» »12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோட்டையின் சரிதம் என்ன தெரியுமா?

12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோட்டையின் சரிதம் என்ன தெரியுமா?

By: Bala Karthik

காகத்தியா வம்சத்தில் கட்டப்பட்டது தான் பன்னிரெண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கட்டப்பட்ட இந்த வராங்கல் கோட்டை. இந்த கோட்டை புதிதாக உருவான தெலுங்கானா மாநிலத்தில் காணப்பட, காகத்தியா கட்டிடக்கலைக்கு சிறந்த உதாரணமாக விளங்கியது. இந்த கோட்டைகள் இன்று இடிபட்ட நிலையில் காணப்பட, அற்புதமான கட்டிடக்கலையின் கிராமிய எச்சங்கள் இன்றும் சிறந்து விளங்குகிறது.

இந்த கோட்டை ஏகசீலா சிறுகுன்றில் கட்டப்பட்டிருக்க, அதனை கட்டியது கணபதிதேவ அரசர் என்பதும் தெரியவருகிறது. அதன்பின்னர் அவருடைய மகளான இராணி ருத்ரமாவால் முழுமை பெற்றது. இங்கே மூன்றடுக்கு மதில்கள் தென்கிழக்கு பகுதியில் வராங்கல் நகரத்தில் காணப்படுகிறது. காகத்தியா கால தோரணம் என்பது நான்கு அலங்கரிக்கப்பட்ட கதவுகளை தொகுப்பாக கொண்டிருக்க, தெலுங்கானாவின் சின்னத்தை உருவாக்கி, சுதந்திர அரசுக்கான நிலையையும் அது உணர்த்துகிறது.

 வராங்கல் கோட்டையின் வரலாறு:https://commons.wikimedia.org/wiki/File:Ruins_of_Kakatiya_fort_in_Warangal.jpg

வராங்கல் கோட்டையின் வரலாறு:https://commons.wikimedia.org/wiki/File:Ruins_of_Kakatiya_fort_in_Warangal.jpg


வராங்கலில் காணப்படும் வராங்கல் கோட்டை, காகத்தியா ஆட்சியின் அடையாளமாக விளங்கியது. முன்பு யாதவா வம்சத்தினரால் இது ஆட்சி செய்யப்பட, பன்னிரெண்டாம் நூற்றாண்டில் வராங்கல், காகத்தியர்களால் எடுத்துக்கொள்ளப்பட்டது. காகத்திய பேரரசின் தலை நகரமாக ஹனம்கொண்டாவிலிருந்து வராங்கல் வரை இடம்பெயர்ந்து காணப்படுகிறது.

கணபதி தேவ அரசரால் இதன் முந்தைய அமைப்பு செங்கல் சுவர் கொண்டு மாற்றப்பட்டதாக நம்பப்பட, கல் கோட்டையும் வராங்கல்லில் அமைக்கப்பட்டது. அவருடைய மகளான இராணி ருத்ரமாவை தவிர்த்து, அவளுடைய பேரன் இரண்டாம் ப்ரதாபருத்ராவும் இக்கோட்டையில் சில சேர்க்கைகளை சேர்த்ததாக தெரியவருகிறது. காகத்தியா வம்சத்தின் கடைசி ஆட்சியாளராக இவர் இருக்க, தில்லி சுல்தானால் அதன் முன்பு எடுத்துக்கொள்ளப்பட்டது.

Mrinalsrikanth

 வராங்கல் கோட்டையின் கட்டிடக்கலை:

வராங்கல் கோட்டையின் கட்டிடக்கலை:


மூன்று அடுக்கு கோட்டையாக இது கட்டப்பட, தனித்த வட்டம் போன்ற வடிவத்தையும் இது கொண்டுள்ளது. இராணி ருத்ரமாவால் முதல் சுவர் கட்டப்பட்டிருக்க, இது தான் பூமியோடு சேர்ந்திருக்கும் 2.4 கிலோமீட்டர் விட்டம் கொண்ட சுவராகும். ஒரு 150 அடி அகலம் கொண்ட அகழி, சுவற்றை சுற்றி தோண்டப்பட்டுள்ளதோடு... கோட்டையின் வெளிப்புற எல்லையையும் பகிர்ந்துக்கொண்டுள்ளது.

இரண்டாவது சுவர் கிரானைட் கல் கொண்டு அமைக்கப்பட்டிருக்க, அதன் விட்டம் 1.21 கிலோமீட்டர் அளவில் உள்ளது. இந்த கற்கள் நெருங்கி காணப்பட, சாந்தின் உபயோகம் முற்றிலும் தவிர்க்கப்பட்டு காகத்தியா கைவினை கட்டிடக்கலையின் பெருமையை அது பிரதிபலித்து கொண்டுள்ளது. கணபதிதேவா அரசரால் இது முதலில் கட்டப்பட, அதன்பின்னர் இராணி ருத்ரமாவால் மேலும் மாற்றப்பட்டு உயர்த்தப்பட்டது.

45 செவ்வக வடிவ கோபுரத்தை இது பாதுகாப்பாக கொண்டிருக்க, சுவற்றின் உள்புறமானது 18 கல் படிகளை கொண்டு கோட்டையை நோக்கி செல்கிறது. இந்த சுவற்றின் கடைசி வளையமாக சேற்றில் கட்டப்பட்டிருக்க அதன் விட்டமானது 12.5 கிலோமீட்டர் உள்ளது. வராங்கல் நகரத்தின் உள்ளடக்கியதாகவும் இது இன்று காணப்படுகிறது.

முப்பது அடி உயரமான கல் தூண் காணப்பட, அதனை ‘காகத்தியா கால தோரணம்' என்றழைக்கின்றனர். இதற்கு நுழைவாயிலின் மகிமை என பொருள் தர, இது கட்டிடக்கலையின் மற்றுமோர் அற்புதமாக ஒற்றை பாறை கொண்டு செதுக்கப்பட்டுள்ளது.

AnushaEadara

 கோட்டை எச்சங்கள்:

கோட்டை எச்சங்கள்:


பூமி தாய்க்கு அர்ப்பணிக்கப்பட்ட ஆலயமானது சுயம்புதேவி ஆலயம் என்றழைக்கப்பட, கோட்டையின் நடுவில் இது அமைந்திருக்கிறது. சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஆலயம் சாம்புலிங்கேஸ்வர ஆலயம் என்றழைக்கப்பட, மற்றுமோர் திறந்த வெளி அருங்காட்சியகமும் இந்த கோட்டையின் வளாகத்தில் நாம் பார்க்க வேண்டிய ஒன்றாக அமைந்து மனதினை கவர்கிறது.

இந்த இடங்களை தவிர்த்து, கோட்டையின் சிவனாலயம் இடிபட்ட நிலையுடன் காணப்பட, உச்சவரம்பு பேனல்கள், எண்ணற்ற சிறு ஆலயங்கள் என பலவும் இடிபட்ட நிலையிலே காணப்படுகிறது. பொதுவான அரங்கம் காணப்பட, அதன் பெயர் குஷ் மஹால் என்றும் தெரியவர, வராங்கலை கைப்பற்றிய தில்லியின் சுல்தானால் இது கட்டப்பட்டது என்பதும் நமக்கு தெரிய வருகிறது.

செவ்வக வடிவ கட்டிடம் காணப்பட, அதன் இரு பக்கங்களிலும் 6 நுழைவாயில்கள் காணப்படுகிறது. தொல்பொருள் மண்டலத்தின் கீழ் இவை அனைத்தும் வர, ஒட்டுமொத்த கோட்டையும் இந்தியாவின் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

Skorthiw

 கோட்டையின் நுழைவைப்பற்றிய தகவல்:

கோட்டையின் நுழைவைப்பற்றிய தகவல்:


வாரத்தில் அனைத்து நாட்களும் இந்த கோட்டை காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை திறந்திருக்கிறது. ஒருவருக்கான நுழைவு பணமாக பதினைந்து ரூபாய் வசூலிக்கப்பட, அயல் நாட்டு தேசத்தவருக்கு இரு நூறு ரூபாயும், வீடியோ கேமரா கொண்டு செல்ல கூடுதல் கட்டணமாக இருப்பத்தைந்து ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.

Bornav27may

Read more about: travel
Please Wait while comments are loading...