» »பரபரக்கும் ஆர்கேநகர், பக்கத்தில் இருக்கும் இந்த விசயங்கள் தெரியுமா?

பரபரக்கும் ஆர்கேநகர், பக்கத்தில் இருக்கும் இந்த விசயங்கள் தெரியுமா?

Written By: Udhaya

எப்படியோ ஒருவழியாக காலியான இடத்தை நிரப்புவதற்காக ஆர்கே நகர் தொகுதியில் தேர்தல் அறிவிச்சி, கோலாகலமாக போய்க்கொண்டிருக்கிறது. இந்தியா முழுவதும் பெயர்பெற்ற தொகுதியாக மாறியுள்ளது இந்த இடம். சரி அப்படி ஆர்கேநகரில் என்னவெல்லாம் இருக்கிறது. வாங்க பாக்கலாம்.

தொல்காப்பியர் பூங்கா

தொல்காப்பியர் பூங்கா

தொல்காப்பியப் பூங்கா அல்லது அடையார் பூங்கா என்பது தமிழக அரசால் அடையாரில் திறக்கப்பட்டுள்ள ஒரு பூங்காவாகும். இப்பூங்காவில் பல வகையான தாவர வகைகள் உள்ளன. இந்த பூங்காவிற்கு பழந்தமிழ் நூல் இயற்றிய தமிழ்ப் புலவர் தொல்காப்பியர் அவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. வெளிநாட்டுப் பறவைகள் பலவற்றை இங்கு காணமுடியும். இந்த பூங்காவின் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகள் நீர்நிலைகளாக உள்ளன.

தொல்காப்பியர் பூங்காவில் ஏறக்குறைய இருநூறு வகை அரிய பறவைகள் இருப்பதாக அறியப்படுகிறது. என்றாலும் பெரும்பாலானவை அழிவின் விளிம்பில் உள்ளதாக வருந்தத்தக்க தகவல் தெரிவிக்கிறது. தவளை, குருவி, மைனா, வண்ணத்துப்பூச்சி போன்ற வகை வகையான உயிரினங்களை இங்கு காணலாம். சில இடங்களில் மட்டுமே காணக்கூடிய அரிய வகை விலங்குகளும் பறவைகளும் இங்கு உள்ளன.

இப்பூங்கா பொது மக்களுக்காக ஆண்டு முழுவதும் திறந்தே இருக்கும். ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் மூடப்பட்டிருக்கும். இருப்பினும் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பார்க்க அனுமதிக்கப் படுவர். பள்ளி ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுடன் இங்கு வர விரும்பினால் அவர்கள் ஐந்து ரூபாய் வீதம் செலுத்தினால் போதும். மாணவர்களை ஈர்க்கும் வண்ணம் நிறைய அம்சங்கள் இந்த பூங்காவில் உள்ளன.

Aravind Sivaraj

அடையாறு

அடையாறு


அடையாறு சென்னை மாநகரில் ஓடும் ஆறுகளில் ஒன்றாகும். இந்த ஆறு மாகாணியம் மலையப்பட்டு ஏரியில் துவங்கி இரண்டு இடங்களில் வங்கக்கடலில் கலக்கிறது. அதில் ஒன்று சென்னை பட்டினப்பாக்கம். மற்றொன்று, முட்டுக்காட்டிலும் கடலில் கலக்கிறது. சென்னையில் ஓடும் கூவம் அளவிற்கு இல்லாவிடினும், இந்த ஆறு மாசு மிகுந்து காணப்படுகிறது. ஆதலால் முன்பு நடைபெற்ற மீன்பிடித் தொழில் இப்பொழுது சாத்தியமற்றதாகி விட்டது. ஆற்றின் நீர்பிடிப்புப் பகுதி 1,142 சதுர கிலோமீட்டர். ஆற்றின் நீளம் 42.5 கி.மீட்டர், புறநகரில் 24 கிலோமாட்டரும், நகருக்குள் 15 கிலோமீட்டரும் ஓடுகிறது. ஆற்றுப் படுக்கையின் அகலம் 10.50 முதல் 200 மீட்டர் வரை. ஆற்றின் அதிபட்ச கொள்ளளவு வினாடிக்கு 60,000 கன அடி, சராசரி கொள்ளளவு 30,000 கன அடி ஆகும். 2015ம் ஆண்டு வெள்ளம் வந்தபோது அதிக அளவு நீர் பாய்ந்தது குறிப்பிடத்தக்கது.

wiki

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப பூங்கா

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப பூங்கா

சென்னை கோட்டூர்புரம் காந்தி மண்டபம் சாலையில் தமிழ்நாடு பெரியார் அறிவியல் தொழில்நுட்ப பூங்கா அமைந்துள்ளது. இங்கு அறிவியல் பூங்கா,லேசர் கண்காட்சி மையம்,3டி தியேட்டர், உயிரியல் பூங்காக்கள் தவிர பிர்லா பிளானட்டோரியம், ஆற்றல் பூங்கா, அறிவியல் மையம், குழந்தைகள் விளையாட அறிவியல் சார்ந்த விளையாட்டு திடல் ஆகியவை உள்ளன.

சீரடி சாய்பாபா கோயில்

சீரடி சாய்பாபா கோயில்

சீரடி சாய்பாபா பல்வேறு அற்புதங்கள் நிகழ்த்தியவராவார். இந்து முஸ்லீம் மக்களிடையே சகோதரத்துவத்தை வளர்த்தது இவரின் முக்கிய பங்காக பார்க்கப்படுகிறது. மராட்டிய மாநிலம் சீரடியில் இவருக்கு கோயில் உள்ளது. அதன் கிளையாக இங்கு அருகிலேயே ஒரு கோயில் அமைக்கப்பட்டுள்ளது.

கபாலீஸ்வரர் கோயில்

கபாலீஸ்வரர் கோயில்

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் இங்கிருந்து அருகே அமைந்துள்ளது. இது ஒரு சிவன் கோயிலாகும். இது திருமயிலை என்றும் அழைக்கப்படுகிறது.

சென்னையின் பழமையான மைலாப்பூர் பகுதியில் இந்த கபாலீசுவரர் கோயில் வீற்றுள்ளது.
இந்த கோயில் சிவபெருமான் மற்றும் அவரது துணைவியார் பார்வதி தேவிக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. வேண்டுவதை அருளும் 'கற்பகாம்பாள்' ஆக இங்கு பார்வதி தேவியார் வணங்கப்படுகிறார்.
எனினும் இந்த கோயில் முதலில் பெரிய அளவில் இருந்ததாகவும், அதை இடித்துதான் தற்போதைய சாந்தோம் சர்ச் உருவாக்கப்பட்டதாகவும் ஒரு பேச்சு உள்ளது.

SINHA

 சுந்தரம் ஸ்ரீசத்ய சாய்பாபா கோயில்

சுந்தரம் ஸ்ரீசத்ய சாய்பாபா கோயில்

இந்த பகுதியில் அமைந்துள்ள மற்றொரு சாய்பாபா கோயில் இதுவாகும். மயிலாப்பூர் தாலுகா அலுவலகம் அருகே அமைந்துள்ளது இந்த கோயில்.

ஜெர்மனி தூதரகம்

ஜெர்மனி தூதரகம்

ஜெர்மனி தூதரகமும் இந்த பகுதியில்தான் அமைந்துள்ளது.

 கேசவபெருமாள் பூங்கா

கேசவபெருமாள் பூங்கா

இதன் அருகிலேயே கிருஷ்ணபுரி எனும் இடத்தில் கேஷவ் பெருமாள் பூங்கா அமைந்துள்ளது.

 காரணீஸ்வரர் திருக்கோயில்

காரணீஸ்வரர் திருக்கோயில்

தமிழகத்தில் உள்ள முக்கிய சிவாலயங்களில் ஒன்றாகவும், 450 ஆண்டுகள் பழமை வாய்ந்ததுமாக விளங்குவது சென்னை சைதாப்பேட்டையில் உள்ள சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில் ஆகும்

இங்கு இந்திரன், மால், அயன் முதலிய கடவுளர்களும், சிவசைதனிய முனிவரும், ஆதொண்ட சக்கரவர்த்தியும், குருலிங்க சுவாமி முதலிய சிவத்தொண்டர்களும் வழிபட்டு முக்தி பெற்றுள்ளனர் என்பது வரலாறு.

இந்த ஆலயம் தென்திசையில் கோபுரத்தைக் கொண்டுள்ளது. இதன் நுழைவு வாயிலில் பத்ரகிரியார், பட்டினத்தார் சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. காரணீஸ்வரர் கிழக்கு நோக்கி அமர்ந்திருக்கிறார்.

 சாந்தோம் ஆலயம்

சாந்தோம் ஆலயம்


ரோமன் கத்தோலிக்க வகையைச் சார்ந்த இந்த தேவாலயம், மயிலாப்பூர் அருகே அமைந்துள்ளது. போர்த்துக்கீசியர்களால் கட்டப்பட்ட இந்த ஆலயம் பின்னாளில் பிரிட்டிஷ்காரர்கள் காலத்தில் விரிவுபடுத்தப்பட்டது. .


PlaneMad