» »கசவ்லியில் நீங்கள் கட்டாயம் அனுபவிக்க வேண்டிய 7 விசயங்கள்

கசவ்லியில் நீங்கள் கட்டாயம் அனுபவிக்க வேண்டிய 7 விசயங்கள்

Written By: Udhaya

இமாச்சல பிரதேசத்தின் சோலன் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த கசவ்லி சுற்றுலாவுக்கு மிகச் சிறந்த இடமாகும். இங்கு செல்லவேண்டிய 7 அம்சங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

 டிம்பர் டிரைய்ல்

டிம்பர் டிரைய்ல்


சிட்டி சென்டரிலிருந்து 7 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

காலனி வீடுகள் நிறைந்து காணப்படும் மிகவும் அருமையான மலைப்பிரதேசம்.

பைன் மரக்காடுகளுக்குள் அற்புத நடை மற்றும் சுற்றுலா.

கோர்க்கா கோட்டை, சாபத்து, பிஞ்சூர், டாக்சாய் என இதைச் சுற்றி நிறைய சுற்றுலா பகுதிகள் உள்ளன

Youtube

 குரங்கு முனை

குரங்கு முனை

காசவ்லி நகரத்தின் மிக உயரமான முனை இந்த குரங்கு முனை. மங்கி பாய்ண்ட் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது.

பள்ளத்தாக்குகளினூடே சட்லெஜ் நதி ஆரவாரத்துடன் பாய்ந்து செல்கிறது.

சூர் சாந்தினி பீக், அனுமான் கோயில், சஞ்சீவிமலை என பல விசயங்கள் இங்கு காணப்படுகிறது.

Numerounovedan

மால் சாலை

மால் சாலை


ஷாப்பிங்க் இல்லாமல் எதாவது டிரிப் முடிஞ்சிருக்குறதா சரித்திரமே இல்ல. அப்படி உங்களுக்கு ஏற்ற ஷாப்பிங் செய்ய இந்த இடத்துக்கு போய்டுங்க.

ஷாப்பிங் ரோடு., உங்களுக்கு தேவையான மிகவும் பிடித்த வகை குளிர் ஆடைகளை குறைந்த விலைக்கு பெற்றுவரலாம்.

உணவுக்கும் பஞ்சமில்லை. இயற்கையிலேயே குளிர்ந்த இடங்களில் சூடான வகை உணவுகளை சுவைத்து மகிழாமல் அப்படி என்ன இன்பச் சுற்றுலா.

Lillottama

 சூரிய மறைவு காட்சி

சூரிய மறைவு காட்சி

காதலர்களுக்கு பிடித்த இடம் இதுவாகும். காதலிப்பவர்கள் இங்கு தமது வாழ்வில் ஒருமுறையாவது வந்து பார்த்துவிட்டு செல்லவேண்டும்.

பைன் மரங்கள் நிறைந்த லேண்ட்ஸ்கேப் வகை காட்சியை கண்ணுக்கு குளிர்ச்சியாக அமைத்து தரவல்ல மலை இது.

வெட்கி ஓடும் சூரியன் மலைகளுக்குப்பின் ஒளிவது சிறந்த அனுபவமாக இருக்கும்.

Maskaravivek

 குருத்வார் ஸ்ரீ குருநானக்ஜி

குருத்வார் ஸ்ரீ குருநானக்ஜி

ஞாயிற்றுக்கிழமைகளில் பெரும் சிறப்பாக இருக்கும் இந்த குருத்துவாரா மிகவும் புகழ்பெற்றதாகும்.

குருநானக்ஜி அவர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டது.

Hari Singh

பேப்பிஸ்ட் ஆலயம்

பேப்பிஸ்ட் ஆலயம்

சிட்டி சென்டரிலிருந்து 7 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த ஆலயம்.

கிறிஸ்தவர்கள் தொழுகும் வகையில் 1923ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் தொடங்கப்பட்ட இந்த ஆலயம் இன்றுவரை பராமரிக்கப்பட்டு வருகிறது.

எப்படி செல்லலாம்?

Anurajsibia

கிறிஸ்து ஆலயம்

கிறிஸ்து ஆலயம்

சிட்டி சென்டரிலிருந்து 1 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த ஆலயம். 1853ம் ஆண்டுகளிலேயே கட்டப்பட்ட இந்த ஆலயம் இந்தியாவின் மிகப் பழமையான கிறிஸ்தவ கட்டிடங்களுள் ஒன்று.

கூகுள் வரைபடத்தில் காண

Suman Wadhwa

Please Wait while comments are loading...