Search
  • Follow NativePlanet
Share
» »உத்தரகண்ட்டின் நீர்வீழ்ச்சிகளில் இந்த கோடையை கழிக்கலாமா?

உத்தரகண்ட்டின் நீர்வீழ்ச்சிகளில் இந்த கோடையை கழிக்கலாமா?

வரலாற்றுக்காலத்தில் ஆண்ட குமோன் மற்றும் கார்வால் என்ற இரண்டு முக்கியமான ராஜவம்சங்களின் அடிப்படையில் இந்த பெயர்கள் இடப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட உத்தரகண்ட்டின் அழகிய நீர்வீழ்ச்சிகளுக்கு இடையே நல்லதொரு கோ

By Udhaya

இந்தியாவின் வடபகுதியில் உள்ள இந்த உத்தரகண்ட் மாநிலமானது உலகெங்கிலுமிருந்தும் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் அளவிற்கு பிரசித்தமான சுற்றுலா கேந்திரமாக புகழ் பெற்று விளங்குகிறது. 'தேவர்களின் பூமி' என்றும் 'பூலோக சொர்க்கம்' என்றும் அழைக்கப்படும் இந்த எழிற்பிரதேசத்தின் அழகு வாழ்நாளில் ஒருமுறை இந்தியர் அனைவரும் தரிசிக்க வேண்டிய ஒன்று என்பதில் சந்தேகமே இல்லை.

உத்தரகண்ட் மாநிலம் வடக்கில் திபெத் நாட்டையும் கிழக்கில் நேபாள நாட்டையும் எல்லைகளாக கொண்டு அமைந்திருப்பதால் இந்திய புவியியல் அமைப்பில் ஒரு குறிப்பிடத்தக்க மாநிலமாகவும் விளங்குகிறது.

இதன் வடமேற்கில் ஹிமாசலப்பிரதேச மாநிலம் மற்றும் தெற்கே உத்தரப்பிரதேச மாநிலம் ஆகியவை அண்டை மாநிலங்களாக சூழ்ந்துள்ளன. உத்தராஞ்சல் என்று அழைக்கப்பட்ட இந்த மாநிலம் 2007ம் ஆண்டு ஜனவரியில் இருந்து உத்தரகண்ட் என்று அதிகாரபூர்வமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

13 மாவட்டங்களை கொண்டுள்ள இந்த மாநிலமானது வரலாற்று பின்னணியின் அடிப்படையில் இரண்டு பெரிய மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. குமோன் மற்றும் கார்வால் என்ற பெயரில் இந்த 2 மண்டலங்களும் அழைக்கப்படுகின்றன.

வரலாற்றுக்காலத்தில் ஆண்ட குமோன் மற்றும் கார்வால் என்ற இரண்டு முக்கியமான ராஜவம்சங்களின் அடிப்படையில் இந்த பெயர்கள் இடப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட உத்தரகண்ட்டின் அழகிய நீர்வீழ்ச்சிகளுக்கு இடையே நல்லதொரு கோடைப் பயணத்தை தொடர்வோம் வாருங்கள்.

ருத்ர ஹரி நீர்வீழ்ச்சி

ருத்ர ஹரி நீர்வீழ்ச்சி

கௌஸனிலிருந்து, 12 கி.மீ தொலைவில், கௌஸனி-அல்மோரா சாலையில், ருத்ர ஹரி நீர்வீழ்ச்சி, மற்றும் குகைகள் அமைந்துள்ளன. புராணங்களில் இவ்விடம், சிவன் மற்றும் விஷ்ணு உடன் தொடர்புடையகாதக இருந்தது. ஸொமேஸ்வர் சிவன் கோவில், இந்த நீர் வீழ்ச்சிக்கு மிக அருகில் உள்ளது.

கெம்ப்டீ நீர்வீழ்ச்சி

கெம்ப்டீ நீர்வீழ்ச்சி

கடல் மட்டத்தில் இருந்து 4500 கிமீ உயரத்தில் அமைந்திருக்கும் கெம்ப்டி நீர்வீழ்ச்சி முசூரி வரும் சுற்றுலாப்பயணிகளிடையே புகழ்பெற்று விளங்குகிறது. மலையில் இருந்து 40அடி உயரத்தில் விழுகும் இந்நீர்வீழ்ச்சியே முசூரியின் மிகப் பெரிய நீர்வீழ்ச்சியாகும். யமுனாத்ரி சாலையில் இருந்து 15கிமீ தொலைவில் இந்நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இந்நீர்வீழ்ச்சியைச் சுற்றி இருக்கும் அழகிய இயற்கைச் சூழலில் மயங்கி ஜான் மெக்கினன் என்ற ஆங்கிலேய அதிகாரி இவ்விடத்தை சுற்றுலா தளமாக 1835ல் உருவாக்கினார். 'கேம்ப் டீ' (camp tea) என்னுமிடத்தில் ஆங்கிலேயர்கள் தங்கள் தேநீர் நிகழ்ச்சிகளை வைப்பது வழக்கம். அதிலிருந்து இந்நீர்வீழ்ச்சி கேம்ப்டீ என்ற பெயர் பெற்றது. பல பாறைகளைக் கடந்து இந்நீர்வீழ்ச்சி சமநிலைப் பகுதிகளை அடைகிறது. இங்கிருந்து 12கிமீ அக்லார் நதியைக் கடந்து யமுனை நதியை அடையலாம். மீன் பிடித்தல், நீச்சல் போன்ற பொழுதுபோக்குகள் இங்கு புகழ்பெற்று விளங்குகின்றன. கெம்ப்டீ நீர்வீழ்ச்சியில் இருந்து முசூரி மற்றும் டெஹ்ராடூனுக்கு பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
Rajeev kumar

ஏரிப் பனி

ஏரிப் பனி

முசூரி-கெம்ப்டி சாலையில் அமைந்துள்ள லேக் மிஸ்ட் (ஏரிப் பனி) சிறந்த சுற்றுலா மையமாகும். இயற்கை சூழ்நிலையை ரசித்தபடி இங்கு படகு சவாரி செய்து மகிழலாம். கெம்ப்டி நதிக்கு அருகில் ஏராளமான சிறிய நீர்வீழ்ச்சிகள் விழுந்த நதியில் சேருகின்றன. மேலும் இங்கு ஏராளமான உணவகங்களும், தங்குமிடங்களும் பயணிகளின் வசதிக்காக அமைந்துள்ளன.

மொசி நீர்வீழ்ச்சி

மொசி நீர்வீழ்ச்சி

அடர்ந்த காடுகளால் சூழப்பட்ட மொசி நீர்வீழ்ச்சி முசூரியில் இருந்து 7கிமீ தொலைவில் அமைந்துள்ளது. பலஹிசாரில் அல்லது பர்லோகஞ் வழியாக செல்லும் சாலையில் பயணிப்பதன் மூலம் மொழி நீர்வீழ்ச்சியை அடையலாம்.

கார்பெட் நீர்வீழ்ச்சி

கார்பெட் நீர்வீழ்ச்சி


60 அடி உயரத்திலிருந்து ஆரவாரத்துடன் விழுந்து கொண்டிருக்கும் கார்பெட் நீர்வீழ்ச்சி ராம்நகரில் இருந்து 86 கிமீ தொலைவில் உள்ள சுற்றுலாத் தலமாகும. முகாமிடுதல், இன்பசுற்றுலா மற்றும் பறவைகளை கவனிப்பதற்கு மிகவும் ஏற்ற இடமாக இது உள்ளது.

இன்பசுற்றுலா வருபவர்களுக்குத் தேவையான எல்லா விஷயங்களையும் வனத்துறையினர் செய்து கொடுக்கின்றனர். 110 கிமீ தொலைவில் காலாதுங்கியில் உள்ள ராம்நகர் வனச்சரகத்தைச் சேர்ந்த இடமாக இந்த நீர்வீழ்ச்சி விளங்குகிறது.

பசுமையான நில அமைப்பு, நீர்வீழ்ச்சியின் ஆரவாரம், பறவைகளின் கீச்சிடும் குரல்கள் மற்றும் அமைதியான சுற்றுச்சூழல் ஆகியவற்றை வழங்கும் இந்த இடம் சுற்றுலாப் பயணிகளுக்கு இயற்கையுடனுண்டான தொடர்புகளை விரிவு படுத்துவதாக இருக்கும்.

உள்நாட்டுப் பயணிகளுக்கு ரூ.5/- மற்றும் வெளிநாட்டினருக்கு ரூ.10/- என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் சுற்றுலாப் பயணிகள் இலவசமாக புகைப்படம் எடுத்துக் கொள்ளவும், அருவி நீரில் குளிக்கவும் முடியும். இந்த கண்கவரும் இடத்தை பார்வையிடுவதுடன், அருகிலுள்ள இயற்கை நடைபயண அருங்காட்சியகத்திற்கும் சுற்றுலாப் பயணிகள் செல்ல முடியும்.
corbettnationalpark

பட்டா நீர்வீழ்ச்சி

பட்டா நீர்வீழ்ச்சி

சுபாஷ்தாரா எனும் இந்த நீரூற்று ஒரு இயற்கை நீரூற்றாகும். சாத்தால் பகுதியில் செழிப்பான பசுமையான ஓக் மரக்காடுகளின் மத்தியில் இது அமைந்திருக்கிறது. சாத்தால் சுற்றுலாத்தலத்திற்கு விஜயம் செய்யும் பயணிகள் ஒரு பிக்னிக் பயணம் போன்று இந்த சுபாஷ்தாரா நீரூற்று ஸ்தலத்துக்கு வருகை தந்து ரசிக்கின்றனர்.

பட்டா நீர்வீழ்ச்சி

முசூரியில் இருந்து 7கிமீ தொலைவில் முசூரி-டெஹ்ராடூன் சாலையில் உள்ள பட்டா கிராமத்தில் அமைந்துள்ளது பட்டா நீர்வீழ்ச்சி. முசூரியில் இருந்து வாடகை காரின் மூலம் இவ்விடத்தை எளிதில் அடையலாம்.

பட்டா கிராமத்தில் இருந்து 3கிமீ நடந்தாலே சுலபமாக அடைய முடிந்த இந்நீர்வீழ்ச்சி நீர் விளையாட்டுகளுக்கு சிறந்த இடமாக திகழ்கிறது.

 ஜாரிபாணி நீர்வீழ்ச்சி

ஜாரிபாணி நீர்வீழ்ச்சி

சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பிரபலமாக விளங்கும் ஜாரிபாணி நீர்வீழ்ச்சி மூசூரியில் இருந்து 7கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த அழகிய நீர்வீழ்ச்சிக்கு அருகில் செயிண்ட் ஜார்ஜ், ஓக் க்ரோவ் மற்றும் வைன் பெர்க் போன்ற பிரபலமான தங்குமிடப் பள்ளிகள் இருக்கின்றன. மிக முக்கியமான சுற்றுலா தளமாக மட்டுமல்லாது பலவகை பூக்கள், செடிகள், புதர்கள் மற்றும் மூலிகைகள் சூழ அமைந்துள்ள இவ்விடத்தில் இருந்து பிரம்மாண்டமான ஷிவாலிக் மலைத் தொடர்களின் அழகைக் காணலாம்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X