் முடிய உள்ள நாட்கள் இருக்கின்றன. இவை சீசன்நாட்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. மார்ச், ஏப்ரலில் செல்ல இப்போதே திட்டமிடுங்கள். மேலும் அந்தமான் அடிக்கடி புயலுக்கும், பூகம்பத்துக்குள் உள்ளாகும் பிரதேசமாகும். அதையும் கவனத்திற்கொண்டு பயணத்தை திட்டமிடவேண்டும்.

பயண நாட்கள்

பயண நாட்கள்

இந்த முறை உங்கள் பயண நாட்களை கணக்கில் கொண்டு, உங்கள் விசிட்டை திட்டமிடுங்கள். இரண்டு, மூன்று நாட்களுக்குத் திட்டமிடுதல் முழுமையான அனுபவத்தை பெறமுடியாமல் போகலாம். வேறு வழியில்லை என்றால், போர்ட்பிளேரில் இரு இரவுகளும், ஹேவ்லாக்கில் ஒரு இரவும் கண்டிப்பாக நீங்கள் தங்கும்படி திட்டமிடவேண்டும். அப்போதுதான் நீங்கள் அந்தமான் சென்றுவந்ததற்கான திருப்தியை அடையமுடியும்.

உங்கள் பயணச் செலவு, பட்ஜெட்டை திட்டமிட்டுக்கொள்ளுங்கள். சிலர் குறைந்த செலவில் அனைத்து இடத்தையும் சுற்றிப்பார்க்க கேட்பார்கள். சிலர் பணத்தைப்பற்றி கவலைப்படாமல், அனுபவத்துக்காக வருவார்கள். எல்லாரையும் ஒரே நேரத்தில் திருப்தி செய்வது இயலாத காரியம். எனினும் முயன்றவரை குறைந்த செலவில், நிறைந்த சுற்றுலாவை பெறமுயல்வோம்.

Ankur P

சென்னை எழும்பூர் - துறைமுகம்

சென்னை எழும்பூர் - துறைமுகம்

சென்னை எழும்பூரிலிருந்து பத்து நிமிட தூரத்தில் அமைந்துள்ளது துறைமுகம். அண்ணாசாலை வழியாகச் சென்று நாகப்பட்டினம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையை அடைந்து, திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் துறைமுகத்தை அடையலாம்.

 விமானங்கள்

விமானங்கள்

விசாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து கப்பல் சென்றாலும், அது நமக்கு மிகவும் அதிக நேரத்தை வீணடிக்கும் என்பதால், விமானத்தை திட்டமிடுவது சிறந்தது.

ஹேவ்லாக் தீவை எப்படி அடைவது?

ஹேவ்லாக் தீவை எப்படி அடைவது?

அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு பயணம் மேற்கொள்வது மிக எளிமையான ஒன்றாகவே உள்ளது. இந்தியாவின் கல்கத்தா, சென்னை, புவனேஸ்வர் போன்ற நகரங்களிலிருந்து எல்லா விமானச்சேவை நிறுவனங்களும் ‘போர்ட் பிளேர்'க்கு விமான சேவைகளை இயக்குகின்றன. இந்திய கப்பல் போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான எம். வி. நான்கௌரி எனும் கப்பலுக்கு அந்தமான் தீவுகளில் ஒன்றான ‘நான்கௌரி' எனும் தீவின் பெயரே சூட்டப்பட்டுள்ளது.

இந்த கப்பல் சென்னை துறைமுகத்திலிருந்து மாதம் இருமுறையும், விசாப்பட்டிணம் துறைமுகத்திலிருந்து மூன்று மாதங்களுக்கு ஒரு முறையும் போர்ட் பிளேர் துறைமுகத்துக்கு இயக்கப்படுகிறது. மேலும் கொல்கத்தாவிலிருந்தும் கப்பல் செல்கிறது. இந்த கப்பல் பயணம் சிக்கனமானது என்றாலும் பயண நேரம் கூடுதலாக இருக்கும்.

கப்பல்கள்

கப்பல்கள்


இந்தியாவிலிருந்து எம் வி நிக்கோபார், எம் வி நான்கௌரி, எம் வி அக்பர், வி ஹர்சவர்தனா மற்றும் எம் வி ஸ்வராஜ் தீப் எனும் 5 கப்பல்கள் இயக்கப்படுகின்றன.

Ankur P

பயணநேரம் மற்றும் தொலைவு

பயணநேரம் மற்றும் தொலைவு

55 முதல் 70 மணி நேரம் (அதாவது 2 முதல் 3 நாட்கள் ஆகலாம்) பயணத்தில் கப்பல் மூலம் அந்தமானை அடையலாம். இந்த நேரம் கொல்கத்தா, விசாகப்பட்டினம், சென்னைக்கு மாறுபடும். சென்னையிலிருந்து கப்பலில் செல்வோரின் பயணநேரம் 60 மணி நேரங்கள் ஆகும். சென்னையிலிருந்து போர்ட் பிளேருக்கு 1190 கடல்தொலைவு கிமீ ஆகும்.

Ankur P

 கப்பலில் பயண செலவு

கப்பலில் பயண செலவு

நீங்கள் செல்லும் கப்பலுக்கும், செல்லும் இடத்துக்கும் தகுந்தவாறு, 2000ரூ முதல் 8000ரூ வரை செலவு ஆகலாம்.

டீலக்ஸ் அறை - இரண்டு நபர்கள் தங்கும்படியான அறை, ஒரு டிவி, குளிர்சாதனப் பெட்டி.

முதல் வகுப்பு: நான்கு பேர் தங்கும் ஒரு அறை

இரண்டாம் வகுப்பு: ஆறுபேர் தங்கும் பொதுவான கழிவறையுடன்கூடிய அறை

சாதாரண வகுப்பு: தரைத்தளத்தில் முதல்வகுப்பு ரயில் போன்றதொரு அறை.

அந்தமான் அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கட்டணங்கள் குறித்து பார்க்க முடியும்

Ankur P

 தங்கும் வசதிகள்

தங்கும் வசதிகள்

பொதுவாக சராசரியான வசதிகளுடன் கூடிய விடுதிகள் இங்கு நிறைய உண்டு. ஹோட்டல் வெலாசிட்டி, அந்தமான் ரெசிடன்சி, ஹோட்டல் மரைன் வியூ, ஹோட்டல் லண்டன் உள்ளிட்டவை முக்கியமானவை. இவை போர்ட்பிளேரில் உள்ளன.

ஹேவ்லாக், நீல் தீவுகளிலும் சாதாரண கட்டணத்தில் விடுதிகள் கிடைக்கின்றன.

Ankur P

 ஹேவ்லாக்

ஹேவ்லாக்

போர்ட் பிளேர் நகரத்திலிருந்து வடகிழக்கே 55 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள இந்த ஹேவ்லாக் தீவுக்கு ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று முறை ‘ஃபெர்ரி' சொகுசு படகுகள் (போர்ட் பிளேரிலிருந்து) இயக்கப்படுகின்றன. இவற்றுக்கான கட்டணம் சாதாரணமாக 5 முதல் 8 அமெரிக்கன் டாலர்கள் வரை இருக்கலாம். அதாவது ஏறக்குறைய 350 முதல், 500ரூ வரை இருக்கலாம்.

Ankur P

இயற்கை

இயற்கை

கட்டுமரப்படகு மூலமாகவும் இயற்கையை ரசித்தபடியே பயணிக்கலாம். ஆனால் இதற்கு கொஞ்சம் கூடுதலாக செலவாகும். நேரம் ரொம்பக்குறைவாக இருக்கிறதே என்பவர்களுக்காக ‘பவான் ஹான்ஸ்' ஹெலிகாப்டர் சேவைகளும் போர்ட் பிளேரிலிருந்து ஹேவ்லாக் தீவுக்கு கிடைக்கின்றன. ஹேவ்லாக் தீவுக்கு சென்றடைந்தபின் கால்நடையாகவே சுற்றித்திரிந்து தீவின் அழகம்சங்களையும், கடற்கரைகளையும், குடில்களையும், கடைகளையும் நிதானமாக பார்த்து ரசிப்பது நல்லது. ராதாநகர் கடற்கரைப்பகுதியில் ஸ்படிகம் போன்று மரகதப்பச்சை ஜொலிப்புடன் மின்னும் கடல்நீருக்கு அடியில் காட்சியளிக்கும் பவளப்பாறை வளர்ச்சிகளை விதவிதமான வடிவங்களில் கண்டு மகிழலாம்.

Jpatokal

ராதா நகர்

ராதா நகர்


ஒரு மதிய நேரத்தை இந்த கடற்கரையில் கழித்துவிட்டு உள்ளூர் கடலுணவையும் ருசித்து முடிக்கும்போது ‘இது போதும் வாழ்க்கையில்' என்று மனம் கிளர்ச்சியடைவதை உணரலாம். ராதா நகர் கடற்கரைக்கு அருகில் ‘எலிபேண்ட் பீச்' என்ற மற்றொரு அழகிய கடற்கரையும் உள்ளது. நடந்தே இந்த கடற்கரைக்கு செல்ல முடியும் என்பதோடு மட்டுமல்லாமல் ராதா நகர் கடற்கரையிலிருந்து இந்த ‘எலிபேண்ட் பீச்' கடற்கரைக்கும் நடந்து செல்லும் அனுபவம் உங்களை மேகத்தில் மிதப்பது போன்ற உவகைக்கு இழுத்து செல்லும் என்பதிலும் சந்தேகமில்லை. அப்படி ஒரு இயற்கை பரிசத்தை இந்த கடற்கரை நடைப்பயணத்தில் உங்களால் உணரமுடியும்.

Sankara Subramanian

 சுதந்திரமாக சுற்றிவரலாம்

சுதந்திரமாக சுற்றிவரலாம்

நடக்க முடியாதவர்கள் 100 ரூபாய் கட்டணத்தில் ஆட்டோ மூலமாகவும் செல்லலாம். அது மட்டுமல்லாமல் இங்கு டாக்சி வசதிகள் மற்றும் வாடகை ஸ்கூட்டர்கள் போன்றவையும் ‘ஒரு நாள் வாடகை'க்கு குறைந்த கட்டணத்தில் (200 ரூபாய்) கிடைக்கின்றன. சுதந்திரமாக நம் விருப்பம்போல் தீவை சுற்றிவருவதற்கு இந்த வாகன வசதிகள் ஏற்றவையாக உள்ளன.

Ankur P

ஸ்கூபா டைவிங்

ஸ்கூபா டைவிங்

அந்தமான் தீவுகளின் சிறப்பம்சமான ‘ஸ்கூபா டைவிங்' இந்த ஹேவ்லாக் தீவிலும் பிரதான சுற்றுலா அம்சமாக விளங்குகிறது. இருப்பினும் அதிக ஆழத்திற்கு டைவிங் செய்ய தேவைப்படும் வசதிகளான ‘ஸ்பீட் போட்' எனப்படும் அதிவேக மோட்டார் படகுகள் மற்றும் ‘டிகம்ப்ரஷன் சேம்பர்கள்' போன்றவை அந்தமான் தீவுகளில் இல்லை. பொதுவாக, முதல் முறை டைவிங் செய்பவர்கள், கொஞ்சம் அனுபவம் மிக்கவர்கள் மற்றும் நிறைய அனுபவம் உள்ள சாகசவிரும்பிகள் என்று மூன்று தரப்பினருக்கான ‘ஸ்கூபா டைவிங்' கடல் மூழ்கு பயண வசதிகள் இந்த தீவில் வழங்கப்படுகின்றன. இவை யாவுமே குறைந்த கட்டணங்களை கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Joseph Jayanth

படிகத்தெளிவுடன் காட்சியளிக்கும் நீர்

படிகத்தெளிவுடன் காட்சியளிக்கும் நீர்

படிகத்தெளிவுடன் காட்சியளிக்கும் நீருக்கடியில் மூழ்கி விதவிதமான வண்ண மீன்கள், கடல் உயிரினங்கள், தாவரங்கள் மற்றும் வித்தியாசமான தோற்றத்துடன் அசையும் பவளப்பாறை வளர்ச்சிகள் போன்றவற்றை கண்ணுக்கருகே ரசிக்கும் அனுபவத்துக்கு ஈடு இணை எதுவுமேயில்லை என்பதை ஹேவ்லாக் தீவில் ஒரு முறை டைவிங் பயணம் மேற்கொண்டபிறகு ஒப்புக்கொள்வீர்கள்.

Ggerdel

 மலையேற்ற சுற்றுலா

மலையேற்ற சுற்றுலா

‘ஸ்கூபா டைவிங்'கிற்கு அடுத்தபடியாக டிரெக்கிங் எனப்படும் மலையேற்றத்துக்கும் இந்த ஹேவ்லாக் தீவு பிரசித்தி பெற்றுள்ளது. சுற்றுலாப்பயணிகளுக்காகவே வழிகாட்டிகளின் கூடிய ஒருங்கிணைந்த மலையேற்ற சுற்றுலா சேவைகளை பல்வேறு தனியார் சுற்றுலா நிறுவனங்கள் வழங்குகின்றன.

Joshua Eckert

 பிஜோய் நகர்

பிஜோய் நகர்

மணலையும், சூரியனையும், மரகதப்பச்சை நீரையும் போதுமென்றளவுக்கு ரசித்தபின் இங்குள்ள பிஜோய் நகர் எனப்படும் கிராமப்பகுதியில் உள்ளூர் ஞாபகார்த்த கைவினைப்பொருட்கள் மற்றும் கடற்சிப்பிகளில் செய்யப்பட்ட பரிசுப்பொருட்கள் போன்றவற்றை வாங்கிக்கொள்ளலாம். மறக்காமல் வேண்டுமென்ற அளவுக்கு இளநீரை ருசி பார்க்கவும் மறக்க வேண்டாம். இது மட்டுமன்றி உற்சாக மதுபானங்கள் மற்றும் பீர் போன்றவையும் இங்குள்ள உணவகங்களில் பரிமாறப்படுகின்றன. இந்திய யூனியன் பிரதேசம் என்பதால் இவற்றின் விலையும் அதிகமாக இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்