Search
  • Follow NativePlanet
Share
» »மூன்று நதிகள் கலக்குமிடத்தில் இரட்டை கிராமம் - சத்ரபதி சிவாஜியின் வாரிசு

மூன்று நதிகள் கலக்குமிடத்தில் இரட்டை கிராமம் - சத்ரபதி சிவாஜியின் வாரிசு

மூன்று நதிகள் கலக்குமிடத்தில் ஒரு இரட்டை கிராமம் அது பேசும் இந்திய வரலாறு, தெரிந்துகொள்ள நீங்கள் இந்த கட்டுரையை முழுவதும் படித்தாகவேண்டும். அதிலும் சத்ரபதி சிவாஜியின் மகன் பற்றிய ஒரு முக்கிய தகவலும் இ

By Udhaya

மூன்று நதிகள் கலக்குமிடத்தில் ஒரு இரட்டை கிராமம் அது பேசும் இந்திய வரலாறு, தெரிந்துகொள்ள நீங்கள் இந்த கட்டுரையை முழுவதும் படித்தாகவேண்டும். அதிலும் சத்ரபதி சிவாஜியின் மகன் பற்றிய ஒரு முக்கிய தகவலும் இங்கு இருக்கிறது.

மகாராஷ்டிர மாநிலம் பூனேவிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில், பிரம்மா, பாமா, இந்திராணி ஆகிய மூன்று நதிகளும் சங்கமிக்கும் இடத்தில் அழகே உருவாய் வது மற்றும் துலாப்பூர் கிராமங்கள் காட்சியளித்துக் கொண்டிருக்கின்றன. இந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த சின்னஞ்சிறிய கிராமங்களில்தான் சத்ரபதி சிவாஜியின் மகன் சம்பாஜி மகாராஜா தன் வாழ்கையின் இறுதி கணங்களை கழித்தார்.

 நாகர்காவ்ன்

நாகர்காவ்ன்

இந்த இரு கிராமங்களில் துலாப்பூர் கிராமம் நாகர்காவ்ன் என்ற பெயரில் முன்பு அழைக்கப்பட்டது. இன்னொரு புறம் வதுவில்தான் சம்பாஜி மகாராஜா மற்றும் அவர் நண்பர் கவி கலாஷ் ஆகியோரின் சமாதிகள் இருக்கின்றன. வரலாற்று முக்கியத்துவம் வது மற்றும் துலாப்பூர் ஆகிய இரு கிராமங்களும் வரலாற்றின் அத்தியாயத்தில், மராட்டிய ஆட்சியை பற்றிய பக்கங்களில் முக்கியமான பதிவுகள். மேற்கூறியது போல், இந்த சிறிய கிராமங்களில் வாழ்ந்த சம்பாஜி மகாராஜா துலாப்பூரில் தான் வீர மரணம் அடைந்தார்.

Nipunbayas

சம்பாஜி மகாராஜாவின் சமாதி

சம்பாஜி மகாராஜாவின் சமாதி

அதேநேரத்தில், அவர் எரியூட்டப்பட்டது வது கிராமத்தில். இதன் காரணாமாக சம்பாஜி மகாராஜாவின் சமாதியும் வதுவிலேயே அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ரான்ஸ்தம்ப் எனும் பெயரில் போர் நினைவுச் சின்னம் ஒன்றும் இங்கு கட்டப்பட்டுள்ளது. இது 1822-ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களுடன் நடந்த இறுதிப் போரில் உயிர் நீத்த மராட்டிய வீரர்களின் நினைவாக எழுப்பப்பட்டுள்ளது.

Vivekgupta94

பார்க்கவேண்டிய இடங்கள்

பார்க்கவேண்டிய இடங்கள்

இரட்டை கிராமங்களில் பார்க்கவேண்டிய இடங்கள் துலாப்பூரின் புகழுக்கு முக்கிய காரணமாக விளங்கி வருவது சங்கமேஸ்வரர் கோயிலே ஆகும். இக்கோயில் சிவபெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. இந்த கோயிலுக்கு நாடு முழுவதிலுமிருந்து ஏராளமான பயணிகள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர். அதிலும் குறிப்பாக விசேஷ நாட்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும். இதை சுற்றியுள்ள பகுதிகளில் தான் சம்பாஜி மகாராஜா, முகாலய மன்னன் ஔரங்கஜிப்பால் கொல்லப்பட்டார். இந்திய வரலாற்றில் முக்கியமான இந்த இரு கிராமங்களும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்கள்.

Shrads1984

 யார் இந்த சம்பாஜி மகாராஜா

யார் இந்த சம்பாஜி மகாராஜா

துலாப்பூரின் சங்கமேஸ்வரர் கோயிலுக்கு அருகாமை பகுதிகளில் மாவீரர் சிவாஜியின் மகன் சம்பாஜி மகாராஜாவின் சமாதி இருக்கிறது. இங்கு சம்பாஜி மகாராஜாவின் கம்பீரமான சிலை ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது. இந்த சமாதி சம்பாஜி மகாராஜா, முகாலய மன்னர் ஔரங்கஜிப்பால் கொல்லப்பட்ட பின் கட்டப்பட்டிருக்கிறது.சம்பாஜி மகாராஜாவுக்கு 'தரம் வீர்' என்ற சிறப்புப் பெயரும் உண்டு. இதற்கு மதத்தின் காவலன் என்று அர்த்தம்.

sathellite

Read more about: travel temple
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X