» » குருப்பெயர்ச்சி முதல் வெள்ளி: உங்கள் காட்டிலும் மழை கொட்டும் இந்த தலங்களுக்குப் போனால்!

குருப்பெயர்ச்சி முதல் வெள்ளி: உங்கள் காட்டிலும் மழை கொட்டும் இந்த தலங்களுக்குப் போனால்!

Posted By: Udhaya

நவக்கிரகங்கள் இயங்கிக்கொண்டே இருக்கின்றன. சூரியன் மாதம் ஒருமுறையும், சந்திரன் இரண்டே கால் நாளிலும், செவ்வாய் ஒன்றரை மாதத்திலும், புதனும், சுக்கிரனும் ஒரு மாதத்திலும், குரு ஆண்டுக்கு ஒருமுறையும், சனீஸ்வரர் இரண்டரை ஆண்டுக்கு ஒருமுறையும், ராகுவும் கேதுவும் ஒன்றரை ஆண்டுக்கு ஒருமுறையும் ஒரு ராசியை விட்டு அடுத்த ராசிக்குப் பெயர்ச்சி அடைகின்றனர்.

இந்த ஆண்டு கடந்த சனிக்கிழமை (செப் 2) கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு இடம் பெயர்ந்தார். இந்த குருப்பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு வளத்தையும், இன்பத்தையும் அள்ளிக்கொடுக்கப்போகிறது. அதை முழுமையாக அடைய குரு தலங்களுக்குச் சென்று குரு பகவானை வணங்கி வரவேண்டும்.

இந்த குருப்பெயர்ச்சிக்குப் பிறகு வரும் முதல் வெள்ளிக்கிழமை என்பதால் இன்று மிகவும் விசேசமான நாளாகும். கும்பம், மகரம், கன்னி முதலிய ராசிக்காரர்கள் மிகவும் பலனடைவீர்கள். உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான நாளாக அமைகிறது. மேலும் சில ராசிக்காரர்களுக்கு கடினமான திசையாக இருக்கும். அதற்காக கலங்கவேண்டாம். கீழ்க்காணும் திருத்தலங்களுக்குச் சென்று வந்தால் வேண்டிய பலன் கிட்டும்.

குருப்பெயர்ச்சி 2017

குருப்பெயர்ச்சி 2017

நவகிரகப் பெயர்ச்சிகளில் குரு மற்றும் சனி பகவானின் பெயர்ச்சிகள் பக்தர்களால் பெரிதும் கவனிக்கப்படுகின்றன. குருவைப் பொறுத்தமட்டில், பெயர்ச்சி ஆவதற்கு முன்னரே பெயர்ச்சி பலன்களைக் காட்டிவிடக் கூடியவர். குரு பார்க்க கோடி நன்மை. மனிதர்களை நல்வழிப்படுத்துவதில் குரு பகவானுக்கு நிகர் யாரும் இல்லை. பிரம்மனின் மானச புத்திரர்களின் ஒருவரான ஆங்கீரச முனிவருக்கும், வசுதாவுக்கும் பிறந்த ஏழாவது குழந்தை. அறிவிலே மேம்பட்டவர்.

குருப்பெயர்ச்சி 2017

குருப்பெயர்ச்சி 2017


வியாழக்கிழமை விரதம் கடைபிடித்தால், குரு பகவானின் சக்தியால் வாழ்க்கையில் அனைத்து துறைகளிலும் வெற்றிபெறலாம். குருவின் பார்வை நல்ல இடத்தில் அமைந்தால் சகல நன்மைகளும் கிடைக்கும். குரு பார்வை சரி இல்லாதவர்கள் அவருக்கு சாந்தியும், பூஜையும் செய்வது நல்லது. வியாழக்கிழமை விரதம் இருக்க வேண்டும். குரு ஒரு ராசியில் ஓர் ஆண்டு தங்கி தன் கடமையை செய்கிறார். அதன்படி ராசி சக்கரத்தை கடக்க பன்னிரெண்டு ஆண்டுகளாகின்றன.

குருப்பெயர்ச்சி 2017

குருப்பெயர்ச்சி 2017

பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை குரு பகவான் மகம் நட்சத்திரத்திலே சஞ்சரிக்கும் போதுதான் மகா மகம் நடக்கிறது. குருப்பெயர்ச்சி நிகழ்ந்து ஒரு வாரம் ஆகியுள்ள நிலையில் இந்த மூன்று ராசிக்காரர்களுக்கும் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டும் என்றும், அந்த நான்கு ராசிக்காரர்களுக்கும் உடல்நலம், பணம் போன்றவற்றில் பிரச்சனை வருமென்றும் கூறியிருந்தோம். பலன்களை பெறவும், பரிகாரங்கள் செய்து நன்மை பெறவும் இந்தந்த கோயில்களுக்கு செல்லவேண்டும்.

ஆலங்குடி

ஆலங்குடி


நவக்கிரக ஸ்தலங்களில் ஆலங்குடி குரு ஸ்தலமாக விளங்குகிறது. குரு பரிகாரத் தலமாக விளங்கும் ஆலங்குடி மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் பெருமையுடையதாகும். மேலும் இத்தலம் பஞ்ச ஆரண்யத் தலங்களில் ஒன்றாகும். இத்தலத்தில் சாயரட்சை பூஜை காலத்தில் இறைவனை தரிசிப்பது விசேஷமாக கருதப்படுகிறது.

ஆபத்சகாயேஸ்வரர்

ஆபத்சகாயேஸ்வரர்

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அடுத்த ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயில் குரு பரிகார ஸ்தலமாகும்.

வசிஷ்டேஸ்வரர் கோயில்

வசிஷ்டேஸ்வரர் கோயில்


தஞ்சை அடுத்த திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயில் தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலம்.

B Jambulingam

திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில்

திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில்


முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாவதான திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில், குருபகவானின் பரிகாரத்துக்கு அவசியம் தரிசிக்கப்பட வேண்டிய தலம்.

Sa.balamurugan

மயூரநாதர்

மயூரநாதர்

மயிலாடுதுறையில் கோயில் கொண்டுள்ள மயூரநாதரை குரு பகவான் வழிபட்டதாக ஐதீகம். இங்கு தட்சிணாமூர்த்தியாக அருள் பொழியும் குரு பகவானையும், உத்திர மாயூரம் என்று அழைக்கப்படும் வள்ளர் கோயிலில் தட்சிணாமூர்த்தியாக ரிஷப தேவருக்கு உபதேசம் செய்யும் மேதா தட்சிணாமூர்த்திப் பெருமாளையும் வழிபட குரு தோஷங்கள் நிவர்த்தியாகும். காசிக்கு நிகரான ஆறு தலங்களில் மயிலாடுதுறையும் ஒன்று.

Ssriram mt

தேவகுருநாதன்

தேவகுருநாதன்


திருத்துறைப்பூண்டியில் இருந்து கீவளூர் செல்லும் பாதையில் உள்ளது தேவூர் . இத்தலத்து இறைவனுக்கு தேவகுருநாதன் என்றுபெயர். குருபகவான் வழிபட்ட தலம் இது. இங்கு குரு பகவானுக்கு தனி சன்னதி உள்ளது.

Borayin Maitreya Larios

கோபேஸ்வரர் கோயில்

கோபேஸ்வரர் கோயில்


கும்பகோணத்தில் மகாமகக் குளமான பொற்றாமரைக் குளத்தின் வடகரையில் உள்ள கோபேஸ்வரர் கோயில் குரு பரிகாரத்திற்கு ஏற்ற கோயில். குருபகவான் வழிபட்ட தலங்களில் இதுவும் ஒன்று. இங்குள்ள இறைவனை காசி விஸ்வநாதர் என்றும், காசி விசாலாட்சி, தேனார் மொழி என்றும் அழைக்கிறார்கள்.

Ssriram mt -

தக்கோலம்

தக்கோலம்


வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம் - பேரம்பாக்கம் வழியில் தக்கோலம் உள்ளது. வலது காலைத் தரையில் ஊன்றி, இடது காலை மடித்து அமர்ந்திருக்கிறார். வலது கை சின்முத்திரை காட்ட, வலது பின்கை ருத்ராட்ச மாலையை ஏந்தியுள்ளது. இடது முன் கையில் சுவடி, இடது பின்கையில் ஞான தீபம். தலையைச் சற்றே வலதுபுறம் சாய்த்த நிலையில் ‘உத்கடி' ஆசனத்தில் அமர்ந்த திருவுருவை இங்கு தரிசிக்கலாம்.

குருவித்துறை

குருவித்துறை


மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகில் உள்ள குருவித்துறை, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகில் உள்ள பட்டமங்கலம் உள்ளிட்ட ஆலயங்களில் பரிகார பூஜைகள் செய்து வழிபடலாம். நவ திருப்பதிகளில் ஒன்றான ஆழ்வார் திருநகரி குரு ஸ்தலமாகும். அங்கும் வழிபாடு செய்யலாம்.

 திருவொற்றியூர் வடிவுடையம்மன்

திருவொற்றியூர் வடிவுடையம்மன்

சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலுக்கு முன்பு தட்சிணா மூர்த்திக்கு தனிக் கோயில் உள்ளது. சுமார் 10 அடி உயரத்தில் அற்புதமான வடிவழகுடன் அருள் ததும்பும் திருமுகத்தோடு வீற்றிருக்கிறார். ஆலமரம் இவருக்கு குடை பிடிப்பதுபோல அமைந்துள்ளது.

Ssriram mt

 திருவலிதாயம் திருக்கோயில்

திருவலிதாயம் திருக்கோயில்

சென்னை பாடியில் உள்ளது திருவலிதாயம் திருக்கோயில். மிகவும் தொன்மையான இத்தலத்தில் வீராசன கோலத்தில் (வ்யாக்யான)தட்சிணாமூர்த்தி அருள்கிறார். உடல் எந்தவித வளைவுகளும் இல்லாது சமபங்க நிலையில் உள்ளது. புலித்தோல் தரித்து, பூணூல் அணிந்துள்ளார்.

Jai Sankar R

கோவிந்தவாடி

கோவிந்தவாடி

காஞ்சிபுரம் - அரக்கோணம் பேருந்து வழியில் கம்மவார்பாளையம் நிறுத்தத் தில் இறங்கி அகரம் கோவிந்தவாடி கோயிலுக்குச் செல்லலாம். இத்தலத் திலும் தட்சிணாமூர்த்தியே குருவாக அருளாட்சி புரிகிறார்.

சுருட்டப்பள்ளி நஞ்சுண்டேஸ்வரர்

சுருட்டப்பள்ளி நஞ்சுண்டேஸ்வரர்


ஆந்திர மாநில எல்லையில் உள்ளது சுருட்டப்பள்ளி நஞ்சுண்டேஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தில் குரு பகவான், தாம்பத்ய தட்சிணாமூர்த்தியாக அருள்கிறார்.

Iramuthusamy

நவகிரக சன்னதி

நவகிரக சன்னதி


குருபகவானை வணங்க தனியாக பரிகார தலங்களுக்கு செல்ல முடியாதவர்கள் சிவ ஆலயங்களில் உள்ள நவகிரக சன்னதியில் உள்ள குருபகவானை வியாழக்கிழமை தோறும் வழிபடலாம். தட்சிணாமூர்த்திக்கு குரு ஹோரையில் விளக்கேற்றி வழிபடலாம்.

Read more about: travel temple

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்