Search
  • Follow NativePlanet
Share
» »வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த இடம் ஏன் இப்படி இருக்கிறது – புதுச்சேரியின் கீழூர் கிராமம்!

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த இடம் ஏன் இப்படி இருக்கிறது – புதுச்சேரியின் கீழூர் கிராமம்!

புதுச்சேரியின் மங்கலம் தொகுதியில் அமைந்துள்ள கீழூர் கிராமம் மட்டும் இல்லையென்றால் இன்று நாம் பாஸ்போர்ட், விசா உடன் புதுவைக்கு உள்ளே காலடி எடுத்து வைக்க முடியும். ஆம்! அங்கு தான் புதுவை இந்தியாவுடன் இணைக்கப்பட வேண்டுமா அல்லது பிரான்ஸுடன் இணைக்கப்பட வேண்டுமா என்பதற்கான வாக்கெடுப்பு எடுக்கப்பட்டதாம். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த இடம் இன்னமும் அதற்கான அங்கீகாரத்தை பெறவில்லை என்று தான் கூற வேண்டும்!

புதுச்சேரியை இந்தியாவிடம் ஒப்படைத்த பிரஞ்சு அரசு

1947-ல் இந்தியா சுதந்திரம் அடைந்ததைத் தொடர்ந்து புதுச்சேரியை தனது கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க பிரெஞ்சுக்காரர்கள் முடிவு செய்தாலும், அக்டோபர் 18, 1954 அன்று கீழூரில் நடைபெற்ற வரலாற்று வாக்கெடுப்புக்குப் பிறகு, புதுச்சேரி, காரைக்கால், ஏனாம், மற்றும் நான்கு பிரதேசங்களின் ஆட்சியை பிரெஞ்சுக்காரர்கள் ஒப்படைக்க முடிவு செய்தனர். அந்த வாக்கெடுப்பு இந்தியாவிற்கு பாதகமாக மாறி இருந்தால், இன்று புதுவை பிரான்ஸ் நாட்டின் ஒரு பகுதியாக இருந்திருக்கும்.

1

புதுச்சேரியின் கீழூரில் நடைபெற்ற கணக்கெடுப்பு

மங்கலம் தொகுதியில் உள்ள ஒரு தொலைதூர கிராமமான கீழூரில் தான் அந்த அமைதியான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இது இறுதியில் புதுச்சேரியை பிரெஞ்சு கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து இந்தியாவுடன் இணைக்க வழிவகுத்தது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக இருக்க வேண்டிய இந்த இடம் புதுச்சேரியின் விவகாரங்களில் அதன் முக்கியத்துவத்தை இன்னும் பெறவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 16 ஆம் தேதி புதுச்சேரியில் கொண்டாட்டம்

வாக்கெடுப்பில் கலந்து கொண்ட பிரதிநிதிகள் சபை மற்றும் முனிசிபல் கவுன்சில்களின் பெரும்பான்மை முடிவு ஆகஸ்ட் 16, 1962 அன்று, பிரெஞ்சு அரசாங்கம் தனது பாராளுமன்றத்தால் நிறுத்த ஒப்பந்தத்தை அங்கீகரித்த பின்னர், நான்கு பிரதேசங்களின் அதிகாரத்தை இந்திய அரசாங்கத்திற்கு இறுதியாக மாற்ற வழிவகுத்தது. சுதந்திரத்திற்குப் பிறகு, ஆகஸ்ட் 16 இன் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, புதுச்சேரி அரசு ஒவ்வொரு ஆண்டும் அந்த நாளை டி ஜூர் டிரான்ஸ்பர் தினமாகக் கொண்டாட முடிவு செய்தது.

2

இப்போது வெறும் கொட்டகை மட்டுமே சான்று

இந்திய மாநிலத்துடன் இணைவதற்கு பிரதிநிதிகள் வாக்களித்த கீழூரில் இப்போது ஒரு சிறிய கொட்டகை மட்டுமே சாட்சியாக நிற்கிறது. இந்த கொட்டகையின் உள்ளே, புதுச்சேரியின் விடுதலைக்கு முந்தைய நிகழ்வுகளில் பங்கேற்ற நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் சில முக்கிய புகைப்படங்கள் அடங்கிய ஒரு மூடிய அறை உள்ளது. கொட்டகையை ஒட்டி, ஆகஸ்ட் 16ம் தேதி கொடியேற்றுவதற்காக அமைக்கப்பட்ட கம்பம் மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டவர்களின் பெயர்கள் அடங்கிய பலகை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

கேட்பாரற்று கிடக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கீழூர்

இந்த இடம் ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே உயிர்ப்புடன் வருகிறது, நவம்பர் 1 மற்றும் ஆகஸ்ட் 16. இந்த இரண்டு நாட்களை தவிர இந்த இடத்தை கண்டு கொள்பவர் யாருமில்லை, மேலும் இந்த அருங்காட்சியகம் கூட வருடத்திற்கு இரண்டு நாட்கள் மட்டுமே திறந்திருக்கிறது. அடுத்தடுத்து வந்த அரசுகள், கீழூரை யூனியன் பிரதேசமாக மாற்றுவதாக வாக்குறுதி அளித்தும், கல்நார் கொட்டகையை கட்டியதைத் தவிர, அந்த இடத்தில் எதுவும் நடக்கவில்லை என்று கீழூரில் வசிக்கும் எஸ். ரவிச்சந்திரன் கூறியதாக இந்து நாளிதழில் செய்தி வெளிவந்துள்ளது.

3

கவலை தெரிவிக்கும் பொருளாதார் வல்லுநர்

பொருளாதார வல்லுநராக இருந்து அரசியல்வாதியாக மாறிய எம். ராமதாஸ் கூறுகையில், கீழூருக்கு அரசு செலுத்தும் கவனம் அதன் வரலாற்று முக்கியத்துவத்துடன் ஒத்துப் போகவில்லை. இந்த முக்கியமான சந்தர்ப்பத்தில் கொடியை கூட முதல்வர் ஏற்றவில்லை. முதல்வர் வருகை தராததால், நினைவிடம் முறையாக பராமரிக்கப்படாததால், சுற்றுவட்டாரமே வெறிச்சோடி காணப்படுகிறது.

நினைவுச்சின்னம் அமைக்கப்பட வேண்டும்

புதுச்சேரிக்கு இணையாக கீழூரும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அரசு உணர்ந்து, முக்கியத்துவம் வாய்ந்த இடமாக மாற்ற வேண்டும். புதுச்சேரியின் வரலாற்றில் கீழூரின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு காமராஜர் மணிமண்டபம் போன்ற நினைவுச்சின்னம் கட்டப்பட வேண்டும். இந்த இடத்தை யுனெஸ்கோ பாரம்பரிய தளமாக அறிவிக்க பிராந்திய நிர்வாகமும் மத்திய அரசும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் கூறினார்.

4

இது புதுச்சேரியின் கடமை

இது கிராம சுற்றுலாவிற்கு ஏற்ற இடமாக இருக்கும். சுற்றுலாத் துறையானது இந்த இடத்தைத் தகுந்த முறையில் மேம்படுத்தி, சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்ல நகரத்திலிருந்து பேருந்துகளை ஏற்பாடு செய்யலாம். சுதந்திரம் என்பது மக்களை மேம்படுத்தும் லட்சியத்துடன் அடையப்படுகிறது. அப்படியானால், புதுச்சேரியின் சுதந்திரத்தின் கருவாக இருந்த கீழூர் கிராமம் வளர்ச்சி அம்சங்களை வெளிப்படுத்துவது புதுச்சேரியின் கடமை என்றும் அவர் கூறினார்.

இதைப் பற்றிய உங்களுடைய கருத்து என்ன?

More News

    Read more about: kizhur pondicherry
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+