» »இந்த சேச்சி மட்டுமில்ல இவங்க ஊரும் ரெம்ப ஸ்பெஷல்! ஏன் தெரியுமா?

இந்த சேச்சி மட்டுமில்ல இவங்க ஊரும் ரெம்ப ஸ்பெஷல்! ஏன் தெரியுமா?

Written By: Udhaya

நீங்க நெட்டிசனா? உங்களோட ஒரு நாள்ல அதிக நேரம் பேஸ்புக்லயும், வாட்ஸ்சாப்லயும் தான் கழியுதா? அப்ப உங்களுக்கு இந்த பொண்ணு யாருனு அறிமுகப்படுத்த தேவையே இல்ல.

வெளிப்படின்டே புஸ்தகம் எனும் மோகன்லால் படம் சமீபத்துல ஓணம் பண்டிகைய முன்னிட்டு ரிலீஸ் ஆகி, சராசரியா ஓடிட்டு இருக்கு. ஆனா இந்த படத்தில் இடம்பெற்றுள்ள 'என்டம்மே ஜிமிக்கி கம்மல்' என்ற பாடல் பயங்கர ஹிட்டு. அதுக்கு காரணம் படக்குழுலாம் இல்ல.. இந்த பொண்ணுதான்..

அட ஆமாங்க.. இந்த பொண்ணு ஓவர் நைட்ல ஒலக பேமஸ் ஆயிடிச்சி. இவங்க மட்டுமில்ல.. இவங்களோட சொந்த ஊருக்கும் அப்படி ஒரு மவுஸ். வாங்க அப்படி என்ன இருக்குனு தெரிஞ்சிப்போம்.

 சேர்த்தலா

சேர்த்தலா


கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது ஷெரிலோட சொந்த ஊரான சேர்த்தலா. இந்த ஊரின் பொருள் இரண்டு தலை சேர்ந்தது என்பதாம்.

உண்மையோ, பொய்யோ தெரியல ஆனா இந்த ஊரோட வரைபடத்த பாக்கும்போது இரண்டு தலை ஒட்டியிருக்குறமாதிரிதான் இருக்கு.

சரி. சேர்த்தலாவுல அப்படி என்ன ஸ்பெஷல்னு தெரிஞ்சிக்கலாமா?

Arunvrparavur

 பீச்

பீச்

கேரளா என்றாலே பீச் இருக்கும், இல்ல காடு இருக்கும்னு நம்மில் பல பேருக்கு ஒரு யோசனை இருக்கும்.

இந்த சேர்த்தலாவும் பீச்சுக்கு பேரு போன ஊருதானுங்க...

Augustus Binu

 அந்தகாரானாழி பீச்

அந்தகாரானாழி பீச்

சேர்த்தலா நகரத்திலிருந்து கிட்டத்தட்ட 5 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த அந்தகாரானாழி பீச். குழந்தைகளுடன் கொஞ்சி விளையாட, ஆடிப்பாட இங்குள்ள தம்பதிகள் அடிக்கடி வருகை தரும் பீச் இதுவாகும்.

குழந்தைகளுக்கு பீச்னா போதும் அப்படி பிடிக்கும். சும்மா அமைதியான, இயற்கையாவே அழகான சூப்பரா ஒரு பீச்னா சொல்லவாவேணும்.

 ஆர்த்துங்கல் பீச்

ஆர்த்துங்கல் பீச்

அந்தகாரானாழி பீச்சிலிருந்து ஆர்த்துங்கல் பீச்சுக்கு 11 கிமீ தொலைவு.

இது வார இறுதி விடுமுறையில் சுற்றுலாப் பயணிகளும், இளைஞர்களும் அதிகம் வரும் இடமாகும்.

கடற்கரைக்கு வந்தாலே மனம் சோர்வு நீங்கி புத்துணர்ச்சி பெறுவதாக கூறுகின்றனர் சுற்றுலாப் பயணிகள். அதுமட்டுமின்றி இங்கு ஒரு தேவாலயமும் உள்ளது.

Suresh Babunair

 ஆன்ட்ரூ போரனே தேவாலயம்

ஆன்ட்ரூ போரனே தேவாலயம்

கடற்கரைக்கு அருகிலேயே அமைந்துள்ள இந்த தேவாலயம் தென்னிந்தியாவில் மிகவும் பிரசித்தி பெற்றது.

டிசம்பர் மாதங்களில் கோலாகலமாக கொண்டாடப்படும் இந்த இடம் கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி, அனைவராலும் மிகவும் விரும்பத்தக்கது.

Challiyil Eswaramangalath Vipin

 தைக்கல் பீச்

தைக்கல் பீச்


ஆலப்புழா மாவட்டத்தின் மிக முக்கிய மீன் பிடித்தளமாக உள்ளது தைக்கல் பீச். இங்கு மீன் விற்பனையும் நடைபெறும்.

கடற்கரை மிகவும் அமைதியாகவும், சலனமிடும் அலைகள் நிறைந்தும் காணப்படும்.

தைக்கல் நிச்சயமாக கடற்கரை பிரியர்களுக்கும், இயற்கை ஆர்வலர்களுக்கும் மிகச்சிறந்த இடமாகும்.

Suresh G

 கார்த்தியாயானி தேவி கோயில்

கார்த்தியாயானி தேவி கோயில்

சேர்த்தலாவில் மிகவும் சிறப்பான கோயில் என்றால் அது கார்த்தியாயானி கோயில் ஆகும்.

பல ஆண்டுகளாக குழந்தை இல்லாதவர்கள் இங்கு வந்து சென்றால் குழந்தை பிறக்குமாம்.

திரிச்சூருக்கு அடுத்தப்படியாக , கேரளாவில் பூரம் விழாவுக்கு இந்த இடம்தான் சிறந்தது.

Vanischenu

சேர்த்தலா

சேர்த்தலா


சேர்த்தலாவின் அழகிய இயற்கைக் காட்சிகளை காணுங்கள்

Suresh G

சேர்த்தலா

சேர்த்தலா

சேர்த்தலாவின் அழகிய இயற்கைக் காட்சிகளை காணுங்கள்

Suresh G

சேர்த்தலா

சேர்த்தலா

சேர்த்தலாவின் அழகிய இயற்கைக் காட்சிகளை காணுங்கள்

Suresh G

Read more about: travel, kerala