உலகிலேயே 2-வது மிகப்பெரிய வில்லணையாக அறியப்படும் 'இடுக்கி வில்லணை', பெரியார் ஆற்றின் குறுக்கே, குருவமலை மற்றும் குறத்திமலை என்ற இரு மலைகளை இணைத்து அதி பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது.
இந்த அணைப்பகுதியிலிருந்து எங்கு திரும்பி பார்த்தாலும் நம் கண்ணை அகற்ற முடியாத அளவுக்கு சுற்றிலும் இயற்கை எழில் நிரம்பிய எண்ணற்ற சுற்றுலாத் தலங்கள் அமைந்துள்ளன.
இதன் காரணமாக ஆண்டுதோறும் ஏராளமான பயணிகள் இடுக்கி வில்லணைக்கு வந்து செல்கின்றனர்.
படித்துப் பாருங்கள் : சுற்றுலாத் தலங்களாக திகழும் தமிழக அணைகள்!

இந்தியாவின் முதல் வில்லணை
839 அடி உயரமுடைய குறவன் மலை, 925 அடி உயரமுள்ள குறத்தி மலை எனும் இரு மலைகளை இணைத்து வளைவு வடிவில் கட்டப்பட்ட இந்தியாவின் முதல் வில்லணையாக இடுக்கி வில்லணை அறியப்படுகிறது.

கடல் போன்ற தோற்றம்
36 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் 72 டிஎம்சி தண்ணீரைத் தேக்கி வைக்கும் வசதியுடன் கடல் போல பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் இடுக்கி வில்லணை 167.68 மீ உயரம் கொண்டது.
படம் : Shaji0508

ஆண்டில் இருமுறை மட்டுமே சுற்றிப் பார்க்கலாம்!
இந்த அணையைச் சுற்றிப் பார்க்கப் எல்லா நாட்களிலும் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவதில்லை. ஒவ்வொரு ஆண்டும் ஓணம் பண்டிகையின்போதும், புத்தாண்டு தினத்தின் போதும் மட்டுமே அணையைச் சுற்றிப் பார்க்க அனுமதி வழங்கப்படுகிறது.
படம் : Sreejithk2000

கட்டணம்
இடுக்கி வில்லணையைச் சுற்றிப் பார்க்க பெரியவர்களுக்கு ரூ. 10-ம், சிறியவர்களுக்கு ரூ 5-ம் நுழைவுக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
படம் : Sreejithk2000

படகுச் சவாரி
இடுக்கி வில்லணையில் படகுப் பயணம் செல்லும் அனுபவம் மிகவும் சிறப்பானதாகும். 5 நபர்கள் அமரும் வசதிகொண்ட படகில் 15 நிமிடங்கள் பயணம் செய்யலாம். இதற்காக 5 நபர்களுக்குமாக சேர்த்து 450 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
படம் : Rameshng

அஞ்சுருளி
இடுக்கி அணைப் பகுதியிலே அமைந்துள்ள அற்புதமான சுற்றுலாத் தலம் அஞ்சுருளி ஆகும். இந்த ஸ்தலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள காஞ்சியார் எனும் கிராமத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது. அஞ்சுருளி அருவி சுற்றுலாப் பயணிகளால் அதிகமாக சுற்றிப் பார்க்கப்படும் ஒரு இயற்கை எழில் கொஞ்சும் இடம்.
படம் : Sibyperiyar

அஞ்சுருளி சுரங்கம்
அஞ்சுருளி சுற்றுலாப் பகுதியில் காணப்படும் அஞ்சுருளி சுரங்கம்.
படம் : Rojypala

அஞ்சுருளி சுரங்கத்தின் குளோஸ் அப்
அஞ்சுருளி பகுதியின் முதன்மை சுற்றுலா அம்சமான அஞ்சுருளி சுரங்கத்தின் குளோஸ் அப் புகைப்படம்.
படம் : Libni thomas

கால்வெரி மவுண்ட்டிலிருந்து...
கால்வெரி மவுண்ட்டிலிருந்து இடுக்கி வில்லணையின் தோற்றம்.
படம் : Libni thomas

செறுதோணி அணை
இடுக்கி வில்லணைக்கு அருகிலேயே அமைந்திருக்கும் இந்த செறுதோணி அணை, வில்லணையைப் போலவே பிரபலமான சுற்றுலாத் தலமாகும்.

இடுக்கி வனவிலங்கு சரணாலயம்
இடுக்கி வில்லணைக்கு அருகாமையில் அமைந்துள்ள மற்றொரு முக்கியமான சுற்றுலாத்தலம் இடுக்கி வனவிலங்கு சரணாலயமாகும். இந்த சரணாலயம் செறுதோணி மற்றும் பெரியார் நதிகளுக்கு இடைப்பட்ட காட்டுப்பகுதியை உள்ளடக்கியுள்ளது.

மூலமட்டம்
இந்தியாவின் மிகப்பெரிய நிலத்தடி நீர் மின்னுற்பத்தி நிலையமாக மூலமட்டம் பவர் ஸ்டேஷன் திகழ்கிறது. இடுக்கி அணையிலிருந்து பெறப்படும் நீரைக்கொண்டு இங்கு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
படம் : Rameshng

கொஞ்சும் எழில்!!!
இடுக்கி நீர்த்தேக்கத்தின் எழில் கொஞ்சும் தோற்றம்!
படம் : Aml jhn

தொலைதூரத் தோற்றம்
இடுக்கி வில்லணையின் தொலைதூரத் தோற்றம்.
படம் : Aml jhn

குகைகள்
குறத்தி மலையில் சிறிய குகை ஒன்று அமைந்துள்ளது. அதேபோல குறவன் மலையிலும் ஒரு குகை காணப்பட்டாலும், அது தற்போது பயன்பாட்டில் இல்லை.
படம் : Rameshng

நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் படகு
இடுக்கி வில்லணையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் படகு.
படம் : Rameshng

நீர் மின்னுற்பத்தி நிலையம்
இடுக்கி வில்லணை ஒரு ஒருங்கிணைந்த நீர் மின்னுற்பத்தி நிலையமாகவும் செயல்படுகிறது. 5 ஆறுகள், 20 துணை அணைகள், ஒரு சுரங்கத்தள மின்னுற்பத்தி இயந்திர மையம் மற்றும் பல சுரங்கத்தள பாதைகள் ஆகியவை இந்த அணையின் முக்கியமான அங்கங்களாகும்.
படம் : Sreejithk2000

கேரள அரசின் கட்டுப்பாட்டில்!
கேரள அரசின் மின்சார வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இடுக்கி வில்லணையிலிருந்து வெளியேறும் நீரைக் கொண்டு 1975-ஆம் ஆண்டு அக்டோபர் 4-ம் தேதியிலிருந்து நீர் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது. இதன் மூலம் 750 மெகாவாட் மின்சாரம் பெறப்படுகின்றது.
படம் : Rameshng



Click it and Unblock the Notifications




