Search
  • Follow NativePlanet
Share
» »குற்றாலம் போறீங்களா? அப்ப இதை வாங்க மறக்காதீங்க...!

குற்றாலம் போறீங்களா? அப்ப இதை வாங்க மறக்காதீங்க...!

'தென்னிந்தியாவின் ஸ்பா' என அழைக்கப்படும் 'குற்றாலம்', தமிழ்நாட்டின் தென்காசியில் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இந்த அழகிய நகரம், மழைக் காலங்களில் பச்சை ஆடை உடுத்திவாறு, தன்னை பார்க்கும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் ஒரு பகுதியாக மாறுகிறது. ஏனெனில் ஒருவர் கர்ஜனை மற்றும் அருவிகளைக் காணலாம்.

பார்டரில் கிடைக்கும் சுட, சுட பரோட்டாவும், குருமாவும் தான் குற்றால சீசன் என்றதும் பலருக்கு நினைவில் வந்து செல்லும். ஆனால், அது தான் இல்லை; அதையும் தாண்டி பல அற்புதமான விஷயங்கள் இருக்கிறது.

அந்த அற்புதங்களை வாரி வழங்கும் பகுதி குற்றாலம் என்றால் யாராலும் மறுக்கவும், மறைக்கவும் முடியாது. அதை நம்பியாக வேண்டும். சீசன் காலங்களில், இங்கு கிடைக்கும் ரம்புட்டான், மங்குஸ்தான், துரியன், சீதாப்பழம், ஸ்டார் எனும் நட்சத்திரப் பழங்கள், மல்பெரி போன்ற பல்வேறு பழங்கள், இந்த இடத்துக்கான தனித்துவதை நிஜமாகவே பிரதிபலிக்கின்றது.

பச்சை ஆடை போர்த்தி இருக்கும் மேற்கு தொடர்ச்சி மலை என்ற தாய், தன் இருக்கும் பகுதியில் 30க்கும் மேற்பட்ட பழங்கள் விளைகின்றன. எப்போதும் பிரமிக்க வைக்கும் காட்சிகளை வாரி வழங்குவதன் காரணமாக, பழைய படங்கள் மட்டுமில்லை. இன்றைய பிரபாஸின் மிர்ச்சி, சூர்யாவின் எதிர்க்கும் துணிந்தவன் மற்றும் மகேஷ் பாபுவின் சீதம்மா வக்கிட்லோ சிரிமல்லே செட்டு போன்ற, பல பிரபலமான படங்களில் இந்த குற்றாலத்தை சுற்றிய இடங்கள் இடம்பெற்றுள்ளது.

courtallam1

சீசன் காலங்களில், குற்றாலம் மற்றும் அதை சுற்றிய பகுதிகள், இந்தியா மட்டுமின்றி உலகின் பிற பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குவிகின்றனர். சீசன் காலங்களில் பசுமை, அமைதி மற்றும் அது சார்ந்த இடங்களை பார்வையிடலாம்.

உள்ளூர் மட்டுமின்றி, உலகளவில் சீசன் காலம் உச்சம் பெற்றிருக்கும் நேரத்தில், இங்கு பல்வேறு வண்ணங்களில் தட்டுகளில் குவித்து வைத்திருக்கும் பழங்களை வாங்குவதற்காகவே வருகை தருகின்றனர்.

சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் விஷயங்களில், அருவிகள், பார்டர் பரோட்டா, குருமா மட்டுமில்லை... அதையும் தாண்டிய ஈர்ப்பு சீசன் காலங்களில் மட்டுமே விற்கப்படும் பழங்களும் தான்.

பொதுவாக, இந்த பழங்கள் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே கிடைக்கும். அவற்றின் மருத்துவ குணங்களுக்காக, இந்த பழங்களை உள்ளூர் மட்டுமின்றி, உலகளவில் ஆண்டுக்கு ஒரு முறை வந்து சென்று வாங்கி செல்கின்றனர் என்றால் நம்பி தான் ஆக வேண்டும். செங்கோட்டை நகரம், குற்றாலம், வல்லம் ஆகிய பகுதிகளில், ரம்புட்டான், மல்பெரி, மங்குஸ்தான், ஸ்டார் பழங்கள் விளைகின்றன.

courtallam waterfalls

கண்ணுப்புள்ளி மெட்டு, வல்லம், குற்றாலம் போன்ற பகுதிகளில் இருந்து நேரடியாக, சந்தைக்கு பருவகால பழங்கள் கொண்டு வரப்படுகின்றன. தற்போது சீசன் களைகட்ட தொடங்கியுள்ளது.

பொதுவாக, அரிதாக கிடைக்கும் துரியன் பழங்களுக்கு அதிக தேவை இருக்கும் என்பதால், அவற்றின் விலையும் அதிகம். இருப்பினும்,அதை யாரும் வாங்காமல் அந்த இடத்தை விட்டு நகருவதில்லை. தற்போது, இதன் விலை ரூ.800.

சீசன் இல்லாத காலங்களில், தாய்லாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இறக்குமதி காரணமாக, அவற்றின் விலை உயர்ந்து ரூ.1000 வரை விற்கப்படும். ரம்புட்டான் கிலோ 360 ரூபாய் வரை விலை போகும். சில நேரங்களில், அதன் விலையும் உயரும் என, உள்ளூர் வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

courtallam temple

பசுமையைக் காண இந்தியா மற்றும் உலகின் பிற பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் இங்கு குவிகின்றனர். அவ்வாறு குவியும் வெளிநாடு வாசிகள், மருத்துவ குணங்கள் நிறைந்த சீசன் பழங்க வாங்க மறப்பது இல்லை.

ஹாய் கைய்ஸ்... உள்ளூர் வாசிகளான நாமும், நம் உறவினர்கள் வெளியூரில் இருந்தால், மருத்துவ குணங்கள் நிறைந்த இந்த பழங்களை ஆண்டுக்கு ஒரு முறையாவது வாங்கி அனுப்ப உதவலாமே...! எது எப்படியோ நகர வாழ்க்கைக்கு இடம்பெயர்ந்த என்னை போன்றவர்களுக்கு, சீசன் நேரத்தில் ஊர் போனாலே பால்ய நினைவுகள் நிழலாடும் போது, பெரும் மகிழ்ச்சியாக இருக்கும்.

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+