Search
  • Follow NativePlanet
Share
» »இப்படி ஒரு இடத்த இந்தியாவுல வேறெங்கும் பாத்துருக்கமாட்டீங்க!

இப்படி ஒரு இடத்த இந்தியாவுல வேறெங்கும் பாத்துருக்கமாட்டீங்க!

பூக்கள் என்றால் யாருக்குதான் பிடிக்காது. அதிலும் ஒரு இடத்தில் கோடிக்கணக்கான பூக்கள் இருந்தால், அவற்றை மிக அருகில் இருந்து நீங்கள் பார்க்கலாம் என்றால், அந்த பயணத்துக்கு நீங்கள் தயாராகிவிடுவீர்கள் தானே.

By Udhaya

பூக்கள் என்றால் யாருக்குதான் பிடிக்காது. அதிலும் ஒரு இடத்தில் கோடிக்கணக்கான பூக்கள் இருந்தால், அவற்றை மிக அருகில் இருந்து நீங்கள் பார்க்கலாம் என்றால், அந்த பயணத்துக்கு நீங்கள் தயாராகிவிடுவீர்கள் தானே. எவ்வளவு தொலைவு என்பது கவனத்தில் கொள்ளப்படவேண்டிய விசயம்தான். ஆனாலும், இப்படி ஒரு சொர்க்க வாசலுக்கு செல்ல, தொலைவுகளை மறந்து பயணிப்போம். வாருங்கள்.

திட்டமிடல்

திட்டமிடல்


விமானம், ரயில், பேருந்து, வாடகை வண்டிகள் ஆகியவற்றை முதலிலேயே திட்டமிட்டுக்கொள்வது சிறந்தது.

சென்னை, கோவை, மதுரை என எந்த இடத்திலிருந்து நீங்கள் கிளம்புகிறீர்கள். அங்கிருந்து பயண வசதிகள் என்னென்ன என்பது பற்றியும் நாம் கட்டாயம் தெரிந்துவைத்துக்கொள்ள வேண்டும் .

சென்னை விமான நிலையத்திலிருந்து சென்றால் மேற்கு இமயமலைக்கு அருகில் இருக்கும் விமான நிலையத்தை அடைய வேண்டும். இங்குதான் பூக்களின் பள்ளத்தாக்கு இருக்கிறது.

இதன் அருகிலுள்ள விமான நிலையம் ஜாலி கிராண்ட், டேராடூன். சென்னையிலிருந்து டேராடூனுக்கு இந்தியாவின் முன்னணி நிறுவனங்களின் விமான சேவைகள் நிறைய இருக்கின்றன. சராசரியாக 4800 ரூபாயிலிருந்து அதிகபட்சம் 12 ஆயிரம் ரூபாய் வரை வசதிகளுக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குறைந்த பட்சம் 8 மணி நேரத்திலும், அதிகபட்சம் 15 மணி நேரத்திலும் டேராடூனை அடைய முடியும்.

ரயில் வழியாக

ரயில் வழியாக

ரயிலில் செல்வதென்றால், மதுரை டேராடூன் அதிவிரைவு வண்டி திங்கள் கிழமை தோறும் இயக்கப்படுகிறது. மதுரையிலிருந்து இயக்கப்படும் இந்த வண்டி சென்னை வழியாக செல்கிறது. மொத்தம் 43 மணி நேர பயணத்தில் நாம் டேராடூன் சென்றடையலாம்.

அல்லது சங்கிலி ரயில்கள் எனப்படும் இணைப்பு ரயில்கள் நிறைய இருக்கின்றன.

1 சென்னை - ஹரித்வார் - டேராடூன்

2 சென்னை - ஹவுரா - பாட்னா

3 சென்னை - நிசாமுதீன் டேராடூன்

4 முசிறி டீலக்ஸ்

5 ராஜுட்கல் சூப்பர்

6 திருவனந்தபுரம் பாட்னா

7 புதுச்சேரி சென்னை

இவ்வாறாக இன்னும் நிறைய ரயில்கள் இருக்கின்றன. இவற்றில் பயணித்தால் கொஞ்சம் நேரம் ஆனாலும் டேராடூன் சென்றடையலாம்.

PC: Dinesh Valke

சாலை வழியாக

சாலை வழியாக

சாலை வழியாகச் செல்வது ரிஸ்க் என்றாலும் பயணிப்பவர்கள் இல்லாமல் இல்லை. காரில் செல்வது ஆபத்தானது. ஏனென்றால் 40 மணி நேரம் பயணிக்கவேண்டும். 2394 கிமீ தூரம் வரை பயணித்தால் மட்டுமே நாம் டேராடூனை அடைய முடியும்.

நீங்கள் பயணிக்க விரும்பினால் அதற்கான திட்டமிடலையும் செய்யவேண்டும். உங்கள் வசதிக்காக பயணத்தை 8 இடங்களில் ஓய்வு தளமாக கொண்டு செல்லலாம். சென்னையிலிருந்து கிளம்பும் நேரத்தை பொறுத்து இந்த திட்டம் மாறுபடும். நாம் அதிகாலையில் 4 மணி அளவில் தொடங்குவதாய் கொள்வோம்.

PC: Dinesh Valke

 அதிகாலையில் பயணிப்பதன் பயன்கள்

அதிகாலையில் பயணிப்பதன் பயன்கள்


டிராபிக் இருக்காது

வேகமாக செல்லமுடியும்

விடிவதற்குள் நகரத்தை தாண்டி விடலாம்

சுத்தமான அமைதியான சூழ்நிலையை அனுபவிக்கவும் முடியும்.

PC: Ms Sarah Welch

வாருங்கள் தொடங்கலாம்....

வாருங்கள் தொடங்கலாம்....

அதிகாலை 4 மணிக்கு தொடங்கும் பயணம் விடிவதற்குள் தமிழகத்தை தாண்டி விடவேண்டும் என்ற நோக்கத்தில் இருக்கவேண்டும். காலை உணவுக்கென எதையும் ஏற்பாடு செய்யவேண்டாம். அத்தியாவசிய பொருள்களையும், டிரெக்கிங்குக்கு தேவையான பொருள்களையும் எடுத்துக்கொண்டு செல்வோம்.

டிரெக்கிங்க் தேவையான அத்தியாவசிய பொருள்களை கீழே காண்க

சென்னை - ஹைதராபாத்

சென்னையிலிருந்து ஹைதராபாத் 628 கிமீ தூரம் ஆகும்

பயண நேரம் 10 மணி முதல் 12 மணி நேரம் வரை ஆகலாம்

செல்லும் இடங்கள் - நெல்லூர், ஓங்கல், நல்கொண்டா

உணவு கிடைக்கும் இடங்கள் - தென் ஆந்திர மக்கள் பெரும்பாலும் தமிழகத்தின் உணவுகளை ஒத்தார்போல சமைக்கின்றனர். மேலும் இங்கு பல கடைகளில் நாம் தமிழ் உணவுகளை பெறலாம்.

போகும் வழியில் இருக்கும் சுற்றுலாத் தளங்கள் - பழவேற்காடு ஏரி, பறவைகள் சரணாலயம், நெல்லூர் ஆற்றங்கரை, ராமையாபட்டினம் கடற்கரை, பாவநாசி செருவு, எலச்சூர் ஏரி, வைப்பேறுலா குளக்கரை உள்பட பல ஆன்மீகத் தலங்களும் காணப்படுகின்றன.

 ஹைதராபாத்தில் நாம் காணவேண்டியவை

ஹைதராபாத்தில் நாம் காணவேண்டியவை

10 மணி நேர பயணத்துக்குப் பிறகு கொஞ்சம் ஓய்வு தேவை என நினைப்பவர்கள், ஹைதராபாத் பிரியாணி சாப்பிட்டுவிட்டு, கொஞ்சம் சாயலாம். அல்லது அருகிலுள்ள இடங்களைச் சுற்றிப்பார்க்கலாம்.

வரலாற்று அம்சங்கள் மற்றும் புதிய இடங்களை தரிசிக்கும் ஆர்வம் உள்ள எல்லாவகை பயணிகளுக்கும் ஏற்றதொரு சுற்றுலாத்தலமாக இது காட்சியளிக்கிறது. சார்மினார், கோல்கொண்டா கோட்டை, சலார் ஜங் மியூசியம் மற்று ஹுசேன் சாகர் ஏரி போன்றவை இந்நகரில் உள்ள மிக முக்கியமான சுற்றுலா அம்சங்களாகும்.

PC: Srikar Kashyap

ஹைதராபாத் - நாக்பூர்

ஹைதராபாத் - நாக்பூர்

ஹைதராபாத்தில் சிறிது நேர ஓய்வுக்கு பின் நம்ம பயணத்தை தொடரலாம். கொஞ்ச நேரம் ஓய்வெடுத்ததால் களைப்பு குறைந்து புத்துணர்ச்சி வந்திருக்கும். ஹைதராபாத் பிரியாணியுடன், அங்கு கிடைக்கும் பலூடாவையும் சுவைக்க மறந்து விடாதீர்கள்.

மொத்தம் 500 கிமீ பயணம் செய்து நாக்பூரை அடையலாம்.

பயண நேரம் - 9 மணி முதல் 10 மணி நேரங்கள் வரை ஆகலாம்

வழியில் காணும் இடங்கள் - கோதாவரி ஆறு, நிசாமாபாத், அடிலாபாத், பென்கங்கா, திப்பேஸ்வர் காட்டுயிர் வாழ்க்கை, கரஞ்சி, வாட்கி, ஹங்கங்காட், உன்னா அணை என ஏகப்பட்ட இடங்கள் இருக்கின்றன.

 நாக்பூரில் இருக்கும் இடங்கள்

நாக்பூரில் இருக்கும் இடங்கள்

மீண்டும் பத்து மணி நேரம் பயணித்திருப்பதால் நீங்கள் களைப்படைந்திருக்கக்கூடும். தேவையானவற்றை அருகில் வாங்கிக்கொள்ளுங்கள். சிறிது நேரம் ஓய்வெடுங்கள். நீண்ட தூர பயணத்துக்கு கண்டிப்பாக ஓய்வு தேவை. அதே நேரம் இரண்டுக்கும் மேற்பட்டவர்கள் வண்டி ஓட்டுவது முக்கியமானது.. ஒருவர் மாற்றி ஒருவர் வண்டியை ஓட்டுவதால்தான் உங்களின் கவனம் சாலையில் இருக்கும். ஒருவரே கடைசி வரை ஓட்டினால் களைப்படைந்துவிட வாய்ப்பிருக்கிறது.

நாக்பூரில் சுற்ற ஆசைப்படுபவர்களுக்கு நவேகான் தேசிய பூங்கா, சீதாபல்டீ கோட்டை, பெஞ்ச் தேசியப்பூங்கா போன்றவை நாக்பூர் அருகில் உள்ள முக்கியமான இடங்களாகும். இங்குள்ள தீக்‌ஷா பூமி எனும் இடத்தில் ஆயிரக்கணக்கான தலித் மக்கள் டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தலைமையில் புத்த மதத்தை தழுவிய வரலாற்று சம்பவம் நிகழ்ந்தது குறிப்பிடத் தக்கது. நாக்பூர் நகரத்தில் உள்ள தேசிய மையத்தில் ஜீரோ மைல் என்று குறிப்பிடப்படும் கற்தூண் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு இடையேயான தூரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த தூண் ஆங்கிலேயர் காலத்தில் நிறுவப்பட்டதாகும்.

நாக்பூர் சென்றால் நிச்சயம் அங்கு கிடைக்கும் பெயர் பெற்ற ஆரஞ்சுகளை சுவைக்காமல் வர முடியாது அதே போல இங்குள்ள கடைத் தெருக்கள் மற்றும் அங்காடிகள் போன்றவற்றில் எல்லாவகையான கலைப்பொருட்கள், பாரம்பரிய அடையாள பொருட்கள், பரிசுப்பொருட்கள் போன்றவை நிரம்பி கிடக்கின்றன. ஆரஞ்சு பழங்களைச் சுவைத்து கொஞ்சம் புத்துணர்ச்சியை பெறுங்கள்.

Cherishsantosh

 செல்லும் இடங்கள் சாகர், ஜான்சி, குவாலியர், ஆக்ரா, தில்லி

செல்லும் இடங்கள் சாகர், ஜான்சி, குவாலியர், ஆக்ரா, தில்லி

நாக்பூர் - புதுதில்லி

இந்த முறை கொஞ்சம் அதிக தூரம் பயணிக்கலாம். இடையில் சில நிமிடங்கள் இடைவெளிகளில் ஓரிரு இடங்களில் நிறுத்தி தேவையான பொருள்களையும் வாங்கிக்கொள்ளுங்கள். அதிகம் களைப்படையவேண்டாம். வாருங்கள் நாக்பூரிலிருந்து தில்லிக்கு பயணிக்கலாம்.

பயண தூரம் 1058 கிமீ

பயண நேரம் 18 மணிகள்


தில்லியில் நீங்கள் காணவேண்டிய தலங்கள்

தேசிய ரயில் அருங்காட்சியகம், குருவாயூரப்பன் கோயில், தேசிய விலங்கியல் பூங்கா, மோட் கி மஸ்ஜித், அகேரசன் கி பாவ்லி, நிஜாமுதீன் தர்கா, தேசிய அறிவியல் மையம், மில்லன்னியம் இந்திரபிரஸ்தா பூங்கா, தேசிய அருங்காட்சியகம், பழைய கோட்டை, கல்காஜி ஆலயம் என எக்கச்சக்க இடங்கள் இங்கு காணவேண்டியுள்ளது.

இங்கிருந்து கிளம்புவதற்கு முன் டெல்லி பரோட்டாவை சுவைக்க மறக்காதீர்கள்.

இனி இங்கிருந்து டேராடூன் செல்வது எப்படி என்பதை காணலாம்.

boldsky

டேராடூன்

டேராடூன்

டெல்லியிலிருந்து 5 முதல் 6 மணி நேரத்தில் டேராடூனை அடையலாம். டேராடூனில் நம் பயணம் ஆரம்பிக்க கொஞ்ச நேரம் வரை நாம் ஓய்வு எடுத்துக்கொள்ளலாம்.

அதற்குள் டேராடூனில் என்னவெல்லாம் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வோம். உத்தரகண்ட் பகுதியிலுள்ள முசூரி, நைனித்தால், ஹரித்வார், ஔலி மற்றும் ரிஷிகேஷ் போன்ற முக்கியமான யாத்ரீக ஸ்தலங்களுக்கான நுழைவாயிலாகவும் இந்த டேராடூன் விளங்கிவருகிறது.

பல அழகிய புராதனமான ஆன்மிகத்தலங்களும் டேராடூன் பகுதியில் அமைந்திருக்கின்றன. லக்‌ஷ்மண் சித் கோயில், தப்கேஷ்வர் மஹாதேவ் கோயில், சந்தளா தேவி கோயில் மற்றும் தபோவண் ஆகியவை இவற்றில் குறிப்பிடத்தக்கவை. தப்கேஷ்வர் மஹாதேவ் கோயில் என்பது சிவபெருமானுக்கான ஒரு புகழ்பெற்ற குகைக்கோயிலாகும். தபக் எனும் ஹிந்திச்சொல் ஒழுகுதலை குறிப்பிடுகிறது.

டிரெக்கிங் சம்பந்தமான தகவல்கள்

டிரெக்கிங் சம்பந்தமான தகவல்கள்

இது தனியார் கூட்டிச் செல்லும் டிரெக்கிங்க் அல்ல என்பதை மனிதில் கொள்ளுங்கள். திட்டமிடல் என்பது மிகவும் முக்கியம். பயண நேரம், தங்கும் இடம் நேரம், உணவு என்பது நீங்கள் கட்டாயம் கவனத்தில் கொள்ளவேண்டியவை,

உங்களுக்காக ஒரு சேம்பிள் திட்டமிடலை உருவாக்கியுள்ளோம். நேரத்தை பொறுத்து நீங்கள் பயணிக்கலாம்.

நாள் 1

ஹரித்வார் - கோவிந்த்காட் - கங்காரியா

நாள் 2

கங்காரியா - பூக்களின் பள்ளத்தாக்கு

நாள் 3

அருகிலுள்ள இடங்களுக்கு செல்வது

நாள் 5

மீண்டும் வீடு நோக்கி புறப்படுதல்.

ஹரித்வார் டூ கங்காரியா

ஹரித்வார் டூ கங்காரியா

ஹரித்வார் டூ கங்காரியா என்பது ஒரு கடினமான பாதையாக தெரியலாம். உங்களுடன் முன் அனுபவம் கொண்ட சிலர் பயணிக்க வாய்ப்பிருக்கிறது. அவர்களிடம் நீங்கள் உதவி கோரலாம்.

காலை 6 மணிக்கு ஹரித்வார் ரயில் நிலையத்திலிருந்து கோவிந்த் கட் நோக்கி பயணிக்கிறோம். இது 260கிமீ தூரம் கொண்ட பயணம். பாகிரதி, அலக்நந்தா ஆறு உள்ளிட்ட சில இயற்கை அம்சங்களை கண்டு ரசித்த பின்பு, ஜோஷிமத்தில் கொஞ்சம் ஆன்மீகத்தையும் உணரலாம். இல்லை எனில் வெளியில் சுற்றிப்பார்க்க செல்லலாம்.

பின் 14 கிமீ அளவுக்கு மலை ஏற்றம் செய்யவேண்டும். உத்தராஞ்சல் மாவட்ட மலைகள் மிகவும் சாகசமான உணர்வை உங்களுக்குள் தோற்றுவிக்கும். இப்படி முதல் நாள் உங்களுக்கு போதுமானதாக அமையும், பின் ஓய்வெடுங்கள். நாளை பூக்களின் பள்ளத்தாக்குக்கு செல்வோம்.

Dana

பூக்களின் பள்ளத்தாக்கு

பூக்களின் பள்ளத்தாக்கு

கங்காரியாவிலிருந்து 5 கிமீ தொலைவு பயணம் செய்தாலே பூக்களின் பள்ளத்தாக்கை அடைய முடியும். காலை உணவு முடித்தபின் 3858மீ உயரத்தில் இருக்கும் பூக்களின் பள்ளத்தாக்கை காண செல்கிறோம்.

உங்கள் கண்களுக்கு ஒரு விருந்து என்றுதான் சொல்லவேண்டும். உங்களுக்கு பிடித்த உணவுப் பொருள் எது அல்லது நீர் ஆகாரம். வெய்யிலில் நிறைய தூரம் நடந்து பின் களைப்பாகி அமர்ந்திருக்கையில் மிளகாயுடன் கொத்தமல்லி தழை சேர்த்து இட்டு கலக்கித் தந்த மோரை குடிப்பது என்பது நம் வாய்க்கு எப்படி இருக்குமோ, அதை விட இரட்டை சந்தோசத்தை தரும் நீங்கள் பார்க்கும் இந்த பள்ளத்தாக்கு.

ஒரு நிமிடம் கண்ணை மூடி இந்த பள்ளத்தாக்குக்கு நேரிலேயே சென்றது போல உணருங்கள். அதுதான்.. இந்த பள்ளத்தாக்கின் அற்புதம்.

இனி வந்த வழியே திரும்பி வீடு செல்லுங்கள். மீண்டும் வேறொரு டிரெக்கிங்க் திட்டத்தோட உங்கள சந்திக்கிறேன்.. மறக்காம உடனடி அப்டேட்களுக்கு மேல இருக்குற பெல் பட்டன கிளிக் பண்ணுங்க....


Sidhusavi

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X