Search
  • Follow NativePlanet
Share
» »பெங்களூரில் இருந்து ஒரு சூப்பரான சாகச வார இறுதி பயணம் - தண்டேலி ரிவர் ராஃப்டிங்!

பெங்களூரில் இருந்து ஒரு சூப்பரான சாகச வார இறுதி பயணம் - தண்டேலி ரிவர் ராஃப்டிங்!

நீங்கள் பெங்களூர் வாசியாக இருந்தால், இந்த வாரம் உங்கள் நண்பர்களுடன் ஒரு சூப்பர் ட்ரிப் போக ஐடியா இதோ! பெங்களூரில் இருந்து 7 மணி நேர பயண தூரத்தில் அமைந்துள்ள தண்டேலி வார இறுதியில் குஷியாக ஆட்டம் போட ஒரு அருமையான இடமாகும். த்ரில் நிறைந்த, சாகசம் கலந்த மற்றும் உங்களது அட்ரினலினை ஊற்றெடுக்க வைக்கும் ஒரு அட்டகாசமான ரிவர் ராஃப்டிங்கில் ஈடுபட இந்த இடத்திற்கு செல்லுங்கள்!

தென்னிந்தியாவின் ரிஷிகேஷ் - தண்டேலி

ரிவர் ராஃப்டிங் செய்வதற்கு ரிஷிகேஷ், மணாலி, உத்தராகண்ட் தான் செல்ல வேண்டும் என்பது அவசியம் இல்லை. அதற்கு இணையான த்ரில் நிறைந்த, ஒரு சூப்பரான ரிவர் ராஃப்டிங்கை நீங்கள் தென்னிந்தியாவிலேயே அனுபவிக்கலாம். கர்நாடகாவின் தண்டேலியில் உள்ள ரிவர் ராஃப்டிங்கில் ஈடுபட அனுபவத்தை வெளிநாடுகளில் இருந்தும் கூட சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். ஆனால் அருகிலேயே இருக்கும் நமக்கு அது தெரியவில்லை.

1

பெங்களூர் வாசிகளுக்கு பிடித்த வார இறுதி சுற்றுலாத் தலம்

கர்நாடகா மாநிலத்தின் உத்தர கன்னடாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள தண்டேலி, இயற்கை ஆர்வலர்கள் மற்றும் சாகசப் பிரியர்களின் பக்கெட் லிஸ்டில் இருக்கும் ஒரு இயற்கை எழில் கொஞ்சும் இடமாகும். மலைகள், ஆறுகள், பசுமையான நிலப்பரப்புகள் மற்றும் குகைகள் ஆகியவை தண்டேலியின் பல்வேறு இயற்கை அம்சங்களாகும். பெங்களூரில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு, தண்டேலி ஒரு விருப்பமான வார இறுதி இடமாக உள்ளது. இது அவர்களின் தினசரி பரபரப்பான வாழக்கை முறையில் இருந்து அவர்களுக்கு சற்று ஓய்வு அளிக்கிறது.

பிரபலமான தண்டேலி ரிவர் ராஃப்டிங்

கர்நாடகாவின் சுற்றுலாத் துறையால் அங்கீகரிக்கப்பட்ட 6 ரிவர் ராஃப்டிங் இடங்களில் முதன்மை வகிப்பது காளி நதியாகும். பசுமையான காடுகள் மற்றும் செழுமையான சுற்றுப்புறங்களின் அமைதியான காட்சிகளுடன் துள்ளுகின்ற காளி நதியின் வேகமான தெறிப்புகளில் இந்த சாகச அனுபவம் மேற்கொள்ளப்படுகிறது. நல்ல தரமான ராஃப்டிங் உபகரணங்களுடன் அதிவேகத்தில் பாய்கின்ற காளி நதியின் மீது ராஃப்டிங் செய்யப்படுகிறது.

2

மூன்று வகையான ரிவர் ராஃப்டிங்

ராஃப்டிங்கில் நீண்ட, நடுத்தரம் மற்றும் குறுகிய வகை ராஃப்டிங் உள்ளது, அது 11 கிமீ, 6 கிமீ மற்றும் 1.5 கிமீ தூரத்திலான ராஃப்டிங் ஆகும். இந்த உற்சாகமான பயணம் உங்களை ரேபிட்ஸ் மற்றும் நீண்ட நீட்சிகள் வழியாக அழைத்துச் சென்று உங்களின் அட்ரினலினை சார்ஜ் செய்யும். உங்களது பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பயிற்சி பெற்ற நிபுணர்கள் உங்களை வழி நடத்துவார்கள். மேலும் இந்த சாகச அனுபவத்தை வீடியோ எடுக்கவும் உங்களுக்கு அனுமதி உண்டு, அதற்கு நீங்கள் முன்கூட்டியே கட்டணம் செலுத்தி ரசீது பெற்றிருக்க வேண்டும்.

பாதுகாப்பாக மேற்கொள்ளப்படும் சாகச ரிவர் ராஃப்டிங்

ஷார்ட் ரிவர் ராஃப்டிங் செய்ய அரை மணி முதல் முக்கால் மணி நேரம் ஆகிறது, இதற்க்கான கட்டணம் ஒரு நபருக்கு ரூ.600 ஆகும். மீடியம் ரிவர் ராஃப்டிங் செய்ய ஒன்று முதல் ஒன்றரை மணி நேரம் ஆகிறது, இதற்கான கட்டணம் ரூ.1200 ஆகும். லாங் ரிவர் ராஃப்டிங் செய்ய இரண்டு முதல் இரண்டரை மணி நேரம் ஆகிறது, இதற்கான கட்டணம் ரூ.1400 ஆகும். வாட்டர் ராஃப்டிங் தொடங்கும் முன் ஒவ்வொரு நபருக்கும் லைஃப் ஜாக்கெட் மற்றும் ஹெல்மெட் வழங்கப்பட்டு அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கும் வழிகாட்டப்படும். ஒவ்வொரு இடத்தையும் கண்காணிக்க லைஃப் கார்டுகளும் உள்ளனர்.

எப்படி செல்வது

கர்நாடகாவின் பிரபலமான சாகச விளையாட்டு இடமான தண்டேலியின் ரிவர் ராஃப்டிங், ஆண்டு முழுவதும் பல்வேறு சாகச ஆர்வலர்கள் மற்றும் வேடிக்கை ஆர்வலர்களின் கவனத்தை ஈர்க்கிறது. தண்டேலி பெங்களூரில் இருந்து 460 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது, மேலும் இதனை 7 மணி நேரத்தில் அடையலாம். நீங்கள் பெங்களூருவில் இருந்து வெள்ளி இரவு அதாவது வார இறுதியில் இரவு புறப்படும் பேருந்துகளில் பெங்களூருவில் இருந்து தண்டேலி அடையலாம். இந்த பயணத்திற்கான கட்டணம் ரூ.600 இல் இருந்து ஆரம்பிக்கிறது. தண்டேலியில் மலிவான தங்குமிடங்களும் உள்ளன. இந்த வார இறுதியில் தண்டேலி போகலாமா?

More News

    Read more about: bangalore bengaluru
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+