Search
  • Follow NativePlanet
Share
» »ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு – விலையுயர்த்தப்பட்ட சிறப்பு தரிசன டிக்கெட்டுகள்!

ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு – விலையுயர்த்தப்பட்ட சிறப்பு தரிசன டிக்கெட்டுகள்!

108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றி வணங்கப்படுவதுமான ஸ்ரீரங்கம் அருள்மிகு ரெங்கநாதர் ஆலயத்தின் முக்கியவிழாவான வைகுண்ட ஏகாதசி எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு திருவிழா ஜனவரி 2 அன்று வெகு விமர்சியாக நடைபெற உள்ளது. நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் இந்த வைகுண்ட வாசல் திறப்பு விழாவிற்கு மக்கள் வருகை தருவது வழக்கம். இந்நிலையில் வைகுண்ட ஏகாதேசி சிறப்பு கட்டணத்தை இந்து சமய அறநிலையத்துறை உயர்த்தியுள்ளது! இதற்கு பல்வேறு தரப்பில் ஆதரவும் எதிர்ப்பும் எழுந்து வருகிறது!

வைகுண்ட ஏகாதேசி சிறப்பு தரிசனம்

வைகுண்ட ஏகாதேசி சிறப்பு தரிசனம்

ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதேசி விழா பகல்பத்து இரவுபத்து உற்சவம் என 22 நாட்கள் நடைபெறும். இந்நிலையில் ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதசுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதேசி விழாவை முன்னிட்டு சிறப்பு தரிசன டிக்கெட் கட்டணத்தை இந்து சமய அறநிலையத்துறை உயர்த்தியுள்ளது. சாந்தனு மண்டபத்தில் இருந்து வழிபாட்டிற்காக மொத்தம் 300 டிக்கெட்டுகளும், கிளி மண்டபத்திற்கு 1000 டிக்கெட்டுகளும் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வழக்கமாக விற்கப்படும். ஸ்ரீரங்கம் கோவிலில் ஆன்லைன் முன்பதிவு வசதி தற்போது இல்லை. கோவிலுக்கு நேரடியாக சென்று டிக்கெட்டுகளைப் பெற்று கொள்ளலாம்.

2022 ஆம் ஆண்டு வைகுண்ட ஏகாதேசி காலெண்டர்

2022 ஆம் ஆண்டு வைகுண்ட ஏகாதேசி காலெண்டர்

இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதேசி வருகின்ற 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் தேதி (திங்கள் கிழமை) அன்று வருகிறது. முத்தங்கி சேவையில் பங்கேற்கும் பக்தர்கள் டிசம்பர் 23, 2022 முதல் ஜனவரி 11, 2023 ஆகிய இடைப்பட்ட தேதிகளில் கலந்துக்கொண்டு அரங்கனின் ஆசிகளைப் பெறலாம்.

22 டிசம்பர், 2022 - திருநெடுந்தாண்டகம்

23 டிசம்பர், 2022 - பகல்பத்து உற்சவம் ஆரம்பம்

1 ஜனவரி 2023 - நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் அருள் பாலிக்கிறார்

2 ஜனவரி 2023 - அதிகாலை 4.45 மணியளவில் பரமபத வாசல் (சொர்க்கவாசல்) திறப்பு, இரவுபத்து உற்சவம் ஆரம்பம்

8 ஜனவரி 2023 - நம்மாழ்வார் மோகினி அலங்காரத்தில் திருக்கைத்தல சேவை

9 ஜனவரி 2023 - திருமங்கை மன்னன் வேடுபரி - நம்பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளதல்

11 ஜனவரி 2023 - தீர்த்தவாரி

12 ஜனவரி 2023 - காலை நம்மாழ்வார் மோட்சத்திலும், மாலை இயற்ப சத்திரமுறையிலும் இருப்பார்.

இத்துடன் வைகுண்ட ஏகாதேசி பெருவிழ முடிவுக்கு வருகிறது.

உயர்ந்த சிறப்பு தரிசன டிக்கெட் கட்டணங்கள்

உயர்ந்த சிறப்பு தரிசன டிக்கெட் கட்டணங்கள்

இந்நிலையில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட் கட்டணத்தை இந்து சமய அறநிலை துறை உயர்த்த முடிவு செய்துள்ளது. வைகுண்ட ஏகாதசி விழாவின் போது கிளி மண்டபத்திலிருந்து தரிசனம் செய்ய ஒரு நபருக்கு ரூ. 500, சாந்தனு மண்டபத்தில் இருந்து ஊர்வலத்தை தரிசிக்க ரூ.3000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இப்பொழுது கிளி மண்டப சிறப்பு தரிசன கட்டணம் ரூ. 500 லிருந்து ரூ.1000 ஆகவும், சாந்தனு மண்டப கட்டணம் ரூ.3000 லிருந்து ரூ. 5000 ஆகவும் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

10 ஆண்டுகளாக உயர்த்தப்படாத கட்டணம்

10 ஆண்டுகளாக உயர்த்தப்படாத கட்டணம்

கடந்த பத்தாண்டுகளாகவே இந்த கட்டணமே வசூலிக்கப்பட்டு இருப்பதால், நீண்ட இடைவெளிக்கு பின்னர் இப்போது தரிசன கட்டணம் உயர்த்தப்படுகிறது. இந்தக் கட்டண உயர்வு தொடர்பாக கருத்து தெரிவிக்க பக்தர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் எந்தவித எதிர்ப்பும் அல்லது கருத்துக்களும் வரவில்லை என்பதால் திட்டமிட்டபடி கட்டணத்தை உயர்த்தப்பட்டுள்ளது என கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு தவிர்க்க முடியாததது என்றும் கோவில் நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

கொரானா கட்டுப்பாடுகள் இன்றி வைகுண்ட ஏகாதேசி

கொரானா கட்டுப்பாடுகள் இன்றி வைகுண்ட ஏகாதேசி

வைகுண்ட ஏகாதேசியின் போது விஐபி தரும் சிறப்பு தரிசனத்தால் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் சாதாரண பக்தர்கள் பாதிக்கப்படுகிறார்கள். அனைவருக்கும் ஒரே மாதிரியான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 2019 க்குப் பிறகு எந்த கோவிட் கட்டுப்பாடுகளும் இல்லாமல் டிசம்பர் 2022 முதல் ஜனவரி 2023 வரை வைகுண்ட ஏகாதேசி விழா திட்டமிடப்பட்டுள்ளது. மோட்சம் தரும் இந்த பெருவிழாவில் நீங்களும் கலந்துக் கொண்டு நம்பெருமாளின் ஆசிப் பெற்றிடுங்கள்!

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X