Search
  • Follow NativePlanet
Share
» »ஆதி மனிதர்களை சந்திக்கலாம் வாருங்கள்

ஆதி மனிதர்களை சந்திக்கலாம் வாருங்கள்

முன் சொன்னது போல உலகில் இருக்கும் ஹிந்து கோயில்களில் வைத்து மிக நீண்ட நடைபாதையை ராமேஸ்வரத்தில் நீங்கள் காணலாம். இவ்வழியில் இருக்கும் தூண்களில் உள்ள சிற்ப்பங்கள் இன்றைய நவீன கட்டுமானத்திற்கு சவால் விடுப்பவை.

ஆதி மனிதர்களை சந்திக்கலாம் வாருங்கள்

என்னதான் அறிவியலும், நாகரிகமும் வளர்ந்தாலும் இன்னமும் அவைகளின் சுவடுகூட இன்னமும் தங்கள்மேல் படாமல் பல்லாயிரம் ஆண்டுகளாக தங்கள் வாழ்விடத்தையும், பழக்க வழக்கங்களையும் மாற்றாமல் வாழும் மனிதர்களும் இன்றும் இந்த உலகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களைப்பற்றிய பொதுவான ஒரு பிம்பம் நமக்குள் இருக்கிறது. அவர்கள் முரடர்கள், நர மாமிசம் தின்பவர்கள், எலும்புகூடு மாலை அணிதிருப்பார்கள் போன்றெல்லாம் திரைப்படங்களை பார்த்து நாம் கற்பனை செய்து வைத்திருந்தாலும். நம்மைக்காட்டிலும் இயற்கை மீது அவர்கள் காடும் அக்கறையும் அன்பும், வாழ்வியல் பண்புகளிலும் சிறந்தே விளங்குகின்றனர் அவர்கள். சரி, வாருங்கள் இந்தியாவில் வாழும் ஐந்து பழங்குடியின மக்களின் வாழ்விடங்களுக்கு சுவாரஸ்யமான சுற்றுலா ஒன்று செல்வோம்.

நாகாலந்து:

Photo: Rajkumar1220

இந்தியாவில் வெகு சொற்பமான மக்களே அறிந்த வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகாலாது ஒரு கலாசார புதையலாகும். மியான்மர் நாட்டு எல்லையில் அமைந்திருக்கும் இந்த மாநிலத்தில் இருக்கும் 16 முக்கிய பழங்குடியின மக்கள் நாக பழங்குடிகள் என அழைக்கப்படுகின்றனர். இவர்களுடைய வாழ்க்கைமுறை கொண்டாட்டங்கள் நிறைந்ததாக இருக்கிறது. மேலும் இவர்கள் வாழும் வீடுகள், திருமணம் செய்யும் முறை போன்ற எல்லாமுமே நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். இவர்கள் திருமணத்தின் முக்கிய சீதனமாக விளங்குவது பதப்படுத்தப்பட்ட பன்றித்தோல் ஆகும். இங்கு தான் கடைசியாக எஞ்சி இருக்கும் 'தலை வேட்டையாடிகள்' இருக்கின்றனர். டிசம்பர் மாதத்தில் நடக்கும் 'ஹார்ன் பில்' திருவிழா இங்கே மிகவும் பிரபலமாகும்.

அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள்:

Photo: Sankara Subramanian

வங்காள விரிகுடாவில் இருக்கும் அந்தமான் தீவுகளில் லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்ரிக்காவில் இருந்து இடம் பெயர்ந்த மனிதர்களை ஒத்த பழங்குடிகள் இன்றும் வாழ்கிறார்களாம். நவ நாகரீக மனிதர்களின் சுவடு கூட படாத இவர்கள் பல்வேறு குழுக்களாக வாழ்கின்றனர். அவர்களில் முக்கியமானவர்கள் கிரேட் அந்தமான்ஸ், ஜார்வாஸ், ஒன்கேஷ், சிந்தேலேஸ் குழுக்கள் ஆவர். இவர்களில் ஜார்வாஸ் குழுவினர் கொஞ்சம் நாகரீக வாழ்க்கைக்கு பழக்கப்பட்டு விட்டனர். எனினும் மற்ற குழுவினர் இன்றும் வெளி உலகத்துடன் தொடர்பில்லாமலேயே இருக்கின்றனர். அவர்கள் வெளி மனிதர்களுக்கு சில நேரங்களில் ஆபத்தாகவும் அமையலாம் என்பதால் அவர்கள் வசிக்கும் இடங்களுக்கு சுற்றுலாப்பயணிகள் அனுமதிக்கப்படுவதில்லை. உண்மையான திகிலூட்டும் அனுபவம் வேண்டுமெனில் நீங்கள் கண்டிப்பாக அந்தமான் வரவேண்டும்.

நீலகிரி:

Photo: Pratheepps

தென் இந்தியாவில் பழங்குடியின மக்கள் இருக்கும் இடங்களில் ஒன்று மலைகளின் ராணி என அழைக்கப்படும் நீலகிரி ஆகும். இங்கு தோடர் இன பழங்குடிகள் வசிக்கின்றனர். அசைவ உணவுகளை தவிர்க்கும் இம்மக்கள் புனித எருமை மாட்டை கடவுளாக வழிபடுகின்றனர். இம்மக்கள் டக்லஸ் எனப்படும் ஒருவித குடிசையில் வசிக்கின்றனர். இவர்கள் செய்யும் கைவினை ஆடைகள் அவற்றின் வடிவமைப்புகளுக்காக புகழ் பெற்றவை. யுனெஸ்கோ அமைப்பினால் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட பகுதியில் இவர்கள் வசிக்கின்றனர். திருவிழா நாட்களில் மக்கள் அனைவரும் ஒன்றாக கூடி, பாடல் பாடி, நடனமாடி கொண்டாடுகின்றனர்.

ஓடிஸா:

Photo: Steve Browne & John Verkleir

இந்தியாவில் பழங்குடிகள் வசிக்கும் முக்கியமான பகுதிகளில் ஒன்று ஓடிஸா மாநிலம் ஆகும். இங்கு மட்டுமே ஏறத்தாழ 60 பழங்குடியினங்கள் இருக்கின்றன. விவசாயமும் தேநேடுத்தலும் தான் இவர்களுடைய முக்கிய தொழிலாகும். இந்த மக்களை சந்திக்க என்றே சிறப்பு சுற்றுலா ஓடிஸா தலைநகரான புரியில் இருந்து ஏற்பாடு செய்யப்படுகிறது. நாம் சந்திக்க விரும்பும் பழங்குடிகளை பொறுத்து இந்த சுற்றுலாக்காலம் வேறுபடும். பழங்குடியின மக்களை அவர்கள் வாழும் இடங்களுக்கே சென்று சந்திப்பது வித்தியாசமான அனுபவமாக அமையும்.

சட்டிஸ்கர்:

Photo: Rajkumar1220

ஓடிஷாவை ஒட்டியிருக்கும் மாநிலமான சட்டிஷ்கரிலும் ஏராளமான பழங்குடிகள் வசிக்கின்றனர். இம்மாநிலத்தின் பெரும்பான்மை மக்கள் பழங்குடிகளே. அவர்கள் பெரும்பாலும் காடுகளில் வசிக்கின்றனர். இங்கிருக்கும் பலங்குஇடிகலில் கோண்டாக்கள் முக்கியமானவர்கள். அவர்கள் இங்கு மட்டும் இல்லாது மத்திய பிரதேசம், ஆந்திரா போன்ற மாநிலங்களிலும் இருக்கின்றனர். இவ்வின மக்கள் பேர்போன கலைங்கர்கள் ஆவர். இவர்கள் இசைக்கருவி வாசிப்பதிலும் நடனமாடுவதிலும் கைதேர்ந்தவர்கள்.

Read more about: tribes off beat odisha nagaland ooty
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more